2nd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. உலக சுங்க அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ரோம்

ஆ) பாரிஸ்

இ) பிரஸ்ஸல்ஸ்

ஈ) பெர்லின்

 • உலக சுங்க அமைப்பின் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.26 அன்று சர்வதேச சுங்க தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது. இது முன்னர் சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. 1983 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. “Customs bolstering Recovery, Renewal and Resilience for a sustainable supply chain” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

2. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய பரவாநோய் கண்காணிப்பு (National Non-communicable Disease Monitoring Survey) ஆய்வானது எந்தக் காலகட்டத்தில் நடத்தப்பட்டதாகும்?

அ) 2019-20

ஆ) 2018-19

இ) 2017-18

ஈ) 2016-17

 • தேசிய பரவாநோய்கள் கண்காணிப்பு ஆய்வை நடுவண் நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்டது. 2017-18 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள ஐந்தில் இரு பெரியவர்களுக்கு, பரவா நோய்கள் வருவதற்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள் இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் புற்றுநோய், நீரழிவு நோய், இதய நோய்கள் & பக்கவாதம் ஆகியவற்றிற்கு தொலைமருத்துவ (telemedicine) முறையை பயன்படுத்துவது குறித்த கட்டமைப்பையும் மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கிவைத்தார்.

3. அண்மையில், அண்டார்டிகா பனியில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய செவ்வாய் கனிமத்தின் பெயர் என்ன?

அ) ஜாரோசைட்

ஆ) கார்னோடைட்

இ) ஜோகன்செனைட்

ஈ) இல்மெனைட்

 • அறிவியல் இதழின் கருத்துப்படி, அண்டார்டிகா பனியில், ‘ஜாரோசைட்’ என்ற அரிய செவ்வாய் கனிமத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பூமியில் அரிதாகவும், ஆனால் செவ்வாய் கோளில் அதிகமாக -வும் காணப்படுகிற மஞ்சள்-பழுப்பு நிறத்திலான இத்தாது அண்டார்டிக் பிராந்தியத்தில் ஒரு மைல் ஆழத்திற்கு மேல் தோண்டியபின் காணப்படு -கிறது. செவ்வாய் ஒரு தூசி நிறைந்த இடம் என்று நம்பப்படுகிறது; இக் கண்டுபிடிப்பு, இந்தக் கோட்பாட்டை விளக்க பயன்படுத்தப்படலாம்.

4. COVID-19 தடுப்பூசிகளை நட்பு நாடுகளுக்கு வழங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியின் பெயர் என்ன?

அ) COVID மைத்ரி

ஆ) வேக்ஸின் மைத்ரி

இ) உதவும் கரங்கள்

ஈ) உதவி கோரும் நண்பர்கள்

 • இந்தியா தனது ‘வேக்ஸின் மைத்ரி’ என்ற முன்முயற்சியின்கீழ், மானிய உதவியாக 500,000 கோவிசீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்ப உள்ளது. இம்முயற்சியின்கீழ், இந்தியா ஏற்கனவே மாலத்தீவு, நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ‘வேக்ஸின் மைத்ரி’ முயற்சியை கடந்த ஜன.20 அன்று இந்தியா தொடங்கியது.

5. ‘பாலின சமத்துவம்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) கர்நாடகா

ஈ) தெலங்கானா

 • ‘பாலின சமத்துவம்’ தொடர்பான பன்னாட்டு மாநாட்டின் (ICGE-II) இரண்டாம் பதிப்பு, 2021 பிப்ரவரியில், கேரள மாநிலம் கோழிக்கோடு பாலின பூங்கா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்கீழ் 2013’இல் நிறுவப்பட்டது. இது, ‘ஐநா பெண்கள்’ போன்ற பல்வேறு உலகளாவிய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது.

6. “Global Climate Litigation Report: 2020” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ) UNEP

ஆ) UNESCO

இ) உலக வங்கி

ஈ) UNFCCC

 • ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) சமீபத்தில், “உலகளாவிய காலநிலை வழக்குகளின் அறிக்கை: 2020 – நிலை ஆய்வு” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, காலநிலை மாற்ற வழக்கு மற்றும் உலகளவில் அதன் போக்குகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள காலநிலை சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

7. “புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

அ) USA

ஆ) UK

இ) சீனா

ஈ) பிரேஸில்

 • ஐக்கியப் பேரரசு (UK) ஒரு “New Variant Assessment Platform – புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” தொடங்கியுள்ளது. இது புதிய வகையான COVID-19 வைரஸ்களை அடையாளங்காண பயன்படும். இது, UK’இன் வசம் உள்ள மரபியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. புதிய COVID வைரசு திரிபுகளை அடையாளங்காண போதுமான ஆதாரங்கள் இல்லாத நாடுகளின் பயன்பாட்டிற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

8. மெராபி மலை அமைந்துள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) தென் கொரியா

இ) இந்தோனேசியா

ஈ) வட கொரியா

 • மெராபி மலை இந்தோனேசியாவில் அமைந்துள்ளது. இது ஒரு செயலில் உள்ள எரிமலையாகும். மத்திய ஜாவாவிற்கும் யோகாகர்த்தாவிற்கும் இடையிலான எல்லையில் இது அமைந்துள்ளது. 1500’களில் இருந்து அவ்வப்போது இது வெடித்துச்சிதறி வருகிறது. இந்த எரிமலை, சமீபத்தில் மீண்டும் வெடித்தது. “நெருப்பு வளையப்” பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள எரிமலைகள் இந்தோனேசியாவில் உள்ளன.

9. பின்வரும் எந்த உயிரினத்தின் பாதுகாப்பிற்கான தேசிய செயல் திட்டத்தை சுற்றுச்சூழல் அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது?

அ) கடலாமை

ஆ) கான மயில்

இ) பிரம்மபுத்திர ஓங்கில்

ஈ) வெளிமான்

 • கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை கருத்தில்கொண்டு, அது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் புது தில்லியில் வெளியிட்டது.
 • கரையில் சிக்கித்தவிக்கும் உயிரிகளை கையாள்வதற்கான கட்டமைப்பு, கடலில் அல்லது படகில் சிக்கியுள்ள உயிரிகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல்களை குறைப்பதற்கான மேலாண்மை நடவடிக்கைகள், சீரழிந்த வாழ்விடங்களை புணரமைப்பு செய்தல் போன்றவை இந்தச் செயல்திட்டத்தில் உள்ளன.

10. கீழ்க்காணும் எந்தத்தோழமை நாட்டோடு இணைந்து, இந்தியா, ‘சுற்றுச்சூழல் ஆண்டு’ என்பதை அறிவித்துள்ளது?

அ) நேபாளம்

ஆ) பிரான்ஸ்

இ) பிரேஸில்

ஈ) ஜப்பான்

 • நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் சூழலியல் மாற்ற அமைச்சர் பார்பரா பொம்பிலி ஆகியோர் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ புது தில்லியில் தொடங்கி வைத்தனர்.
 • நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு கூட்டணியை வலுப்படுத்துவதும், பன்னாட்டுச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறன்மிகு செயல்களை அதிகப்படுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும். இந்தியாவும் பிரான்சும் இணைந்து அஸ்ஸாம், இராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல்சார் திட்டங்களை தொடங்கவுள்ளன.

2nd February 2021 Tnpsc Current Affairs in English

1. Where is the headquarters of the World Customs Organization (WCO) located?

A) Rome

B) Paris

C) Brussels

D) Berlin

 • The International Customs Day is celebrated every year on January 26 across the world, led by the World Customs Organization (WCO). It is headquartered at Brussels, Belgium.
 • It was earlier called as the Customs Cooperation Council. The Day has been celebrated since 1983. This year the theme is “Customs bolstering Recovery, Renewal and Resilience for a sustainable supply chain”

2. National Non–communicable Disease Monitoring Survey (NNMS), which was released recently, was conducted during which year?

