TnpscTnpsc Current Affairs

30th & 31th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

30th & 31th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th & 31th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்ந்த எந்த வகை மக்களைப் பாதுகாப்பதற்காக ஐநா ஆதரவு முகமைகள் முதன்முதலில் உலகளாவிய கொள்கை கட்டமைப்பை வெளியிட்டன?

அ. முதியவர்கள்

ஆ. குழந்தைகள் 

இ. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஊனமுற்றவர்கள்

ஈ. LGBTQ நபர்கள்

  • புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு (IOM), ஐநா சிறார்கள் நிதியம் (UNICEF), ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் மற்றும் ஐநா பல்கலைக்கழகம் ஆகியவை காலநிலை மாற்றத்தால் புலம்பெயர்ந்த குழந்தைகளைப் பாதுகாக்க முதல் உலகளாவிய கொள்கை கட்டமைப்பை வெளியிட்டன. “காலநிலை மாற்றத்தின் சூழலில் புலம்பெயரும் சிறார்களுக் -கான வழிகாட்டுதல் கோட்பாடுகள்” என்பது உள்நாட்டளவில் மற்றும் எல்லைதாண்டிய புலம்பெயர்வுகளுக்கு ஆளான சிறார்களின் சிக்கல்களுக்கு தீர்வுகாண்வதற்கான ஒன்பது கொள்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

2. ஆண்டுதோறும், ‘சர்வதேச புலிகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.27

ஆ. ஜூலை.29 

இ. ஜூலை.31

ஈ. ஆகஸ்ட்.1

  • சர்வதேச புலிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். கடந்த நூற்றாண்டில் 97 சதவீத புலிகள் காணாமல் போனது கண்டறியப்பட்டதை அடுத்து, கடந்த 2010இல் சர்வதேச புலிகள் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது. WWF-படி, புலிகளின் தற்போதைய எண்ணிக்கை 3,900 ஆகும். உலகப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 70% இந்தியாவில்தான் உள்ளது.

3. 2022 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் கொடியேந்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. மேரி கோம்

ஆ. P V சிந்து 

இ. நீரஜ் சோப்ரா

ஈ. மீராபாய் சானு

  • இந்திய ஒலிம்பிக் சங்கமானது (IOA) பர்மிங்காமில் நடைபெறவுள்ள 2022 – காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழாவில் இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை P V சிந்துவை இந்திய அணியின் கொடியேந்தியாக அறிவித்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 2022 பதிப்பு, விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் அதிக பெண் விளையாட்டு வீரர்களைக் கொண்டதாக உள்ளது. 20 விளையாட்டுகளில் 205 பங்கேற்பாளர்கள் அவ்விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளனர். முன்னணி ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக இப் போட்டியில் பங்கேற்கவில்லை.

4. உள்ளடக்கப்படாத அனைத்து கிராமங்களிலும் 4G மொபைல் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் எது?

அ. பார்தி ஏர்டெல்

ஆ. BSNL 

இ. ஜியோ

ஈ. வி!

  • 4G மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் `26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஊரகப்பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4G மொபைல் சேவை அளிக்கமுடியும். மேலும் 2G, 3G மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4G மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளது.

5. சிறு ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட ஏற்றுமதிக் கடன் அபாயக் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. LIC

ஆ. ECGC 

இ. PFRDA

ஈ. IRDAI

  • சிறு ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக 90 சதவீதம் வரை மேம்படுத்தப்பட்ட ஏற்றுமதிக் கடன் அபாய காப்பீட்டுத் தொகையை வழங்கும் புதிய திட்டமொன்றை இந்திய ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC) அறிமுகம் செய்துள்ளது. Export Credit Insurance for Banks Whole Turnover Packaging Credit and Post Shipment (ECIB- WTPC & PS) காப்பீட்டின்கீழ் இக்காப்பீடு வழங்கப்படுகிறது. வங்கிகளில் ஏற்றுமதிக் கடனைப் பெறும் சிறிய அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும்.

6. ‘உலகளாவிய பாலின இடைவெளி’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. ஐநா பெண்கள் அமைப்பு

ஆ. உலக பொருளாதார மன்றம் 

இ. பன்னாட்டு செலவாணி நிதியம்

ஈ. உலக வங்கி

  • 2022ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி குறித்த குறியீட்டை உலக பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் வெளியிட்டது. ஐஸ்லாந்து (90.8%) உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 146 நாடுகளில் 135ஆம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, 156 நாடுகளில் இந்தியா 140ஆம் இடத்தில் இருந்தது. அறிக்கையின்படி, உலகளாவிய பாலின இடைவெளியை முழுவதுமாக ஒழிக்க இன்னும் 132 ஆண்டுகள் ஆகும்.

7. ‘சர்வதேச நெல்லாராய்ச்சி நிறுவனத்தின்’ தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. ஆடுதுறை, தமிழ்நாடு, இந்தியா

ஆ. மணிலா, பிலிப்பைன்ஸ்

இ. லாஸ் பானோஸ், பிலிப்பைன்ஸ் 

ஈ. ரோம், இத்தாலி

  • சர்வதேச நெல்லாராய்ச்சி நிறுவனம் (IRRI) என்பது பிலிப்பைன்ஸில் உள்ள லாஸ் பானோஸ், லகுனாவில் அதன் தலைமையகத்தைக் கொண்ட ஒரு சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாகும். இது, 1960-இல் நிறுவப்பட்டது. இந்தியாவின் உழவு & உழவர் நலத்துறையானது (DA&FW) IRRI தெற்காசிய பிராந்திய மையத்தின் (ISARC) கட்டம்-2 நடவடிக்கைகளுக்காக சர்வதேச நெல்லாராய்ச்சி நிறுவனத்துடனான (IRRI) உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மெஸ் ஐநாக் உள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. பாகிஸ்தான்

இ. சீனா

ஈ. ஆப்கானிஸ்தான் 

  • பண்டைய கால பௌத்த நகரமான மெஸ் ஐனாக், தாமிரப் பிரிப்பு மற்றும் அதுசார் வணிகம் சார்ந்த ஒரு பரந்த நகரம் ஆகும். இது ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு அருகில் உள்ள சிகரங்களின் அருகே உள்ளது. இது 1,000 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. 2007ஆம் ஆண்டில், சீன சுரங்க நிறுவனமான மெட்டலர்ஜிகல் குரூப் கார்ப்பரேஷன் 30 ஆண்டுகளுக்கு தாது சுரங்கப்பணியை மேற்கொள்வதற்காக மூன்று பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தத் திட்டம் மீண்டும் தலிபான்களுக்கும் சீனாவுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.

9. செர்பியாவில் நடந்த 2022 – பாராசின் ஓபன் ‘A’ செஸ் போட்டியில் வென்ற இந்திய வீரர் யார்?

அ. குகேஷ்

ஆ. பிரக்ஞானந்தா 

இ. விஸ்வநாதன் ஆனந்த்

ஈ. சௌமியா சுவாமிநாதன்

  • இளம் இந்திய கிராண்ட்மாஸ்டரான R பிரக்ஞானந்தா, செர்பியாவில் நடந்த 2022 – பாராசின் ஓபன் ‘A’ சதுரங்கப் போட்டியில் வென்றார். 16 வயதான அவர் ஆட்டமிழக்காமல் ஒன்பது சுற்றுகளில் இருந்து 8 புள்ளிகளைப் பெற்றார். தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வலுவான இந்திய ‘B’ அணியில் அவர் இடம்பெறுவார்.

10. யூரோமணியால், ‘உலகின் மிகச்சிறந்த SME வங்கி’ என அறிவிக்கப்பட்ட வங்கி எது?

