Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

29th September 2020 Current Affairs in Tamil & English

29th September 2020 Current Affairs in Tamil & English

29th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

29th September Tamil Current Affairs 2020

29th September English Current Affairs 2020

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.அண்மையில், அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) திருத்த மசோதா, 2020’ஐ மக்களவை நிறைவேற்றியது. அசல் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

அ. 2005

ஆ. 2008

இ. 2010

ஈ. 2019

  • வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றல்) திருத்த மசோதா, 2020 ஆனது செப்.21 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது, இந்தியாவில் அயல்நாட்டு பங்களிப்புகளைப் பெறுவதை நிர்வகிக்கும் சட்டத்தில் பல கடுமையான மாற்றங்களை முன்மொழிகிறது.
  • இது தனிநபர்கள், சங்கங்கள் & நிறுவனங்களால் அயல்நாட்டு பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் கட்டுப்படுத்தும் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2010’ஐ திருத்துகிறது. இத்திருத்தம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் (அ) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் ஒரு சங்கத்தின் அனைத்து அலுவலர்களையும் பதிவுசெய்வதற்கான கட்டாய அடையாள ஆவணமாக ‘ஆதார்’ அட்டையை மாற்றியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட (அ) முன் அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் அதன் நியமிக்கப்பட்ட FCRA வங்கிக்கணக்கில் பெறப்பட்ட அயல்நாட்டு பங்களிப்புகளிலிருந்து வேறெந்நிறுவனத்திற்கும் (FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட (அ) முன் அனுமதி பெற்றிருந்தாலுங்கூட) துணை மானியம்/களை வழங்க முடியாதவாறு இச்சட்டம் தடைசெய்கிறது.

2.நடப்பாண்டு (2020), ஐக்கிய நாடுகள் அவையின் எத்தனையாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது?

அ. 68ஆவது ஆண்டு நிறைவு

ஆ. 70ஆவது ஆண்டு நிறைவு

இ. 73ஆவது ஆண்டு நிறைவு

ஈ. 75ஆவது ஆண்டு நிறைவு

  • நடப்பாண்டு (2020) ஐநா’இன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஐநா பொது அவையின் கூட்டம் செப்டம்பர்.21 அன்று மெய்நிகராக நடத்தப்பட்டது. அது, “The Future We Want, the UN We Need: Reaffirming our Collective Commitment to Multilateralism – நாம் விரும்பும் எதிர்காலம், நமக்குத் தேவை -யான ஐநா: பன்முகத்தன்மைக்கான எங்கள் கூட்டணியின் உறுதிப்பாட்டை மறு உறுதிப்படுத்துவது” என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டது. 1945 அக்டோபர் 20 அன்று நிறுவப்பட்ட ஐநா’இன் 75ஆவது ஆண்டு நிறைவை, 2020ஆம் ஆண்டு குறிக்கிறது.

3.அண்மையில் இந்திய நாடாளுமன்றம், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நலவாழ்வு ஊழியர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களை பிணை பெறவியலாத குற்றமாக மாற்றுவதற்கு 2020ஆம் ஆண்டு தொற்றுநோய்கள் (திருத்த) மசோதாவை நிறைவேற்றியது. அசல் தொற்றுநோய்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

அ. 1897

ஆ. 1898

இ. 1947

ஈ. 1956

  • தொற்றுநோய்கள் (திருத்த) மசோதா, 2020 ஆனது 2020 செப்.22 அன்று இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா, கடந்த 1897ஆம் ஆண்டைய தொற்றுநோய்கள் சட்டத்தை திருத்துவ -தற்காக, ஏப்.22 அன்று இந்திய அரசு பிறப்பித்த ஓர் அவசர ஆணைக்கான நிரந்தர மாற்றாக உள்ளது. இதன்மூலம், COVID-19 தொற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நலவாழ்வு ஊழியர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அனைத்து பிணையில் வெளிவரவியலாத குற்றமாக மாற்றப்படுவதோடு, அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகவும் மாற்றப்படுகிறது.

4.அண்மையில், பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான ரபி பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. பின்வருவனவற்றில் எது ரபி பயிர் அல்ல?

