Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

2nd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

2nd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 2nd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. NSOஇன் சமீபத்திய அறிக்கையின்படி (2022 ஜூன்), 2021–22இல் இந்தியாவின் GDP வளர்ச்சி மதிப்பீடு என்ன?

அ. 8.5 சதவீதம்

ஆ. 8.7 சதவீதம் 

இ. 8.9 சதவீதம்

ஈ. 9.2 சதவீதம்

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) அதன் ஆண்டுக்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை 8.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது கடந்த பிப்ரவரியில் மதிப்பிடப்பட்ட 8.9 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. நான்காவது காலாண்டில் (ஜனவரி–மார்ச் காலம் 2021–22) GDP வளர்ச்சி 4.1 சதவீதமாக பதிவாகியுள்ளது. 2020–21இல் பொருளாதாரம் 6.6 சதவீதச் சுருக்கத்தைக் கண்டது. அண்மைய GDP வளர்ச்சி மதிப்பீடானது 8.9 சதவீதம் (பிப்ரவரியில் வெளியிடப்பட்டது) மற்றும் முதல் முன்கூட்டிய மதிப்பீடு 9.2 சதவீதம் (ஜனவரியில் வெளியிடப்பட்டது) ஆகியவற்றை விடக் குறைவாக உள்ளது.

2. முறையே 2022 ஜூன்.1 முதல் அமலுக்கு வரும் PMJJBY மற்றும் PMSBY–இன் புதிய வருடாந்திர பிரீமியம் விகிதங்கள் என்ன?

அ. ரூ.520 மற்றும் ரூ.40

ஆ. ரூ.436 மற்றும் ரூ.20 

இ. ரூ.400 மற்றும் ரூ.40

ஈ. ரூ.350 மற்றும் ரூ.30

  • பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றின் பிரீமியத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. PMJJBY–இன் பிரீமியம் விகிதம் நாளொன்றுக்கு `1.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுப் பிரீமியம் `330இலிருந்து `436ஆக உயர்கிறது. PMSBY–க்கான வருடாந்திர பிரீமியம் `12லிருந்து `20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பிரீமியம் கட்டணங்கள் ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வருகின்றன.

3. 2021–22இல் (GDPஇன் சதவீதத்தில்) இந்தியாவில் பதிவான நிதிப்பற்றாக்குறை எவ்வளவு?

அ. 7.51 %

ஆ. 7.01 %

இ. 6.71 % 

ஈ. 6.21 %

  • 2021–22ஆம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறையை கன்ட்ரோலர் ஜெனரல் ஆப் அக்கவுண்ட்ஸ் வெளியிட்டது. இது, 6.9 சதவீதம் என்ற திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டைவிட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவீதமாக மேம்பட்டுள்ளது. முழுமையான நிதிப்பற்றாக்குறை `15,86,537 கோடி (தற்காலிகமானது) ஆகும். 17.65 டிரில்லியன் மதிப்பிலான திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு எதிராக நிதியாண்டில் வரி வரவுகள் 18.2 டிரில்லியனாக இருந்தது.

4. NARCL (National Assets Reconstruction Company Ltd)-இன் MD மற்றும் CEOஆக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. உர்ஜித் படேல்

ஆ. நடராஜன் சுந்தர் 

இ. அஸ்வனி பாட்டியா

ஈ. நிதின் சுக்

  • பாரத வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் நடராஜன் சுந்தர், NARCL (National Assets Reconstruction Company Ltd)–இன் நிர்வாக இயக்குநராகவும், CEOஆகவும் MD & CEOஆக நியமிக்கப்பட்டுள்ளார். NARCL என்பது பொது மற்றும் தனியார்துறை வங்கிகளின் கூட்டு முயற்சியாகும். இது வங்கிகளிடமிருந்து வாராக்கடன்களை எடுத்துக்கொள்வது மற்றும் தீர்வு மற்றும் மீட்டெடுப்புகளில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. NARCL ஆனது 15 இந்திய வங்கிகளின் பங்குகளைக் கொண்டுள்ளது. இதன் ஸ்பான்சர் வங்கியாக கனரா வங்கி உள்ளது.

5. 2022 – உலக புகையிலை ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Tobacco: A Threat to our Humanity

ஆ. Tobacco: A Threat to our Environment 

இ. Tobacco: A Threat to Health

ஈ. Dangers of smoking

  • புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள், புகையிலை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வணிக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.31ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Tobacco: A Threat to our Environment” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக புகையிலை ஒழிப்பு நாளிற்கான கருப்பொருளாகும்.
  • புகையிலையைப் பயிரிடுவதற்காக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் ஹெக்டேர் நிலம் அழிக்கப்படுகிறது. ஐநா சபையின் கூற்றுப்படி, புகையிலை நுகர்வானது ஆண்டுதோறும் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் மரணத்திற்குக் காரணமாக அமைகிறது.

6. 2022 – ஒருபாற்சேர்க்கைவிரோதம் (Homophobia), திருநங்கை வெருளி (Transphobia) மற்றும் இருபாலுறவு வெருளி (Biphobia) ஆகியவற்றுக்கு எதிரான உலக நாளின் கருப்பொருள் என்ன?

அ. Our Bodies. Our Lives. Our Rights 

ஆ. Fundamental Rights of LGBTIQ+

இ. Bodily Autonomy

ஈ. Decriminalise Diversity

  • ஒவ்வோர் ஆண்டும் மே.17 அன்று ஒருபாற்சேர்க்கைவிரோதம் (Homophobia), திருநங்கை வெருளி (Transphobia) மற்றும் இருபாலுறவு வெருளி (Biphobia) ஆகியவற்றுக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது மற்றும் மாயிழை, ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் இருபாலுடல் (LGBTIQ+) மக்களின் மனித உரிமைகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Our Bodies. Our Lives. Our Rights” என்பது இந்த ஆண்டு (2022) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

7. நவீன் ஸ்ரீவஸ்தவா என்பார் எந்த நாட்டுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. அமெரிக்கா

ஆ. நேபாளம் 

இ. இலங்கை

ஈ. உக்ரைன்

  • நேபாளத்துக்கான அடுத்த தூதராக வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் நவீன் ஸ்ரீவஸ்தவாவை நியமிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த மாதம் வெளியுறவு செயலாளராக பதவியேற்ற வினய் குவாத்ராவைத் தொடர்ந்து ஸ்ரீவஸ்தவா இந்தப் பதவியை ஏற்கவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நேபாள பயணத்தின்போது இந்தியாவும் நேபாளமும் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, இதில் 490 MW அருண்–4 நீர்மின் திட்டமும் ஒன்று.

8. எந்த அமெரிக்க அதிபரின் உரையின் நினைவாக உலக எய்ட்ஸ் தடுப்பூசி நாள் கொண்டாடப்படுகிறது?

அ. ஜார்ஜ் புஷ்

ஆ. பில் கிளண்டன் 

இ. பராக் ஒபாமா

ஈ. ஆபிரகாம் லிங்கன்

  • பாதுகாப்பான மற்றும் பயனுள்ள HIV தடுப்பூசியைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வத்தொண்டர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் மே.18 அன்று ‘உலக எய்ட்ஸ் தடுப்பூசி நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 1997ஆம் ஆண்டு மே.18ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் HIV பரவுவதைக் கட்டுப்படுத்தும் பயனுள்ள HIV தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தியதையும் இந்நாள் நினைவுகூருகிறது. 2020ஆம் ஆண்டின் இறுதியில், 37.7 மில்லியன் மக்கள் HIVஆல் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 0.68 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர்.

9. என்டோசல்பான் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கீழ்க்காணும் எந்த மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?

அ. ஒடிஸா

ஆ. கேரளா 

இ. கர்நாடகா

ஈ. மேற்கு வங்கம்

  • எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற 2017ஆம் ஆண்டு ஜனவரி உத்தரவைக் கடைப்பிடிக்கத்தவறியதால், கேரளாவை உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளங்காணுதல், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் `5 லட்சம் இழப்பீடு வழங்குதல், எண்டோசல்பான் பாதிப்பால் ஏற்படும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளைச் சமாளிக்க மருத்துவ வசதிகளை அமைத்தல் ஆகிய மூன்று படிநிலைகளை அந்தத் தீர்ப்பு செயல்படுத்தச் சொல்லியிருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் எண்டோசல்பான் மருந்தைப் பயன்படுத்த தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்காது.

10. இந்தியாவில் தேசிய டெங்கு நாள் அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. அக்டோபர்

ஆ. ஜனவரி

இ. ஜூலை

ஈ. மே 

  • ஒவ்வோர் ஆண்டும் மே.16 அன்று, தேசிய டெங்கு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், டெங்கு நோய் பரவும் விதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஆண்டுதோறும், உலகளவில் சுமார் 400 மில்லியன் டெங்கு நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. சுமார் 96 மில்லியன் பேர் இதன் கடுமை நிலையை எதிர்கொள்கின்றனர். டெங்குக் காய்ச்சல் என்பது நான்கு ஏடிஸ் கொசு இனங்களுள் ஏதேனும் ஒன்றால் பரவும் நோயாகும். இந்தக் கொசுக்கள் மேற்கு நைல் வைரஸ் நோய் மற்றும் மஞ்சள் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் கொண்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 8,023 பேருக்கு 4ஆவது நிலை யானைக்கால் நோய் பாதிப்பு:

தமிழ்நாட்டில் 8,023 பேருக்கு நான்காவது நிலை யானைக்கால் நோய் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிமணியன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியது: “யானைக்கால் நோய் ஆரம்பத்தில் காய்ச்சல், நெரிகட்டுதல், கைக்கால் வலி, தோல் சிவந்து காணப்படுதல், தோல் தடித்து காணப்படுதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும். நோய் முற்றும்போது கால்களில் வீக்கம் (யானைக்கால்), விரைவீக்கம், கைகள் மற்றும் மார்பகங்களில் வீக்கம் போன்றவை ஏற்படும்.

