Tnpsc

30th & 31st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th & 31st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th & 31st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th & 31st July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘SuperBIT’ என்ற தொலைநோக்கியை உருவாக்கும் விண்வெளி நிறுவனம் எது?

அ) இஸ்ரோ

ஆ) நாசா

இ) ESA

ஈ) ரோஸ்கோஸ்மோஸ்

  • நாசா மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து மீயழுத்த பலூன்மூலம் இயங்கும் படமாக்கல் தொலைநோக்கி அல்லது சூப்பர்பிட் என்ற தொலைநோக்கியை உருவாக்குகின்றன. இது ஹப்பிள் தொலைநோக்கியின் பின்னது எனக் கூறப்படுகிறது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களுக்கு அனுப்பப்படவுள்ள இத்தொலைநோக்கியை கொண்டு செல்ல ஓர் அரங்கம் அளவிலான ஹீலியம் பலூன் பயன்படுத்தப்பட உள்ளது. டொராண்டோ பல்கலை, பிரின்ஸ்டன் பல்கலை மற்றும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலையும் நாசாவும் கனடிய விண்வெளி நிறுவனமும் இணைந்து இதை வடிவமைத்துள்ளன.

2. கேரளாவில் காணப்பட்ட ஓர் அரிய உயிரினமான Chrysilla volupe என்பது பின்வரும் எந்த வகையைச் சார்ந்ததாகும்?

அ) சிலந்தி

ஆ) ஆமை

இ) பாம்பு

ஈ) தவளை

  • கேரளாவில் உள்ள புத்தனஹள்ளி ஏரியில், சமீபத்தில், ஒரு ஜோடி அரிய Chrysilla volupe சிலந்திகள் காணப்பட்டன. 2018ஆம் ஆண்டில் வயநாடு வனவுயிரி சரணாலயத்தில் கண்டறியப்படும் வரை, Chrysilla volupe 150 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த காரணத்தால் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இச்சிலந்தி குதிக்கும் சிலந்திகளின் (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
  • ஆண் சிலந்திகள் நீண்ட கால்களும் மற்றும் 1.76 மிமீ அகலமும் 5.44 மிமீ நீளமும் கொண்டது. பெண் சிலந்திகள் 2.61 மிமீ நீளமும் 0.88 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளன.

3. “Faster, Higher, Stronger – Together” என்பது பின்வரும் எந்த நிகழ்வின் புதுப்பிக்கப்பட்ட குறிக்கோளாகும்?

அ) BRICS உச்சிமாநாடு

ஆ) G20 உச்சிமாநாடு

இ) ஒலிம்பிக் 2021

ஈ) இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்

  • 2021 ஜூலை 2021 அன்று, “Faster, Higher, Stronger” என்ற ஒலிம்பிக் குறிக்கோள், “Faster, Higher, Stronger – Together” என புதுப்பிக்கப்பட்டது. COVID-19 தொற்றுகாலத்தில் நாடுகளின் ஒற்றுமையைக் காட்ட இந்தப் புதுப்பிப்பு செய்யப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நடந்த அமர்வில், பன்னாட்டு ஒலிம்பிக் குழு இம்மாற்றத்திற்கு ஒப்புதலளித்தது.
  • பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனர் பியர் டி கூபெர்டினின் பரிந்துரையின்பேரில், 1894 முதல், ஒலிம்பிக் குறிக்கோள் இலத்தீன் மொழியில் “Citius, Altius, Fortius” (அ) “Faster, Higher, Stronger” என ஏற்றுக்கொள்ளப்பட்டது. “Citius, Altius, Fortius, Communiter” என்பது புதிய குறிக்கோளின் இலத்தீன் பதிப்பாகும்.

4. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, குறைந்த தொலைவிலுள்ள பீரங்கிகளைத் தாக்கியழிக்கும் சிறிய ரக ஏவுகணையை (MPATGM) வெற்றிகரமாக பரிசோதனை செய்த நிறுவனம் எது?