அ. RBS வங்கி

ஆ. DBS வங்கி 

இ. பாரத வங்கி

ஈ. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி

  • DBS வங்கி, ‘உலகின் மிகச்சிறந்த SME வங்கி’ என யூரோமணியால் இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது. அவ்வங்கி மேலும் மூன்று விருதுகளை வென்றுள்ளது. உலகின் மிகச்சிறந்த, ‘ஆண்டின் நிதியியல் கண்டுபிடிப்பு’, ‘செல்வ மேலாண்மைக்கான ஆசியாவின் சிறந்த வங்கி’ மற்றும் ‘ஹாங்காங்கின் சிறந்த வங்கி’ ஆகியவை அடங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. அல் நஜா-IV என்ற இந்தியா, ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கும் ஓமான் நாட்டு வீரர்கள் இந்தியா வருகை

இந்திய ராணுவம் மற்றும் ஓமான் ராணுவம் இடையேயான அல் நஜா-IV என்ற இந்தியா ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியின் நான்காவது பதிப்பு ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை இராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஓமான் ராணுவத்தின் பாராசூட் படையைச் சேர்ந்த 60 வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். 18 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையைச் சேர்ந்த வீரர்கள் குழு இந்திய இராணுவத்தின் சார்பாக இதில் கலந்து கொள்ளும்.

தீவிரவாத எதிர்தாக்குதல் நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளுடன் உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகளிலும் கூட்டுப் பயிற்சி கவனம் செலுத்தும். இந்தியா மற்றும் ஓமான் நாட்டு ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த நிலைக்கு மேம்படுத்துவதையும், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது.

2. காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: சாதித்த மீராபாய் சானு

காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். முன்னதாக ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெண்கலம் வென்றார். இந்திய வீரர் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி 3ஆம் இடம்பிடித்தார்.

55 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பிரதமர் மோடியின் கவிதை புத்தக ஆங்கில பதிப்பு ஆகஸ்டில் வெளியீடு

பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘லெட்டர்ஸ் டு செல்ஃப்’ என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு ஆகஸ்டில் வெளியாகிறது.

பிரதமர் மோடி இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளை குஜராத்தி மொழியில் பல ஆண்டுகால அளவில் எழுதி வந்தார். அவை தொகுக்கப்பட்டு ‘ஆன்க் ஆ தன்யாச்சே’ என்ற பெயரில் கடந்த 2007-இல் வெளியானது. இதனை திரைப்பட பத்திரிகையாளரும் வரலாற்று ஆய்வாளருமான பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கிலப்பதிப்பு புத்தகத்தை வெளியிடுகிறது. கவிதைகளை ஆங்கிலத்தில் பாவனா சோமயா என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கவிதை மட்டுமன்றி தேர்வெழுதும் மாணவர்களின் மனக்கலக்கத்தைப் போக்க, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகத்தையும் பிரதமர் மோடி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு செவாலியே விருது

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் பதிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான கண்ணன் சுந்தரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா-பிரான்ஸ் இடையிலான பதிப்புத்துறை ஒத்துழைப்புக்கான பங்களிப்புக்காக செவாலியே விருது கண்ணன் சுந்தரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் இமானுவல் மேக்ரான் ஒப்புதல் அளித்துள்ளார். தில்லியில் உள்ள பிரான்ஸ் தூதர் இல்லத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீராம், மதன கல்யாணி உள்ளிட்டோர் ஏற்கெனவே செவாலியே விருது பெற்றுள்ளனர்.

1. UN–backed agencies issued first–ever global policy framework to protect which category of people displaced due to climate change?

A. Elderly people

B. Children 

C. Physically and mentally challenged

D. LGBTQ people

  • International Organisation for Migration (IOM), the UN Children’s Fund (UNICEF), Georgetown University and the UN University issued first–ever global policy framework to protect children displaced due to climate change. ‘The Guiding Principles for Children on the Move in the Context of Climate Change’ comprises a set of nine principles to address the vulnerabilities of children who were forced for internal as well cross–border migrations.

2. When is the ‘International Tiger Day’ observed every year?

A. July.27

B. July.29 

C. July.31

D. August.1

  • ‘International Tiger Day’ is observed every year across the world on July 29. The objective is to raise awareness among individuals, organisations, and governments about the importance of the conservation of tigers. International Tiger Day was introduced in 2010 after it was discovered that 97 percent of tigers disappeared in the past century. According to the WWF, the current population of tigers is 3,900. India is home to around 70% of the world’s tiger population.

