Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

2nd & 3rd October 2020 Current Affairs in Tamil & English

2nd & 3rd October 2020 Current Affairs in Tamil & English

2nd & 3rd October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

2nd & 3rd October 2020 Tnpsc Current Affairs in Tamil

2nd & 3rd October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Centre for Disability Sports is to be established in which city?

[A] Mumbai

[B] Chennai

[C] Gwalior

[D] Varanasi

  • The foundation stone of ‘Centre for Disability Sports’ was laid at Gwalior, Madhya Pradesh in an event organised by the Ministry of Social Justice and Empowerment. The Cabinet has approved the setting up of a Centre for Disability Sports at Gwalior in February 2019.
  • The estimated outlay of the project to set up the Centre is Rs.170.99 crore. This will be the first exclusive centre of Disability sports in the country.

2. What is the name of the Dialogue organised by the four countries: India, Australia, Japan and United States of America?

[A] CHAAR DHAM

[B] QUAD

[C] CONNECT

[D] DEVELOP

  • The Quadrilateral Security Dialogue (QUAD) is a strategic forum organised between the United States, Japan, Australia and India. Recently, the QUAD consultation of the four member countries was held virtually to discuss regional issues of common interest
  • The last Ministerial engagement was held in September 2019. The Senior officials reaffirmed their commitment for an inclusive Indo–Pacific region.

3. India announced a Grant of USD 15 million for promoting Buddhist ties with which country?

[A] Nepal

[B] Sri Lanka

[C] Bangladesh

[D] Vietnam

  • The first ever virtual summit between PM Narendra Modi and Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa was recently held. India announced a grant of USD 15 million for the promotion of Buddhist ties with Sri Lanka. India also affirmed to expand Defence partnership with the island country, to stabilise security in the Indian Ocean.

4. Which Union Ministry has notified the standards for Safety Evaluation of Hydrogen Fuels?

[A] Ministry of Power

[B] Ministry of Renewable Energy

[C] Ministry of Road Transport and Highways

[D] Ministry of MSME

  • The Ministry of Road Transport and Highways has issued a notification comprising standards for safety evaluation of hydrogen fuel cell–based vehicles. The Ministry has amended the Central Motor Vehicles Rules 1989 to specify the standards for the vehicles being propelled by Hydrogen Fuel cells. These standards are said to be at par with the available international standards.

5. Sunil Sethi, the Chairman of Fashion Design Council of India, has been appointed as the advisor of which body?

[A] Khadi and Village Industries Commission

[B] National Small Industries Corporation

[C] British Fashion Council

[D] University Grants Commission

  • The Khadi and Village Industries Commission (KVIC), which functions under MSME Ministry, has appointed Sunil Sethi as its advisor. He is the Chairman of the Fashion Design Council of India (FDCI) and will advise the Commission on latest design interventions in the readymade garments segment. He would also focus on promotion of Khadi in India and abroad.

6. The foundation day of which scheme was celebrated as ‘Kaushal Se Kal Badlenge’?

[A] PM Kaushal Vikas Yojana

[B] Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana

[C] Skill India Loan Campaign

[D] Kaushal Samman Nidhi

  • The foundation Day of Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana (DDU–GKY) has been celebrated as ‘Kaushal Se Kal Badlenge’. Ministry of Rural Development organised the event on the occasion of Antyodaya Diwas, to commemorate the 6th foundation of the DDU–GKY scheme.
  • Around 10.51 lakh rural youth were given training and 6.65 lakh were given succesful placement under the scheme.

7. SP Balasubrahmanyam, who passed away recently, is associated with which profession?

[A] Poitician

[B] Poet

[C] Playback Singer

[D] Judge

  • Veteran playback singer S P Balasubrahmanyam has recently passed away at the age of 74, after being contracted by the novel coronavirus. The legendary singer held Guinness World Record for highest number of songs by a singer. He had won six National Awards during 1979 to 1996 and won two civilian awards, Padma Shri in 2001, Padma Bhushan in 2011.

8. Which state has recently decided to provide food kits to transgender persons of the state?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Kerala

[D] Haryana

  • The Government of Kerala has decided to provide food kits to 1,000 transgender persons in the state. Kerala became the first state in the country to provide food kits to transgender during the 1st phase of lockdown in March 2020. The state government has now sanctioned food kits amounting Rs.700 each to 1000 transgender persons.

9. What is the full form of “D–SII” that is seen in news recently?

[A] Domestic Systemically Important Insurers

[B] Domestic System Import Insurers

[C] Domestic Service Import Insurers

[D] Document for Service for Import Insurance

  • Insurance regulator IRDAI has identified Life Insurance Corporation (LIC), General Insurance Corporation (GIC) and New India Assurance (NIA) as Domestic Systemically Important Insurers (D–SII). D–SIIs are insurance companies of such large size and market importance, whose failure would cause a distress in domestic financial system. D–SIIs would be subjected to higher level of regulatory supervision.

10. The head of which country has called for a pact with USA on “Non–Interference”?

[A] India

[B] China

[C] Japan

[D] Russia

  • Russian President Vladimir Putin has proposed for a pact with the USA “Non–Interference” in each other’s domestic affairs. The pact is proposed weeks before the Presidential elections in USA. Western Nations have been accusing Russia for using its hackers and trolls to influence the outcome of elections in other countries. Also, US intelligence has stated that Russia is trying to manipulate election results in favour of Donald Trump.

நடப்பு நிகழ்வுகள்

1. மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் நிறுவப்படவுள்ள நகரம் எது?

அ. மும்பை

ஆ. சென்னை

இ. குவாலியர்

ஈ. வாரணாசி

  • மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரத்தில் உலகத்தரம்வாய்ந்த, “மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்திற்கு” அடிக்கல் நாட்டப்பட்டது. `170.99 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த விளையாட்டு மையத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 2019 பிப்ரவரி.28 அன்று ஒப்புதல் அளித்தது. இது, நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையமாக இருக்கும்.

2.இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட உரையாடலின் பெயரென்ன?

அ. CHAAR DHAM

ஆ. QUAD

இ. CONNECT

ஈ. DEVELOP

  • Quadrilateral Security Dialogue (QUAD) என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக் களம் ஆகும். அண்மையில், பொதுநல நோக்கில் பிராந்திய பிரச்சனைகள்பற்றி மெய்நிகர் முறையில் இக் கருத்துக்களம் விவாதித்தது. கடைசியாக, கடந்த 2019 செப்டம்பரில் இது நடைபெற்றது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை, இந்தக் கருத்துக்களத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் மறுவுறுதிப்படுத்தினர்.

3.எந்த நாட்டுடனான பெளத்த உறவை மேம்படுத்துவதற்காக, இந்தியா, $15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மானியத்தை அறிவித்துள்ளது?

அ. நேபாளம்

ஆ. இலங்கை

இ. வங்கதேசம்

ஈ. வியட்நாம்

  • பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த இராஜபக்ஷ இடையேயான முதல் மெய்நிகர் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இலங்கையுடனான பெளத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக, இந்தியா, $15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மானியத்தை அறிவித்துள்ளது.
  • இந்தியப்பெருங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, அந்நாட்டோடு பாதுகாப்புக்கூட்டணியை விரிவுபடுத்தவும் இந்தியா அப்போது உறுதி தெரிவித்தது.

4.ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரநிலைகளை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. எரிசக்தி அமைச்சகம்

ஆ. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம்

இ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான தரங்களை உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான தரங்களைக் குறிப்பிட, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’ஐ அமைச்சகம் திருத்தியுள்ளது. இந்தத் தரநிலைகள், தற்போதுள்ள சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

5. இந்திய நவநாகரிக உடை வடிவமைப்புக் கவுன்சிலின் தலைவரான சுனில் சேத்தி, கீழ்க்காணும் எந்த அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. காதி & கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையம்

ஆ. தேசிய சிறு தொழிலகங்கள் கழகம்

இ. பிரிட்டிஷ் நவநாகரிக உடை வடிவமைப்புக் கவுன்சில்

ஈ. பல்கலைக்கழக மானியக் குழு

  • MSME அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காதி & கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையத்தின் (KVIC) ஆலோசகராக இந்திய நவநாகரிக உடை வடிவமைப்புத் துறையின் முன்னோடியான சுனில் சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஆயத்த ஆடைகளில் சமீபத்திய வடிவமைப்புகள் போக்கு குறித்து சுனில் சேத்தி அவ்வாணையத்திற்கு ஆலோசனை வழங்குவார். உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் காதியை பிரபலப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துவார்.

