TnpscTnpsc Current Affairs

2nd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

2nd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 2nd September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

2nd September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. மெய்நிகராக இயங்கும் நாட்டின் முதல் பள்ளியைத் தொடங்கியுள்ள இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கர்நாடகா

ஆ. புது தில்லி

இ. தெலுங்கானா

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. புது தில்லி

  • தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், ‘தில்லி மாதிரி மெய்நிகர் பள்ளி’ என்று அழைக்கப்படும், ‘நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளி’யைத் தொடங்கினார். இதில் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளில் சேர தகுதியுடைவர் ஆவர். DMVS ஆனது தில்லி பள்ளிக்கல்வி வாரியத்துடன் இணைக்கப்படும். இந்தப் பள்ளியில் சேருவதற்கு யாதொரு கட்டணமும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படாது. ‘ஸ்கூல்நெட்’ மற்றும் கூகுள் உருவாக்கிய ஒரு சிறப்புறு தளத்தின்மூலம் வகுப்புகள் நடத்தப்படும்.

2. ‘சினெர்ஜி – Synergy’ என்ற இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்திய நிறுவனம் எது?

அ. CERT–In

ஆ. இந்திய வான்படை

இ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்

ஈ. இந்திய விண்வெளி ஆய்வு மையம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. CERT–In

  • சிங்கப்பூரின் இணையவெளிப் பாதுகாப்பு முகமையுடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக்குழு (CERT–In), 13 நாடுகளுக்கான ‘சினெர்ஜி’ என்னும் இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை வெற்றிகரமாக வடிவமைத்து நடத்தியது. தேசிய பாதுகாப்புக் கழக செயலகத்தின் (NSCS) தலைமையில் இந்தியா தலைமையிலான சர்வதேச முடக்கச்செயலி (ransomware) எதிர்ப்பு முனைவு–நெகிழ்திறன் பணிக்குழுவின் ஒருபகுதியாக இது நடத்தப்பட்டது. “Building Network Resiliency to counter Ransomware Attacks” என்பது இந்தப் பயிற்சியின் கருப்பொருளாகும்.

3. NCRBஇன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தேசத் துரோக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆந்திர பிரதேசம்

  • NCRBஇன் (தேசிய குற்ற ஆவணக்காப்பகம்) ஓர் அண்மைய அறிக்கையின்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தில் (29) அதிக எண்ணிக்கையிலான தேசத்துரோக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. IPC பிரிவு 124Aஇன்கீழ் நாட்டில் 2021ஆம் ஆண்டில் தேசத்துரோகத்திற்காக 76 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் தேசத்துரோக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA)கீழ் 1,604 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

4. அண்மையில் காலஞ்சென்ற மிக்கேல் கோர்பச்சேவ், கீழ்க்காணும் எந்த நாட்டின் முன்னாள் அதிபராவார்?

அ. உக்ரைன்

ஆ. ரஷ்யா

இ. பெலாரஸ்

ஈ. பல்கேரியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரஷ்யா

  • 1985 முதல் 1991 வரை முன்னாள் சோவியத் யூனியனின் கடைசித் தலைவராக இருந்த மிக்கேல் கோர்பச்சேவ், தனது 91ஆவது வயதில் காலமானார். கடந்த 1986ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிடம் உள்ள அனைத்து தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளையும் ஒழிக்க கோர்பச்சேவ் முன்மொழிந்தார். அது பனிப் போரின் முடிவின் ஆரம்பமாகும். அவருக்கு கடந்த 1990இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

5. நாட்டிலேயே முதன்முறையாக தடயவியல் சான்றுகளைச் சேகரிப்பதைக் கட்டாயமாக்கிய முதல் மாநிலம்/யூடி காவல்துறை எது?

அ. தமிழ்நாடு

ஆ. தில்லி

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தில்லி

  • ஆறு ஆண்டுகளுக்கும் மேலான தண்டனையுடன்கூடிய குற்றங்களில் தடயவியல் ஆதாரங்களை சேகரிப்பதை கட்டாயமாக்கிய நாட்டின் முதல் காவல்துறை என்ற பெருமையை தில்லி காவல்துறை பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை தண்டனை விகிதத்தை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் செய்யப்பட்டுள்ளது. தில்லி காவல்துறையானது குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைத்துள்ளது மற்றும் அதன் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க காந்திநகர் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் கூட்டினைந்துள்ளது.

6. 2022ஆம் ஆண்டு விடுதலை நாளன்று அதிக விருதுகளைப்பெற்ற மாநிலம்/யூடி காவல்துறை எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. பஞ்சாப்

இ. ஜம்மு காஷ்மீர்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஜம்மு காஷ்மீர்

  • 2022ஆம் ஆண்டு விடுதலை நாளையொட்டி மொத்தம் 1,082 காவலர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் வழங்கப்பட்டன. 347 காவலர்களுக்கு வீரதீரத்திற்கான காவல் பதக்கம் வழங்கப்பட்டது. ஜம்மு–காஷ்மீர் காவல் துறைக்கு 108 பதக்கங்கள் வழங்கப்பட்டன; இதன்மூலம் விருதுகள் பெற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலேயே ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் 2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான காவலர் பதக்கங்களைப் பெற்றுள்ளன.

7. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியானது கீழ்க்காணும் எந்நாட்டில் சூரிய ஆற்றல் திட்டத்தை நிறுவவுள்ளது?

அ. எகிப்து

ஆ. கென்யா

இ. கியூபா

ஈ. தென்னாப்பிரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கியூபா

  • கியூபாவில் 1150 MW உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்னாற்றல் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை கியூப அரசாங்கத்துடன் இணைந்து பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி முன்வைத்துள்ளது. இத்திட்டத்தை அமைப்பதற்கான ISAஇன் திட்ட மேலாண்மை ஆலோசகராக அரசுக்குச்சொந்தமான NTPC உள்ளது. கியூபாவின் 2100 MW சோலார் திட்டங்களை செயல்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்தத்திட்டம் உள்ளது. இது ISA’இன் பரந்துபட்ட சூரிய மின்னாற்றல் உற்பத்திப் பூங்கா திட்டத்தில் முதன்மையானதாக உள்ளது.

8. வில்லியம் சமோய் அராப் ரூடோ என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராக பதவியேற்றார்?

அ. கென்யா

ஆ. எத்தியோப்பியா

இ. நைஜீரியா

ஈ. தென்னாப்பிரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கென்யா

  • கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கென்யாவின் துணை அதிபராக இருந்த வில்லியம் சமோய் அராப் ரூடோ, அதிபர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ருடோ 50.49% வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார். கடும்போட்டி நிலவி வருவதால், சட்டப்போராட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில், முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, உச்சநீதிமன்றத்தால் அதிபர் தேர்தல் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

9. T20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் யார்?

அ. விராட் கோலி

ஆ. கீரன் பொல்லார்ட்

இ. ரோகித் சர்மா

ஈ. ஆண்ட்ரே இரஸ்ஸல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கீரன் பொல்லார்ட்

  • T20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் கீரன் பொல்லார்ட் பெற்றார். அவர் 2022 ஏப்ரலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுறுவதாக அறிவித்தார். அண்மையில், ஆல்–ரவுண்டர் டுவைன் பிராவோ, T20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

10. துரந்த் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. கால்பந்து

இ. மட்டைப்பந்து

ஈ. பூப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கால்பந்து

  • ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான துரந்த் கோப்பைப் போட்டிகள் 2022 ஆகஸ்ட்.16 முதல் தொடங்க உள்ளன. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் FC கோவா மற்றும் முகமதின் SC அணிகளுக்கு இடையே நடக்கும். துரந்த் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இணைந்து 2022 துரந்த் கோப்பைக்கான போட்டிகளை நடத்துவதால், இப்போட்டி பல நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் இப்போட்டியின் தலைப்பு புரவலராக உள்ளது. துரந்த் கோப்பையின் 2021 பதிப்பை FC கோவா அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் `1.43 இலட்சம் கோடி!

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) `1.43 லட்சம் கோடியாக வசூலானது. நடப்பாண்டு மே மாதத்தில் `1.41 லட்சம் கோடி, ஜூன் மாதத்தில் `1.44 லட்சம் கோடி வசூலான ஜிஎஸ்டி கடந்த ஜூலை மாதத்தில் `1.49 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி `1.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.  இது, கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் வசூலான `1,12,020 கோடியுடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும். மேலும், தொடர்ந்து 6ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் `1.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வசூலான `1,43,612 கோடியில், மத்திய ஜிஎஸ்டியாக `24,710 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக `30,951 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக `77,782 கோடியும், செஸ் `10,168 கோடியும் வசூலாகியுள்ளதாக நடுவண் நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. சதுப்புநிலங்களைக் காப்போம்!