இந்தத் தாக்கங்களுக்கு ஏற்ப யானைக்கால் நோய் நான்கு நிலைகளில் அழைக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் நோயின் தாக்கம் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் காணப்பட்டது. யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டம் 1957-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 44 இரவுநேர இரத்தப் பரிசோதனை மையங்களும், 25 யானைக்கால் நோய் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் ஆங்காங்கே பொது மக்களுக்கு இரவு நேர ரத்தத் தடவல் பரிசோதனை மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானைக்கால் நோயை ஒழிக்கும் பொருட்டு ஒட்டு மொத்த டிஇசி மாத்திரை வழங்கும் திட்டம் 1998 முதல் 2014 வரை 2 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் வருடந்தோறும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் இந்நோய் தற்பொழுது பரவக்கூடிய நிலையில் இல்லை என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு செல்கிறது.

தற்பொழுது யானைக்கால் நோய் முற்றிலும் ஒழிப்பு என்ற இலக்கினை நோக்கி சென்றபோதிலும், ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு யானைக்கால் நோய் நிலை 4-இல் தமிழகத்தில் 8,023 நபர்கள் தற்போது பாதிப்பில் உள்ளனர். நிலை 4-ல் உள்ளவர்களுக்கு கால் வீக்கம், தோலில் புண்கள் மற்றும் நீர்வடிதல் ஆகியவை காணப்படும்.

இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் உதவித்தொகையாக மாதம் ரூபாய்.1000/- மற்றும் யானைக்கால் பராமரிப்பு உபகரணங்கள் 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 வங்கிக் கணக்கிலேயே மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மூலமாக செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

2. தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள் – ஜூன் 22-இல் விண்ணில் ஏவப்படுகிறது

இஸ்ரோவின் தகவல்தொடர்பு சேவைக்கான அதிநவீன ஜிசாட்-24 செயற்கைக்கோள் ஏரியன் 5 ராக்கெட்மூலம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜூன் 22ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-24 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. 4,180 கிலோ எடை கொண்ட ஜிசாட்-24, இஸ்ரோவின் 42ஆவது தகவல்தொடர்பு செயற்கைக்கோளாகும்.

அதிக எடை உடைய செயற்கைக்கோள் என்பதால் ஐரோப்பிய நாடான பிரான்சின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து கனரக இராக்கெட்டான ஏரியன்-5 மூலம் ஜூன் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக, விமானப்போக்குவரத்துமூலம் செயற்கைக்கோள் கடந்த மே 17ஆம் தேதி கொரு ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஜிசாட்-24 செயற்கைக்கோளில் கியூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது டிடிஎச் டெலிவிஷன் மற்றும் செல்போன் சேவைக்குப் பயன்படும்.

மத்திய விண்வெளி ஆய்வுத்துறையின்கீழ் இயங்கும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) நிறுவனம் மூலம் இந்த இராக்கெட் ஏவுதல் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஜிசாட்-24 செயற்கைக்கோள் பயன்பாட்டு சேவைகள் அனைத்தும் ‘டாடா பிளே’ நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஏரியன் 5 இராக்கெட்டில் மலேசியாவுக்குச் சொந்தமான மீசாட் – 3டி செயற்கைக்கோளும் ஏவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. As per the recent NSO Update (June 2022), what is the GDP growth estimate of India in 2021–22?

A. 8.5 per cent

B. 8.7 per cent 

C. 8.9 per cent

D. 9.2 per cent

  • National Statistical Office (NSO) marginally slashed its year–on–year gross domestic product (GDP) growth forecast to 8.7 per cent, down from 8.9 per cent estimated in February. The fourth quarter (January–March period of 2021–22) GDP growth was recorded at 4.1 per cent. The economy witnessed a 6.6 per cent contraction in 2020–21. The latest GDP growth estimate is lower than the second advance estimate of 8.9 per cent (released in February) and first advance estimate of 9.2 per cent (released in January).

2. What are the new annual premium rates of PMJJBY and PMSBY respectively, with effect from June 1, 2022?

A. Rs 520 and Rs 40

B. Rs 436 and Rs 20 

C. Rs 400 and Rs 40

D. Rs 350 and Rs 30

  • The government raised the premium for Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) and Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY), to make them economically viable. The premium rate of PMJJBY has been revised upward to Rs 1.25 per day, with an increase from Rs 330 to Rs 436 annually. The annual premium for PMSBY has been hiked from Rs 12 to Rs 20. The new premium rates are effective from June 1, 2022.

3. What is the fiscal deficit recorded in India for 2021–22 (in percentage of GDP)?

A. 7.51 %

B. 7.01 %

C. 6.71 % 

D. 6.21 %

  • The Controller General of Accounts (CGA) released the fiscal deficit for 2021–22, which improved to 6.71 per cent of the GDP over the revised budget estimate of 6.9 per cent. The fiscal deficit in absolute terms was Rs 15,86,537 crore (provisional). The tax receipts during the fiscal stood at Rs 18.2 trillion as against the revised estimates (RE) of Rs 17.65 trillion.

4. Who has been appointed as the MD and CEO of NARCL (National Assets Reconstruction Company Ltd)?

A. Urjit Patel

B. Natarajan Sundar 

C. Ashwani Bhatia

D. Nitin Chugh

  • Former State Bank of India Deputy Managing Director Natarajan Sundar has been appointed as the Managing Director and CEO of NARCL (National Assets Reconstruction Company Ltd) as MD & CEO. NARCL is the joint initiative of Public and Private Sector Banks, and is expected to takeover bad loans from banks and focus on resolution and recoveries. NARCL has shareholding from 15 Indian Banks and Canara Bank is the sponsor bank.

5. What is the theme of the ‘World No Tobacco Day 2022’?

A. Tobacco: A Threat to our Humanity

B. Tobacco: A Threat to our Environment 

C. Tobacco: A Threat to Health

D. Dangers of smoking

  • World No Tobacco Day is observed on May 31 every year to create awareness of the dangers of smoking, tobacco companies and their business practices. This year’s theme for World No Tobacco Day 2022 is ‘Tobacco: A Threat to our Environment.’ Nearly 3.5 million hectares of land are destroyed every year to grow tobacco. As per the United Nations, consumption of tobacco kills more than 8 million people every year.

6. What is the theme of the ‘International Day Against Homophobia, Transphobia and Biphobia’ 2022?

A. Our Bodies. Our Lives. Our Rights 

B. Fundamental Rights of LGBTIQ+

C. Bodily Autonomy

D. Decriminalise Diversity

  • The ‘International Day Against Homophobia, Transphobia and Biphobia’ is observed on 17 May every year. The Day celebrates diversity and raises awareness of the human rights of lesbian, gay, bisexual, transgender, and intersex (LGBTIQ+) people. This year’s theme has been chosen to be Our Bodies. Our Lives. Our Rights.

7. Naveen Srivastava has been appointed as the ambassador to which country?

A. USA

B. Nepal 

C. Sri Lanka

D. Ukraine

  • India announced the appointment of Naveen Srivastava, the additional secretary in the external affairs ministry, as the next ambassador to Nepal. Srivastava will succeed Vinay Kwatra, who became foreign secretary this month. India and Nepal signed six agreements during the Nepal visit of Prime Minister Narendra Modi, including one for the 490–MW Arun–4 hydropower project.

8. World AIDS Vaccine Day is celebrated to commemorate the speech made by which US President?

A. George Bush

B. Bill Clinton 

C. Barack Obama

D. Abraham Lincoln

  • ‘World AIDS Vaccine Day’ is observed annually on May 18 to honour the healthcare professionals, researchers, volunteers and community members for their work to find a safe and effective preventive HIV vaccine. It also commemorates the delivered by former US President Bill Clinton on May 18, 1997 in which he insisted on the need for an effective and preventive HIV vaccine that would control the spread of HIV. At the end of 2020, there were 37.7 million people living with HIV, and 0.68 million people died from AIDS–related illnesses.

9. The Supreme Court had directed which state to compensate victims who suffered effects of endosulfan?

A. Odisha

B. Kerala 

C. Karnataka

D. West Bengal

  • The Supreme Court slammed Kerala as it failed to comply with January 2017 order requiring them to compensate victims who suffered effects of endosulfan pesticide. The judgment had directed three steps – identification of victims, disbursal of ₹5 lakh compensation to each victim, and setting up medical facilities to deal with the long–term health effects arising from the effects of endosulfan. The Supreme Court banned the use of Endosulfan in 2012.

10. National Dengue Day is observed in India during which month?

A. October

B. January

C. April

D. May 

  • Every May 16, National Dengue Day is observed to spread awareness about the vector–borne disease. Every year, around 400 million dengue infections occur worldwide, with around 96 million resulting in severe disease. The campaign was started by the Union Health and Family Welfare Ministry. Dengue fever is a mosquito–borne disease caused by any of four Aedes species. These mosquitoes carry viruses that also cause West Nile Virus illness and yellow fever.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!