Tnpsc

2nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

2nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

 

1. 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் முதலீட்டாளர் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிற நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) சிங்கப்பூர்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • 2020-21 காலப்பகுதியில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வரத்து குறித்த அண்மைய தகவல்களின்படி, சிங்கப்பூர் 29% உடன் முதலிடத்திலும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் 23%) மற்றும் மொரீஷியஸ் (9%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • மொத்த அந்நிய நேரடி முதலீடு வரத்துகளில் சுமார் 44% பங்கைக் கொண்டு ‘கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள்’ துறையானது முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து கட்டுமான நடவடிக்கைகள் (13%) மற்றும் சேவைத்துறை (8%) ஆகிய துறைகள் உள்ளன.

2. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கிக -ளுடன் இணைப்பதற்கு அனுமதி வழங்கும் நிறுவனம் எது?

அ) ரிசர்வ் வங்கி

ஆ) நபார்ட்

இ) நிதி அமைச்சகம்

ஈ) மாநில அரசு

  • வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், 2020 ஆனது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில கூட்டுறவு வங்கிகளுடம் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த ஒருங்கிணைப்பிற்கு ரிசர்வ் வங்கி தனது அனுமதியைத் தர வேண்டும். அண்மையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில கூட்டுறவு வங்கிகளுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறியது. இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசால் ஒரு முன்மொழிவு செய்யப்படவேண்டும். NABARD’இன் பரிந்துரை, நிதியுதவி தொடர்பான உத்தரவாதம் போன்றவை அடங்கும்.

3. CPEC என்பது எந்த உலகளாவிய முன்முயற்சியின் முதன்மை திட்டமாகும்?

அ) Global Infrastructure Connectivity Alliance

ஆ) Belt and Road Initiative

இ) EU Connectivity partnership

ஈ) Central Asia Regional Economic Cooperation Program

  • சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்முயற்சியின் (BRI) முதன்மை திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (PoK) வழியாக செல்வதால், இந்தியா, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவும் பாகிஸ்தானும் அண்மையில் தங்களது 70 ஆண்டுகால அரசியல் உறவுகளை கொண்டாடின. பாகிஸ்தானுடனான $60 பில்லியன் டாலர் CPEC திட்டத்தை சீனா மீண்டும் தக்கவைத்துள்ளது.

4. சமீபத்தில், IAEA அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்ட நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) இஸ்ரேல்

இ) ஈரான்

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • பன்னாட்டு அணுசக்தி முகமையை (IAEA) அணுவாற்றல் தளங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்திற்குள் வைக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. IAEA’இன் தலைவர் ரபேல் கிராஸியின் கருத்துப்படி, இந்த ஒப்பந்தம் ஜூன்.24 அன்று முடிவடையும்.

5. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புத்தாக்க மையத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) R காந்தி

ஆ) இராஜேஷ் பன்சால்

இ) நந்தன் நிலேகனி

ஈ) உர்ஜித் படேல்

  • ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமானது ஆதார் நிறுவனக் குழுவின் உறுப்பினரான இராஜேஷ் பன்சாசலை அதன் தலைமைச் செயலதிகாரியாக நியமித்துள்ளது. அவர் முன்னர் ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்பம், நிதி சேர்க்கை மற்றும் கொடுப்பனவு முறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். UIDAI’இல் இந்தியாவின் நேரடி பயன்கள் பரிமாற்றத்தை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்குவகித்தார்.

6. “பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை” என்றவோர் அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) FAO

ஆ) UNEP

இ) IUCN

ஈ) IMF

  • பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை என்பது ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) வெளியிடப்படுகிற ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கை உலகெங்கிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் நிலையை மதிப்பிடுகிறது. பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை 2020’இன் படி, உலகளாவிய சமூகம், பாதுகாக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு குறித்த இலக்கை நோக்கி பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால் தரம்குறித்த அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றவில்லை.

7. இந்தியாவுடனான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கியப் பேரரசு

இ) ஆஸ்திரேலியா

ஈ) பிரான்ஸ்

  • இந்தியாவுடனான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வணிகபிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பதினான்கு வார ஆலோசனை செயல்முறையை ஐக்கியப்பேரரசு தொடங்கியுள்ளது. இந்தச்செயல்முறை செப்-அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் முறையான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னால் நடத்தப்படும். விஸ்கி, கார்கள் மற்றும் சேவைகள்போன்ற பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா பார்க்கப்படுகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கில்லர்மோ லாசோ, எந்த நாட்டின் அதிபராக பதவியேற்றார்?

அ) ஈக்வடார்

ஆ) ஜிம்பாப்வே

இ) தென்னாப்பிரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா

  • கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் புதிய அதிபராக பதவியேற்றார். நாடு பெரும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ள இச் சமயத்தில் அவர் பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பின்னர், பொருளாதார நிபுணரான சிமன்கியூவாவை அவர் தனது நிதியமைச்சராக நியமித்தார். ஈக்வடார் என்பது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.