அ) BEL

ஆ) DRDO

இ) ISRO

ஈ) HAL

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குறைந்த தொலைவில் பீரங்கிகளைத் தாக்கியழிக்கும் சிறிய ரக ஏவுகணையை (MPATGM) வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • ஒடிஸா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையையும் (ஆகாஷ்-NG), DRDO வெற்றிகரமாக சோதனை செய்தது.

5. UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களிலிருந்து நீக்கப்பட்ட லிவர்பூல் அமைந்துள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) டென்மார்க்

ஈ) ரஷ்யா

  • UNESCO ஆனது ஐக்கியப் பேரரசின் லிவர்பூல் நகரத்தை அதன் உலக பாரம்பரிய தளங்களிலிருந்து நீக்கியுள்ளது. கால்பந்து மைதானம் உட்பட புதிய கட்டடங்கள், அந்த நகரத்தின் பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதால் லிவர்பூல் நகரம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக UNESCO தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக லிவர்பூல் அறிவிக்கப்பட்டது. மதிப்புமிக்க உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் 3ஆவது இடம் லிவர்பூல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு முன், 2007’இல் ஓமன் வனவுயிரி சரணலாயம், 2009’இல் ஜெர்மனியின் டிரெஸ்டன் எல்பே பள்ளத்தாக்கு ஆகியவை உலக பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6. 600 கிமீ வேகத்தை எட்டும் அதிவேக மேக்லெவ் இரயிலை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா

ஈ) இந்தியா

  • சீனா, 600 கிமீ வேகத்தை அடையும் காந்தத்தூக்கல் (magnetic levitation) அடிப்படையில் வேலைசெய்யும் அதிவேக ரயிலை அறிமுகம்செய்துள்ளது. இது உலகின் அதிவேக தரைவழி வாகனம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம், 2016ஆம் ஆண்டில் சீனாவால் தொடங்கப்பட்டது மற்றும் இதன் முன்மாதிரி 2019ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இந்த மாதிரி, 2020’இல் சோதிக்கப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

7. பாரதிய பிரகிருத்திக் கிருஷி பதாதி என்பது எந்தத் திட்டத்தின் துணைத்திட்டமாகும்?

அ) பரம்பராகத் கிருஷி விகாஸ் யோஜனா

ஆ) பிரதமர் பசல் பீமா யோஜனா

இ) PM மாத்ரு வந்தனா யோஜனா

ஈ) PM கிசான்

  • நடுவண் அரசானது 2020-21ஆம் ஆண்டு முதல் பரம்பராகத் கிருஷி விகாஸ் யோஜனாவின் துணைத்திட்டமாக பாரதிய பிரகிருத்திக் கிருஷி பதாதியை (BPKP) செயல்படுத்தி வருகிறது. இது, பாரம்பரிய பழங்குடி நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத்திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கிறது. BPKP’இன் கீழ், ஹெக்டேர் ஒன்றுக்கு `12200 நிதியுதவி மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.

8. இந்தியா முழுவதும் எத்தனை ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குகின்றன?

அ) 11

ஆ) 41

இ) 91

ஈ) 181

  • அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளாக அறிவிப்பதற்கு அரசுக்கு இது அதிகாரமளிக்கிறது.
  • அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா, அரசுக்கு சொந்தமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 41 இத்தகைய தொழிற்சாலைகளில் சுமார் 70,000 பேர் பணிபுரிகின்றனர்.

9. தைபே என்பது எந்த நாட்டின் தலைநகரமாகும்?

அ) தைவான்

ஆ) ஜிம்பாப்வே

இ) சௌதி அரேபியா

ஈ) தாய்லாந்து

  • தைபே என்பது தைவானின் தலைநகரமாகும். இது புதிய தைவான் டாலரை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக கொண்டுள்ளது. தைவான் அரசு தனது சொந்தப் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நாடான லித்து வேனியாவில் அலுவலகத்தை நிறுவ முன்வந்துள்ளது. மற்ற அனைத்து அலுவலகங்களும் “தைபே” என்ற பெயரில் அவை இயங்குகின்றன. சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்நடவடிக்கை அமெரிக்காவால் வரவேற்கப்பட்டுள்ளது.

