TnpscTnpsc Current Affairs

2nd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதலீடுகள் திரும்பப் பெறப்படவுள்ளன. இது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள CPSE ஆகும்?

அ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) மின்சார அமைச்சகம்

 • போட்டி ஏலச்செயல்முறைக்குப்பிறகு, மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதலீடுகளைத் திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 • மத்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்பது அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி துறையின், அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள CPSE ஆகும்.

2. தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக எந்த நிறுவனம் இந்தியாவுடனான $250 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) ஐஎம்எப்

ஆ) ஏடிபி 

இ) ஏஐஐபி

ஈ) பிரிக்ஸ் வங்கி

 • ஆசிய வளர்ச்சி வங்கியும் (ஏடிபி) இந்திய அரசாங்கமும் தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக $250 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டம் உலகத் தரம் வாய்ந்த தொழிற்துறை முனையங்களை மேம்படுத்துவதையும், உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) சுப்பிரமணியன் சுவாமி

ஆ) சம்பித் பத்ரா 

இ) லால் சிங் ஆர்யா

ஈ) ஜமால் சித்திக்

 • பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக அமைச்சரவை நியமனக்குழுவால் நியமிக்கப்பட்டார்.
 • இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை தலைவர், ITDC மற்றும் நிர்வாக இயக்குநர், ITDC எனப் பிரிப்பதற்கான சுற்றுலா அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ACC ஒப்புதல் அளித்து உள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான ஜிகேவி ராவ் ஐடிடிசியின் நிர்வாக இயக்குநராக பதவி வகிப்பார்.

4. பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 27

ஆ) நவம்பர் 29 

இ) நவம்பர் 30

ஈ) டிசம்பர் 1

 • ஐநா அவை 1978ஆம் ஆண்டு முதல் நவ.29ஆம் தேதியை பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கிறது. பாலஸ்தீனத்தை இரண்டு நாடுகளாக பிரிப்பதற்கான ஐநா தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

5. ‘ஃபின்டெக் குறித்த சிந்தனை தலைமை மன்றத்தை’ இந்தியாவில் நடத்துகிற நிறுவனம் எது?

அ) RBI

ஆ) NITI ஆயோக்

இ) IFSCA 

ஈ) SEBI

 • ஃபின்டெக் குறித்த சிந்தனை தலைமைத்துவ மன்றத்தை பிரதமர் மோடி மெய்நிகராக தொடங்கி வைக்கிறார். GIFT நகரம் மற்றும் புளூம்பெர்க் உடன் இணைந்து சர்வதேச நிதிச்சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) இந்த 2 நாள் நிகழ்வை நடத்துகிறது.
 • இந்த மன்றத்தின் முதல் பதிப்பில் இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா மற்றும் UK ஆகியவை பங்குதாரர் நாடுகளாக உள்ளன.

6. உலகின் சிறந்த 300 கூட்டுறவு நிறுவனங்களில் ‘நம்பர் ஒன் கூட்டுறவு’ தரநிலையில் உள்ள கூட்டுறவு நிறுவனம் எது?

அ) இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் லிமிடெட்

ஆ) இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் 

இ) தேசிய கூட்டுறவு நில மேம்பாட்டு வங்கிகள் கூட்டமைப்பு லிமிடெட்

ஈ) இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட்

 • இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு லிமிடெட் (IFFCO) உலகின் முதல் 300 கூட்டுறவு நிறுவனங்களில் ‘நம்பர் 1 கூட்டுறவு’ என அறிவிக்கப்பட்டுள்ளது. IFFCO நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என்பதை இந்தத் தரவரிசை குறிக்கிறது.

7. ஆண்டுதோறும் இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 1

ஆ) டிசம்பர் 4 

இ) டிசம்பர் 10

ஈ) டிசம்பர் 14

 • 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ நடவடிக்கையில் இந்திய கடற்படையின் எதிர்த்தாக்குதலுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச.4ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு “ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்” என்ற கருப்பொருளின்கீழ் கடற்படை விழாவை கொண்டாடியது.

8. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒருபகுதியாக சீனா எந்த நாட்டுடன் முதல் எல்லை தாண்டிய ரயில் போக்குவரத்தை தொடங்கியது?

அ) லாவோஸ் 

ஆ) ரஷ்யா

இ) பாகிஸ்தான்

ஈ) மலேசியா

 • பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, ஒரு பெல்ட் ஒன் ரோடு முன்முயற்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு உத்தி ஆகும், இது 2013 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமீபத்தில், பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக சீனா முதல் எல்லை தாண்டிய ரயில் போக்குவரத்தை தொடங்கியது. சீனாவையும் நிலத்தால் சூழப்பட்ட தென்கிழக்கு நாடு லாவோஸையும் இது இணைக்கிறது.

9. ‘சென்ட்ரி-II – சிறுகோள் தாக்க கண்காணிப்பு அமைப்பை’ உருவாக்கியுள்ள விண்வெளி நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) NASA 

இ) ESA

ஈ) JAXA

 • NASA வானியலாளர்கள் சமீபத்தில் சென்ட்ரி-II எனப்படும் அடுத்த தலைமுறை தாக்க கண்காணிப்பு அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர். இது பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் தாக்க நிகழ்தகவுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • இப்புதிய அமைப்பு NASA JPL’இன் ‘பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வுகளுக்கான மையத்தின்’ திறன்களை மேம்படுத்துகிறது. இது நமது கிரகத்திற்கு அருகில் வரக்கூடிய சிறுகோள்களின் தாக்க அபாயத்தை மதிப்பிடுகிறது.

10. ‘நை மன்சில்’, ‘சீகோ அவுர் கமாவோ’ மற்றும் USTTAD ஆகிய திட்டங்களை செயல்படுத்துகின்ற மத்திய அமைச்சகம் எது?

அ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் 

இ) சமூக நீதி அமைச்சகம்

ஈ) கல்வி அமைச்சகம்

 • ‘நை மன்சில்’, ‘சீகோ அவுர் கமாவ்’ மற்றும் யுஎஸ்டிடிஏடி உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ‘மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்’ செயல்படுத்தி வருகிறது. அவ்வமைச்சகத்தின் கூற்றுப்படி, சிறுபான்மையினருக்கான திறன்மேம்பாட்டு மையத்தின் திட்டங்களின்கீழ் இதுவரை 6.5 இலட்சம் இளைஞர்கள் பயிற்சிபெற்றுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை எண்ம முறையில் பெற புதிய வசதி

ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை எண்ம முறையில் பெறும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் வெளியிட்ட உத்தரவு விவரம்:

எண்ம லாக்கா் முறையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநா் தரப்பில் இருந்து அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை எண்ம முறைப்படி வழங்கவும், அவற்றைப் பாா்வையிட்டு சரிபாா்த்திடவும் வகை செய்வதே எண்ம (டிஜிட்டல்) லாக்கா் முறையாகும். சான்றிதழ்களை வழங்குநா் என்ற அடிப்படையில் எண்ம லாக்கா் முறையைப் பதிவு செய்து கொள்ளலாம். உதாரணத்துக்கு, வாகன ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மின்னணு நகல்களை மக்களுக்கு இந்த எண்ம லாக்கா் முறையின் மூலமாக வழங்கிடலாம். இதனை பொது மக்களின் எண்ம லாக்கருக்கு நேரடியாக அனுப்பும் போது அது மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் என மின் ஆளுமை முகமையின் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

அரசுத் துறைகளிடம் பொது மக்கள் அளிக்கும் இணைய விண்ணப்பங்களை எண்ம லாக்கா் முறையுடன் ஒருங்கிணைக்கலாம். இதன்மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்குத் தேவையான ஆதார ஆவணங்களை எண்ம லாக்கா் வசதியில் இருந்தே எடுத்து இணைத்துக் கொள்ளலாம். இதைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசுத் துறைகளும் எண்ம லாக்கா் முறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டுமென அரசினை மின்ஆளுமை முகமை இயக்குநா் கேட்டுக் கொண்டிருந்தாா்.

அவரது இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் எண்ம லாக்கா் முறையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன்மூலம், எண்ம முறையிலான சான்று ஆவணங்களைப் பொது மக்களுக்கு வழங்கிட முடியும். மேலும், நடைமுறையில் உள்ள, வருங்காலத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய மென்பொருள்களையும் எண்ம லாக்கா் முறையுடன் இணைக்கலாம். எனவே, நடப்பிலுள்ள அனைத்து மென்பொருள்களையும் எண்ம லாக்கா் முறையுடன் இணைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தப் பணிக்கான உரிய உதவிகளை தமிழக அரசின் அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கிட வேண்டுமென மின் ஆளுமை முகமை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2. டேராடூனில் ரூ.18,000 கோடி திட்டங்கள்: டிச.4-இல் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 4-ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறாா்.

