TnpscTnpsc Current Affairs

2nd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

2nd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 2nd December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. தனது GSDPஐ இரட்டிப்பாக்கும் இலக்கை அடைவதற்காக அதற்கான மேலாண்மை ஆலோசனை நிறுவனமாக மெக்கின்சியை நியமித்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. உத்தரகாண்ட்

இ. ஒடிஸா

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தரகாண்ட்

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (GSDP) இரட்டிப்பாக்கும் இலக்கை அடைய உதவுவதற்காக, உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியை உத்தரகாண்ட் மாநில அரசு நியமித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15% CAGRஐ எட்டுவதன்மூலம் GSDPஐ `2.73 லட்சம் கோடியிலிருந்து `5.5 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்க அம்மாநிலம் இலக்கு வைத்துள்ளது. ஷாஷக்த் உத்தரகாண்ட் திட்டத்தின்கீழ், மெக்கின்சி, மாநில அரசாங்கத்துடனான ஈராண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

2. நிலவுக்கு விண்கலத்தை செலுத்துவதற்கு நீராவியை வெற்றிகரமாக பயன்படுத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஜப்பான்

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஜப்பான்

  • NASAஇன் ஓரியன் விண்கலத்தில் தாங்குசுமைகளுள் ஒன்றாக ஏவப்பட்ட தனது விண்கலத்தை செலுத்துவதற்கு வெற்றிகரமாக நீராவியைப் பயன்படுத்தியதாக ஜப்பானின் விண்வெளி நிறுவனமான JAXA அறிவித்துள்ளது. JAXAஇன் கூற்றுப்படி, நீர் உந்தை அடிப்படையாகக் கொண்ட உந்துவிசை அமைப்பைப் பயன்படுத்தி பூமியின் தாழ் புவிசுற்றுப்பாதையைத் தாண்டிய உலகின் முதல் வெற்றிகரமான திட்டம் இதுவாகும்.

3. ‘இருவாச்சி திருவிழா’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதன்மையான கலாச்சார நிகழ்வாகும்?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து

இ. சிக்கிம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நாகாலாந்து

  • நாகாலாந்து மாநிலத்தின் ‘இருவாச்சி திருவிழா’வானது ‘திருவிழாக்களின் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது; இது நாகாலாந்தின் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பர்.01 அன்று இந்தியா G20 கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அதே தருணத்தில் நாகாலாந்து மாநிலத்தில் 23ஆவது ‘இருவாச்சி திருவிழா’ தொடங்கியது. இது நாகாலாந்து மாநில அரசாங்கத்தால், பழங்குடியினருக்கு இடையேயான தொடர்புகளை ஊக்குவிக்கவும், நாகாலாந்து மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தின் கலாசார அடையாளமான இருவாச்சி பறவை, இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் காணப்படுகிறது.

4. ‘அக்னி வாரியர்’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் ஓர் இருதரப்பு பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ. அமெரிக்கா

ஆ. பிரான்ஸ்

இ. சிங்கப்பூர்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சிங்கப்பூர்

  • சிங்கப்பூர் மற்றும் இந்திய இராணுவம் இடையேயான இருதரப்பு பயிற்சியான, ‘அக்னி வாரியர்’ பயிற்சியின் 12ஆவது பதிப்பு மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் நிறைவடைந்தது. ‘அக்னி வாரியர்’ பயிற்சியானது கூட்டு சுடுதிறன் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறை பீரங்கி உபகரணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதன் இறுதிக்கட்டப் பயிற்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன.

5. பன்னாட்டு கடல்சார் அமைப்பின் (IMO) உத்திசார் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலை இணைப்பதற்கான எந்த நாட்டின் முன்மொழிவை இந்தியா ஆதரித்தது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஐக்கிய அரபு அமீரகம்

  • பன்னாட்டு கடல்சார் அமைப்பின் அடுத்த உத்திசார் திட்டத்தில் டிஜிட்டல்மயமாக்கல் கூறுகளைச் சேர்ப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முன்மொழிவை இந்தியா ஆதரித்தது. கடல்சார் தொழிற்துறையில் எதிர்கொள்ளும் ஒழுங்குமுறை இடையூறுகளைத் தீர்ப்பதில் உதவுவதற்காக டிஜிட்டல் மயமாக்கல் முனைவின் ஒருபகுதியாக கடல் சார் ஒற்றைச்சாளர அமைப்பை ஏற்றுக்கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகம் முன்மொழிந்தது. இதை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

6. அண்மையில் தொடங்கப்பட்ட, e–KUMBH இணையதளத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. தேர்தலில் குறை நிவர்த்தி

ஆ. உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்ப படிப்புகள்

இ. கோவில்களுக்கான நன்கொடை நிதி

ஈ. உழவு மற்றும் உழவுசார் வணிகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்ப படிப்புகள்

  • இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு e–KUMBH (பல வகையான பாரதிய மொழிகளில் திரட்டப்பட்ட அறிவு) இணையதளத்தைத் தொடங்கினார். இந்த இணையதளத்தில், பொறியியல் படிப்புகள் மற்றும் அதுசார்ந்த நூல்கள் 12 அட்டவணைப்படுத்தப்பட்ட இந்திய மொழிகளில் கிடைக்கும். ஒடியா மொழியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பொறியியல் நூல்கள், அறிவியல் தொழில்நுட்பத்திற்கான சொற்பிறப்பியல் ஆணையத்தால் ஒடியா மொழியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப சொற்களின் கலைக்களஞ்சியம் ஆகியவற்றையும் திரௌபதி முர்மு அப்போது வெளியிட்டார்.

7. ஆசியான்–இந்தியா நட்பின் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?

அ. 2020

ஆ. 2022

இ. 2024

ஈ. 2026

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 2022

  • நடப்பு 2022ஆம் ஆண்டானது ஆசியான்–இந்தியா நட்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முப்பதாண்டுகால கூட்டாண்மையை நினைவுகூருகிறது. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, ஆசியான்–இந்தியா ஊடகப் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், இந்திய ஊடகப் பிரதிநிதிகள் குழு சிங்கப்பூர் மற்றும் கம்போடியாவுக்குச் சென்றுள்ளன.

8. நடாசா பிர்க் முசார் என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. நார்வே

ஆ. பின்லாந்து

இ. ஸ்லோவேனியா

ஈ. சிரியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஸ்லோவேனியா

  • தாராண்மைவாத உரிமைகள் வழக்கறிஞர் நடாசா பிர்க் முசார் ஸ்லோவேனியாவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 54 அகவையான நடாசா பிர்க் முசார், 1991இல் ஸ்லோவேனியா யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து சுதந்திரமடைந்த பின்னர் அதிபராகப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி ஆவார்.

9. 2022 – உலக நீரிழிவு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Access to diabetes education

ஆ. Awareness and Education

இ. Inclusion in Medical Care

ஈ. Availability of Medicines

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Access to diabetes education

  • உலக நீரிழிவு நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.14 அன்று உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. இது உலகளாவிய சுகாதாரப்பிரச்சினையாக மாறிவரும் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதை தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதன் நிலையை நிர்வகிப்பதற்கான தீர்வுகளை உருவாக்குவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Access to diabetes education” என்பது இந்த ஆண்டு உலக நீரிழிவு நாளுக்கானக் கருப்பொருளாகும். இந்தக் கருப்பொருள், “Access to care” என்ற பல்லாண்டுக் கருப்பொருளை ஒற்றிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 8.4 மில்லியன் நபர்கள் டைப்–1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜூலா பெய்லி தொங்கு பாலம் அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஜம்மு மற்றும் காஷ்மீர்

  • ஜம்மு காஷ்மீரில் உள்ள ரம்பனில் புதிதாக கட்டப்பட்ட ஜூலா பெய்லி தொங்குபாலம் சமீபத்தில் போக்குவரத்துக்காக செயல்படத் தொடங்கியது. இது பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட முந்தைய பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டதாகும். செனாப் ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள இப்பெய்லி தொங்குபாலம் பழைய நகரமான இரம்பனையும் மாவட்ட நிர்வாக வளாகத்தையும் இணைக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜி-20 அமைப்புக்கு தலைமையேற்ற இந்தியா: தஞ்சாவூர் பெரியகோயில் மின்னொளியில் ஒளிர்ந்தது.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளதையொட்டி, தஞ்சாவூர் பெரியகோவில் வியாழக்கிழமை இரவு மின்னொளியில் ஒளிர்ந்தது. ஜி20 அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகள் உள்ளன. இந்த அமைப்புக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடு தலைமையேற்கும். இந்த வரிசையில் ஜி-20 அமைப்புக்கு இந்தியா டிச.1 முதல் ஓராண்டு காலத்துக்கு தலைமையேற்றுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி20 என்ற அடையாள சின்னத்துடன் மின்னொளியில் ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

2. எய்ட்ஸ் விழிப்புணர்வில் தமிழ்நாடு முதலிடம்: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை

உலக அளவில் 4 கோடி பேரும், இந்தியாவில், 24 இலட்சம் பேரும் (0.24%) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 1.24 இலட்சம் (0.18 %) பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோரப் பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கியது.

இந்தியப்பெருங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பு 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தற்போது இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மொரிசியஸ் ஆகிய 4 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கதேசம் தற்போது பார்வையாளராக இணைந்துள்ளது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் கடலோரப்பாதுகாப்பு மாநாட்டை நடுவண் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் சென்னையில் தொடக்கி வைத்தார். இதன் சமயம், “கடலோர பாதுகாப்புக்கான கூட்டு முயற்சிகள்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் விவாதங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளன.

4. இந்தியப் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி.

நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2ஆவது காலாண்டில் 6.3% வளர்ச்சி அடைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் பொருளாதாரம் 13.5% வளர்ந்திருந்த நிலையில், தற்போது வளர்ச்சி குறைந்துள்ளது. எனினும், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் 2ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு `38.17 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 6.3% அதிகம். கடந்த 2021-22ஆம் நிதி ஆண்டின் 2ஆவது காலாண்டின்போது பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் 6.8% முதல் 7% வரையிலான வளர்ச்சியை எட்டுவதை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணித்து வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் வி அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

உற்பத்தி குறைவு: கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய எட்டுத்துறைகளின் மொத்த உற்பத்தி கடந்த அக்டோபரில் 0.1 சதவீதமே வளர்ச்சி கண்டுள்ளதாக மற்றோர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

2nd December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which state has hired management consultancy McKinsey to achieve the target of doubling its GSDP?

A. Karnataka

B. Uttarakhand

C. Odisha

D. Telangana

Answer & Explanation

Answer: B. Uttarakhand

  • Uttarakhand has hired McKinsey, a global management consultancy, to help in achieving the target of doubling its Gross State Domestic Product (GSDP) in the next five years. The State has the target of doubling GSDP from ₹2.73 lakh crore to ₹5.5 lakh crore by achieving a CAGR of 15% in the next five years. McKinsey has signed a two–year agreement with the state government under Shashakt Uttarakhand mission.

2. Which country has successfully used steam to propel Moon spacecraft?

A. USA

B. UAE

C. Japan

D. China

Answer & Explanation

Answer: C. Japan

  • Japan’s space agency Jaxa has announced that it has successfully used steam to propel its spacecraft, which was launched as one of the payloads aboard Nasa’s Orion spacecraft. As per JAXA, this is the world’s first successful orbit control beyond low–Earth orbit using a water propellant propulsion system.

3. ‘Hornbill Festival’ is the flagship cultural event of which state?