9. அழிவின்விளிம்பிலிருக்கும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாககொண்ட பூக்குந்தாவரமான ‘ஆப்பிரிக்க வயலட்’, பின்வரும் எந்த மாநிலத்தில் முதன்முறையாக காணப்பட்டுள்ளது?

அ) கேரளம்

ஆ) கோவா

இ) மிசோரம்

ஈ) சிக்கிம்

  • இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் போபாலைச் சார்ந்த அறிவியலாளர்கள் மிசோரம் மாநிலத்தில் பூக்குந்தாவரமான ஆப்பிரிக்க வயலட்டுகளின் ஒரு வகையினைக் கண்டறிந்துள்ளனர்.
  • Didymocarpus vickifunkiae என்று பெயரிடப்பட்ட, அழிவில் விளிம்பிலுள்ள இவ்வினங்கள் இந்தியாவில் முதல்முறையாக அறிவியல் பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. தான்சானியா மற்றும் கென்யாவை பூர்வீகமாகக்கொண்ட இந்த ஆப்பிரிக்க வயலட்டுகள், மரங்களில் வளர்ந்து மழைக்காலங்களில் வெளிர் இளஞ்சிவப்பு பூக்களை உருவாக்கும் தொற்று தாவரமாகும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மேகேதாட்டு அணை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கர்நாடகா

இ) கேரளா

ஈ) தெலுங்கானா

  • கர்நாடகாவின் மேகேதாட்டில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டு -வதில் விதிமுறைகளை மீறியதாகக்கூறப்படும் அறிக்கையை சமர்ப்பிக் -க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • முன்னதாக இப்பகுதியில் அணைகட்ட, கர்நாடகா திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டு முறை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக்காரணம்காட்டி தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு புதிய அடையாளப் பெயர்

பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிக -ளை எளிதில் அடையாளம் காணும் நோக்கில் அவற்றுக்குப் புதிய பெய -ர்களை உலக நலவாழ்வு அமைப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியா -வில் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மிகளுக்கு ‘கப்பா’, ‘டெல்டா’ என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

உருமாறிய கரோனா தீநுண்மிகள், அவை முதன்முதலில் கண்டறியப்பட்ட நாடுகளின் பெயரால் அழைக்கப்படுவதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மரபணுமாற்றமடைந்த உருமாறிய கரோனா தீநுண்மிகள் பல நாடுகளில் பரவின. அவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அறிவியல் பெயார்கள் வழங்கப்பட்டன.

உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு கிரேக்க எழுத்துகளைப் பெயராக வைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது.

புதிய பெயர்கள்: இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட பி.1.617.1 வகை கரோனா தீநுண்மிக்கு ‘கப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617.2 வகை தீநுண்மிக்கு ‘டெல்டா’ என பெயர்சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பி.1.1.7 என்ற உருமாறிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஆல்பா’ எனவும், தென்னாப்பிரிக்காவில் தோன்றிய பி.1.351 என்ற தீநுண்மிக்கு ‘பீட்டா’ எனவும், பிரேஸிலில் கண்டறியப்பட்ட பி.1 வகை கரோனா தீநுண்மிக்கு ‘காமா’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

பிரேஸிலில் கண்டறியப்பட்ட மற்றொரு பி.2 வகை உருமாறிய கரோனா தீநுண்மிக்கு ‘ஜீட்டா’ எனவும், அமெரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கரோனா தீநுண்மிகளுக்கு ‘எப்சிலான்’, ‘லோட்டா’ எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர்சூட்டியுள்ளது.

2. 1 முதல் 8ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி: எந்த மாணவரையும் தேக்கநிலையில் வைக்கக்கூடாது

தமிழகத்தில் 2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிபெற்றுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள் -ளது.

தமிழ்நாட்டில் மாநிலப்பாடத்திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11ஆம் வகுப்புப்பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009’இன்கீழ் எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்த ஒரு மாணவனையும் தேக்கநிலையில் வைத்தல்கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சி அடையவேண்டும். எந்தக்குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. கரோனா சிகிச்சை: புதிய வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

கரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ஜெ ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இரத்த ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கு அதிகமாக இருப்பவர்கள் குறைந்த பாதிப்புடையவர்கள் என்றும், 90-94 வரை உள்ளவர்கள் மிதமான பாதிப்புடையவர்கள் என்றும், 90’க்கும்கீழ் உள்ளவர்களை தீவிர பாதிப்புக்குள்ளானவர்களாகவும் கருதவேண்டும்.

ஆக்சிஜன் அளவு, 90 முதல் 94’க்குள் இருப்பவர்கள், ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைபெறலாம். ரத்த ஆக்சிஜன் அளவு, 90’க்குகீழ் உள்ளவர்களை மட்டுமே, மருத்துவமனை -யில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையிலான குப்புறக்கவிழந்து படுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது

புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக தனி நபர் அல்லது அமைப்புகள் செய்த பணிகளை பாராட்டி உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுஉலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும், சூடுபடுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதை பாராட்டும் வகையில் ஹர்ஷ் வர்தனுக்குஇந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1. Which country tops the list of Investor Countries of India in 2020–21?