ஒரு காலத்தில் மிகவும் தொலைவில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்துத் தொடா்பை அதிகப்படுத்தவும் எளிதாக சென்றடைவதை விரிவுபடுத்தவுமான பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையின் அடிப்படையில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன. இதில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் பயண நேரத்தை இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும்; வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயா்மட்ட பாதையாக இது இருக்கும்.

சாா்தாம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தடையில்லாப் போக்குவரத்தை அளிப்பதாக சாலைத் திட்டங்கள் தொடங்கப்படுவது சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும். அடிக்கடி மண்சரிவு ஏற்படும் பகுதியான லம்பாகட் மண்சரிவை கட்டுப்படுத்தும் திட்டம் பயணத்தை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. காகிதமில்லா நிர்வாகத்தை உருவாக்க அனைத்து அரசு துறைகளும் ‘டிஜிலாக்கர்’ முறையை பயன்படுத்த வேண்டும்

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்களுக்கு ஆவணங்கள், சான்றிதழ்களை மின்னணு (டிஜிட்டல்) முறையில் வழங்குவதற்கும், அதன் மூலம் அரசு அலுவலகங்களில் காகிதத்தின் உபயோகத்தை நீக்குவதற்கும் ’டிஜிலாக்கர்’ என்ற புதிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.

மின்னணு முறையில் ஆவணங்களையும், சான்றிதழ்களையும் எந்த இடத்தில் இருந்தாலும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல அவற்றை மின்னணு முறையில் சரிபார்க்கவும் முடியும். இதன் மூலம் காகித சான்றிதழ்கள், ஆவணங்களை தூக்கிக்கொண்டு செல்வது தவிர்க்கப்படும்.

இந்த புதிய முறை மூலம் அரசுத்துறைகள் வழங்கும் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள், ரேஷன் அட்டைகள், பல்வேறு உரிமங்கள் போன்றவை குடிமக்களின் ‘டிஜிலாக்கர்’ கணக்கில் சேர்ந்துவிடும்.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசுக்கு மின்னாளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி கடிதம் எழுதினார். அதில், அனைத்து அரசு துறைகளும் காகிதமில்லா நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காக ‘டிஜிலாக்கர்’ முறையை பின்பற்றுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மத்திய அரசின் இந்த வேண்டுகோளை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசின் அனைத்து துறைகள் மற்றும் அதன் கீழ் வரும் முகமைகளும் ‘டிஜிலாக்கரை’ பயன்படுத்த உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4. செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இம்மசோதா வகை செய்கிறது.

மேலும், நாடு முழுவதும் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தவும், மேற்பார்வையிடவும் அந்த மையங்களுக்கும், இத்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களுக்கும் தேசிய பதிவு ஆணையம் அமைக்க இந்த மசோதா வழி வகுக்கிறது.

மசோதாவை தாக்கல் செய்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியதாவது, “நாடு முழுவதும் ஏராளமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எவ்வித ஒழுங்கு விதிகளுக்கும் உட்படாமல் இயங்கி வருகின்றன. செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் உடல்நிலையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய மசோதாவை கொண்டு வருவது அவசியம் ஆகிறது.

இந்த மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல்வேறு சிபாரிசுகளை தெரிவித்தது. மத்திய அரசு அவற்றை பரிசீலித்து, இறுதியாக இம்மசோதாவை உருவாக்கி இருக்கிறது”

இவ்வாறு அவர் பேசினார்.

இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ஹீனா கேவிட் பேசியதாவது, “80 சதவீத செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்யப்படவில்லை. செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கும், கருமுட்டை, விந்தணு வங்கிகளுக்கும் குறைந்தபட்ச நன்னடத்தை விதிமுறைகள், இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கருமுட்டை தானமாக வழங்குபவர்கள், அதை பெறுபவர்களும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.

கருமுட்டை விற்பனையில் ஈடுபடுபவர்கள், முதல் தடவை தவறு செய்திருந்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்”.

5. 1975ம் ஆண்டு வரையிலான வில்லங்கச் சான்றுகளை ஆன்லைனில் பெறலாம்

பொதுமக்கள் நேரில் சென்று விண்ணப்பம் அளிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு 1975ம் ஆண்டு வரையிலான வில்லங்க சான்றுகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 1975ம் ஆண்டு முதல் நாளது தேதி வரையிலான காலத்திற்கான வில்லங்கச் சான்றுகள் விரைவுக்குறியீடு மற்றும் சார்பதிவாளரின் மின்கையொப்பமிட்டு அலுவலகம் வராமல் ஆன்லைன் வழி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவணத்தில் உள்ள விவரத்திற்கும் வில்லங்கச்சான்றில் உள்ள விவரத்திற்கும் ஏதேனும் மாறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை அளிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும் சிரமமும் ஏற்படுகிறது. நேரில் சென்று விண்ணப்பம் அளிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு வில்லங்கச்சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய ஆன்லைன் வழி விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வில்லங்கச்சான்றில் உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்ய பதிவுத்துறையின் இணையதளத்தில் ‘அட்டவணை தரவு திருத்தம்’ என்பதன் வழி சென்று ஆன்லைன் வழி விண்ணப்பிக்க பொதுமக்கள் கோரப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் ஆன்லைன் வழி பெறப்பட்டு சார்பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு மாவட்டப்பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.

6. ஓய்வு பெற்றார் கோன்டா

இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஜோகன்னா கோன்டா (30), தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். காயம், அறுவை சிகிச்சை காரணமாக போட்டிகளில் பங்கேற்பதில் சிரமப்பட்டு வந்ததால் உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருந்து 113வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரிட்டனின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான கோன்டா, 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் தலா ஒருமுறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். டபுள்யூடிஏ தொடர்களில் 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

7. உலகின் செலவு மிக்க நகரம் முதலிடத்தில் இஸ்ரேலின் டெல் அவிவ்

இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், மக்களின் அன்றாட வாழ்விற்கு அதிகம் செலவிட வேண்டிய நகரமாக மாறியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின், ‘எக்கனாமிஸ்ட்’ என்ற பத்திரிகையின் பொருளாதார புலனாய்வு பிரிவு ஆய்வு அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்தது.

அதன் விபரம்:இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், வாழ்வதற்கு மிகவும் அதிகமாக செலவிட வேண்டிய நகரமாக மாறி வருகிறது. இந்த பட்டியலில் உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருந்த டெல் அவிவ், தற்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது. பிரான்சின் பாரிஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களை விட டெல் அவிவில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இஸ்ரேலின் கரன்சியான ஷெகல் உயர்ந்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம்.மளிகை மற்றும் போக்குவரத்து செலவுகள் இந்த நகரில் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. இங்கு வசிப்பவர்கள் வீட்டு வாடகை செலுத்தி எளிமையான வாழ்க்கை வாழ்வதே கடும் சிரமமாக மாறி வருகிறது. இஸ்ரேலின் பொருளாதார மற்றும் கலாசார மையமான டெல் அவிவ் மாறி வருவதால், மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு உள்ளன.அழகிய நீண்ட கடற்கரை, உலக தரம் வாய்ந்த உணவகங்கள் இங்கு உள்ளன.

இதனால், இந்த நகரில் வசிப்பதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஷெகலின் மதிப்பு உயர்ந்து வருவதால், வெளிநாட்டு முதலீடும் இஸ்ரேலில் அதிகரிக்க துவங்கி உள்ளன. இதன் காரணமாக அதிநவீன நகரமாக டெல் அவிவ் மாறி உள்ளது.டெல் அவிவ் நகரில் வீடு வாங்குவது, இஸ்ரேல் மக்களால் முடியாத காரியமாகி வருகிறது. இங்கு, வீட்டின் விலை சராசரியாக 9 கோடி ரூபாய் வரை உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1. Central Electronics Ltd (CEL), which is set to be divested, is a CPSE under which Union Ministry?

A) Ministry of Science and Technology

B) Ministry of Electronics and IT 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Power

 • The Union government has approved the strategic disinvestment of Central Electronics Ltd (CEL) after the competitive bidding process. CEL is a CPSE under the Department of Scientific and Industrial Research (DSIR), Ministry of Science and Technology.

2. Which institution signed a $250 million loan with India to support the National Industrial Corridor Development Program (NICDP)?

A) IMF

B) ADB 

C) AIIB

D) BRICS Bank

 • The Asian Development Bank (ADB) and the Indian government have signed a $ 250 million loan to support the National Industrial Corridor Development Program (NICDP). The program aims to develop world–class industrial nodes and generate high level employment.

3. Who has been appointed as the Chairman of India Tourism Development Corporation (ITDC)?

A) Subramanian Swami

B) Sambit Patra 

C) Lal Singh Arya

D) Jamal Siddiqui

 • BJP spokesperson Sambit Patra was appointed as the chairman of India Tourism Development Corporation (ITDC) by the Appointments Committee of the Cabinet.
 • ACC has approved the Tourism Ministry’s proposal to split the post of chairman and managing director of India Tourism Development Corporation into chairman, ITDC, and Managing director (MD), ITDC. GKV Rao, IAS Officer will hold the post of managing director of ITDC.

4. When is the ‘International Day of Solidarity with Palestinian People’ observed?

A) November 27

B) November 29 

C) November 30

D) December 1

 • The United Nations observes November 29 as the International Day of Solidarity with Palestinian People, since 1978. The day aims to mark the adoption of the UN’s resolution to partition Palestine into two states.

5. Which institution hosts the ‘Thought leadership forum on fintech’ in India?

A) RBI

B) NITI Aayog

C) IFSCA 

D) SEBI

 • Prime Minister Narendra Modi will virtually inaugurate a thought leadership forum on fintech. The two–day event is hosted by International Financial Services Centres Authority (IFSCA) in collaboration with GIFT City and Bloomberg. Indonesia, South Africa and the UK are partner countries in the first edition of the forum.

6. Which Cooperative has been ranked ‘number one Cooperative’ among the top 300 cooperatives in the world?

A) National Cooperative Union of India Limited

B) Indian Farmers Fertiliser Cooperative Limited 

C) National Cooperative Land Development Banks Federation Limited

D) National Agricultural Cooperative Marketing Federation of India Limited

 • The Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) has been adjudged as the ‘number one Cooperative’ among the top 300 cooperatives in the world.
 • This rank signifies that IFFCO is contributing significantly to the GDP and economic growth of the nation.

7. When is the Indian Navy Day celebrated every year?

A) December 1

B) December 4 

C) December 10

D) December 14

 • Every Year, the 4th December is celebrated as the Indian Navy Day, to respect the Indian Navy’s counter–attack in Operation Trident during the Indo–Pakistan war in 1971. This year, the Navy had celebrated the event under the theme – “Swarnim Vijay Varsh” to commemorate 50th Anniversary of India’s victory in the 1971 war.

8. China launched the first cross–border train with which country, as a part of the Belt and Road Initiative?

A) Laos 

B) Russia

C) Pakistan

D) Malaysia

 • The Belt and Road Initiative, also known as the One Belt One Road initiative is an infrastructure development strategy of China, adopted in the year 2013. Recently, China has launched the first cross–border train as a part of the Belt and Road Initiative, connecting China and the land–locked South East Nation Laos.

9. Which space agency has developed ‘Sentry–II – Asteroid Impact Monitoring System’?

A) ISRO

B) NASA 

C) ESA

D) JAXA

 • NASA astronomers have recently developed a next–generation impact monitoring algorithm called Sentry–II. It aims to evaluate near–Earth asteroids (NEAs) impact probabilities. The new system improves the capabilities of NASA JPL’s ‘Center for Near Earth Object Studies’ to assess the impact risk of asteroids that can come close to our planet.

10. ‘Nai Manzil’, ‘Seekho aur Kamao’ and USTTAD schemes are implemented by which Union Ministry?

A) Ministry of women and child development

B) Ministry of Minority affairs 

C) Ministry of Social Justice

D) Ministry of Education

 • The ‘Union Ministry of Minority affairs’ is implementing various skill development schemes including ‘Nai Manzil’, ‘Seekho aur Kamao’ and USTTAD. As per the Ministry, over 6.5 lakh youths have so far received training under Centre’s schemes for skill development of minorities.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button