அ. கோதுமை

ஆ. சூரியகாந்தி

இ. கடுகு

ஈ. நிலக்கடலை

  • பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கன அமைச்சரவைக் குழு, 2021-22 சந்தைப்படுத்துதல் பருவத்துக்கான அனைத்து கட்டாய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளைச் சார்ந்து இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலைகளின் அதிகரிப்பு உள்ளது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலையில் அதிக அளவிலான ஏற்றம் பயறுக்கு (ஒரு குவிண்டாலுக்கு `300) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பருப்பு, இராப்சீட் மற்றும் கடுகு ஆகியவற்றுக்கு ஒரு குவிண்டாலுக்கு `225, குங்குமப்பூவுக்கு ஒரு குவிண்டாலுக்கு `112 MSP உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லிக்கும், கோதுமைக்கும் முறையே ஒரு குவிண்டாலுக்கு `75, `50 உயர்த்தப்பட்டுள்ளது. பயிர் பன்முகத் தன்மையை ஊக்கப்படுத்துவதை இந்த வேறுபட்ட விலைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

5.அண்மையில், ‘நீடித்த மீட்பு’ அறிக்கை என்ற சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

ஆ. பன்னாட்டு ஆற்றல் முகமை

இ. உலக நலவாழ்வு அமைப்பு

ஈ. உலக வங்கி

  • பன்னாட்டு ஆற்றல் முகமையானது (IEA) NITI ஆயோக் உடன் இணைந்து செப்.18 அன்று “நீடித்த மீட்பு” குறித்த சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது. அது, ஆற்றல் அமைப்புகளை தூய்மையானதாகவும், நெகிழ்திறன்மிக்கதாகவும், நீடித்த எதிர்காலமுடையதாகவும் ஆக்கும் அதேவேளையில், பொருளாதார -ங்கள் புத்துயிர் பெறுவதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படவேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிகிறது.

6.VAJRA ஆசிரியர் திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகம்

  • அயல்நாடுகளில் வசிக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்திய நிறுவனங்கள் & பல்கலைகளில் பணிபுரிவதற்கு விரும்பத்தக்க வழிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்க இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பின்வரும் திட்டங்களை வகுத்துள்ளது: –
  1. Visiting Advanced Joint Research (VAJRA) Faculty திட்டம் – இது, அயல்நாட்டு அறிவியலாளர்க -ளையும் கல்வியாளர்களையும் இந்தியாவுக்கு அழைத்துவந்து, அவர்களை அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில் பணியாற்றச் செய்யும் திட்டமாகும்.
  2. இராமானுஜன் பெல்லோஷிப் – அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய அனைத்து துறைகளிலும் பணியாற்றுவதற்கு உயர்கல்வி நுண்ணறிவுகொண்ட இந்திய ஆராய்ச்சியாளர் -களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.
  3. Biomedical Research Career Programme (BRCP) – இது, ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்தியாவில் மருத்துவம் (அ) பொதுநலத்தில் தங்கள் வாழ்வை மேற்கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது.

7.இந்திய அரசானது நாட்டின் முதல் மருத்துவ சாதன பூங்காவை அமைக்கவுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • நாட்டின் முதல் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளத்தில் அமையவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவு, சோதனை மற்றும் மதிப்பீடு போன்ற மருத்துவ சாதனத் தொழிலுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்க, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் துறையில் கவனம் செலுத்தப்படுகிறது.
  • ‘MedSpark’ என்ற மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழினுட்ப மையம் (SCTIMST) மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கல்லில் உள்ள வாழ்க்கை அறிவியல் பூங்காவில் நிறுவப்படவுள்ளது.

8.உலக இருதய நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 26

ஆ. செப்டம்பர் 27

இ. செப்டம்பர் 28

ஈ. செப்டம்பர் 29

  • மனிதனின் இருதயநலத்தை பாதிக்கும் 4 முக்கிய காரணிகளான புகையிலை பயன்பாடு, முறையற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை மற்றும் மது அருந்துதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்.29 அன்று உலக இருதய நாள் அனுசரிக்கப்படுகிறது. “Use Heart to Beat Cardiovascular Disease” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

9.இரும்புத்தாது சுரங்கத்திற்கு பெயர்பெற்ற தோனிமலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • இரும்புத்தாது சுரங்கத்திற்கு பெயர்பெற்ற தோனிமலை, கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. வளம்மிகுந்த இந்த இரும்புத்தாது சுரங்கம், 50 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான NMDC’இன்கீழ் இயங்கிவந்தது. NMDC’இன் குத்தகை, 2018’இல் முடிவடைந்தது; அதன்பின்னர், அங்கு சுரங்கப்பணி நிறுத்தப்பட்டது. அண்மையில், கர்நாடக மாநில அரசு, தோனிமலையில் மீண்டும் சுரங்கப் பணியைத் தொடங்க முடிவுசெய்துள்ளது.

10.ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை (AB-PMJAY) அமல்படுத்துவதற்காக இந்திய அரசு நியமித்துள்ள அமைப்பு எது?

அ. தேசிய நலவாழ்வு ஆணையம்

ஆ. தேசிய நலவாழ்வுக் குழுமம்

இ. இந்தியா நலவாழ்வு மற்றும் பராமரிப்புக் குழுமம்

ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

  • ஆயுஷ்மான் பாரத்–பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா என்பது ஏழைக்குடும்பங்களுக்கு நலவாழ்வுச் சேவையை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும். கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்தும் வழிமுறைகள், AB-PMJAY’ஐ திறம்பட செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்காக, 1860ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின்கீழ் ‘தேசிய நலவாழ்வு முகமை’ என்ற தன்னாட்சி நிறுவனத்தை அரசு அமைக்கிறது. பின்னர், ஆயுஷ்மான் பாரத்-பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை செயல்படுத்தும் பொறுப்புள்ள ஓர் அமைப்பாக, இது, ‘தேசிய நலவாழ்வு ஆணையம்’ என்று மாற்றப்பட்டது.

1. Recently, the Lok Sabha passed the Foreign Contribution (Regulation) Amendment Bill, 2020. The original Foreign Contribution (Regulation) Act was passed in which year?

[A] 2005

[B] 2008

[C] 2010

[D] 2019

  • The Foreign Contribution (Regulation) Amendment Bill 2020 was passed in Lok Sabha on 21st September, which proposes a number of drastic changes to the law governing the receipt of foreign contributions in India. It amended the Foreign Contribution (Regulation) Act, 2010 which regulates the acceptance and utilisation of foreign contribution by individuals, associations and companies.
  • The Amendment act make ‘Aadhaar’ a mandatory identification document for registration of all the office bearers of an NGO or an association seeking foreign donations. Further the act prohibits any sub granting which implies that an institution registered or having prior permission under FCRA cannot make sub–grant/s to any other intuition from foreign contributions received in its designated FCRA Bank account even if the second recipient or sub–grantee has registration or prior permission under FCRA.

2. Year 2020 marks which anniversary of United Nations?

[A] 68th Anniversary

[B] 70th Anniversary

[C] 73rd Anniversary

[D] 75th Anniversary

  • To mark the 75th anniversary of UN in 2020, a meeting of the UN General Assembly was organized virtually on 21st September 2020. It released a declaration titled “The Future We want; the UN We Need: Reaffirming our Collective Commitment to Multilateralism”. Year 2020 marks 75th anniversary of UN which was established on October 24, 1945.

3. Recently, Parliament of India passed Epidemic Diseases (Amendment) Bill, 2020 to make incidents of violence on health workers treating the COVID–19 patients a non–bailable offence. In which year, the original Epidemic Diseases Act was passed?

[A] 1897

[B] 1898

[C] 1947

[D] 1956

  • The Epidemic Diseases (Amendment) Bill, 2020 was passed in Lok Sabha on 22nd September, 2020. The Bill replaces an ordinance which was issued by the Government of India on 22 April for amending the the Epidemic Diseases Act, 1897 in order to make the incidents of violence on health workers treating the COVID–19 patients a non–bailable offence, with provision of a penalty and a jail up to 7 years.

4. Recently, Cabinet Committee on Economic Affairs (CCEA) chaired by the Prime Minister approved the increase in the Minimum Support Prices (MSPs) in Rabi crops for marketing season 2021–22. Which of the following is not a Rabi crop?