A) 2019–20

B) 2018–19

C) 2017–18

D) 2016–17

 • The Union Health Ministry released the National Non–communicable Disease Monitoring Survey (NNMS). In the survey conducted during 2017–18, it was revealed that two in five adults in India have three or more risk factors for non–communicable diseases.
 • The Health Minister also launched a framework on use of telemedicine for cancer, diabetes, heart diseases and stroke in India.

3. What is the name of the rare Martian Mineral, which has been recently discovered in Antarctic ice?

A) Jarosite

B) Carnotite

C) Johannsenite

D) Ilmenite

 • As per the Science Magazine, Scientists have discovered a rare Martian Mineral named ‘Jarosite’ in the Antarctic ice. After boring more than a mile deep in the Antarctic region, the yellow–brown mineral which is rarely seen on Earth but found more on Mars was spotted.
 • Mars is believed to be a dusty place and this discovery may be used to explain this theory.

4. What is the name of India’s initiative to deliver COVID–19 vaccines to friendly countries?

A) COVID Maitri

B) Vaccine Maitri

C) Helping Hands

D) Friends in Need

 • India is set to despatch 500,000 doses of Covishield vaccines to Sri Lanka as grant assistance under its “Vaccine Maitri” initiative.
 • Under the initiative, India has already delivered nearly five million doses to seven countries in the neighbourhood including Maldives, Nepal, Mauritius among others. The Vaccine Maitri (Vaccine Friendship) initiative was launched on January 20.

5. Which Indian state is to play host to the ‘International Conference on Gender Equality (ICGE–II)’?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Telangana

 • The second edition of the International Conference on Gender Equality (ICGE–II) is to be hosted in February, 2021, at the Gender Park Campus, Kozhikode, Kerala. The Chief Minister is also set to inaugurate a Gender Park at Kozhikode. It was established in 2013 under the Department of Women and Child Development. It has partnerships with various global organisations like UN Women.

6. “Global Climate Litigation Report: 2020” has been released by which organisation?

A) UNEP

B) UNESCO

C) World Bank

D) UNFCCC

 • The United Nations Environment Programme (UNEP) has recently released a report titled – Global Climate Litigation Report: 2020 – Status Review. The report provides an overview of climate change litigation and its trends globally.
 • As per the report, the number of climate litigation cases around the world has almost doubled in the last three years.

7. Which country has launched “New Variant Assessment Platform”?

A) USA

B) UK

C) China

D) Brazil

 • The United Kingdom (UK) has launched a New Variant Assessment Platform, which will be used to identify new variants COVID–19 viruses. It uses genomics expertise possessed by UK and has been dedicated for use by countries which does not have sufficient resources for identifying the new Covid virus strains.

8. In which country is Mount Merapi located?

A) Japan

B) South Korea

C) Indonesia

D) North Korea

 • The Mount Merapi is located in Indonesia. It is an active volcano which is located in the border between Central Java and Yogyakarta. This volcano has erupted again recently. Indonesia is located on the “Ring of Fire” and hence has the greatest number of active volcanoes in the world.

9. The Environment Ministry recently released a National action plan for conservation of which species?

A) Marine Turtle

B) Great Indian Bustard

C) Brahmaputra Dolphin

D) Black Buck

 • The Ministry of Environment Forest and Climate Change (MoEF&CC) has recently released ‘Marine Mega Fauna Stranding Guidelines’ and ‘National Marine Turtle Action Plan’.
 • The documents contain framework for handling stranded animals on shore, entangled animals in the sea or boat, management actions for reducing threats to marine species and their habitats, rehabilitation of degraded habitats, among others.

10. India launched the ‘Year of Environment’ with which friendly country?

A) Nepal

B) France

C) Brazil

D) Japan

 • Environment Minister Prakash Javadekar launched the Indo–French year of Environment along with his French counterpart.
 • India and France have environment projects being undertaken in Assam, Rajasthan and a project to be started in Jharkhand. The objective of this event is to strengthen Indo–French cooperation in sustainable development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *