Tnpsc

2nd September 2020 Current Affairs in Tamil & English

2nd September 2020 Current Affairs in Tamil & English

2nd September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

2nd September Tamil Current Affairs 2020

2nd September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.போலியோ நோயற்ற பிராந்தியம் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ள பிராந்தியம் எது?

அ. ஆசியா

ஆ. ஆப்பிரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஐரோப்பா

  • இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் போலியோ நோய்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரோஸ் கானா போம்பன் லீக் தலைமையிலான ஆணையம் சான்றளித்துள்ளது. போலியோ வைரஸை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பும் நான்கு ஆண்டுகள்தான். இதன்மூலம், ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நோய்களின் வரிசையில் பெரியம்மை நோயுடன் தற்போது இளம்பிள்ளை வாதமும் இணைகிறது.

2. NITI ஆயோக் வெளியிட்டுள்ள, ‘ஏற்றுமதி தயார்நிலை அட்டவணை – 2020’இல் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. தெலுங்கானா

ஈ. குஜராத்

  • ஏற்றுமதி தயார்நிலைக்குறியீடு-2020’ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் இணைந்து NITI ஆயோக் வெளியிட்டுள்ளது. கொள்கை; வணிகச்சூழல்; ஏற்றுமதிச்சூழல்; ஏற்றுமதிச்செயல்பாடுகள் ஆகிய 4 முக்கிய அளவுருக்களில், மாநிலங்களை இது தரவரிசைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.
  • குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றிருக்கின்றன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் வலுவான காரணிகளை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களுள் ஆறு, முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. நில எல்லைகளைக்கொண்ட மாநிலங்களைப் பொருத்தவரையில் இராஜஸ்தான் முதலிடத்திலும், இமாலய மாநிலங்களைப் பொருத்தவரையில், உத்தரகண்ட் முதலிடத்திலும் உள்ளது.

3. சமூக நீதி அமைச்சகத்தின் புதிய மனநல மறுவாழ்வு தொலைபேசி உதவி மையத்தின் பெயரென்ன?

அ. சுவஸ்த்யா

ஆ. சூரஜ்

இ. கிரண்

ஈ. மனதின் குரல்

  • மனநல மறுவாழ்வுக்கான புதிய கட்டணமில்லா தொலைபேசி உதவி மையத்தை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கவுள்ளது. இந்தப் புதிய தொலைபேசி உதவி மையம் 13 முக்கிய மொழிகளில் முதலுதவி, உளவியல் ரீதியான ஆதரவு, துன்ப மேலாண்மை போன்றவற்றில் அழைப்பா -ளர்களுக்கு உதவிகளை வழங்கும். COVID-19 தொற்றின் நெருக்கடியின்போது மக்களின் மனநலம் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது.

4. ‘காஷ்மீர் குங்குமப்பூ’ வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, எந்த நிறுவனத்துடன் இணைந்து, ஜம்மு -காஷ்மீர், மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது?

அ. NSEIT லிட்

ஆ. நவீன கணித்திறன் மேம்பாட்டு மையம்

இ. தேசிய தகவல் மையம்

ஈ. தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

  • ஜம்மு-காஷ்மீர் ஆனது அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ‘காஷ்மீர் குங்குமப்பூ’வின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் தரமான குங்குமப்பூ அணுகலை வழங்குவதற்குமாக ஒரு புதிய மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வேளாண் துறையானது இந்திய பன்னாட்டு காஷ்மீர் குங்குமப்பூ வர்த்தக மையத்தின்கீழ் (IIKSTC) அமைந்துள்ளது. இந்திய தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமான NSEIT’உடன் இணைந்து இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

5. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கான முதல் சில்லறை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள பொதுக்காப்பீட்டு நிறுவனம் எது?

அ. HDFC எர்கோ

ஆ. பஜாஜ் அலையன்ஸ்

இ. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

ஈ. ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம்

  • பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனமானது செல்லப்பிராணிகளுக்கென ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ‘பஜாஜ் அலையன்ஸ் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கட்கான காப்பீட்டுத்திட்டம்’ என அழைக்கப்படுகின்றது. இது, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கட்கான முதல் மற்றும் ஒரே ஒருங்கிணைந்த காப்பீட்டுத்திட்டம் எனக்கூறப்படுகிறது. இது 3 மாதங்கள் முதல் 10 வயது வரை செல்லப் பிராணிகளின் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. குறிப்பிட்ட நோய்கள் அல்லது நலக் குன்றல் காரணமாக ஏற்படும் இறப்புகளின் செலவுகளையும் இது உள்ளடக்கியது.