10. ஐக்கிய நாடுகளின் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ உர்ஜித் படேல்

ஆ) இராஸ்மி இரஞ்சன் தாஸ்

இ) இரகுராம் இராஜன்

ஈ) அதானு சக்கரவர்த்தி

  • நிதி அமைச்சகத்தின் இணைச்செயலாளரான இராஸ்மி இரஞ்சன் தாஸ், 2021 முதல் 2025 வரையிலான காலத்திற்கு ஐக்கிய நாடுகள் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வரி விவகாரங்களில் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் வல்லுநர் குழு என முன்னர் அழைக்கப்பட்டு வந்த ஐநா வரி குழுமத்தில் உலகெங்கிலும் உள்ள 25 வரி வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • வலுவான வரிக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இயற்கை பேரிடர்களை துல்லியமாகக் கணிக்கும் செயற்கைக்கோள் அனுப்ப திட்டம்: அமைச்சர் ஜிதேந்தர் சிங்

வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக கணிக்கும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இந்த ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இஓஎஸ்-3 செயற்கைக்கோள், தினமும் 4-5 முறை பூமியை படமெடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. இயற்கை பேரிடர்களுடன், நீர் நிலைகள், பயிர்கள், தாவர நிலை, வனப்பகுதிகள் உள்ளிட்டவற்றையும் இந்தச் செயற்கைக்கோளால் கண்காணிக்க முடியும். இதன்மூலம் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை துல்லியமாக கணிக்க இயலும். சிறிய இரக செயற்கைக்கோள் செலுத்தும் வாகனத்தின் முதல் சோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து 2021ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு இந்த வாகனம் ஏதுவாக இருக்கும்.

விண்வெளி தொழில்நுட்பங்கள், சேவைகள் மற்றும் உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான சூழலியலை உருவாக்க அரசு தீவிரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம், விண்வெளித் துறை சீர்திருத்தங்களை அறிவித்தது. தனியாரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக விண்வெளித் துறையின் கீழ் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் என்ற தனி முதன்மை முகமை உருவாக்கப்பட்டது.

தனியார் துறையினருக்கு அனுமதியளிக்கப்படும்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் நிறுவப்பட்ட இயந்திரங்களின் பாதுகாப்பை இந்த முகமை உறுதி செய்யும். பொது மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களுடனும் இதுதொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தனியாரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக விண்வெளித் துறையின் தொழில்நுட்ப வசதிகளை தனியார் துறையினர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2. புலிகளைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி

புலிகளைப் பாதுகாப்பதிலும், அவற்றுக்குப் பாதுகாப்பான வாழ்விடங்களை வழங்குவதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் 18 மாநிலங்களில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. புலிப் பாதுகாப்பு குறித்த புனித பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின் இலக்கான, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

3. ஜூலை.30 – மருத்துவர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்தநாள்

முத்துலட்சுமி பற்றி:

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்த முதல் மாணவி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர். சென்னை மாகாண சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர். சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர். சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என பல ‘முதல்’களைக் கண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

புதுக்கோட்டையில் 30.7.1886’இல் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, தமிழக வரலாற்றில் அழியாப்புகழ்பெற்றவர். பெண்ணுரிமைக்காக போராடிய பெருமக்களுள் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர். பன்னெடுங்காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்குச் சட்டம் இயற்ற வழிவகுத்தவர் என இவரின் சாதனைகள் ஏராளம்.

1917 முதல் இந்திய மாதர் சங்கத்தில் இணைந்து பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். 1926’இல் அகில உலகப் பெண்கள் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்தபோது 43 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் பெருமையை டாக்டர் முத்துலட்சுமி பெற்றார். அந்த மாநாட்டில், “ஆண்களுக்குச் சமமாக பெண்கள் முன்னேற வேண்டும்; பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும்” என்று முழங்கினார்.

பின்னர், ஹர்டாக் கமிட்டியின் உறுப்பினராக 1928’இல் இலண்டன் சென்று, இந்தியப் பெண்களின் கல்வி நிலைக்காக வாதாடினார். 1930’இல் உப்புசத்தியாக்கிரகத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தன் மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் முத்துலட்சுமி.

1933’இல் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் பெண்கள் கவுன்சில் மேடையில் இந்தியாவின் குரலை உலகமறியச்செய்தார். ‘ஸ்திரீ தர்மம்’ என்ற பெண்கள் மாத இதழின் ஆசிரியராக இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை, பால்ய விவாகத் தடை சட்டம், அநாதைக் குழந்தைகள் வாழ்வு மலர அவ்வை இல்லம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கம் என இவரின் சமூகப்பணிகள் அளப்பரியது. இவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் மத்திய அரசு ‘பத்மபூஷண்’ விருதை 1956’இல் இவர் வாழும்போதே வழங்கி கௌரவித்தது. தனிப்பெரும் சாதனைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த முத்துலட்சுமி, தம் 82ஆம் வயதில் 22.7.1968’இல் காலமானார்.

4. இரத்த வங்கி இல்லாமல் 63 மாவட்டங்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் இரத்த வங்கி வசதி இல்லாமல் 63 மாவட்டங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் 3,500 இரத்த வங்கிகள் முறையான உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. 63 மாவட்டங்களில் இரத்த வங்கி வசதி இல்லாமல் உள்ளது. எனினும், அனைத்து மாவட்டங்களிலும் இரத்த வங்கி அமைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், இதற்கான திட்டங்களையும் அரசு வகுத்து வருகிறது.

நகரப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலும் கிராமப் பகுதிகளில் மிகக் குறைவாகவும் இரத்த வங்கிகள் அமைவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு இரத்த வங்கிக்காவது உரிமம் வழங்கும் வகையில் தேசிய இரத்தக் கொள்கையில் விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிக அளவில் இரத்தம் சேகரிக்கும் இரத்த வங்கிகளிலிருந்து குறைந்த அளவே இரத்தம் கிடைக்கும் இரத்த வங்கிகள் இரத்தம் பெற வழிவகை செய்வதற்கான இரத்த மையங்களை அமைக்கவும் தேசியக் கொள்கை பரிந்துரைக்கிறது. நிர்வாகக் காரணங்களுக்காக மாநில அரசுகள் புதிய மாவட்டங்களை உருவாக்குகின்றன. எனினும், புதிய மாவட்டங்களுக்கான இரத்த தேவையை அருகிலுள்ள மாவட்டங்களின் இரத்த வங்கிகள் பூர்த்தி செய்து வருகின்றன என்று தனது பதிலில் அமைச்சா மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டுள்ளார்.

1. Which space agency is building a telescope named ‘SuperBIT’?

A) ISRO

B) NASA

C) ESA

D) Roscosmos

  • NASA and the Canadian space agency are building a telescope named the Superpressure Balloon–borne Imaging Telescope or SuperBIT. It is said to be the successor to the Hubble telescope.
  • As per recent media reports, a stadium–sized helium balloon is going to be used to lift up the telescope, which is to be sent to the upper levels of the earth’s atmosphere. It has been designed by the University of Toronto, Princeton University and Durham University in England together, in conjunction with NASA and the Canadian Space Agency.

2. Chrysilla volupae, a rare organism spotted in Kerala, belongs to which category of species?

A) Spider

B) Turtle

C) Snake

D) Frog

  • A pair of rare Chrysilla volupe spiders was recently spotted at Puttenahalli lake in Kerala. The Chrysilla volupe was believed to be extinct for 150 years, until it was discovered at the Wayanad Wildlife Sanctuary in 2018.
  • The spider belongs to the family of jumping spiders (Salticidae). Male spiders are 5.44 mm long including stretched legs and 1.76 mm wide. Females measure 2.61 mm long and 0.88 mm wide.

3. “Faster, Higher, Stronger – Together” is the updated motto of which of the following events?

A) BRICS Summit

B) G20 Summit

C) Olympics 2021

D) Monsoon session of Indian Parliament

  • On 20th July, 2021, “Faster, Higher, Stronger,” the Olympic motto was updated to “Faster, Higher, Stronger – Together”. This updating was done to show solidarity around the globe at the time of the Covid–19 pandemic. At its session ahead of the Tokyo Olympics, the International Olympic Committee has approved the change.
  • Since 1894, the Olympic motto has been “Citius, Altius, Fortius” in Latin or “Faster, Higher, Stronger,” when it was adopted at the suggestion of Pierre de Coubertin, founder of the International Olympic Committee. “Citius, Altius, Fortius, Communiter” is the latin version of the new motto.

4. Which institution has successfully flight tested indigenously developed Man–Portable Anti–Tank Guided Missile (MPATGM)?

A) BEL

B) DRDO

C) ISRO

D) HAL

  • The Defence Research & Development Organisation (DRDO) has successfully flight tested indigenously developed low weight, fire and forget Man–Portable Anti–Tank Guided Missile (MPATGM). The DRDO also successfully flight tested the New Generation Akash Missile (Akash–NG), a surface to air missile, from Integrated Test Range (ITR) off the coast of Odisha.

5. Liverpool, which was removed from UNESCO World Heritage sites, is located in which country?

A) USA

B) UK

C) Denmark

D) Russia

  • UNESCO has removed the Liverpool city of the United Kingdom from its World Heritage status. This decision was taken after the UN Committee found some developments threatening the value of the city’s waterfront.
  • UNESCO had announced that the developments, including the proposed Everton FC stadium, had resulted in serious deterioration of the historic site. Liverpool is only the third site to lose its World Heritage status since the list began in 1978, the others being Oman’s Arabian Oryx Sanctuary in 2007 and the Dresden Elbe Valley in Germany in 2009.

6. Which country has launched a high–speed maglev train, which can attain a top speed of 600 kmph?

A) China

B) Japan

C) USA

D) India

  • China has launched a high–speed train that works on magnetic levitation (maglev), which is designed to achieve a top speed of 600 kmph. This is stated to be the world’s fastest ground vehicle.
  • This project was launched by China in the year 2016 and the prototype was made ready in the year 2019. The model was tested in 2020 and now it is made operational.

7. Bhartiya Prakritik Krishi Padhati (BPKP) is a sub–scheme of which programme?

A) Paramparagat Krishi Vikas Yojana

B) PM Fazal Bima Yojana

C) PM Matru Vandana Yojana

D) PM KISAN

  • Union Government is implementing Bhartiya Prakritik Krishi Padhati (BPKP) as a sub scheme of Paramparagat Krishi Vikas Yojana (PKVY) since 2020–21. It aims to promote traditional indigenous practices.
  • The scheme focusses on exclusion of all synthetic chemical inputs and promotes on–farm biomass recycling. Under BPKP, financial assistance of Rs 12200 per hectare for 3 years is provided for cluster formation.

8. How many ordnance factories are operational across India?

A) 11

B) 41

C) 91

D) 181

  • Essential Defence Services Bill was introduced in the Lok Sabha recently. The Bill empowers the government to declare services mentioned in it as essential defence services.
  • The Essential Defence Services Bill is aimed at preventing the staff of the government–owned ordnance factories from going on a strike. Around 70,000 people are working at 41 ordnance factories located around the country.

9. Taipei is the capital of which country?

A) Taiwan

B) Zimbabwe

C) Saudi Arabia

D) Thailand

  • Taipei is the capital city of Taiwan and has New Taiwan dollar as its official currency. The Government of Taiwan has proposed to establish its first office in Lithuania, a European Nation, using its own name “Taiwan”. All the other diplomatic outposts are operational under the name “Taipei”. This move is set to have angered China and has been welcomed by the USA.

10. Which Indian has been appointed as the member of UN tax committee?

A) Urjit Patel

B) Rasmi Ranjan Das

C) Raghuram Rajan

D) Atanu Chakraborty

  • Rasmi Ranjan Das, a Joint Secretary in the Ministry of Finance, has been appointed as member of the UN tax committee for the 2021 to 2025 term.
  • A group of 25 tax experts from around the world are appointed as members of the UN tax committee, formally known as the UN Committee of Experts on International Cooperation in Tax Matters. It aims to guide the efforts of countries to adopt stronger tax policies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!