A. Assam

B. Nagaland

C. Sikkim

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Nagaland

  • Hornbill Festival of Nagaland, also known as the ‘Festival of Festivals’, showcases Nagaland’s rich culture. India assumed the G20 presidency on 2nd December 2022 and the 23rd Hornbill Festival 2022 also began on the same day in Nagaland. It is organized by the Government of Nagaland, to encourage inter–tribal interaction and to promote the cultural heritage of Nagaland. Hornbill, Nagaland’s cultural icon, is found in the Indian subcontinent and Southeast Asia.

4. Agni Warrior is a bilateral defence exercise held between India and which country?

A. USA

B. France

C. Singapore

D. Sri Lanka

Answer & Explanation

Answer: C. Singapore

  • The 12th Edition of Exercise Agni Warrior, a bilateral exercise between the Singapore and Indian Army concluded at Devlali (Maharashtra). Exercise Agni Warrior, involved joint firepower planning, execution and use of New Generation Artillery Equipment. Indigenously manufactured Artillery guns and howitzers also participated in the final phase of the exercise.

5. India supported the proposal of which country to include digitization in International Maritime Organization’s (IMO) Strategic Plan?

A. UAE

B. Australia

C. France

D. Sri Lanka

Answer & Explanation

Answer: A. UAE

  • India supported UAE’s proposal to include the element of digitization in the International Maritime Organization’s (IMO)next Strategic Plan. UAE also proposed the adoption of a maritime single window system as a part of the digitization initiative to help in resolving the regulatory bottlenecks faced in the marine industry. This was announced by the Ministry of Ports, Shipping and Waterways (MoPSW).

6. e–KUMBH portal, which was launched recently, is associated with which field?

A. Grievance redressal in election

B. Technical Courses in Local Languages

C. Endowment fund for temples

D. Agriculture and Agribusiness

Answer & Explanation

Answer: B. Technical Courses in Local Languages

  • President Droupadi Murmu launched e–KUMBH (Knowledge Unleashed in Multiple Bharatiya Languages) portal. In the portal, engineering courses and books would be available in 12 scheduled Indian languages. The President also released engineering books of All India Council for Technical Education (AICTE) in Odia language and glossary of technical terms in Odia language.

7. Which year has been declared as the ASEAN–India Friendship year?

A. 2020

B. 2022

C. 2024

D. 2026

Answer & Explanation

Answer: B. 2022

  • The year 2022 has been declared as the ASEAN–India Friendship year, as ASEAN and India commemorate 30 years of partnership. As a part of this programme, Indian media delegation is on a visit to Singapore and Cambodia under the ASEAN–INDIA Media exchange programme.

8. ‘Natasa Pirc Musar’ has been elected as the first female President of which country?

A. Norway

B. Finland

C. Slovenia

D. Syria

Answer & Explanation

Answer: C. Slovenia

  • Liberal rights advocate Natasa Pirc Musar has been elected as Slovenia’s first female head of state– President. 54–year–old Pirc Musar will be the first woman to serve as president since Slovenia became independent amid the break–up of Yugoslavia in 1991.

9. What is the theme of the ‘World Diabetes Day 2022’?

A. Access to diabetes education

B. Awareness and Education

C. Inclusion in Medical Care

D. Availability of Medicines

Answer & Explanation

Answer: A. Access to diabetes education

  • World Diabetes Day is observed every year on November 14 by the World Health Organisation. It aims to raise awareness of diabetes as a global public health issue and solutions for prevention, diagnosis and management of the condition. This year’s theme “Access to diabetes education” follows the multi–year theme of “Access to care.” As per WHO, there were about 8.4 million individuals worldwide with type–1 diabetes in 2021.

10. Jhula Bailey Suspension Bridge, which was seen in the news, is located in which state/ UT?

A. Assam

B. Arunachal Pradesh

C. Jammu and Kashmir

D. West Bengal

Answer & Explanation

Answer: C. Jammu and Kashmir

  • The newly constructed Jhula Bailey Suspension Bridge at Jammu and Kashmir’s Ramban, was made functional for traffic. It replaced the earlier bridge which was declared unsafe. The Bailey Suspension Bridge over Chenab River connects old town Ramban with the district administrative complex.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!