3. Who has been selected as the Team India Flagbearer at the 2022 Commonwealth Games?

A. Mary Kom

B. P V Sindhu 

C. Neeraj Chopra

D. Mirabai Chanu

  • The Indian Olympic Association (IOA) announced two–time Olympic medal winning player PV Sindhu as the Team India Flagbearer at the 2022 Commonwealth Games opening ceremony in Birmingham. The 2022 edition of the Commonwealth Games also has the largest contingent of female athletes in the history of the Games. As many as 205 participants are set to take part in the games in 20 sports. Top Javelin thrower Neeraj Chopra had to withdraw due to an injury.

4. Which telecom provider executes the recent project which aims to provide 4G mobile services in all uncovered villages?

A. Bharti Airtel

B. BSNL 

C. Jio

D. V!

  • The Union Cabinet approved a project for providing 4G mobile services in all uncovered (24,680) villages in remote and difficult areas of the country. The project will be executed by BSNL using Atmanirbhar Bharat’s 4G technology stack and will be funded through Universal Service Obligation Fund. The total project cost is Rs 26,316 crore.

5. Which institution introduced a new scheme to provide enhanced export credit risk insurance cover to support small exporters?

A. LIC

B. ECGC 

C. PFRDA

D. IRDAI

  • Export Credit Guarantee Corporation of India (ECGC) has introduced a new scheme to provide enhanced export credit risk insurance cover up to 90% to support small exporters. This cover is provided under the Export Credit Insurance for Banks Whole Turnover Packaging Credit and Post Shipment (ECIB– WTPC & PS).  The scheme would benefit small–scale exporters availing of export credit with banks.

6. Which institution releases the ‘Global Gender Gap Report’?

A. UN Women

B. World Economic Forum 

C. International Monetary Fund

D. World Bank

  • The Global Gender Gap Index for 2022 was recently released by the World Economic Forum (WEF). Iceland (90.8%) led the global ranking in the first place while India is ranked at 135 out of 146 countries. Last year, India was ranked 140 out of 156 countries. As per the report, it will take another 132 years to close the global gender gap.

7. Which is the headquarters of ‘International Rice Research Institute’ (IRRI)?

A. Aduthurai, Tamil Nadu, India

B. Manila, Philippines

C. Los Baños, Philippines 

D. Rome, Italy

  • The International Rice Research Institute is an international agricultural research and training organization with its headquarters in Los Baños, Laguna in the Philippines. It was founded in 1960. India’s Department of Agriculture & Farmer Welfare (DA&FW) has signed a Memorandum of Agreement (MoA) with the International Rice Research Institute (IRRI) for Phase –2 activities of IRRI South Asia Regional Centre (ISARC).

8. Mes Aynak, which was seen in the news, is located in which country?

A. Sri Lanka

B. Pakistan

C. China

D. Afghanistan 

  • The ancient Buddhist city, Mes Aynak was a vast city organised around the extraction and trade of copper. It was carved out of peaks near Kabul in Afghanistan. It was believed to be between 1,000 and 2,000 years old. In 2007, the Chinese mining giant Metallurgical Group Corporation (MCC) signed a $3 billion contract to mine ore over 30 years. The project is once again a priority for Talibans and China.

9. Which Indian player won the Paracin Open ‘A’ chess tournament 2022 in Serbia?

A. Gukesh

B. Praggnanandhaa 

C. Viswanathan Anand

D. Soumya Swaminathan

  • Young Indian Grandmaster R Praggnanandhaa has won the Paracin Open ‘A’ chess tournament 2022 in Serbia. The 16–year–old remained unbeaten and scored 8 points from nine rounds. He will be part of a strong India ‘B’ team in the 44th Chess Olympiad to be held in Chennai, Tamil Nadu.

10. Which bank was named as ‘World’s Best SME Bank’ by Euromoney?

A. RBS Bank

B. DBS Bank 

C. State Bank of India

D. Standard Chartered Bank

  • DBS Bank was named as the ‘World’s Best SME Bank’ by Euromoney for second time. The bank also clinched three more awards. They include World’s Best ‘Financial Innovation of the year’, ‘Asia’s Best Bank for Wealth Management’ and ‘Best Bank in Hong Kong’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!