[A] Wheat

[B] Sunflower

[C] Mustard

[D] Groundnut

  • After the Parliament passed two agricultural sector reforms bills, The Cabinet Committee on Economic Affairs (CCEA) chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the increase in the Minimum Support Prices (MSPs) for all mandated Rabi crops for marketing season 2021–22 to encourage farmers ahead of sowing the operations of winter crops. The biggest crop of Rabi season, Wheat has been hiked by Rs. 50 to Rs. 1975 per quintal along with other five Rabi crops (Lentil (masoor), gram, barley, safflower and mustard/rapeseed.

5. Which organization recently released the Special Report on Sustainable Recovery report?

[A] United Nations Environment Programme

[B] International Energy Agency

[C] World Health Organization

[D] World Bank

  • International Energy Agency (IEA), in collaboration with NITI Aayog, released a ‘Special Report on Sustainable Recovery’ on 18 September 2020 which is the report that proposes a number of actions that must be taken in order to revitalise economies and boost employment while making energy systems cleaner, more resilient and a sustainable future.

6. VAJRA Faculty Scheme is a scheme of which of the following Ministries in India?

[A] Ministry of Education

[B] Ministry of Science and Technology

[C] Ministry of Agriculture

[D] Ministry of Health and Family Welfare

  • The Ministry of Science & Technology, Government of India has formulated following schemes to provide attractive avenues and opportunities to Indian researchers who are residing in foreign countries to work in Indian Institutes and Universities which are as follows: –
  1. Visiting Advanced Joint Research (VAJRA) Faculty Scheme which is a scheme to bring overseas scientists and academicians to India to work in public funded Institutions and Universities.
  2. Ramanujan Fellowship provides opportunities to Indian researchers of high academic intelligence to work in all area of Scienc, Engineering and Medicine.
  3. Biomedical Research Career Programme (BRCP) which provides opportunities to researchers to establish their career in Clinical or Public Health in India.

7. In which state, the Government of India is going to setup the country’s first medical device park?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Karnataka

[D] Maharashtra

  • Kerala will soon house one of the first medical device parks in the country, focusing on the high–risk medical device sector to provide full range of services for the medical devices industry like R&D support, testing, and evaluation.
  • MedSpark, the medical devices park envisaged as a joint initiative of Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Technology (SCTIMST), an autonomous institute of the Department of Science and Technology (DST), Govt. of India, and the Kerala State Industrial Development Corporation Ltd (KSIDC), the industrial and investment promotion agency of the Government of Kerala is going to be established in the Life Science Park, Thonnakkal, Thiruvananthapuram.

8. On which date, World Heart Day is celebrated every year?

[A] September 26

[B] September 27

[C] September 28

[D] September 29

  • The 2020 World Heart Day is observed every year on September 29 to raise awareness about the four main factors that affect the human heart — use of tobacco, improper diet, lack of physical exercise and excess consumption of alcohol. The 2020 theme is “Use Heart To Beat Cardiovascular Disease”.

9. Donimalai, which is known for Iron Ore mining is located in which state of India?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Karnataka

[D] Andhra Pradesh

  • Donimalai, which is known for Iron Ore mining is located in Bellari district of Karnataka. The rich Irone Ore mine was under state–owned NMDC for 50 years. The lease of NDMC ended in 2018 and since then the production has stopped here. Recently, the Karnataka government has decided to resume mining at Donimalai.

10. Which body is constituted by the Government of India for the implementation of Ayushman Bharat – Pradhan Mantri Jan Aarogya Yojana (AB–PMJAY)?

[A] National Health Authority

[B] National Health Committee

[C] India Health and Care Committee

[D] None of the above

  • Ayushman Bharat – Pradhan Mantri Jan Arogya Yojana (AB–PMJAY) is an initiative by the Government of India for providing health care service to protect poor families against health issues. The government setup an autonomous entity, ‘National Health Agency’ under the Society Registration Act, 1860 for the formulation of policies, implementation mechanisms, coordination with state governments for the effective implementation of AB–PMJAY.
  • Later, it was changed to ‘National Health Authority’ as the apex body responsible for implementing Ayushman Bharat – Pradhan Mantri Jan Arogya Yojana.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!