Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

2nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘ஜான் ஹை டு ஜஹான் ஹை’ என்ற பெயரில் COVID தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு அமைச்சகம்

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

ஈ) சமூக நீதி அமைச்சகம்

  • நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும், தடுப்பு மருந்து குறித்து சிலர் பரப்பிவரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை முறியடிக்கவுமாக ‘ஜான் ஹை தோ ஜகான் ஹை’ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடுவண் சிறுபான்மையினர் நல அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது.
  • இந்தப் பிரச்சாரம், ஜூன்.21 அன்று பல்வேறு சமூக-கல்வி இயக்கங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோருடன் இணைந்து தொடங்கப்பட்டது.

2. நடுவணரசின் நலவாழ்வு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புதிய மென்பொருளான ‘CSS’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Coronavirus Science Software

ஆ) COVID Severity Score

இ) COVID Serious Score

ஈ) COVID Scientific Score

  • மத்திய நலவாழ்வு அமைச்சகமானது ‘COVID Serious Score (CSS)’ என்ற மென்பொருளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டது. இப்புதிய மென்பொருள், தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக்கருவி பொருத்துவதற்கா -ன தேவை ஏற்படக்கூடிய நோயாளிகளை கண்டறிந்து இடர் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவும்.
  • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆதரவுடன், IIT கௌகாத்தியுடன் இணைந்து கொல்கத்தாவைச் சார்ந்த நலம் சார் கண்டறிவுகள் அறக்கட்டளை இம்மென்பொருளை உருவாக்கியுள்ளது. அறிகுறிகள், உடல்நிலை, பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இணை நோய்த்தன்மை ஆகியவற்றை கணக்கிட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சுவாசக்கருவி பொருத்துவதற்கான தேவை ஏற்படக்கூடிய நோயாளிக
    -ளை இது கண்டறிகிறது.

3. நடப்பாண்டு (2021) யோகா நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Yoga and Science

ஆ) Yoga amid COVID

இ) Yoga for Wellness

ஈ) Yoga for World

  • உலக யோகா நாளானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.21 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா அவையின் 69ஆம் அமர்வின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி தனது உரையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முன்மொழிந்தார்.
  • “Yoga for Wellness” என்பது நடப்பாண்டில் (2021) வந்த உலக யோகா நாளுக்கான கருப்பொருள் ஆகும்.

4. நிலையான அறுசுவை உணவியல் நாள் (Sustainable Gastronom -y Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.5

ஆ) ஜூன்.10

இ) ஜூன்.18

ஈ) ஜூன்.26

  • நிலையான அறுசுவை உணவியல் ஆற்றக்கூடிய பாத்திரத்தை நோக்கி உலகின் கவனத்தைக் குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஜூன்.18 அன்று உலக நிலையான அறுசுவை உணவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • அனைத்து பண்பாடுகளும் நாகரிகங்களும் நிலையான வளர்ச்சியின் பங்காளர்களாக உள்ளன என்பதை இந்தச்சிறப்புநாள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

5. உலக அரிவாள் செல் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.19

ஆ) ஜூன்.20

இ) ஜூன்.21

ஈ) ஜூன்.22

  • அரிவாள் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று உலக அரிவாள்செல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • அரிவாள் செல் நோய் என்பது இரத்தசோகையின் ஒரு மரபுவழி வடிவம் ஆகும். இதில் இரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் போதுமான உயிர்வளியை எடுத்துச்செல்ல முடியாத நிலையிலிருக்கும். “Shine the Light on Sickle Cell” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

6. ‘மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) ஜூன்.19

ஆ) ஜூன்.20

இ) ஜூன்.21

ஈ) ஜூன்.22

  • மோதல்களின்போது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உலகம் முழுவதும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைத்து வாழ்வோரை கெளரவிப்பதற்கும் மற்றும் இந்தக் குற்றங்களை ஒழித்துக்கட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தோருக்கு அஞ்சலி செலுத்தவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) கடைப்பிடிக்கப்படுகிறது.

7. நடப்பாண்டு (2021) உலக ஏதிலிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Every Action Counts

ஆ) Anti–racism wins

இ) Rights of Refugees

ஈ) Together we heal, learn and shine

  • உலகெங்குமுள்ள ஏதிலிகளின் நிலைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத் -துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.20 அன்று உலக ஏதிலிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “Together we heal, learn and shine” என்பது இந்த ஆண்டில் (2021) வரும் இந்தச் சிறப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
  • 2000 டிசம்பர்.4 அன்று, ஐநா பொது அவை, ஜூன்.20’ஐ உலக ஏதிலிகள் நாளாகக் கொண்டாடப்படும் என முடிவுசெய்தது. கடந்த 1951ஆம் ஆண்டு நடைபெற்ற ஏதிலிகள் மாநாடும் அதன் 1967 நெறிமுறையும் உலகெங்கி -லும் உள்ள ஏதிலிகளைப் பாதுகாக்கின்றன.

8. பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற நீர்நிலை எது?

அ) மன்னார் வளைகுடா

ஆ) ஏதன் வளைகுடா

இ) பாக் நீரிணை

ஈ) கட்ச் பாலைவனம்

  • இந்திய கடற்படையானது முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய கடற்ப -டையுடன் இணைந்து ஒரு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது. அது, பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற ஏதன் வளைகுடாவில் நடைபெறவுள்ளது. இந்தப்பயிற்சியில் மிகவும் அதிநவீன வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி பயிற்சிகள், உத்திசார் நிகழ்வுகள் போன்றவை அடங்கும்.

9. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்தியர் யார்?

அ) P T உஷா

ஆ) மில்கா சிங்

இ) தியான் சந்த்

ஈ) பான் சிங் தோமர்

  • “பறக்கும் சீக்கியர்” என்றும் அழைக்கப்படும் மில்கா சிங், COVID தொற்று காரணமாக அண்மையில் காலமானார். அவருக்கு 91 வயது. 1958’இல் வேல்ஸில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா -வின் முதல் தனிநபர் தங்கப்பதக்கத்தை மில்கா சிங் வென்றார்.
  • படைவீரரும் தடகள வீரருமான மில்கா சிங், பல்வேறு சர்வதேச நிகழ்வு -களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டிற்கு பல பரிசுகளை வென்று கொடுத்துள்ளார்.

10. 2024ஆம் ஆண்டளவில், எத்தனை சதவீத அளவுக்கு சாலை விபத்து இறப்புகளைக் குறைப்பதற்கு அரசு இலக்கு கொண்டுள்ளது?

அ) 20%

ஆ) 25%

இ) 50%

ஈ) 75%

  • சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி, அண்மையில், 2024ஆம் ஆண்டளவில் சாலை விபத்து இறப்புகளை 50% குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனக் கூறினார். விபத்து நேரிடும் பகுதிகளை அகற்றுவதற்காக, மாநிலங்கள் மற்றும் NHAI’க்கு, அரசு, `14000 கோடி ஒதுக்கீடு செய்யுந்திட்டத்திற்கு உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் அனுமதித்துள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கு வாசனைப் பயிர்களின் மேம்பாட்டுக்கான விருது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வாசனைப் பயிர்களின் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலைப் பயிர்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாசனைப் பயிர்களின் விதை, நடவுப்பொருள் உற்பத்தி, வாசனைப் பயிர்களின் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துதல் என்ற திட்டமானது வாசனை, மலைத்தோட்டப்பயிர்கள் துறை, பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்காக கோழிக்கோட்டில் உள்ள பாக்கு, வாசனைப் பயிா்கள் மேம்பாட்டு இயக்ககம் 2019-20ஆம் ஆண்டுக்கு `78.51 லட்சமும், 2020-21ஆம் ஆண்டுக்கு `88.87 லட்சமும் நிதி ஒதுக்கியுள்ள -து. இத்திட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பெரியகுளம், கோயம்புத்தூர், பவானிசாகர், உதகை, ஏற்காடு, திருச்சி, கிள்ளிகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட 16 துணை மையங்களில் நறுமணப்பயிர்களில் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இஞ்சி, பூண்டு, மிளகாய், கொத்தமல்லி, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப் பட்டை, சா்வசுகந்தி, புளி, கறிவேப்பிலை, நறுமணப் பயிர்களின் விதை, தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வயல்வெளி முன்னோடி திட்டத்தின்கீழ் நறுமணப் பயிர்களான மஞ்சள், மிளகு, கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றில் அங்கக வேளாண் சாகுபடி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்காடு, தடியன்குடிசை, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களில் வாசனைப் பயிர்களின் நாற்றங்கால் மேம்படுத்தப்பட்டு கோழிக்கோடு பாக்கு, வாசனைப் பயிர்கள் மேம்பாட்டு இயக்ககத்தின் மூலம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வாசனைப் பயிர்களின் முக்கியத்துவம்பற்றி பிரபலப்படுத்தவும், சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும் பல்வேறு துணை மையங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாசனைப் பயிர்கள் குறித்த கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் இத்திட்டத்தின் வருடாந்திர மறுஆய்வுக் கூட்டம் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய அளவிலிருந்து பங்கேற்ற 45 மையங்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2020-21ஆம் ஆண்டில் தலைசிறந்த செயல்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றிதழுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Which Union Ministry is set to launch ‘Jaan Hai to Jahaan Hai’ COVID vaccination awareness campaign?

A) Health Ministry

B) Rural Development Ministry

C) Minority Affairs Ministry

D) Social Justice Ministry

  • The Minority Affairs Ministry is set to launch an awareness campaign ‘Jaan Hai to Jahaan Hai’ in rural and remote areas to curb rumours against the COVID vaccination drive in the country. The campaign is to be launched by the Ministry of Minority Affairs along with various Socio–Educational Organisations, NGOs and Women Self Help Groups (SHGs).

2. CSS, a new software released by the Union Health Ministry, stands for?

A) Coronavirus Science Software

B) COVID Severity Score

C) COVID Serious Score

D) COVID Scientific Score

  • The Union Health Ministry released information about a software named ‘Covid Severity Score’, which will identify Covid patients who may require ventilation, based on an algorithm. The Foundation for Innovations in Health, Kolkata with support from the Department of Science & Technology, in collaboration with IIT Guwahati, have developed an algorithm. It allocates a Covid Severity Score (CSS), using the measures of symptoms, signs, vital parameters, test reports etc.

3. What is the theme of the International Day of Yoga 2021?

A) Yoga and Science

B) Yoga amid COVID

C) Yoga for Wellness

D) Yoga for World

  • The International Yoga Day has been celebrated every year on June 21 since 2015. PM Modi proposed to observe an International Yoga Day, in his address during the opening of the 69th session of the United Nations General Assembly. This year, the theme of the International Day of Yoga is ‘Yoga for Wellness’. The focus will be on practicing yoga for physical and mental well–being.

4. When is the Sustainable Gastronomy Day observed every year?

A) June.5

B) June.10

C) June.18

D) June.26

  • The World Sustainable Gastronomy Day is observed every year on 18th of June to focus the world’s attention on the role that sustainable gastronomy can play. It also reaffirms that all cultures and civilizations are contributors of sustainable development.

5. On which date, World Sickle Cell Day is observed?

A) June.19

B) June.20

C) June.21

D) June.22

  • The World Sickle Cell Day is observed every year on 19th of June to raise public awareness about the sickle cell disease and its treatment methods. Sickle cell disease is an inherited form of anaemia in which red blood cells are not able to carry adequate oxygen throughout the body. The 2021 theme is “Shine the Light on Sickle Cell”.

6. When is the ‘International Day for the Elimination of Sexual Violence in Conflict’ observed?

A) June.19

B) June.20

C) June.21

D) June.22

  • The International Day for the Elimination of Sexual Violence in Conflict is observed every year on June 19 to raise awareness of the need to put an end to conflict related sexual violence, to honor the victims and survivors of sexual violence around the world and to pay tribute to all those who have courageously devoted their lives to and lost their lives in standing up for the eradication of these crimes.

7. What is the theme of the World Refugee Day 2020?

A) Every Action Counts

B) Anti–racism wins

C) Rights of Refugees

D) Together we heal, learn and shine

  • World Refugee Day is observed annually on June 20, to create awareness of the situation of refugees across the world. The theme of this year’s observance is “Together we heal, learn and shine”.
  • On December 4, 2000, the United Nations General Assembly decided that June 20 would be celebrated as World Refugee Day. The 1951 Refugee Convention and its 1967 Protocol protect the refugees, who are present throughout the world.

8. Which water body is also called the Gulf of Berbera?

A) Gulf of Mannar

B) Gulf of Aden

C) Palk Strait

D) Rann of Kutch

  • The Indian Navy, for the first time is participating in a joint exercise with the European Union Naval Force, which is set to take place in the Gulf of Aden, also known as the Gulf of Barbera. This exercise would involve some of the most advanced air defence, anti–submarine exercises, cross deck helicopter operations, tactical manoeuvres etc.

9. Who was the first Indian to win individual gold medal at the Commonwealth Games?

A) P T Usha

B) Milkha Singh

C) Dhyan Chand

D) Paan Singh Tomar

  • Milkha Singh, who is also called as the “Flying Sikh”, passed away recently due to COVID. He was 91 years old.
  • Milkha Singh won India’s first individual gold medal at the Commonwealth Games, in 1958 in Wales. Milkha Singh was a soldier and a track and field sprinter, who represented India in various international events and brought laurels to the country.

10. What is the Government’s target to reduce road accident deaths by year 2024?

A) 20%

B) 25%

C) 50%

D) 75%

  • The Minister for Road Transport & Highways and Micro, Small and Medium Enterprises, Nitin Gadkari recently said that the Government’s target is to reduce road accident deaths by 50% by year 2024. The World Bank and ADB have sanctioned a scheme by which the Government is allocating Rs.14,000 crores for states and NHAI to remove accident black spots.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!