Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

30th 31st August 2020 Current Affairs in Tamil & English

30th 31st August 2020 Current Affairs in Tamil & English

30th 31st August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

30th 31st August 2020 Current Affairs Pdf Tamil

30th 31st August 2020 Current Affairs Pdf English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.தேசிய கல்விக்கொள்கை-2020’ஐ முதலில் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளம்

ஈ. நாகாலாந்து

  • தேசிய கல்விக்கொள்கை (NEP) – 2020’ஐ செயல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகா திகழவுள்ளது. ‘தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதைச்செயல்படுத்துதல்’ பயிலரங்கில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பங்கேற்றார். கல்விக்கொள்கையைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தங்களை, கர்நாடக மாநில அரசு தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.

2.வெளியுறவு அமைச்சகமானது, எந்த நாட்டுடன், முதன்முறையாக தேசிய ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்பாடு செய்தது?

அ. உஸ்பெகிஸ்தான்

ஆ. கஜகஸ்தான்

இ. லாவோஸ்

ஈ. துர்க்மெனிஸ்தான்

  • மத்திய வெளியுறவு அமைச்சகமானது அண்மையில் முதன்முறையாக இந்தியா-உஸ்பெகிஸ்தான் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்பாடுசெய்தது. இந்தியாவுக்கும் உசுபெகிஸ்தானுக்கும் இடையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக மெய்நிகராக இக்கூட்டம் நடைபெற்றது. இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் அடையாளங்காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது, குஜராத் மாநிலத்திற்கும் அந்திஜான் பிராந்தியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை அவர்கள் அப்போது மதிப்பாய்வு செய்தனர்.

3.மும்பை நகரப் போக்குவரத்துத் திட்டம்-3’க்கு $500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ள வளர்ச்சி வங்கி எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

இ. BRICS வங்கி

ஈ. உலக வங்கி

  • இந்திய அரசு, மகாராஷ்டிர மாநில அரசு, மும்பை இரயில்வே விகாஸ் கழகம் & ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியன மும்பையில் புறநகர் இரயில்வே அமைப்பில் வலையமைப்புத்திறன், சேவைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, $500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மும்பை நகர்ப்புறப் போக்குவரத்துச் செயல்திட்டம்-III என்ற கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டம், இப்பிராந்தியத்தில் பயண நேரத்தைக் குறைத்தல், பயணிகளுக்கு ஏற்படும் இடர்களைக் குறைத்தல் ஆகியவற்றுடன் கட்டமைப்புத் திறனையும் மேம்படுத்தும்.

4.சமீபத்தில், சுவிச்சர்லாந்தைச்சார்ந்த HELP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய கல்வி நிறுவனம் எது?

அ. IIT சென்னை

ஆ. IIT கோழிக்கோடு

இ. AIIMS

ஈ. NIT, திருச்சிராப்பள்ளி

  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-கோழிக்கோடு (IIM-K) சுவிச்சர்லாந்தைச் சார்ந்த HELP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இக்கூட்டாண்மை ஐக்கியநாடுகள் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகள் மற்றும் போக்குவரவு பயிற்சிமூலம் இந்தியாவில் மனிதாபிமான அடிப்படையிலான போக்குவரவுகளை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1 ஆண்டுகாலத்திற்கு அமலிலிருக்கும்.

5.கீழ்க்காணும் எந்நிறுவனம், சிவ நாடார் பல்கலையுடன் இணைந்து லித்தியம் சல்பர் மின்கலங்களை தயாரிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது?