A) USA

B) China

C) Singapore

D) UAE

  • As per the recent data released on India’s Foreign Direct Investment (FDI) inflow during 2020–21, Singapore’ is at the top with 29%, followed by the U.S.A (23%) and Mauritius (9%).
  • In terms of sector, ‘Computer Software & Hardware’ is at the top with around 44% share of the total FDI Equity inflow followed by Construction Activities (13%) and Services Sector (8%).

2. Which institution can sanction the amalgamation of District Central Co–operative Banks (DCCBs) with State Cooperative Banks (StCBs)?

A) RBI

B) NABARD

C) Finance Ministry

D) State Government

  • The Banking Regulation (Amendment) Act, 2020 has been notified for the District Central Co–operative Banks (DCCBs) with State Cooperative Banks (StCBs). The Reserve Bank is required to sanction the amalgamation these banks.
  • Recently, the RBI said that it will consider amalgamation of StCBs and DCCBs, subject to many conditions, including that a proposal should be made by the state government concerned, NABARD’s recommendation, additional capital infusion strategy, assurance regarding financial support etc.

3. CPEC is the flagship project of which global initiative?

A) Global Infrastructure Connectivity Alliance

B) Belt and Road Initiative

C) EU Connectivity partnership

D) Central Asia Regional Economic Cooperation Program

  • China–Pakistan Economic Corridor (CPEC) is the flagship project of China’s Belt and Road Initiative (BRI). India has been protesting over the project, as it traverses through Pakistan–occupied Kashmir (PoK). China and Pakistan recently celebrated the establishment of 70 years of their diplomatic relations. China has again defended the USD 60 billion CPEC project with Pakistan.

4. Which country has recently agreed to extend IAEA nuclear monitoring deal?

A) UAE

B) Israel

C) Iran

D) USA

  • Iran has agreed to extend an agreement allowing the International Atomic Energy Agency (IAEA) to keep surveillance cameras at nuclear sites, by one month. As per the IAEA chief Rafael Grossi, the deal would end on 24 June.

5. Who has been appointed as the Chief executive officer of Reserve Bank Innovation Hub (RBIH)?

A) R Gandhi

B) Rajesh Bansal

C) Nandan Nilekani

D) Urjit Patel

  • The Reserve Bank Innovation Hub (RBIH) has appointed Rajesh Bansal, a member of the founding team of Aadhaar, as its Chief executive officer. He has previously served at the RBI in various fields of technology, financial inclusion and payments systems. He also served a key role in designing India’s Direct Benefits Transfer (DBT) at UIDAI.

6. The Protected Planet Report is a flagship report released by which institution?

A) FAO

B) UNEP

C) IUCN

D) IMF

  • Protected Planet Report is a biennial landmark publication released by the United Nations Environment Programme (UNEP).
  • The report assesses the state of protected and conserved areas around the world. As per the Protected Planet Report 2020, the global community has made major progress towards the target on protected and conserved area coverage, but has not fulfilled on its commitments on the quality.

7. Which country has launched a consultation process for free trade talks with India?

A) USA

B) UK

C) Australia

D) France

  • The United Kingdom has launched a 14–week consultation process involving business representatives to start free trade talks with India. This process comes ahead of formal launch of free trade talks expected in September–October. India is seen as a huge market for British goods like whisky, cars and services.

8. Guillermo Lasso, who was in news recently, was sworn in as the President of which country?

A) Ecuador

B) Zimbabwe

C) South Africa

D) Australia

  • Conservative businessman Guillermo Lasso was sworn in as Ecuador’s new President. The 65–year–old leader has sworn in at the time when the country is facing huge economic and social challenges. After being sworn in, the President appointed Simón Cueva, a 53–year–old economist, as his finance minister. Ecuador is a country located near the equator on the western coast of South America.

9. African violets, an endangered Africa–native flowering plant, has been recorded for the first time in which Indian state?

A) Kerala

B) Goa

C) Mizoram

D) Sikkim

  • Scientists from the Indian Institute of Science Education and Research (IISER) Bhopal have found the variant of the African violets in Mizoram. Named as Didymocarpus vickifunkiae, the endangered species has been recorded scientifically for the first time in India. African violets, native to Tanzania and Kenya, are epiphytes, that grows on trees and produces light pink flowers during the monsoons.

10. Mekedatu Dam, which was making news recently, is located in which state?

A) Tamil Nadu

B) Karnataka

C) Kerala

D) Telangana

  • The National Green Tribunal has set up a committee to submit a report on alleged violation of norms in the construction of a dam across the Cauvery River at Mekedatu, in Karnataka.
  • Karnataka earlier proposed to construct the dam in the area and the proposal was deferred by the Cauvery Water Management Authority twice. Tamil Nadu Government had expressed its strong opposition citing the pendency of case before the Supreme Court.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!