Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

2nd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

2nd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022’இன்படி, இந்தியாவின் வடகோடியில் அமைந்து உள்ள மாநிலம் எது?

அ) ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஆ) பஞ்சாப்

இ) ஹிமாச்சல பிரதேசம் 

ஈ) ஹரியானா

  • ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் வடகோடியில் உள்ள மாநிலமாகும். அது வடக்கே ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. 1971ஆம் ஆண்டு இதேநாளில் 18ஆவது இந்திய மாநிலமாக அது உருவாக்கப்பட்டது.
  • டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மர் அதன் முதல் முதலமைச்சராக இருந்தார். இம்மாநிலம் அதன் 52ஆவது மாநில தினத்தை ஜன.25 அன்று கொண்டாடியது.

2. ‘INS குக்ரி நினைவகம்’ அமைந்துள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ) பஞ்சாப்

ஆ) டையூ 

இ) புதுச்சேரி

ஈ) கோவா

  • ‘INS குக்ரி நினைவகம்’ என்பது கடந்த 1976ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கப்பட்ட ஒரு போர்க் கப்பலை நினைவுகூரும் ஓர் இந்திய-பாகிஸ்தான் போர் நினைவிடமாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக்கடற்படையின் முதல் ஏவுகணை ஏந்திய போர்க் கப்பலான INS குக்ரி டையூ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  • மசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், கடந்த 1989ஆம் ஆண்டு மும்பையிலிருந்து பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டது. 2021 டிசம்பரில் பணிநீக்கம் செய்யப்பட்ட இக்கப்பல், பொதுமக்களின் பார்வைக்காக டையூவுக்கு அனுப்பப்பட்டது.

3. 512 கிமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்துகொண்டு, எந்த மாநிலத்திலிருந்து நாகாலாந்து பிரிக்கப்பட்டது?

அ) அஸ்ஸாம் 

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) மேற்கு வங்கம்

  • நாகாலாந்து மாநிலமானது கடந்த 1963ஆம் ஆண்டில் அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டது. இருமாநிலங்களும் 512.1 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன.
  • அஸ்ஸாமின் அப்போதைய வட கச்சார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் உள்ள நாகா மலைகள் மற்றும் நாகா ஆதிக்கம் செலுத்தும் அனைத்து பகுதிகளையும் நாகாலாந்து மாநிலத்தின் ஒருபகுதியாக வேண்டும் என நாகாலாந்து கோரி வருகிறது. நாகாலாந்து மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனைக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண தயாராக இருப்பதாக அறிவித்தன.

4. எந்த நிறுவனத்தின் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டில், இந்தியா, $29.9 மில்லியனைச் செலுத்தியுள்ளது?

அ) உலக வங்கி

ஆ) ஐக்கிய நாடுகள் 

இ) ADB

ஈ) BRICS வங்கி

  • 2022ஆம் ஆண்டிற்கான ஐநா’இன் வழமையான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் இந்தியா $29.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளது. 15 நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது மற்றும் அதன் ஈராண்டு பதவிக் காலம் 2022 டிசம்பர்.31 அன்று முடிவடைகிறது.
  • 2022 ஜன.21 நிலவரப்படி, 24 உறுப்புநாடுகள் தங்கள் வழமையான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை முழுமை -யாகச் செலுத்தியுள்ளன. ஈரான், கினியா & வனுவாட்டு ஆகிய நாடுகள் தங்களின் வாக்களிக்கும் உரிமையை மீண்டும் பெறுவதற்காக ஐநா’இன் வழமையான வரவு செலவுத்திட்டத்திற்கு போதுமான தொகயைச்செலுத்தின. 193 உறுப்பினர்களைக்கொண்ட அமைப்பில் வெனிசுலா மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இதுவரை இல்லை.

5. IMF உலகப்பொருளாதாரக்கண்ணோட்டத்தின் ஜனவரி மதிப்பீட்டின்படி, 2021-22இல் இந்தியாவின் மதிப்பிடப்பட்ட வளர்ச்சி என்ன?

அ) 8.5%

ஆ) 9% 

இ) 9.5%

ஈ) 10%

  • பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) தனது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் 2022 ஜனவரி மாத மதிப்பீட்டை வெளியிட்டது. இவ்வெளியீட்டின்படி, இந்தியா 2021-2022இல் 9% வளர்ச்சியடையும். 2021 அக்டோபர் மாதத்தில் இந்தக் கணிப்பு சதவீதம் 9.5ஆக இருந்தது.
  • இது 2022-23ஆம் ஆண்டில் இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சி 9%ஆக இருக்கும் எனக்கணித்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சியானது 2021இல் 5.9%ஆக இருந்து 2022இல் 4.4%ஆகக் குறையும்.

6. எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், தூய்மைப் பணியாள -ர்களுக்கான தேசிய ஆணையம் இயங்குகிறது?

அ) சட்டம் & நீதி அமைச்சகம்

ஆ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் 

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • தூய்மைப்பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 2022 மார்ச்.31ஆம் தேதிக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஆணையமானது 1994’இல் தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையச்சட்டம், 1993ன் மூலம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக உருவாக்கப்பட்டது.
  • இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021 டிசம்பர்.31, நிலவரப்படி நாட்டில் 58,098 தூய்மைப் பணியாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

7. லாகோவா & புராச்சபோரி வனவுயிரி சரணாலயங்கள் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம் 

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • அஸ்ஸாமின் கசிரங்கா தேசியப்பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், அந்தத் தேசியப்பூங்காவில் குறைந்தது 868 சதுப்புநில மான்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2018இல் 907ஆக இருந்தது.
  • ஈரநிலப்பறவைகள் கணக்கெடுப்பில், மொத்தம் 66,776 எண்ணிக்கையிலான 126 வகையான பறவைகள் கண -க்கிடப்பட்டன. அவற்றில் 42,205 பறவைகள் கசிரங்கா தேசியப்பூங்கா பகுதியிலும் 24,571 பறவைகள் அசாமின் லாகோவா & புரசாபோரி வனவுயிரி சரணாலயங்களிலும் கணக்கிடப்பட்டன.

8. ‘டிஜிட்டல் கொடுப்பனவுக் குறியீட்டை’ வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி 

இ) நிதி அமைச்சகம்

ஈ) இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம்

  • இந்திய ரிசர்வ் வங்கியானது ‘டிஜிட்டல் கொடுப்பனவுக் குறியீட்டை’ வெளியிடுகிறது. இது இந்தியாவில் டிஜிட்டல் முறைகள்மூலம் பணஞ்செலுத்தும் வளர்ச்சியைக்காட்டுகி -றது. 2021 செப்டம்பரில் இக்குறியீடு 39.64% உயர்ந்து 304.06ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் அது 217.74ஆக இருந்தது.