அ. IIT பாம்பே

ஆ. BITS

இ. IISc, பெங்களூரு

ஈ. DRDO

  • IIT-பாம்பே மற்றும் சிவ நாடார் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சுற்றுச்சூழலுக்குகந்த லித்தியம் -சல்பர் (Li-S) மின்கலங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாகக் கூறியுள்ளனர். வழக்கமான லித்தியம் அயன் மின்கலங்களைவிட Li-S மின்கலங்கள் மும்மடங்கு அதிக ஆற்றல்திறன் கொண்டவையாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும். பெட்ரோலியத் தொழிற்துறை மற்றும் வேளாண்துறையின் கழிவுகள் சக-பலபடிகளுடன் சேர்க்கப்பட்டு Li-S மின்கலங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது, சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

6.அண்மையில் எந்த நிறுவனத்திற்கு, ‘உலகளாவிய நீர் விருது’ வழங்கப்பட்டது?

அ. யுரேகா போர்ப்ஸ்

ஆ. புளூ ஸ்டார் லிட்

இ. வா டெக் வாபாக்

ஈ. கென்ட் RO

  • சென்னையில் உள்ள நீர் மறுசுழற்சி மையமான, ‘Va Tech Wabag’ நடப்பாண்டிற்கான, ‘உலகளாவிய நீர்’ விருதினைப்பெற்றுள்ளது. ‘ஆண்டின் சிறந்த கழிவுநீர் மறுபயன்பாட்டுத்திட்டம்’ என்ற பிரிவின்கீழ் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. TTRO (Territory Treatment Reverse Osmosis) என்ற முதன்மையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கழிவுநீர் மறுபயன்பாட்டு மையம், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மறுசுழற்சி மையங்களுள் ஒன்றாகும்.
  • இந்த TTRO ஆலையானது நான்கு நிலைகளையுடையது; அதன்மூலம் நீரை மறுசுழற்சி செய்கிறது. இந்தியாவில், ‘தலைகீழ் சவ்வூடு பரவல்’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்பட்ட முதல் ஆலை இதுவாகும். இவ்வாலையின்மூலம் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 20% கழிவுநீரை மறுசுழற்சி செய்து 16 மில்லியன் மெட்ரிக் நீரை மறுசுழற்சி செய்யும் இந்தியாவின் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.

7. UEFA சாம்பியன்ஸ் லீக்-2020’ஐ வென்ற கால்பந்து அணி எது?

அ. AC மிலன்

ஆ. பேயர்ன் முனிச்

இ. ரியல் மாட்ரிட்

ஈ. பார்சிலோனா

  • UEFA சாம்பியன்ஸ் தொடரை – 2020’ஐ ஜெர்மனியைச் சார்ந்த பேயர்ன் முனிச் கால்பந்து சங்கம் வென்றுள்ளது. லிஸ்பனின் எஸ்டாடியோ டா லூஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாரிஸ் புனித ஜெர்மைன் (PSG) அணிக்கு எதிராக அணி 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிகொண்டது. ஐம்பத்தொன்பதாம் நிமிடத்தில், கிங்சிலி கோமன், போட்டியின் ஒரே கோலை அடித்தார். ஏழாண்டுக்குப் பிறகு பேயர்ன் முனிச் அணி இந்தத் தொடரை வென்றுள்ளது.

8.புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள ஆதார் அடிப்படையிலான GST பதிவுமுறையின்படி, ஒரு நிறுவனம், GST பதிவுசெய்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?

அ. 3 வேலை நாள்

ஆ. 5 வேலை நாள்

இ. 7 வேலை நாள்

ஈ. 21 வேலை நாள்

  • வணிகம் செய்வதை எளிதாக்கும் பொருட்டு, GST’க்கு பதிவு செய்வதற்காக ஆதார் அங்கீகாரத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனத்தின் ஆதார் அடிப்படையிலான GST பதிவு, 3 வேலைநாட்களில் முடிக்கப்பட்டுவிடும். மேலும், இவ்விதமான பதிவு முறையில் நேரடி சரிபார்ப்புக்கு தேவையிருக்காது. ஆதார் அடிப்படையிலான பதிவுமுறையைத் தேர்வுசெய்யாதவர்கள், வணிகம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று சரிபார்ப்பது மற்றும் பிற தொடர்புடைய ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆதார் அல்லாத பதிவுமுறைக்கு, 21 நாட்கள் வரை பிடிக்கும்.

9.பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமர் விருதுகள் வழங்கப்படும் நாள் எது?

அ. வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்

ஆ. சிறுபான்மையினர் உரிமைகள் நாள்

இ. தேசிய ஒற்றுமை நாள்

ஈ. தியாகிகள் நாள்

  • மத்திய பணியாளர்நலன் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் பிரதம அமைச்சர் விருதுகளுக்காக, சுமார் எழுநூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பங்கேற்றுள்ளன. இந்த விருதுகள் அக்.31 அன்று கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமை நாளன்று, குஜராத்தில் அமைந்துள்ள ‘ஒற்றுமை சிலை’க்கு அருகே நடத்தப்படும் சிறப்பு நிகழ்வின்போது பிரதமர் மோடியால் வழங்கப்படும். தங்கள் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, மாவட்ட ஆட்சியர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.

10.முத்ரா கடன் திட்டத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான பெண் பயனாளிகளைக் கொண்ட மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • அண்மையில் மாநிலங்களவைக்கு நிதி அமைச்சகம் வழங்கிய தாகவலின்படி, பிரதம அமைச்சர் முத்ரா திட்டம் (PMMY) தொடங்கப்பட்டதிலிருந்து `4.78 இலட்சம் கோடி மதிப்புள்ள 15 கோடி கடன்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களுள், `58,227 கோடி கடன்பெற்ற பெண் பயனாளி -களுடன், தமிழ்நாடு, பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலமும் (`55,232 கோடி), கர்நாடக மாநிலமும் (`47,714 கோடி) உள்ளன.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படுவது குறித்து முதலமைச்சர் க. பழனிச்சாமியுடன் இணைந்து மத்திய நீர்வள அமைச்சர் கசேந்திரசிங் செகாவத் காணொளிக்காட்சிமூலம் ஆய்வுசெய்தார். நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும், குடிதண்ணீரை வழங்க மாநிலங்களுடன் இணைந்து ‘ஜல் ஜீவன் இயக்கம்’ செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை வழங்கும் இலக்கை 2024’க்குள் 100% எட்ட தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. இது வரை, தமிழகத்தில் உள்ள 126.89 லட்சம் கிராமப்புற வீடுகளில், 25.98 லட்சம் (20.45%) வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான குழாய் இணைப்புகளைப் பொருத்த வரையில், ஒட்டுமொத்த நாட்டில் 17ஆம் இடத்தில் தமிழ்நாடு தற்போது உள்ளது. 2020-21ஆம் ஆண்டில் 33.94 லட்சம் வீடுகளுக்குக் குழாய் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது.

1. Which Indian state announced that it would be the first to implement the National Education Policy (NEP) 2020?

[A] Tamil Nadu

[B] Karnataka

[C] Kerala

[D] Nagaland

  • Karnataka has announced that it would be the first state to implement the National Education Policy (NEP) 2020. The Deputy Chief Minister of Karnataka participated in the ‘Highlights of the National Education policy and its implementation’ workshop. He announced that the state has started to launch administrative reforms and amendments to implement the policy.

2. External Affairs Ministry organised the National Coordination Committee, with which country, for the first time?

[A] Uzbekistan

[B] Kazakhstan

[C] Laos

[D] Turkmenistan

  • The Union External Affairs Ministry has recently organised the first India–Uzbekistan National Coordination Committee. The virtual meeting was held to monitor the implementation of mutually agreed projects between India and Uzbekistan. They also reviewed implementation of identified projects under India’s LoC, cooperation between the Gujarat state and Andijan region among others.

3. Which development bank is to finance the USD 500 million Mumbai Urban Transport Project–III?

[A] ADB

[B] AIIB

[C] BRICS Bank

[D] World Bank

  • Asian Infrastructure Investment Bank (AIIB) is to finance the USD 500 million Mumbai Urban Transport Project–III. The Government of India, state Government of Maharashtra and Mumbai Railway Vikas Corporation signed a loan agreement with AIIB for this project. It will improve the network capacity and safety of the suburban railway system in Mumbai.

4. Which Indian Educational institution has recently signed a MoU with Switzerland–based HELP Logistics?

[A] IIT Chennai

[B] IIT Kozhikode

[C] AIIMS

[D] NIT Thiruchirapalli

  • Indian Institute of Management Kozhikode (IIM–K) has signed a MoU with Switzerland based HELP Logistics. This partnership is aimed to develop humanitarian logistics in India through consulting services and logistics training to United Nations bodies, Government Institutions and Non–Governmental Organizations. The MoU will be in force of a period of 1 year.

5. Which instituition, in association with Shiv Nadar University has developed a new technology to produce Lithium Sulphur Batteries?

[A] IIT Bombay

[B] BITS

[C] IISc, Bengaluru

[D] DRDO

  • Researchers at IIT – Bombay and Shiv Nadar University have claimed that they have developed a technology to produce environment friendly Lithium–Sulfur (Li–S) batteries. The Li–S batteries would be three times more energy efficient and cost effective than conventional Lithium–ion batteries. The production of Li–S batteries uses products from the petroleum industry and agro–waste along with co polymers, and thus has a positive impact on environment.

6. Which company has been recently conferred with the Global Water Award?

[A]  Eureka Forbes

[B] Blue Star Ltd

[C] Va Tech Wabag

[D] Kent RO

  • The water technology company “Va Tech Wabag” has been conferred with the Global Water Award. This award has been given to the company for setting up a tertiary treatment reverse osmosis plant (TTRO) with a capacity of 45 million litres a day, at Chennai. The award has been given under ‘wastewater project of the year’ category. With this project, Chennai is the first Indian city to reuse more than 20 % of its treated wastewater.

7. Which football club has won the UEFA Champions League 2020?

[A] AC Milan

[B] Bayern Munich

[C] Real Madrid

[D] Barcelona

  • The UEFA Champions League 2020 has been won by the Germany–based football club, the Bayern Munich. The team won 1–0 against the Paris Saint Germain (PSG) at the final match held at Estadio da Luz, Lisbon. Kingsley Coman scored the only goal of the match during the 59th minute. Bayern Muncih has won the league after 7 years.

8. As per the newly activated Aadhaar based GST registration, what is the time taken for GST registration by an entity?

[A] 3 working day

[B] 5 working day

[C] 7 working day

[D] 21 working day

  • In order to enhance the ease of doing business, the Aadhaar authentication has been activated by the Government for registration to GST. The Aadhaar based GST registration of an entity would be completed in 3 working days and there is no requirement for physical verification. Those not opting for Aadhaar based registration will be subjected to physical verification of place of business activity and other related documentary verification. The time required for non–Aadhaar registration would be up to 21 days.

9. When is the PM’s Awards for Excellence in Public Administration to be presented?

[A] Non–Resident Indian Day

[B] Minorities Rights Day

[C] National Unity Day

[D] Martyrs Day

  • As per the recent notification from the Personnel Ministry, over 700 districts have participated in the Prime minister’s awards for excellence in public administration. The awards will be conferred on October 31, the Ekta Diwas (Unity Day), at the Statue of Unity in Gujarat by the Prime Minister Narendra Modi. The award is to recognise the performance of District Collectors towards economic development of their regions.

10. Which state has the highest number of women beneficiaries under the MUDRA Loan scheme, as on date?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Arunachal Pradesh

[D] Rajasthan

  • As per the recent data given by the Ministry of Finance to the Rajya Sabha, over 15 crore loans worth Rs 4.78 lakh crore have been disbursed to women borrowers since the Pradhan Mantri Mudra Yojana (PMMY) was launched. Among the states, Tamil Nadu topped the list of women beneficiaries with loans amounting Rs 58227 crores. It is followed by the women in West Bengal (Rs 55,232 crore) and Karnataka (Rs 47,714 crore).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!