6. சார் தாம் பரியோஜனா என்பது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய புனிதத்தலங்களை இணைக்கும் திட்டமாகும்?

அ. குஜராத்

ஆ. பஞ்சாப்

இ. உத்தரகண்ட்

ஈ. ஜம்மு & காஷ்மீர்

  • ‘சார் தாம் பரியோஜனா’ என்பது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இது, உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த முக்கிய புனிதத்தலங்களை இணைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, இரவி சோப்ரா தலைமையிலான ஓர் உயரதிகாரக்குழு, இந்தத் திட்டம், இமயமலையின் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது. மரங்கள், மலைகளை வெட்டுதல் மற்றும் அகழ்ந்த பொருட்களை சரியான அனுமதிபெறாமல் கொட்டுதல் ஆகியவை அச்சேதங்களுள் அடங்கும்.

7.இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஆண்டறிக்கையில் கணித்துள்ளபடி, 2020-21’இல், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?

அ. 0.5%

ஆ. -1.5%

இ. -4.5%

ஈ. -7.0%

  • இந்திய ரிசர்வ் வங்கியானது அண்மையில் தனது 2019-20 ஆண்டறிக்கையை வெளியிட்டது. இதில், 2020-21’ஆம் ஆண்டில் இந்தியா (-) 4.5% என்ற எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது. (-) 6.0 சதவீதத்திற்கும் (-) 7.6 சதவீதத்திற்கும் இடையிலான உலகளாவிய வளர்ச்சி விகிதத்தையும் RBI கணித்துள்ளது. 2019-20’ஆம் ஆண்டில், பணத்தாள்கள் விநியோகமும், முந்தைய ஆண்டைவிட 23.3% குறைந்துள்ளது என RBI கூறியுள்ளது.

8.உள்நாட்டு நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளை, எந்நாட்டுடன் தொடங்க, இந்தியா, தயாராக உள்ளது?

அ. மியான்மர்

ஆ. வங்கதேசம்

இ. நேபாளம்

ஈ. இலங்கை

  • 2020 செப்டம்பர்.3 முதல், இந்தியாவும் வங்கதேசமும் நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளன. இருநாடுகளும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான நெறிமுறையில், கடந்த மே மாதம் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, சோனமுரா (திரிபுரா) முதல் தவுத்கண்டி (வங்கதேசம்) வரையிலான வழித்தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை, வடகிழக்கு இந்தியாவுடனான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு போக்குவரத்துச் செலவையும் வெகுவாகக் குறைக்கும்.

9.ஆண்டுதோறும் பெண்கள் சமத்துவ நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 26

ஆ. ஆகஸ்ட் 27

இ. ஆகஸ்ட் 28

ஈ. ஆகஸ்ட் 29

  • ஒவ்வோர் ஆண்டும் ஆக.26 அன்று அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் பெண்கள் சமத்துவ நாள் அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கும் உரிமையை அரசமைப்பு ரீதியாக பெற்றதன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபரால் பறைசாட்டப்படுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாள், 1920 ஆக.26 முதல் அனுசைரிக்கப்பட்டு வரும் இந்நாளின் 100ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

10.எந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, MGNREGA தொழிலாளர்கள் ஈட்டிய சராசரி வருவாய் இரட்டிப்பாகியுள்ளது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. NABARD

இ. CIBIL

ஈ. CRISIL

  • CRISIL அறிக்கையின்படி, MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்) தொழிலாளர்கள் ஈட்டிய சராசரி வருவாய், COVID-19 கொள்ளைநோய் காரணமான நாடடங்கின்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வறிக்கையின்படி, திறனற்ற தொழிலாளர்களின் வருவாய், 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை மாதத்திற்கு `1000 என இருமடங்காக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில், `509 என இருந்தது. மேலும் இந்தக் காலகட்டத்தில் பணி நிறைவேற்ற சதவீதமானது, 46% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

1. World Health Organization (WHO) has declared which region as free of Polio disease?

[A] Asia

[B] Africa

[C] Australia

[D] Europe

  • The World Health Organization (WHO) has recently announced that the African continent is completely free of Polio. A commission headed by Rose Gana Fomban Leke has certified that no wild Polio cases occurred in the African region for the past four years. The threshold for eradication of poliovirus is also four years. Africa had earlier eradicated smallpox disease.

2. Which Indian state topped the ‘Export Preparedness Index (EPI) 2020’ released by NITI Aayog?

[A] Tamil Nadu

[B] Maharashtra

[C] Telangana

[D] Gujarat

  • The NITI Aayog has recently released a report on Export Preparedness Index 2020, in partnership with the Institute of Competitiveness. It ranked states on four key parameters namely Policy, Business Ecosystem, Export Ecosystem and Export Performance.
  • As per the report, Gujarat has topped the index, followed by Maharashtra and Tamil Nadu. Among the top ten places of the list, six out of the country’s coastal states found place. Rajasthan topped among the landlocked states and Uttarakhand topped among the Himalayan states.