9. இந்தியாவானது எந்த நாட்டுடன் இணைந்து ‘பசுமை உத்திசார் கூட்டணி – செயல் திட்டம் 2020-2025’இல் கையெழுத்திட்டது?

அ) பிரான்ஸ்

ஆ) டென்மார்க் 

இ) ஆஸ்திரேலியா

ஈ) ஐக்கிய இராச்சியம்

  • பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்களுக் -கான ஆராய்ச்சி & உற்பத்தியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதென, இந்தியா – டென்மார்க் நாடுகளின் அறிவியல் & தொழில்நுட்ப கூட்டுக்குழுவின் கூட்டத்தில் இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
  • இருநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசுமை செயல்திட்ட ஒத்துழைப்புக்கான, 2020-25 செயல்திட்டத்தில் ஒப்புக் கொண்டபடி, பருவநிலை மாற்றம், பசுமைத்திட்டங்களுக் -கு மாற்றம், எரிசக்தி, தண்ணீர், கழிவு, உணவுபோன்ற துறைகளில் கூட்டாக செயல்பட வலியுறுத்தப்பட்டது.

10. ‘பத்ம விபூஷண்’ விருது பெற்ற பிரபா ஆத்ரேவுடன் தொடர்புடைய துறை எது?

அ) இலக்கியம்

ஆ) இசை 

இ) விளையாட்டு

ஈ) குடிமைச்சேவை

  • 73ஆவது குடியரசு நாளை முன்னிட்டு, இந்த ஆண்டு 128 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 89 வயதான ‘கிரானா கரானா’ பாடகர் பிரபா ஆத்ரே ‘பத்ம விபூஷண்’ விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒரே மேடையில் இருந்து ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பதினோரு இசை நூல்களை வெளியிட்டு உலக சாதனை படைத்துள்ளார். அவர் ‘ஸ்வர்மயீ குருகுலத்தின்’ நிறுவனராவார்.
  • ராதேஷ்யாம் கெம்கா (மரணத்திற்குப்பின்; இலக்கியம், உபி), ஜெனரல் பிபின் ராவத் (குடிமைப்பணி) மற்றும் கல்யாண் சிங் (மரணத்திற்குப் பின்; பொது விவகாரங்கள், உபி) ஆகியோரும் ‘பத்ம விபூஷண்’ விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கிரிப்டோகரன்சிக்கு 30% வரி; எண்ம செலாவணி அறிமுகம்

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் 2022-23ஆம் நிதி ஆண்டில் எண்ம செலாவணி (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகர் சொத்துகள் மீது 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றார்.

இதுதொடர்பாக பட்ஜெட் உரையின்போது அவர் கூறுகை -யில், “எண்ம செலாவணியானது, திறன்மிக்க மலிவான செலாவணி மேலாண்மை அமைப்பை உருவாக்கும். அதைக் கருத்தில்கொண்டு ‘பிளாக்செயின்’ உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ம செலாவணியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது. எண்ம செலாவணியானது எண்மப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகர் சொத்துகளின் பரிவர்த்தனைமூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். குறிப்பிட்ட மதிப்புக்குமேல் பரிவர்த்தனை செய்யப்படும் மெய்நிகர் சொத்துகளுக்கு டிடிஎஸ் (மூலவரிக்கழிப்பு) பிடித்தம் செய்யப்படும். புதிய நடைமுறைகள் ஏப்ரல்.1ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளன” என்றார்.

லாட்டரி, விளையாட்டு நிகழ்வுகள், புதிர் விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின்மூலமாக ஈட்டப்படும் வருவாய்க்கு ஏற்கெனவே 30% வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதற்கு நிகராக கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், பல்வேறு தரப்பினரது கோரிக்கையை ஏற்று அவற்றின் பரிவர்த்தனைக்கு மத்திய அரசு தற்போது வரி விதித்து உள்ளது.

2. மாநிலங்களுக்கு `1 லட்சம் கோடி வட்டியில்லா கடன்

மூலதன முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் மாநிலங்களுக்கு 2022-23ஆம் நிதியாண்டில் `1,00,000 கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 50 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2ஆவது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல்செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் 6.6% வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதா -ரம், படிப்படியாக மீண்டு வருகிறது. பொருளாதாரத்தை மீட்கும் வகையிலான பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் மூலதன செலவினம் `7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

கட்டமைப்புத் திட்டங்களில் அரசின் செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப தனியார் முதலீடும் அதிகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அரசு-தனியார் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்: மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் `15,000 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதியைப் பயன்படுத்தி நீண்டகாலத்துக்கான கட்டமைப்பு -த் திட்டங்களில் மாநிலங்கள் முதலீடு செய்ய முடியும்.

அத்திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் `1,00,000 கோடி கடன் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அக்கடனை ஐம்பது ஆண்டுகளில் மாநிலங்களில் திருப்பிச்செலுத்த வேண்டும் என்றும், அத்தொகைக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான உச்சவரம்புக்கு கூடுதலாக இந்தக் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சுமையை அதிகரிக்கவில்லை: தனிநபர்கள் வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த ஆண்டிலும் நடப்பாண்டிலும் தனிநபருக்கான வருமான வரி உயர்த்தப்படவில்லை. கரோனா தொற்று பரவல் காலத்தில் வரியை உயர்த்துவதன்மூலமாக மக்களின் சுமையை அதிகரித்து வருவாயைப் பெருக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை” என்றார்.

இலக்கு குறைப்பு: பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலமாக `1.75 லட்சம் கோடியைத் திரட்ட கடந்த நிதிநிலை அறிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், `12,030 கோடியை மட்டுமே மத்திய அரசால் திரட்ட முடிந்தது. ஏர் இந்தியாவை விற்றதன்மூலமாக `2,700 கோடியும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்ன் மூலமாக `9,330 கோடியும் மத்திய அரசுக்குக் கிடைத்தது.

இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான இலக்கு `65,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (LIC) பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், அத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.

மானியம் குறைப்பு: உணவுப் பொருள்கள், உரங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் மானியங்களை வழங்கி வருவதாகவும் அதைக் குறைக்க வேண்டுமெனவும் பொருளாதார ஆய்வறிக்கைகளில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அக்கோரிக்கையை மத்திய அரசு தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. உணவுக்கான மானியம் `2,42,836 கோடியில் இருந்து `2,06,831 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மானியம் 39 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பசுமைப் பத்திரங்கள்: நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் விநியோகம் சார்ந்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதன் காரணமாகவே பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் பசுமைசார் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்காக ‘பசுமைப் பத்திரங்கள்’ வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், கடந்த ஜனவரியில் சரக்கு-சேவை வரி (GST) வருவாய் வரலாறு காணாத வகையில் `1,40,986 கோடியாக அதிகரித்தது எனவும் கூறினார்.

நிதிப்பற்றாக்குறை: கரோனா பரவலால் நாட்டின் வருவாய் பெருமளவில் குறைந்ததன் காரணமாக கடன் வாங்கி திட்டங்களைச் செயல்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. அதன் விளைவாக அரசின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் 6.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 2025-26ஆம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் இல்லை: உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில் அந்த மாநிலங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய அறிவிப்புகள் எதையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 ½ மணி நேரம் வாசித்தார். அவர் அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே, அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரலெழுப்பினர். முக்கியமாக, ஏலம் மூலமாக 5ஜி அலைக் கற்றை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தபோது, ‘BSNL நிறுவனம் என்னானது?’ என சிலர் கேள்வி எழுப்பினர்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்: மாநில அரசு ஊழியர்களுக்கும் வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மாநில அரசு ஊழியர்களுக்கு நிர்வாக பங்களிப்புத்தொகைக்கான வரி விலக்கு வரம்பு 10-இலிருந்து 14 சதவீதமாக நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

NPS’இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள நிர்வாக பங்களிப்பு 14 சதவீத தொகை வரிவிலக்கைப் போன்று, மாநில அரசு ஊழியர்களுக்கும் வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகள்

* எண்ம செலாவணி அறிமுகம்.

* ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ் போர்ட் அறிமுகம்.

* மெய்நிகர் சொத்துகளின் பரிவர்த்தனைக்கு 30 சதவீதம் வரி.

* விவசாயத்திலும் நில அளவையிலும் ட்ரோன் பயன்பாடு.

* 3 ஆண்டுகளில் 400 “வந்தே பாரத்’ ரயில்கள்.

* சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் மறுசீரமைப்பு

* ஒவ்வொரு வகுப்புக்கும் பிராந்திய மொழியில் தனித்தனி தொலைக்காட்சி சேனல்கள்.

* 5ஜி அலைக்கற்றை ஏலம்

ஒதுக்கீடுகள்

* பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு `44,720 கோடி கூடுதல் மூலதனம்.

* இரயில்வேக்கு `1.40 லட்சம் கோடி.

* கோதுமை, நெல் கொள்முதலுக்கு `2.37 லட்சம் கோடி.

* வீடுதோறும் குடிநீர்க் குழாய் திட்டத்துக்கு `60,000 கோடி.

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு `48,000 கோடி.

* சூரிய மின்கலன்கள் தயாரிப்புக்கு கூடுதலாக `19,500 கோடி.

* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு `1,500 கோடி.

* MSME துறைக்கு `2 லட்சம் கோடி கூடுதல் கடன்.

* உள்நாட்டு பாதுகாப்புக்கு `1.85 லட்சம் கோடி.

வரிச் சலுகை/ வரி அறிவிப்பு

* தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் `50,000 கூடுதல் வரிவிலக்கு தொடரும்.

* கூட்டுறவு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (ஏஎம்டி) 15 சதவீதமாகக் குறைப்பு.

* வெளிநாட்டு குடைகளுக்கு 20 சதவீத வரி.

* சில மின்னணு உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.

* பொலிவூட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரி 5%ஆக குறைப்பு.

விலை அதிகரிக்கும் பொருள்கள்

இறக்குமதி செய்யப்படும் ஹெட்போன்கள், இயர்போன், குடைகள், சூரிய மின்கலன், சூரிய மின் தகடுகள், ஒலிபெருக்கிகள், ஸ்மார்ட் மீட்டர், கவரிங் நகைகள், எக்ஸ்ரே இயந்திரம், பேட்டரியில் இயங்கும் சிறார் விளையாட்டுப் பொருள்களுக்கான உதிரிபாகங்கள்.

இறக்குமதி வரி அல்லது இவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பால் மேற்கண்ட பொருள்களின் விலை உயருகிறது.

உள்நாட்டில் சிறு தொழில் புரிவோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வெளிநாட்டு குடைகள், அதற்கான உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விலை குறையும் பொருள்கள்

இறக்குமதி செய்யப்படும் பொலிவூட்டப்பட்ட மற்றும் அறுத்து வடிவமைக்கப்பட்ட வைரங்கள், உணவாகப் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட சிப்பிகள், பதப்படுத்தப்பட்ட கணவாய் மீன்கள், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தனால், அசிட்டிக் அமிலம், செல்லிடப்பேசி கேமராக்களுக்கான லென்ஸ் ஆகியவற்றின் விலை குறையும்.

மேற்கண்ட பொருள்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் அவற்றின் விலை குறைய இருக்கிறது. இதில் செல்லிடப்பேசி கேமரா லென்ஸ் மீதான வரி 15 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

3. வேளாண் துறைக்கு `1,32,513 கோடி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகம்

வேளாண் அமைச்சகத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் `1,32,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகம்.

மீன், பால், கால்நடை அமைச்சகத்துக்கு `6,407.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 44% அதிகம். இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறுகையில், ‘உள்நாட்டில் எண்ணெய் வித்து பயிர் விதைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டிலிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

2023ஆம் ஆண்டு சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து சர்வதேச அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு ஆதரவளிக்கும்.

வேளாண் பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின்மூலம் 2021-22ஆம் பருவ ஆண்டில் 163 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 1,208 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல், கோதுமை கொள்முதல் நடைபெறும். இதற்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் `2.37 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்படும்.

பிரதமரின் கிஸான் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு `6,57,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு `15,500 கோடியும், கிருஷ்னாட்டி திட்டத்துக் -கு `7,183 கோடியும், ராஷ்ட்ரீய கிருஷ் திட்டத்துக்கு `10,433 கோடியும், சந்தை விலை ஆதரவு திட்டத்துக்கு `1,500 கோடியும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

4. 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2022-23 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பகுதி-அ

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 துறைகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

உற்பத்தியுடன் இணைந்த முதலீட்டுத் திட்டத்தின்மூலம் கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி நடைபெறும்

நாடு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் நீண்டகால திட்டங்களுக்காக நான்கு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பிரதமர் கதிசக்தி

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி

உற்பத்தி மேம்பாடு மற்றும் முதலீடு, புதிய வாய்ப்புகள், எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை திட்டம்

முதலீட்டிற்கான நிதி

பிஎம் கதிசக்தி

சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், விரைவுப் போக்குவரத்து, நீர்வழிகள், போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவை பிஎம் கதிசக்தியை இயக்கும் 7 என்ஜின்கள் ஆகும்.

பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டம்

பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கான வாய்ப்பு பொருளாதார மாற்றம், வலுவான பன்மாதிரி இணைப்பு மற்றும் போக்குவரத்துத் திறனுக்கான 7 என்ஜின்களை உள்ளடக்கியதாகும்.

தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தில், இந்த 7 என்ஜின்களை உள்ளிடக்கிய திட்டங்கள் பிஎம் கதிசக்தி வரையறைக்குள் கொண்டு வரப்படும்.

சாலைப் போக்குவரத்து

2022-23இல் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான `20,000 கோடி திரட்டப்படும்

பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்கள்

2022-23இல் பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்களை 4 இடங்களில் செயல்படுத்துவதற்கு தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சி மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்

ரயில்வே

உள்ளூர் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிக்கு உதவும் வகையில், ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற கருத்தியல் நடைமுறைப்படுத்தப்படும்.

2022-23 உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் திறன் அதிகரித்தலுக்கு கவாஜ் திட்டத்தின் கீழ் 2000 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்பு கொண்டு வரப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரதம் ரயில்கள் தயாரிக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துக்கான 100 பிஎம் கதிசக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.

பர்வதமாலா

தேசிய ரோப்வே வளர்ச்சித் திட்டம் பர்வதமாலா பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும்.

2022-23இல் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.

உள்ளடக்கிய வளர்ச்சி

வேளாண்மை

கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்காக 1.63 கோடி விவசாயிகளுக்கு `2.37 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரசாயன கலப்பற்ற இயற்கை வேளாண்மை மேம்படுத்தப்படும். கங்கை நதியின் குறுக்கே 5 கிலோ மீட்டர் அகல வழித்தடத்தின் விவசாய நிலங்கள் மீது ஆரம்பக்கட்ட கவனம் செலுத்தப்படும்.

வேளாண்மை மற்றும் கிராமப்புற தொழில் தொடங்வோருக்கு நிதி அளிக்க மூலதனத்துடன் கூடிய நிதியை நபார்டு வழங்கும்.

பயிர் மதிப்பீடு, நில ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்து தெளித்தலுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

கென்- பெட்வா திட்டம்

கென் – பெட்வா இணைப்புத் திட்ட அமலாக்கத்துக்கு `1400 கோடி ஒதுக்கீடு

கென் – பெட்வா இணைப்புத் திட்டத்தால் 9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ)

உதயம், இ-ஷ்ரம், என்சிஎஸ் மற்றும் அசீம் (ASEEM) இணையதளங்கள் ஒன்றாக இணைக்கப்டும்.

130 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS)

கீழ் கூடுதல் கடன் வழங்கப்பட்டது.

இசிஎல்ஜிஎஸ் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழான உத்திரவாதம் விரிவுபடுத்தப்படவுள்ளது. `50,000 கோடி அதிகரிக்கப்பட் -டு மொத்தம் `5 லட்சம் கோடியாக விரிவுபடுத்தப்படும்.

குறு மற்றும் சிறு நிறுவனங்ளுக்கான கடன் உத்திரவாத அறக்கட்டளையின் (CGTMSE) கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு `2 லட்சம் கோடி கூடுதல் கடன் வழங்கப்படும்.

`6,000 கோடி மதிப்பில் எம்எஸ்எம்இ-க்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் திட்டம்(RAMP) அறிமுகம் செய்யப்படும்.

திறன் மேம்பாடு

ஆன்லைன் பயிற்சி மூலம் மக்களின் திறனை மேம்படுத்த திறன் மற்றும் வாழ்வாதாரத்துக்கான டிஜிட்டல் அமைப்பு (DESH-Stack இ-இணையதளம்) தொடங்கப்படும்.

* டிரோன் சேவைகளுக்கு, ‘டிரோன் சக்திக்கு’ உதவ தொடக்கநிலை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

கல்வி

பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் ‘ஒரு வகுப்பு- ஒரு TV சேனல்’ 200 TV சேனல்களாக விரிவுபடுத்தப்படும்.

* விவேகமான சிந்திக்கும் திறன்களை ஊக்குவிக்க மெய்நிகர் ஆய்வு கூடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மின்னணு-ஆய்வு கூடங்கள் மற்றும் கற்றல் சூழல் ஏற்படுத்தப்படும்.

* டிஜிட்டல் ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்க உயர்தர மின்னணு-பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

* உலகத்தரத்திலான கல்விக்கு டிஜிட்டல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்படும்.

சுகாதாரம்

தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்புக்கு திறந்தவெளி தளம் அறிமுகப்படுத்தப்படும்.

* தரமான மனநல ஆரோக்கிய கலந்தாய்வுக்கு ‘தேசிய தொலைதூர மன நல திட்டம் மற்றும் சேவைகள் தொடங்கப்படும்.

நிமான்ஸ்- ஐ சிறப்பு மையமாக கொண்டு 23 தொலை தூர மன நல சிறப்பு மையங்களின் நெட்வொர்க் ஏற்படுத்தப்படும். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம் (IIITB) வழங்கும்.

ஷக்‌ஷம் அங்கன்வாடி

மிஷன் சக்தி, மிஷன் வத்சல்யா, ஷக்‌ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பயன்கள்

2 லட்சம் அங்கன்வாடிக்கள் ஷக்‌ஷம் அங்கன்வாடிகளாக மேம்படுத்தப்படும்.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு

வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு `60,000 கோடி ஒதுக்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க `48,000 கோடி ஒதுக்கப்பட்டது.

வடகிழக்கு பகுதிக்கான பிரதமரின் மேம்பாட்டு நடவடிக்கை (PM-DevINE)

வடகிழக்கு மாநிலங்களில் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமரின்-DevINE என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்ப கட்டமாக `1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

துடிப்பான கிராமங்கள் திட்டம்

வடக்கு எல்லையில் குறைவான மக்கள், இணைப்பு வசதி மற்றும் கட்டமைப்புகள் உள்ள எல்லை கிராமங்களின் மேம்பாட்டுக்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.

வங்கி வசதிகள்

1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் 100 சதவீதம் வங்கி அமைப்புக்குள் வரவுள்ளன.

வணிக வங்கிகள், 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கி யூனிட்டுகளை தொடங்கவுள்ளன.

இ-பாஸ்போர்ட்

மின்னணு சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

நகர்ப்புற திட்டம்

கட்டிட விதிகளின் நவீனமயமாக்கல், நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி ஆகியவை அமல்படுத்தப்படும்.

நகர பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பேட்டரி மாற்று கொள்கை கொண்டு வரப்படும்.

நில ஆவணங்கள் மேலாண்மை

தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நில ஆவணங்கள் மேலாண்மைக்கு தனித்துவமான நில அடையாள எண்.

துரிதமான பெருநிறுவனம் வெளியேற்றம்

நிறுவனங்கள் விரைவாக வெளியேறுவதற்கு, துரிதமான பெருநிறுவன வெளியேற்ற மையம் (C-PACE) அமைக்கப்படும்.

ஏவிஜிசி ஊக்குவிப்பு குழு

அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றின் ஊக்குவிப்புக்கு இத்துறையில் தனி குழு உருவாக்கப்படும்.

தொலை தொடர்பு துறை

உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜி தொழில்நுட்பத்துக்கு வலுவான சூழலை உருவாக்க வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.

ஏற்றுமதி வளர்ச்சி

நிறுவனம் மற்றும் சேவை மையங்கள் மேம்பாட்டில் மாநிலங்களையும் பங்குதாரர்களாக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.

பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்பு அடைதல்:

2022-23இல் மூலதன கொள்முதலில் 68% உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2021-22இல் 58% ஆக இருந்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெருந்தொழில்துறையினர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25% இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு, சுதந்திரமான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகள்

செயற்கை நுண்ணறிவு, புவி வானியல் சாதனங்கள், மற்றும் ட்ரோன்கள் செமி கண்டக்டர் மற்றும் அதன் சூழல் அமைப்பு, விண்வெளி பொருளாதாரம், மரபியல் பொருளாதாரம் மற்றும் மருந்து பொருட்கள், பசுமை எரிசக்தி மற்றும் தூய்மையான போக்குவரத்து சாதனங்கள் போன்ற புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அரசு பங்களிப்பு வழங்கப்படும்.

எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை செயல்திட்டம்:

2030’க்குள் 280 GW சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக `19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும்.

அனல்மின் நிலையங்களில் உயிரி கழிவு வில்லைகள், 5 முதல் 7% அளவுக்கு இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

ஆண்டுக்கு 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு (CO2) வெளியேற்றம் தவிர்ப்பு.

விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு

விளை நிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தவிர்க்க உதவி

தொழிற்சாலைகளுக்காக நிலக்கரியை ரசாயனப் பொருட்களாக மாற்றுதல் மற்றும் நிலக்கரி எரிவாயு நிலையங்களை அமைக்க நான்கு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்

வேளாண் காடுகளை வளர்க்க விரும்பும் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியின விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

அரசு மூலதன முதலீடு

2022-23இல் முக்கிய தனியார் முதலீடு மற்றும் தேவைகளை ஊக்குவிப்பதில் அரசு முதலீடு தொடரும்.

நடப்பாண்டில் `5.54 லட்சம் கோடியாக உள்ள மூலதன செலவு ஒதுக்கீடு 2022-23இல் 35.4% அதிகரிக்கப்பட்டு `7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு

2022-23இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.9% ஒதுக்கீடு

மத்திய அரசின் ‘வலுவான மூலதன செலவு’ 2022-23இல் ` 10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4.1% ஆகும்.

குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் – சர்வதேச நிதிச்சேவைகள் மையம்.

குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்கப்படும்.

சர்வதேச நீதித்துறை விவேகத் திட்டத்தின்கீழ், சச்சரவுகளுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு காண ஏதுவாக சர்வதேச சமரசத் தீர்வு மையம் அமைக்கப்படும்.

வளங்களைத் திரட்டுதல்

தரவு மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்கு கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும்

கடந்த ஆண்டில் `5.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மூலதனம் மற்றும் தனியார் பங்கு முதலீடு, பெரிய அளவிலான ஸ்டார்ட் அப் மற்றும் வளர்ச்சி சூழலுக்கு வகை செய்துள்ளது.

புதிய வகை பொருட்கள், சேவை வாய்ப்புகள் துறைகளுக்கு கலப்பு நிதியம் ஊக்குவிக்கப்படும்.

பசுமை கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட பசுமைத் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்படும்.

டிஜிட்டல் பணம்

2022-23-லிருந்து இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும்.

மாநிலங்களுக்கு அதிக நிதி வாய்ப்புகளை வழங்குதல்

‘மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு’ ஒதுக்கீடு அதிகரிப்பு:

`10,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு நடப்பாண்டின் திருத்திய மதிப்பீட்டில் `15,000 கோடி

பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீடுகளை ஊக்குவிப்பதில் மாநிலங்களுக்கு உதவ 2022-23இல் `1 லட்சம் கோடி ஒதுக்கீடு: 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்கள், வழக்கமான மற்றும் அதற்கு மேற்பட்ட கடன் வாங்க அனுமதி

நிதி மேலாண்மை

பட்ஜெட் மதிப்பீடுகள் 2021-22: `34.83 லட்சம் கோடி

திருத்திய மதிப்பீடுகள் 2021-22: `37.70 லட்சம் கோடி

2022-23இல் மொத்த செலவினம் `39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

2022-23இல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் `22.84 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% (பட்ஜெட் மதிப்பீடுகள் 6.8%)

2022-23இல் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது

நேர்முக வரிகள்

நிலையான மற்றும் ஊகிக்கும் வரிமுறையின் கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கு

நம்பிக்கைதரும் வரி முறையை நிறுவுவதற்கான தொலைநோக்குப் பார்வை

வரி முறையை மேலும் எளிமைப்படுத்தவும், வழக்குகளைக் குறைக்கவும்

‘புதிய வடிவிலான கணக்கு தாக்கல்’ அறிமுகம்

கூடுதல் வரி செலுத்துவதற்கு புதிய வடிவிலான கணக்கு தாக்கலுக்கு வாய்ப்பு

ஏற்கனவே தவறவிட்ட வருவாயை அறிவிப்பதற்கு மதிப்பீட்டாளரால் இயலும்

உரிய மதிப்பீட்டு ஆண்டின் இறுதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் கணக்கு தாக்கல் செய்ய முடியும்

கூட்டுறவு சங்கங்கள்

கூட்டுறவுகளால் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மாற்றுவரி விகிதம் 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே சமச்சீரான வாய்ப்பை வழங்குதல்

`1 கோடிக்கும் அதிகமாகவும், `10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வரி நிவாரணம்

பெற்றோர்கள் / காப்பாளர்களின் வாழ்க்கை காலத்தில் அதாவது பெற்றோர்கள் / காப்பாளர்கள் 60 வயதை எட்டிய போது, மாற்றுத்திறனாளிகளை சார்ந்திருப்போருக்கு காப்பீட்டு திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருடாந்திர தொகை அல்லது மொத்த தொகை அனுமதிக்கப்படும்.

தேசிய ஓய்வூதிய திட்டப் பங்களிப்பில் சமநிலை

மாநில அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கிற்குப் பங்களிப்பு செய்யும் உரிமையாளர்களுக்கான வரிப்பிடித்த வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இது சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவாக்க உதவும்.

புதிய தொழில்களுக்கு ஊக்குவிப்பு

தகுதிவாய்ந்த புதிய தொழில்களுக்கு வரிப் பயன் கிடைப்பதற்கான இணைப்புக்காலம் ஓராண்டிற்கு, 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணைப்புக்கான கால வரம்பு ஏற்கனவே 31.03.2022 ஆக இருந்தது.

சலுகை வரி முறையின் கீழ் ஊக்குவிப்பு திட்டங்கள்

பிஏபி பிரிவு 115இன் கீழ் தயாரிப்பு அல்லது உற்பத்தி தொடக்கத்திற்கான கடைசி தேதி ஓராண்டுக்கு அதாவது 31 மார்ச் 2023இல் இருந்து 31 மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் வரி விதிப்புக்கான திட்டம்

மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களுக்கான குறிப்பிட்ட வரிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

ஆர்ஜித செலவு தவிர மற்ற வருவாயை கணக்கிடும் போது செலவு அல்லது ஊதியம் வரிக்குறைப்புக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு இதர வருவாய்க்கு மாற்றாக எடுத்துக் கொள்ள இயலாது

பரிமாற்ற விவரங்களை பெறுவதற்கு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட தொகைக்கு ஒரு சதவீத அளவிற்கு டிடிஎஸ் (வருவாயிலிருந்து வரிப்பிடித்தம்) பிடித்தம் செய்யப்படும்.

மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிசளிக்கப்படும் போது அதனை பெறுபவருக்கு வரி விதிக்கப்படும்.

வழக்கு நிர்வாகம்

உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தால் சட்டம் பற்றிய கேள்வி முடிவு செய்யப்படும் வரை மேல்முறையீடு தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்படும்.

துறைக்கும், வரி செலுத்துவோருக்குமிடையே அடுத்தடுத்து வழக்கு தொடரப்படுவதை இது பெருமளவு குறைக்க உதவும்.

ஐஎஃப்எஸ்சி-க்கு வரி ஊக்குவிப்புகள்

குறிப்பிட்ட நிலைமைகளுக்கு உட்பட்டு கீழ் வருபவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

கடலுக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பொருட்களிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியரின் வருவாய்

கடலுக்கு அப்பால் உள்ள வங்கிப் பிரிவால் வழங்கப்பட்ட மாற்றுக் கணக்குகளிலிருந்து பெறப்படும் வருவாய்

கப்பல் குத்தகையின் கணக்கில் பெறப்படும் உரிமத் தொகை மற்றும் வட்டி வருவாய்

ஐஎஃப்எஸ்சியில் பங்கு நிர்வாக சேவைகளிலிருந்து பெறப்படும் வருவாய்

கூடுதல் வரியில் சீர்திருத்தம்

ஏஓபி-க்கள் (ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமைக்கப்படும் கூட்டமைப்பு) மீதான கூடுதல் வரி உச்சவரம்பு 15 சதவீதமாக இருக்கும்.

தனிநபர் நிறுவனங்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் இடையேயான துணை வரியில் பாகுபாடு குறைக்கப்படும்

எந்தவகையான சொத்துக்கள் பரிமாற்றத்திலிருந்தும் கிடைக்கின்ற நீண்டகால மூலதன லாபங்கள் மீதான துணை வரி 15 சதவீதமாக இருக்கும்

புதிய தொழில் தொடங்கும் சமூகத்தினருக்கு ஊக்கம் அளிப்பதற்காக

வருவாய் மற்றும் லாபங்கள் மீதான துணை வரி அல்லது செஸ் வரி வர்த்தக செலவாக அனுமதிக்கப்பட மாட்டாது

வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை

தேடுதல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின் போது கண்டறியப்பட்ட வெளிப்படுத்தப்படாத வருவாய்க்கு மாறான எந்த இழப்பையும் வெளிப்படுத்த அனுமதிக்கப்படாது.

டிடிஎஸ் அம்சங்களில் சீர்திருத்தங்கள்

·வணிக மேம்பாட்டு உத்தியாக முகவர்களின் கைகளில் இருக்கும் வரி விதிப்பின் பயன்கள் முகவர்களுக்கு வழங்கப்படும்.

·நிதியாண்டின் போது ஒரு நபருக்கு வழங்கப்படும் பணப்பயன்களின் மொத்த மதிப்பு `20,000-ஐ கடக்கும் போது வரிப்பிடித்தம் செய்யப்படும்.

மறைமுக வரிகள்

ஜிஎஸ்டியில் மகத்தான வளர்ச்சி

பெருந்தொற்றுக்கு இடையிலும் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு – இந்த வளர்ச்சிக்கு வரிசெலுத்துவோர் பாராட்டுக்குரியவர்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சுங்க நிர்வாகம் முற்றிலும் தொழில்நுட்பமயமாக்கம். 2022 செப்டம்பர் 30-ந் தேதி வாக்கில் சுங்க தேசிய வலைத்தளத்தின் செயல்பாடு நடைமுறைக்கு வரும்.

சுங்க சீர்திருத்தங்கள் மற்றும் தீர்வை விகித மாற்றங்கள்

முகமற்ற சுங்க நடைமுறை முற்றிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அனைத்து விதமான சிரமங்களுக்கு இடையே சுங்க அமைப்புகள் சிறப்பான முன்களப் பணியில் ஈடுபட்டன.

திட்ட இறக்குமதிகள் மற்றும் மூலதனப் பொருட்கள்

மூலதனப் பொருட்கள் மற்றும் திட்ட இறக்குமதிகளில் சலுகை விகிதங்கள் படிப்படியாக அகற்றப்படும். இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் உள்நாட்டுத் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில் 7.5 சதவீதம் என்ற மிதமான கட்டணம் வசூலிக்கப்படும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படாத நவீன இயந்திரங்களுக்கான சில சலுகைகள் தொடரும்.

மூலதனப் பொருட்களில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க, சிறப்பு வார்ப்புகள், திருகாணி உருண்டைகள், நேரியல் இயக்கம் போன்ற உற்பத்திப் பொருட்களுக்கு சில சலுகைகள் அறிமுகம்.

சுங்க சலுகைகள் மறு ஆய்வு மற்றும் கட்டண எளிதாக்கம்

சில வகையான வேளாண் உற்பத்திப் பொருட்கள், ரசாயனங்கள், துணிகள், மருத்துவ உபகரணங்கள் மீதான சலுகை போன்ற 350-க்கும் மேற்பட்ட சலுகைகளை படிப்படியாக அகற்ற உத்தேசம். போதுமான உள்ளூர் திறன் கொண்ட மருந்துகளுக்கு இச்சலுகைகள் நீடிக்கும்.

ரசாயனங்கள், ஜவுளி, உலோகங்கள் போன்ற பிரிவுகளுக்கான கட்டண விகிதம் மற்றும் சுங்க விகிதம் எளிதாக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது தயாரிக்கப்படக் கூடிய பொருட்களுக்கு சலுகை ரத்து செய்யப்பட்டு, இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் நோக்கங்களுடன் தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பயன்படும் கச்சா பொருட்களுக்கு சலுகை அடிப்படையிலான தீர்வைகள் வழங்கப்படும்.

குறிப்பிட்ட துறை முன்மொழிவுகள்

மின்னணு

அணியக்கூடிய உபகரணங்கள், கேட்கும் உபகரணங்கள், மின்னணு ஸ்மார்ட் மீட்டர்கள், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க படிப்படியான விகித அமைப்பை உருவாக்க சுங்கத் தீர்வை விகிதங்கள் திருத்தியமைக்கப்படும்.

மொபைல் ஃபோன் மின்னூக்கிகள் மின்மாற்றி, மொபைல் கேமராவுக்கான கேமரா லென்ஸ் ஆகியவற்றின் பாகங்கள் மற்றும் சில பொருட்களுக்கு, உயர் வளர்ச்சி மின்னணு பொருட்கள் உற்பத்தியை உள்நாட்டில் ஊக்குவிக்கும் தீர்வை சலுகைகள்.

வைரங்கள் மற்றும் ஆபரணங்கள்

பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் வைரக்கற்கள் மீதான சுங்கத் தீர்வை 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் நகைப்பிரிவை ஊக்குவிக்கும் வகையில் அறுக்கப்பட்ட வைரங்களுக்கு சுங்கத் தீர்வை இல்லை.

மின் வணிகம் மூலம் நகை ஏற்றுமதியை ஊக்கவிக்க இந்த ஆண்டு ஜூன் மாதம் எளிதாக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு அமல்படுத்தப்படும்.

கவரிங் நகை இறக்குமதிக்கு ஊக்கத் தடை விதிக்கும் வகையில், கவரிங் நகை இறக்குமதி மீது குறைந்தபட்சம் கிலோவுக்கு `400 வீதம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும்.

ரசாயனங்கள்

மெத்தனால், அசிடிக் ஆசிட் போன்ற சில முக்கிய ரசாயனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்புக்கான கனரக இருப்பு மீதான சுங்கத் தீர்வை குறைக்கப்படுகிறது; உள்நாட்டு உற்பத்தித் திறன் உள்ள சோடியம் சயனைடு மீதான தீர்வை அதிகரிக்கப்படுகிறது. இது உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரிக்க உதவும்.

எம்எஸ்எம்இ

குடைகள் மீதான சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. குடைகளுக்கான பாகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை திரும்பப் பெறப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் துறைக்கான உபகரணங்கள் மீதான சலுகை மாற்றியமைக்கப்படுகிறது.

சிறு, குறு, நடுத்தர தொழிலின் இரண்டாம் கட்ட உருக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் இரும்புக் கழிவுகளுக்கு சுங்கத் தீர்வை விலக்களிக்கப்படுகிறது.

பொது நலன் கருதி உலோகங்களுக்கு அதிக விலை அளிக்கும் வகையில், துருப்பிடிக்காத ஸ்டீல், இரும்புக் கம்பிகள், அல்லாய் ஸ்டீல் மீதான சிவிடி தீர்வை ரத்து செய்யப்படுகிறது.

ஏற்றுமதிகள்

ஏற்றுமதியை ஊக்குவிக்க அலங்காரம், டிரிம்மிங், பாஸ்ட்னர்கள், பொத்தான்கள், ரிவிட், லைனிங் மெட்டீரியல், குறிப்பிட்ட தோல், மரச்சாமான்கள் பொருத்துதல்கள் மற்றும் பேக்கேஜிங் பெட்டிகள் போன்ற பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இறால் ஏற்றுமதியை ஊக்குவிக்க, இறால் வளர்ப்புக்குத் தேவையான சில பொருட்கள் மீதான தீர்வை குறைக்கப்படுகிறது.

எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க கட்டண அளவீடு

எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க, கலக்காத எரிபொருளுக்கு 2022 அக்டோபர் 1 முதல் லிட்டருக்கு `2 வீதம் கூடுதல் வித்தியாச கலால் வரி விதிக்கப்படும்.

5. 2025-26-ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலராக உயரும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலரை (சுமார் `370 லட்சம் கோடி) எட்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு ஏற்கெனவே 3 டிரில்லியன் டாலரை (சுமார் `225 லட்சம் கோடி) கடந்துள்ளது. செலாவணி மதிப்பு விகிதத்தின் போக்கு, வளர்ந்த நாடுகளில் உள்ள நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகவும் வலுவாகவும் இருக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 8-9 சதவீதமாக தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டால், அது டாலர் மதிப்பில் 8 சதவீத வளர்ச்சியாக இருக்கும். இந்தப் போக்கு தொடர்ந்து சாத்தியமானால் 2025-26 அல்லது 2026-27ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டும்” எனத் தெரிவித்தார்.

இந்திய பொருளாதார மதிப்பை 5 டிரில்லியன் டாலராக அதிகரித்து, 2024-25ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உயர்த்தும் தனது கனவை கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். இதன்மூலம் உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சியடையும் எனவும், அடுத்த நிதியாண்டில் 8-8.5 சதவீதம் வளர்ச்சியடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. சேதி தெரியுமா?

ஜன.22: த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகா் சூா்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றது.

ஜன.23: தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகப் பணி யாற்றியவரும் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி (92) காலமானார்.

ஜன.23: லக்னோவில் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பட்டத்தை இந்தியாவின் பி.வி. சிந்து வென்றார்.

ஜன.24: 1945இல் இரண்டாம் உலகப் போரின்போது மாயமான அமெரிக்க விமானம் இமயமலைப் பகுதியில் அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் தலைமையில் கண்டறியப்பட்டது.

ஜன.25: தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் (இலக்கியம், கல்வி); எஸ் தாமோதரன் (சமூக சேவை); வீ. சேஷையா (மருத்துவம்), AKC நடராஜன், முத்துக்கண்ண -ம்மாள், சௌகார் ஜானகி, எச் பல்லேஷ் பஜந்திரி (கலை) ஆகியோர் 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜன.26: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜன.27: டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரபூர்வமாக ஒப்படைத்தது. முன்னதாக `18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது.

ஜன.27: 1964ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து தங்கப் பதக்கம் வென்ற சரண்ஜித் சிங் (90) காலமானார்.

ஜன.28: மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

ஜன.29: இந்தியாவிடமிருந்து முதன்முறையாக பிரமோஸ் ஏவுகணையை 375 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிலிப்பைன்ஸ் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

1. Which is the northern most state of India, as of 2022?

A) Jammu & Kashmir

B) Punjab

C) Himachal Pradesh 

D) Haryana

  • Himachal Pradesh is the northernmost state of India and shares borders with the union territories of Jammu and Kashmir and Ladakh to the north. The state is celebrating its 52nd full statehood day on 25 January, as it was formed as the 18th Indian state on the same day in 1971, with Dr. Yashwant Singh Parmar as its first Chief Minister.

2. ‘INS Khukri Memorial’ is located in which state/UT?

A) Punjab

B) Diu 

C) Puducherry

D) Goa

  • ‘INS Khukri Memorial’ is a Indo–Pakistani War memorial commemorating a frigate attacked by a Pakistani submarine in 1976. INS Khukri, the lead ship of the Indian Navy’s Khukri class corvettes and an indigenous surface–to–surface missile fitted vessel, was handed over to Diu administration. Built by Mazagon Dock Shipbuilders, the ship was commissioned in 1989, in Mumbai. The ship was decommissioned in December 2021 and sent to Diu, for public display in INS Khukri Memorial.

3. Nagaland was carved out from which state, with which it shares a 512 km long border?

A) Assam 

B) Sikkim

C) Arunachal Pradesh

D) West Bengal

  • Nagaland state was carved out of Assam in 1963 and the two states share a 512.1–km–long border. Nagaland has been demanding Naga Hills and all Naga–dominated areas in the then North Cachar and Nagaon districts of Assam, to be part of the state. The Governments of Nagaland and Assam announced that they are ready for out–of–court settlement of the long pending inter–state boundary dispute.

4. India has paid $29.9 million in budget assessment of which institution?

A) World Bank

B) United Nations 

C) ADB

D) BRICS Bank

  • India has paid USD 29.9 million in United Nations regular budget assessments for the year 2022. India is a non–permanent member of the 15–nation Security Council and its two–year term will end on December 31, 2022. As of January 21, 2022, 24 Member States have paid their regular budget assessments in full.
  • Iran, Guinea and Vanuatu paid sufficient dues to the UN regular budget to regain their voting rights. Only Venezuela and Papua New Guinea don’t have the right to vote in the 193–member body.

5. As per IMF World Economic Outlook January assessment, what is the estimated growth of India in 2021–22?

A) 8.5%

B) 9% 

C) 9.5%

D) 10%

  • The International Monetary Fund (IMF) released its World Economic Outlook January 2022 assessment.
  • As per the update, India is estimated to grow at 9% in 2021–2022, down from 9.5% projected in October 2021. It also projects 9% growth for the Indian economy in 2022–23. Global economic growth will dip from 5.9% in 2021 to 4.4% in 2022.

6. ‘National Commission for Safai Karamcharis’ is a body under which Union Ministry?

A) Ministry of Law and Justice

B) Ministry of Social Justice and Empowerment 

C) Ministry of Home Affairs

D) Ministry of Rural Development

  • The Union Cabinet approved the extension of the National Commission for Safai Karamcharis (NCSK) for three years with effect from April 1, 2022. NCSK was constituted as a statutory body in 1994 by ‘National Commission for Safai Karamcharis Act, 1993. The tenures have been extended several times. It works under Ministry of Social Justice and Empowerment. As per official data, there were 58,098 manual scavengers identified in the country as on December 31, 2021.

7. Laokhowa and Burachapori Wildlife Sanctuaries are located in which state?

A) Assam 

B) Madhya Pradesh

C) Andhra Pradesh

D) Maharashtra

  • A Census in Assam’s Kaziranga National Park and Tiger Reserve has found that the National Park has at least 868 swamp deer, down from 907 counted in 2018 due to the two floods.
  • In the census of wetland birds, a total of 66,776 numbers of birds of 126 species were enumerated, out of which 42,205 birds were counted in the Kaziranga National Park area while 24,571 numbers of birds were counted in Laokhowa & Burachapori Wildlife Sanctuaries of Assam.

8. Which institution releases the ‘Digital Payment Index’?

A) NITI Aayog

B) Reserve Bank of India 

C) Ministry of Finance

D) National Payment Corporation of India

  • The Reserve Bank of India releases the ‘Digital Payment Index’, which shows the deepening of payments through digital modes in India. The Index rose by 39.64 per cent to 304.06 in September 2021 against 217.74 in the year–ago month.

9. India along with which country signed the ‘Green Strategic Partnership – Action Plan 2020–2025’?

A) France

B) Denmark 

C) Australia

D) United Kingdom

  • India and Denmark have agreed to initiate joint research and development on green fuels, including green hydrogen. This is a part of the already adopted Green Strategic Partnership – Action Plan 2020–2025.
  • The India–Denmark Joint Committee discussed the priorities and developments in Science, Technology, and Innovation (STI) of both countries with a special focus on green solutions.

10. Prabha Atre, who was conferred the Padma Vibhushan is associated with which field?

A) Literature

B) Music 

C) Sports

D) Civil Service

  • The President of India Ram Nath Kovind approved to confer 128 Padma Awards this year, on the eve of the 73rd Republic Day. The 89–year–old Kirana gharana Vocalist ‘Prabha Atre’ was awarded the Padma Vibhushan. She holds a world record for releasing 11 books on music in Hindi and English from a single stage. She established the ‘Swarmayee Gurukul’.
  • Radheyshyam Khemka (Posthumous; Literature, UP), General Bipin Rawat (Civil Service) and Kalyan Singh (Posthumous; Public Affairs, UP) were also awarded the Padma Vibhushan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!