சதுப்புநிலம் என்பது, கடல் மட்டத்தைவிட குறைவான ஆழம்கொண்ட நீர்நிலையாகும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மண்ணரிப்பைத் தடுக்கவும், புயல், சூறாவளிபோன்ற இயற்கைச் சீற்றங்களை மட்டுப்படுத்தவும் சதுப்புநிலங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரிதும் துணை புரிகின்றன.

பூமியின் மொத்தப்பரப்பளவில் 6% சதுப்புநிலங்களாக உள்ளன. இன்று உலகில் 2000-க்கும் மேற்பட்ட இடங்கள் சதுப்புநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு சுமார் 20 கோடி ஹெக்டேர் ஆகும். உலக அளவில் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், அமேசானை ஒட்டிய பிரேசில் பகுதிகளிலும் 1,112 சதுப்புநிலப்பகுதிகள் காணப்படுகின்றன. அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதியைக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் 27,403 சதுப்புநிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் பூமியில் வாழும் பல்வேறு உயிரினங்களின் பாதுகாப்பைத் தன்னகத்தே கொண்டிருப்பதால், ‘நகரங்களின் நுரையீரல்கள்’ என்று இவை அழைக்கப்படுகின்றன. சதுப்புநிலங்களின் மேலாண்மையை சிறப்பாக பேணும் பகுதிகளுக்கு ராம்சா் சா்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. சதுப்புநிலங்களைப் பாதுகாத்து நிலங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும், புவி வெப்பமயமாகி அனல் கக்கிவரும் இன்றைய சூழ்நிலையில் உலக அளவில் சதுப்புநிலம் தொடர்பான பிரச்னைகளை நாடுகள் பகிர்ந்து கொள்வதற்கும், பிரச்னைகளை விவாதித்துத் தீர்வுகாண்பதற்கும் தேவையான கொள்கைகளை இந்த “இராம்சர் பிரகடனம்” வழங்குகிறது.

“இராம்சர் பிரகடனம்” அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு, அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971-ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. அதனாலேயே, அந்நகரின் பெயரைத் தழுவியே “இராம்சர் பிரகடனம்” என்ற பெயர் ஏற்படுத்தப்பட்டது.

உலக நாடுகளிடையே இயற்கை வளங்களைப் பாதுகாத்து, சதுப்புநிலங்களின் செழுமையையும், வளமையையும் பேணுதலே இந்த உடன்படிக்கையின் குறிக்கோளாகும்.

இந்தியாவில் மேலும் 11 சதுப்புநிலக்காடுகளுக்கு ராம்சர் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளது. நம் நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவுக்குப் பொருத்தமாக இந்தியாவில் இராம்சர் சாசன பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சதுப்பு நிலக்காடுகளின் எண்ணிக்கையும் 75ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் பெருமையளிப்பதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 76,316 ஹெக்டேரில் உள்ள 11 சதுப்புநிலக் காடுகளில் தமிழ்நாட்டில் உள்ள நான்கு சதுப்புநிலக் காடுகளும் இடம்பெற்றுள்ளன. அவை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரு பறவைகள் சரணாலயங்களான, சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் (260.47 ஹெக்டேர்), கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் (96.89 ஹெக்டேர்), கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் (94.23 ஹெக்டேர்), திருவாரூர் மாவட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம் (112.64 ஹெக்டேர்) ஆகிய நான்கு சதுப்புநிலக் காடுகளுக்கு இராம்சர் சாசன அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே, திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளம் பறவைகள் காப்பகம், இராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளகக் காப்பகம், ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பறவைகள் காப்பகம், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டம், உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் காப்பகம், சென்னையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சதுப்புநிலம் ஆகியவை இராம்சர் உடன்படிக்கையின்கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் அருகே வங்கக்கடலையொட்டி அமைந்துள்ள பிச்சாவரம் உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காட்டுப்பகுதியாகும். இந்தக் காடு ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இது 1357 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இப்பகுதியில் சிறு சிறு தீவுகள் உள்ளன. இக்காடுகளில் 177 வகையான பறவைகள் வந்து செல்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 1989-ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் குளிர்காலத்தில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கு ஏற்ற இடமாகும்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம் 112.64 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இது ஒரு பெரிய நீர்ப்பாசன ஏரியாகும். புலம்பெயர்ந்த பறவைகளுக்கு இது சிறந்த வசிப்பிடமாக உள்ளது.

இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலா தலங்களுக்குப் பெயர்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம், தேரூர் சதுப்புநில வளாகம் ஒரு முக்கியமான பறவைப்பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய ஆசியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.

நம் தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மட்டுமே இராம்சர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது. தற்போது வழங்கப்பட்டுள்ள நான்கு பகுதிகளோடு தமிழகத்தில் மொத்தம் 14 சதுப்புநிலக் காடுகள் இராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட்டு பட்டியலில் இடம்பெற்றிருப்பது, தமிழ்நாட்டிற்கு கிடைத்தப் பெருமையாகும். ஏனெனில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில்தான் சதுப்புநிலக்காடுகள் உள்ளன. தமிழகத்திற்கு அடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் 10 சதுப்புநிலக்காடுகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள 11 சதுப்புநிலக் காடுகளில் ஒடிஸாவில் மூன்றும், ஜம்மு-காஷ்மீரில் இரண்டும், மத்திய பிரதேசத்தில் ஒன்றும், மகாராஷ்டிரத்தில் ஒன்றும் அடங்கும்.

இந்தியாவில் முன்பிருந்த சதுப்புநிலங்களில் 50% மட்டுமே தற்போதுள்ளது. இவையும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4,000 சகிமீ பரப்பளவு குறைந்து வருகின்றன. இதன்மூலம் மொத்த சதுப்புநிலங்களில் ஆண்டுக்கு 3% குறைந்து வருகிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 1982 முதல் 2013 வரை 26 இடங்கள்தான் ராம்சர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 2014-ஆண்டு முதல் 2022 வரை 49 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது நாட்டில் 13,26,677 ஹெக்டேர் பரப்பில் சதுப்புநிலங்கள் இருப்பது இந்திய திருநாட்டு மக்களுக்கு உலகளவில் கிடைத்திருக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

சதுப்புநிலங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவற்றை பாதுகாப்பட்ட பிரதேசமாக அறிவிக்க வேண்டும்; அப்பகுதிகளில் நகரக் கழிவுகளைக் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்; சதுப்புநிலப்பகுதிகள் நிலத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானதால் அங்கு தொழிற்சாலைகளை அமைக்க அனுமதிக்கக் கூடாது; ஈர நிலப்பகுதிகளில் தற்போது உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்.

சதுப்புநிலங்கள்தான் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஊற்றுக்கண்களாகவும் உள்ளன. சதுப்பு நிலங்களில் காணப்படும் அலையாத்திக்காடுகள் மண்ணரிப்பைத் தடுப்பதுடன், சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும், நீரைத் தூய்மையாக்கும்; பல்லுயிர்களின் புகலிடமாக விளங்குகின்றன. சதுப்புநிலங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் பிப்.2-ஆம் தேதி சர்வதேச சதுப்புநில நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரநிலமும், நீரும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவொண்ணாதவை. உயிரினங்களின் வாழ்விற்கு இவை இன்றியமையாதவை.

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் புகலிடமாகவும், நாட்டின் வளத்திற்கு ஆதாரமாகவும், நீரிலுள்ள மாசை நீக்கி தூய்மையான நீராக மாற்றவும், புவி வெப்பமடையாமல் காக்கவும் உதவும் ஈரநிலங்களான சதுப்பு நிலங்களைக் காப்போம்!

2nd September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which Indian state/UT launched the “country’s first virtual school”?

A. Karnataka

B. New Delhi

C. Telangana

D. Kerala

Answer & Explanation

Answer: B. New Delhi

  • Delhi Chief Minister Arvind Kejriwal launched the ‘country’s first virtual school’ called the ‘Delhi Model Virtual School’, in which students from across India will be eligible for admission in classes 9 to 12. DMVS will be affiliated to the Delhi Board of School Education (DBSE) and no fees will be charged from students. The classes will be conducted through an exclusive platform built by SchoolNet and Google.

2. Which institution conducted the Cyber Security Exercise ‘Synergy’?

A. CERT–In

B. Indian Air Force

C. Defence Research and Development Organisation

D. Indian Space Research Organisation

Answer & Explanation

Answer: A. CERT–In

  • Indian Computer Emergency Response Team (CERT–In) under Ministry of Electronics & IT, in collaboration with Cyber Security Agency of Singapore (CSA), successfully designed and conducted the Cyber Security Exercise ‘Synergy’ for 13 Countries. It was conducted as a part of the International Counter Ransomware Initiative– Resilience Working Group which is led by India under the leadership of National Security Council Secretariat (NSCS). The theme of the exercise was ‘Building Network Resiliency to counter Ransomware Attacks’.