3. What is the name of the new Mental health rehabilitation helpline of Social Justice Ministry?

[A] Swasthya

[B] Suraj

[C] Kiran

[D] Mann ki Baat

  • The Union Ministry of Social Justice and Empowerment is to launch a new toll–free helpline for Mental health rehabilitation. The new helpline will provide support to the callers regarding first–aid, psychological support, distress management among others in as many as 13 major languages. Several issues regarding the mental health of people are noted during the COVID–19 crisis.

4. Jammu and Kashmir has launched an e–auction portal to promote trade of ‘Kashmir Saffron’, along with which organisation?

[A] NSEIT Ltd

[B] Centre for Development of Advanced Computing

[C] National Informatics Centre

[D] National Institute of Electronics & Information Technology

  • Jammu & Kashmir has recently launched a new e–auction portal to promote e–trading of GI–tagged ‘Kashmir Saffron’ and provide access to quality saffron. The Agriculture Department of the UT is under the aegis of India International Kashmir Saffron Trading Centre (IIKSTC). The portal has been developed in collaboration with NSE–IT, a wholly–owned subsidiary of the National Stock Exchange of India.

5. Which General Insurance Company has launched the first retail insurance cover for Pet Dogs?

[A] HDFC Ergo

[B] Bajaj Allianz

[C] New India Assurance

[D] Oriental Insurance Company

  • Bajaj Allianz General Insurance has launched a new insurance product for pet animals, called ‘Bajaj Allianz Pet Dog Insurance Policy’. This is said to be the first and only retail comprehensive pet insurance cover for pet dogs. It will provide a complete coverage to all breeds of pet animals over their life time from 3 months to 10 years. It also covers the treatment costs of specified diseases or deaths due to illness.

6. Char Dham Pariyojana Is a project to connect major pilgrimage sites in which state/UT?

[A] Gujarat

[B] Punjab

[C] Uttarakhand

[D] Jammu & Kashmir

  • ‘Char Dham Pariyojana’ is a project of the Union Ministry of Road Transport and Highways (MoRTH), that aims to connect major pilgrimage sites in Uttarakhand.
  • Recently, the High–Powered Committee (HPC) appointed by the Supreme Court of India and headed by Ravi Chopra said that the project has caused a long–term damage to the Himalayan ecology. It involved cutting trees, hills and dumping excavated material without proper permits.

7. What would be the growth rate of India in 2020–21, as projected by the Reserve Bank of India in its annual report?

[A] 0.5%

[B]–1.5%

[C]–4.5%

[D]–7.0%

  • The Reserve Bank of India (RBI) has recently released its annual report 2019–20, in which it has estimated that India would have a negative growth of (–) 4.5 % for the year 2020–21. The central bank has also projected the global growth rate between (–) 6.0 per cent and (–) 7.6 per cent. It also said that the supply of banknotes during 2019–20 was also lower by 23.3 % than that of the previous year.

8. India is set to begin operations of inland water trade route with which country?

[A] Myanmar

[B] Bangladesh

[C] Nepal

[D] Sri Lanka

  • From 3rd September 2020, India and Bangladesh would commence commercial operation of riverine trade route. Both the countries signed Addendum to the Protocol on Inland Water Transit and Trade (PIWTT) in May 2020. As per the agreement, the Sonamura (Tripura) – Daudkandi (Bangladesh) route is being operationalised. This move would enhance the regional connectivity to North Eastern India and reduce the transportation cost.

9. When is Women’s Equality Day observed every year?

[A] August 26

[B] August 27

[C] August 28

[D] August 29

  • Every Year, Women’s Equality Day is observed in the United States of America and other parts of the world on August 26. This day is observed in memory of the American Women getting the constitution right to vote. It is proclaimed each year by the President of the United States. This year marks the 100th anniversary of the Women’s Equality Day since on August 26 1920, right to vote was secured by women in America.

10. As per the report released by which organization, the average income earned by MGNREGA workers has doubled?

[A] RBI

[B] NABARD

[C] CIBIL

[D] CRISIL

  • As per a CRISIL report, the average income earned by MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) workers have doubled during the COVID lockdown. As per the report, the income for unskilled labourers has doubled to around Rs.1000 per month during April to July 2020 from Rs.509 in the previous year. Also, this period witnessed growth in work execution by 46% in person–days.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!