6.எந்தத் திட்டத்தின் உருவாக்க நாள், “கெளஷல் சே கல் பாட்லெங்கே” எனக் கொண்டாடப்பட்டது?

அ. பிரதமர் கெளஷல் விகாஸ் யோஜனா

ஆ. தீனதயாள் உபாத்யாய கிராமீன் கெளஷல்யா யோஜனா

இ. திறன் இந்தியா கடன் பரப்புரை

ஈ. கெளஷல் சம்மான் நிதி

  • தீனதயாள் உபாத்யாய கிராமீன் கெளஷல்யா யோஜனாவின் (DDU-GKY) உருவாக்க நாள், “கெளஷல் சே கல் பாட்லெங்கே” எனக் கொண்டாடப்பட்டுள்ளது. DDU-GKY திட்டத்தின் ஆறாவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அந்தியோதயா திவாஸின் நிகழ்வில், ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 10.51 இலட்சம் கிராமப்புற இளையோருக்கு பயிற்சியளிக்கப்பட்டு 6.65 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

7. அண்மையில் காலமான திருமிகு S P பாலசுப்பிரமணியத்துடன் தொடர்புடையது எது?

அ. அரசியல்வாதி

ஆ. கவிஞர்

இ. பின்னணிப் பாடகர்

ஈ. நீதியரசர்

  • மூத்த பின்னணிப் பாடகரான திரு S P பாலசுப்பிரமணியம் (74), COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி 2020 செப்.25 அன்று காலமானார். புகழ்பெற்ற பாடகரான இவர், ஒரு பாடகரால் பாடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாடல்களுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார். 1979 முதல் 1996 வரை 6 தேசிய விருதுகளை வென்ற இவர், 2001’இல் ‘பத்மஸ்ரீ’, 2011’இல் ‘பத்ம பூஷண்’ ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.

8. மாநிலத்தில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. கேரளம்

ஈ. ஹரியானா

  • மாநிலத்தில் வாழும் 1,000 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாடங்கின் முதற்கட்டத்தின்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய முதல் இந்திய மாநிலமாக கேரளா திகழ்ந்தது. 3ஆம் பாலினத்தவர்களுக்கு தலா `700 மதிப்புடைய உணவுப்பொருட்களை வழங்குவதற்கு, கேரள மாநில அரசு, தற்போது அனுமதியளித்துள்ளது.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “D-SII” என்பதன் முழு விரிவாக்கம் என்ன?

அ. Domestic – Systemically Important Insurers

ஆ. Domestic System Import Insurance

இ. Domestic Service Import Insurance

ஈ. Document for Service Import Insurance

  • ஆயுள் காப்பீட்டுக்கழகம் (LIC), பொதுக் காப்பீட்டுக் கழகம் (GIC) மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (NIA) ஆகியவற்றை உள்நாட்டு முறைப்படி முக்கிய காப்பீட்டாளர்களாக (D-SII) IRDAI இனங்கண்டுள்ளது.
  • D-SII ஆனவை பேரளவிளான மற்றும் சந்தை முக்கியத்துவம்வாய்ந்த காப்பீட்டு நிறுவனங்களாகும்; அதன் தோல்வி உள்நாட்டு நிதியியல் அமைப்பில் பெருங்கேட்டை விளைக்கும். D-SII’கள் உயர்மட்ட ஒழுங்குமுறையின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும்.

10.எந்த நாட்டின் தலைவர், “தலையிடுதல் கூடாது (Non-Interference)” தொடர்பாக ஒப்பந்தம் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. இரஷ்யா

  • இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவுடனான (USA) ஓர் ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் “தலையிடுதல் கூடாது” என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாகும். இந்த ஒப்பந்தம், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான (USA) அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு இருக்கும் காலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
  • பிற நாடுகளின் தேர்தல் முடிவுகளுக்கு கேட்டை விளைவிக்க இரஷ்யா தனது நிரலாளர்களையும் கேலிச்சித்திரக்கலைஞர்களையும் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • 2020 அக்டோபர்.02 – கல்விக்கண் திறந்த ‘கர்மவீரர்’ காமராஜர் அவர்களின் 45ஆவது நினைவு நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!