3. As per the latest NCRB report, the highest number of sedition cases were registered in which state?

A. Uttar Pradesh

B. Madhya Pradesh

C. Andhra Pradesh

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: C. Andhra Pradesh

  • According to the latest NCRB (National Crime Records Bureau) report, the highest number of sedition cases was recorded in Andhra Pradesh (29). 76 cases for sedition were registered in 2021 in the country under IPC Section 124A.  In 2020, no sedition case was recorded in the state of Andhra Pradesh. There were 1,604 arrests under Unlawful Activities (Prevention) Act [UAPA].

4. Mikhail Gorbachev, who passed away recently, was a former President of which country?

A. Ukraine

B. Russia

C. Belarus

D. Bulgaria

Answer & Explanation

Answer: B. Russia

  • Mikhail Gorbachev, the last leader of the former Soviet Union from 1985 until 1991, has passed away at the age of 91. In 1986, Gorbachev made a historic proposal to eliminate all long–range missiles held by the United States and the Soviet Union. It was the beginning of the end of the Cold War. He was also awarded the Nobel Peace Prize in 1990.

5. Which state/UT Police is the first in the country to make collection of forensic evidence mandatory?

A. Tamil Nadu

B. Delhi

C. Karnataka

D. Odisha

Answer & Explanation

Answer: B. Delhi

  • The Delhi Police has become the first police force in the country to make collection of forensic evidence mandatory in crimes punishable with a sentence of more than six years.
  • This has been done to increase conviction rate and to integrate the criminal justice system with forensic science investigation. Delhi Police has integrated the Criminal Justice System (ICJS) with forensic science investigation and collaborated with National Forensic Sciences University (NFSU), Gandhinagar to train its officers.

6. Which state/UT Police received the most number of awards on the occasion of the Independence Day, 2022?

A. Maharashtra

B. Punjab

C. Jammu and Kashmir

D. Kerala

Answer & Explanation

Answer: C. Jammu and Kashmir

  • A total of 1,082 Police personnel were awarded Police Medals on the occasion of the Independence Day, 2022. 347 police personnel have been awarded Police Medal for Gallantry. Jammu and Kashmir Police were awarded 108 medals, the most among states and union territories. Maharashtra and Chhattisgarh are also among the states with highest number of Police Medals for Gallantry in 2022.

7. The International Solar Alliance (ISA) is set to establish a solar project in which country?

A. Egypt

B. Kenya

C. Cuba

D. South Africa

Answer & Explanation

Answer: C. Cuba

  • The International Solar Alliance (ISA) in partnership with the Cuban government has floated a tender for setting up a 1150 MW solar project in Cuba. State–owned NTPC is the project management consultant for ISA for setting up the project. The project is part of Cuba’s plan to implement 2100 MW of solar projects. It is also the first in ISA’s broader solar park programme.

8. William Samoei Arap Ruto was sworn in as the President of which country?

A. Kenya

B. Ethiopia

C. Nigeria

D. South Africa

Answer & Explanation

Answer: A. Kenya

  • William Samoei Arap Ruto, the deputy president of Kenya since 2013, has been declared winner of the Presidential election. Ruto won the election by a narrow margin as he received 50.49 percent of the votes. Legal battles are expected as a result of the tightly contested elections. In 2017, the presidential vote was nullified by the Supreme Court, citing reasons of irregularities.

9. Who is the first cricketer to play 600 matches in T20 cricket?

A. Virat Kohli

B. Kieron Pollard

C. Rohit Sharma

D. Andre Russell

Answer & Explanation

Answer: B. Kieron Pollard

  • West Indies captain Kieron Pollard became the first cricketer to complete 600 matches in T20 cricket. He announced retirement from international cricket in April 2022. Recently, All–rounder Dwayne Bravo scripted history by becoming the first–ever cricketer to clinch 600 wickets in T20 cricket.

10. Durand Cup is associated with which sports?

A. Hockey

B. Football

C. Cricket

D. Badminton

Answer & Explanation

Answer: B. Football

  • Durand Cup, the oldest football tournament in Asia, is scheduled to start from August 16, 2022.The opening match will be played between FC Goa and Mohammedan SC in Kolkata. For the first time in its history, the tournament is being held in multiple cities as West Bengal, Assam and Manipur are hosting the Durand Cup 2022. Indian Oil is the title sponsor of the tournament and the previous edition of Durand Cup 2021 was won by FC Goa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!