30th & 31st January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th & 31st January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th & 31st January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th & 31st January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ZSI’இன் அண்மைய வெளியீட்டின்படி, இந்தியாவின் எந்தப் பகுதியில், 428’க்கும் மேற்பட்ட இனங்கள் வசித்து வருகின்றன?

அ) மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ) சுந்தரவனக்காடுகள்

இ) தக்காண பீடபூமி

ஈ) இமயமலைப் பகுதி

 • “சுந்தரவன உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள பறவைகள்” என்ற பெயரில் இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய வெளியீட்டின்படி, இப்பகுதியில் 428 வகையான பறவைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகளுள் ஒன்றான இந்திய சுந்தரவனக்காடுகள், சுந்தரவன புலிகள் காப்பாகத்தையும் கொண்டுள்ளது. மாஸ்க்ட் ஃபின்ஃபூட் மற்றும் பஃபி மீன் ஆந்தை போன்ற சில பறவையினங்கள் சுந்தரவனக்காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

2. ‘சிறைச்சாலை சுற்றுலா’ என்ற புதிய முயற்சியை தொடங்கிய மாநில / UT அரசு எது?

அ) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத்

ஈ) மேற்கு வங்கம்

 • மகாராஷ்டிர மாநில அரசு, ‘சிறை சுற்றுலா’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, விடுதலைப் போராளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகள் சுற்றுலாத்தலங்களாக உருவாக்கப் -படும். 2021 ஜனவரி.26 அன்று 150 ஆண்டுகள் பழமையான யெராவாடா சிறையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நாக்பூர், தானே, ரத்னகிரி சிறைகளும் அடங்கும்.

3. ‘யூனியன் பட்ஜெட்’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கிய நிறுவனம் எது?

அ) தேசிய தகவலியல் மையம்

ஆ) இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு

இ) தொலைத்தொடர்புத்துறை

ஈ) தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு

 • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில், மத்திய பட்ஜெட் – 2021’ஐ தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ‘யூனியன் பட்ஜெட்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தினார்.
 • இந்த ஆண்டின் பட்ஜெட் முற்றிலும் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யவிருப்பதால், இந்தத் திறன்பேசி செயலி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பட்ஜெட் ஆவணங்களை அணுக உதவும். இது, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின்கீழ், தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

4. கீழ்க்காணும் எந்த ஆண்டில், ஐநா பொது அவையால், ‘அணு ஆயுதங்கள் தடைசெய்வதற்கான ஒப்பந்தம்’ அங்கீகரிக்கப்பட்டது?

அ) 2000

ஆ) 2003

இ) 2012

ஈ) 2017

 • அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஒப்பந்தம், கடந்த 2017ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
 • அண்மையில், இந்த முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது; அதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்று இந்தியா அறிவித்தது. 9 நாடுகளுள் ஒன்றுகூட அணுவாயுதங்களை வைத்திருப்பதாக ஒப்புக்கொள்ளவில்லை. NATO கூட்டணி இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தது.

5. ‘ஷெளரியவான்’ என்ற பெயரில் இதழொன்றை அறிமுகப்படுத் -தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஈ) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

 • வீரதீர விருதுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை (www. gallantryawards.gov.in) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.‌ வீரதீர விருதுகளை வென்றவர்களை கௌரவிக்கும் தளமாக இது விளங்கும். தேசிய அளவிலான வினாடி வினா, ‘ஷெளரியவான்’ என்ற பெயரில் ஒரு மின்னிதழ் ஆகிய முயற்சிகளையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

6. புதிய M-மணல் கொள்கை–2020’ஐ வெளியிட்டுள்ள மாநில அரசு எது?

அ) குஜராத்

ஆ) இராஜஸ்தான்

இ) மத்திய பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

 • இராஜஸ்தான் மாநில அரசு புதிய M-மணல் கொள்கை – 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலத்தின் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலின் அளவை அரசு பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். இது, உருவாக்கப்பட்ட மணல் (அ) M-மணல் உற்பத்தியை ஊக்குவிக்கும் & பாரம்பரிய மணலின் தேவையைக் குறைக்கும்.

7. இணையவழியில் பன்னாட்டு பருவநிலை தகவமைப்பு உச்சி மாநாட்டை (CAS Online) நடத்திய நாடு எது?

அ) சுவீடன்

ஆ) நெதர்லாந்து

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) ஆஸ்திரேலியா

 • நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தலைமையில் 2021 ஜனவரி.25 அன்று நெதர்லாந்து அரசாங்கம் இணையவழியில் பன்னாட்டு பருவ நிலை தகவமைப்பு உச்சிமாநாட்டை நடத்தியது. தொற்றுநோய்க்குப் பிறகு காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மெய்நிகர் மாநாட்டில், இந்தியப்பிரதமர் மோடி கலந்துகொண்டு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

8. குடியரசு நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும், ‘பாரத் பர்வ்’ நிகழ்வை ஏற்பாடு செய்கிற நடுவண் அமைச்சகம் எது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) உள்துறை அமைச்சகம்

இ) வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஈ) சுற்றுலா அமைச்சகம்

 • குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, ‘பாரத் பர்வ்’ என்ற தேசியக் கண்காட்சியை, நடுவணரசின் சுற்றுலாத்துறை, தில்லி செங்கோட்டை வளாகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. ஜன.26-ஜன.31 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத்தலங்கள், கைவினைப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
 • இந்த நிகழ்ச்சி, நாட்டுப்பற்றையும், நம்நாட்டின் வளமான பன்முக கலாசாரத்தையும் பறைசாற்றுவதோடு, இந்தியாவின் சாரம்சத்தைக் கொண்டாடுகிறது.

9. ‘19000 கோடி – தேசிய சமையல் எண்ணெய் திட்டம்’ என்பதை முன்மொழிந்த மத்திய அமைச்சகம் எது?

அ) உணவுப் பதனிடுதல் அமைச்சகம்

ஆ) வேளாண் அமைச்சகம்

இ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ) ஊரக மேம்பாடு அமைச்சகம்

 • தாக்கல் செய்யவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பதற்காக, சமையல் எண்ணெய் தொடர்பான `19,000 கோடி மதிப்பிலான தேசிய திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
 • சமையல் எண்ணெயின் இறக்குமதியைக் குறைப்பதோடு, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஐந்தாண்டு திட்டம் ஒன்று வேண்டும் என இது நோக்குகிறது. சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக இந்தியா ஆண்டுதோறும் `75,000 கோடி நிதியை செலவிடுகிறது. இந்தத் திட்டம், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு இறக்குமதி செலவையும் குறைக்கும்.

10. COVID தொற்றுக்குப் பிறகான உலகில், சமூக-பொருளாதார சவால்கள் குறித்த ஐநா உயர்மட்ட ஆலோசனைக்குழுவின் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார நிபுணர் யார்?

அ) அருந்ததி ராய்

ஆ) அமர்தியா சென்

இ) ஜெயதி கோஷ்

ஈ) இரகுராம் இராஜன்

 • COVID-19’க்குப் பிறகான உலகில், சமூக-பொருளாதார சவால்கள் குறித்த ஐநா உயர்மட்ட ஆலோசனைக்குழுவின் ஒருபகுதியாக இந்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள் -ளார். எதிர்கால திட்டங்கள் குறித்து (குறிப்பாக COVID-19 தொற்று காலத்திற்குப்பிறகு) ஐநா பொதுச்செயலாளருக்கு இவ்வாரியம் தனது பரிந்துரைகளை வழங்கும். செல்வி ஜெயதி கோஷ், தற்போது மாசசூசெட்ஸ் பல்கலையில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.

30th & 31st January 2021 Tnpsc Current Affairs in English

1. As per the recent publication of ZSI, which region of India is home to as many as 428 species?

A) Western Ghats

B) Sunderbans

C) Deccan Plateau

D) Himalayan Region

 • As per a recent publication of the Zoological Survey of India (ZSI) named “Birds of the Sundarban Biosphere Reserve”, the region is home to 428 species of birds.
 • The Indian Sunderbans one of the largest mangrove forests in the world, also comprises of the Sunderban Tiger Reserve. Some birds like Masked Finfoot and Buffy fish owl are found only in the Sunderbans.

2. Which Indian State/UT launched a new initiative named ‘Jail Tourism’?

A) Andaman & Nicobar Islands

B) Maharashtra

C) Gujarat

D) West Bengal

 • The Maharashtra government is launching a new initiative named Jail Tourism in the state. As a part of the programme, jails where many freedom fighters were jailed will be developed as Tourism sites.
 • From January 26, 2021 the state has launched the programme starting with the 150–year–old Yerawada Jail. It will also include Nagpur, Thane, and Ratnagiri Jails.

3. The ‘Union Budget’ Mobile application has been developed by which institution?

A) National Informatics Centre

B) Indian Computer Emergency Response Team

C) Department of Telecommunications

D) National Technical Research Organisation

 • Finance Minister Nirmala Sitharaman has recently launched the ‘Union Budget Mobile ahead of the Union Budget 2021. As this year’s budget will be completely paperless, the mobile application will enable members of the parliament and general public, to access budget documents.
 • It has been developed by the National Informatics Centre under the guidance of the Department of Economic Affairs (DEA), Finance Ministry.

4. The ‘Treaty on the Prohibition of Nuclear Weapons’ was approved by the UN General Assembly in which year?

A) 2000

B) 2003

C) 2012

D) 2017

 • The Treaty on the Prohibition of Nuclear Weapons was approved by the United Nations General Assembly in 2017. Recently, this first treaty came into force and in response, India announced that it does not support the treaty. None of the nine countries said to possess nuclear weapons and the NATO alliance supported the treaty.

5. Which Union Ministry has launched an e–magazine named ‘Shauryawaan’?

A) Ministry of Defense

B) Ministry of Home Affairs

C) Ministry of External Affairs

D) Ministry of Tribal Affairs

 • Union Defence Minister Rajnath Singh has launched a revamped website, which provides information about gallantry awards in India and their recipients.
 • The portal has all the important information, which will be available throughout the day. The Minister also launched an e–magazine named ‘Shauryawaan’ and a gallantry award quiz competition.

6. Which Indian state has launched the new M–Sand Policy–2020?

A) Gujarat

B) Rajasthan

C) Madhya Pradesh

D) Maharashtra

 • Rajasthan state has launched the new M–Sand Policy–2020 recently. The state Chief Minister Ashok Gehlot said the state government aims to meet the quantity of sand needed for construction work in the state. This would encourage the production of manufactured sand or M–sand and reduce the dependence on traditional sand.

7. Which country hosted online international Climate Adaptation Summit (CAS Online)?

A) Sweden

B) Netherlands

C) United Kingdom

D) Australia

 • The Netherlands government played host to an online international Climate Adaptation Summit (CAS Online) on 25 January 2021, under the leadership of Prime Minister Mark Rutte.
 • It aims to help the countries build a climate–resilient ecosystem back after the pandemic Indian Prime Minister participated in the virtual conference and addressed the members.

8. Which Union Ministry organises the ‘Bharat Parv’ event every year on the occasion of Republic Day Celebrations?

A) Ministry of Defense

B) Ministry of Home Affairs

C) Ministry of External Affairs

D) Ministry of Tourism

 • Union Ministry of Tourism organises ‘Bharat Parv’ every year, on the occasion of Republic Day Celebrations from 26th to 31st of January.
 • Since 2016, the event has been conducted near the Red Fort, New Delhi. The event aims to showcase the rich cultural diversity of the country. States and UTs will display their tourism destinations, cuisine, handicraft and unique features.

9. Which Union Ministry proposed a 19000 Crore– ‘National Mission on Edible Oil’?

A) Ministry of Food Processing

B) Ministry of Agriculture

C) Ministry of Commerce & Industry

D) Ministry of Rural Development

 • The Union Agriculture Ministry has proposed a Rs 19,000 crore National mission on edible oil for approval in the upcoming budget.
 • The mission seeks a five–year plan to achieve self–sufficiency in cooking oil production along with cutting its import. India spends almost Rs 75,000 crore annually in importing edible oil which will also promote local production and cut its cost.

10. Which Indian Economist has been chosen to be a part of UN high–level advisory board on socio–economic challenges in post–COVID–19 world?

A) Arundhati Roy

B) Amartya Sen

C) Jayati Ghosh

D) Raguram Rajan

 • India’s economist Jayati Ghosh has been chosen to be a part of UN high–level advisory board on socio–economic challenges in post–COVID–19 world.
 • The board would make recommendations to UN Secretary–General for making response to the future, especially after the post COVID era. Ms. Jayati Ghosh is presently a professor of economics at University of Massachusetts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *