Tnpsc

30th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. குஜராத் மாநிலத்தின் GIFT நகரத்தில், பின்வரும் எவ்வகையான நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளன?

அ) கொடுப்பனவு வங்கிகள்

ஆ) வங்கி சாராத நிதி நிறுவனங்கள்

இ) அகில இந்திய நிதி நிறுவனங்கள்

ஈ) நியோ வங்கிகள்

  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் குஜராத்தின் GIFT நகரத்தில், பன்னாட்டு நிதியியல் சேவை மையத்தால் செயல்பட அனுமதியளிக்கப்பதடுள்ளன. கடன்கள், முதலீட்டு வங்கி மற்றும் மூன்றாந்தரப்பு தயாரிப்பு விற்பனை உள்ளிட்ட முழு அளவிலான நிதியியல் சேவைகளை வழங்க அவை அனுமதிக்கப்படுகின்றன.

2.“LeadIT”– தொழிற்துறை மாற்றத்துகான தலைமைத்துவ குழுவில் அண்மையில் இணைந்த நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) ரஷியா

ஈ) ஜப்பான்

  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் “LeadIT” – தொழிற்துறை மாற்றத்திற்கான தலைமைக் குழுவில் சேர்ந்துள்ளது. அது, இந்தியா மற்றும் சுவீடனின் ஒரு காலநிலை முன்னெடுப்பாகும். அமெரிக்கா ‘LeadIT’இல் சேருவதால், பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்திசெய்யவும், போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், மூன்று நாடுகளிலும் புதிய நிலையான வேலைகளை உருவாக்கவும் இந்தக் கூட்டணி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. APEDA’இன்படி, 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில், எத்தனை சதவீதத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது?

அ) 5.51%

ஆ) 10.51%

இ) 26.51%

ஈ) 50.51%

  • இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51% அதிகரித்துள்ளது என வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.
  • COVID பேரிடர் தொடர்பான பல்வேறு சவால்களுக்கிடையிலும் 2020-21ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத கால கட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51% அதிகரித்து `43,798 கோடியை எட்டியுள்ளது.

4. உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த காலநிலைமாற்ற முன்கணிப்பு மீத்திறன் கணினி உருவாக்கப்படவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) UK

இ) சீனா

ஈ) அமெரிக்கா

  • மைக்ரோசாப்ட் மற்றும் மெட் ஆபிஸ் (UK) ஆகியவை வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தை முன்கணிப்பு செய்வதற்காக உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த மீத்திறன் கணினியை உருவாக்க கைகோர்த்துள்ளன.
  • 2022ஆம் ஆண்டில் செயல்படக்கூடிய இந்த மீத்திறன் கணினி, கடுமை -யான வானிலைகுறித்த துல்லியமான முன்னெச்சரிக்கைகளை வழங் -கும். அது, நாட்டை கடுமையான புயல்கள், வெள்ளம் மற்றும் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மகாராஷ்டிரா

ஈ) பஞ்சாப்

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி க பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.
  • மருத்துவத்துக்கு பயன்படுத்தக்கூடிய உயிர்வளியை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 4 மாத காலத்திற்கு இவ்வாலை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைக -ளைத் திறக்கவோ (அ) இயக்கவோ அந்நிறுவனம் அனுமதிக்கப்படாது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆலை, கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசால் மூடப்பட்டது.

6. டென்னிஸில், 12ஆவது பார்சிலோனா ஓப்பன் பட்டத்தை வென்ற வீரர் யார்?

அ) ரபேல் நடால்

ஆ) ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்

இ) ஜானிக் சின்னர்

ஈ) ஆண்ட்ரி ரூப்லெவ்

  • 12ஆவது பார்சிலோனா ஓப்பன் போட்டியில், ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் பட்டத்தை வென்றார். இது அவரது 87ஆவது பட்டமாகும். முதல் 10 சர்வதேச வீரர்களுள் ஒருவராக உள்ள கிரேக்க வீரர் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தி அவர் இப்பட்டத்தை வென்றார்.
  • நடாலுக்கும் சிட்சிபாசுக்கும் இடையில் நடந்த இந்த இறுதிப்போட்டி 2021 ஆம் ஆண்டின் மிக நீண்ட ATP போட்டியாக கருதப்படுகிறது.

7. ‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான பலதரபட்ட பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) ஆஸ்திரேலியா

ஆ) பிரான்ஸ்

இ) இந்தோனேசியா

ஈ) இத்தாலி

  • ‘வருணா’ என்பது இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான பலதரபட்ட கடற்படைப் பயிற்சியாகும். இந்த இருதரப்பு பயிற்சியின் 19ஆம் பதிப்பு ‘வருணா-2021’ 2021 ஏப்.27 அன்று நிறைவடைந்தது.
  • அரபிக்கடலில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில் மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தீவிர வான்வழி பயிற்சிகள், தரை மற்றும் வான்வழி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கும்.

8. CSIR நடத்திய சீரோ ஆய்வின்படி, மார்ச் மாதத்தில் மறுபடியும் COVID-19 பரவியதற்கு, கீழ்காணும் எதன் இல்லாமை, காரணமாக அமைந்தது?

அ) ஆன்டிஜென்கள்

ஆ) ஆன்டிபாடிகள்

இ) லிம்போசைட்டுகள்

ஈ) வெள்ளை இரத்த அணுக்கள்

  • அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) நடத்திய செரோ ஆய்வின்படி, கடந்த 2020 செப்டம்பரில் உச்சத்தை அடைந்த COVID-19 மார்ச்சில் மீண்டும் பரவியதற்கு, சீரோ-பாசிட்டிவ் மக்களில் தேவையான ஆன்டிபாடிகள் இல்லாதது காரணமாக இருக்கலாம்.
  • 17 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 10,427 பேரிடம் CSIR ஒரு சீரோ-ஆய்வை நடத்தியது. ஆய்வு நடத்தப்பட்ட மக்க -ளிடையேயான சராசரி சீரோ-நேர்மறை 10.14 சதவீதமாக இருந்தது.

9. சுற்றுப்புற வளியிலுள்ள உயிர்வளியை செறிவாக்கும் மருத்துவ சாதனத்தின் பெயர் என்ன?

அ) தெளிப்பான்

ஆ) உயிர்வளி செறிவாக்கி

இ) உயிர்வளி செயற்கை சுவாசக்கருவி

ஈ) உயிர்வளி ஆக்கி

  • உயிர்வளி செறிவாக்கி என்பது ஒரு மருத்துவ சாதனமாகும்; அது, சுற்றுப் புற வளியில் உள்ள உயிர்வளியை செறிவாக்குகிறது. COVID-19 தொற்றுநோய்களின் போது, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இது மிகவும் தேவைப்படுகிறது. இந்த உயிர்வளி செறிவாக்கி, 78% நைட்ரஜன் மற்றும் 21% உயிர்வளியைக்கொண்ட வளிமண்டத்தில் உள்ள உயிர்வளியை ஒரு சல்லடைமூலம் வடிகட்டி, நைட்ரஜனை மீண்டும் வளியில் விடுவித்து, மீதமுள்ள உயிர்வளியை செறிவாக்குகிறது.

10. நடப்பாண்டின் (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப்பொருள் என்ன?

அ) Vaccines bring us closer

ஆ) Vaccine Works

இ) Educate and Immunise

ஈ) Vaccination Vacation

  • ஆண்டுதோறும் ஏப்ரல் கடைசி வாரத்தில், “உலக நோய்த்தடுப்பு வாரம்” அனுசரிக்கப்படுகிறது. நோய்களுக்கு எதிராக எல்லா வயதினரையும் பாதுகாக்க, தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Vaccines bring us closer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கான கருப் பொருளாகும். நடப்பாண்டு (2021) உலக நோய்த்தடுப்பு வாரத்தின் தொடக்கத்தில், நலவாழ்வு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூகிள் நிறுவனம் ஒரு டூடுலையும் உருவாக்கியிருந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1.லேசான மற்றும் மிதமான COVID தொற்று: நோயாளிகளுக்கான ஆயுஷ்-64 மருந்து பலனளிக்கும்

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்து பலனளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழு, பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ‘ஆயுஷ்-64’ மருந்தை தயாரித்துள்ளது. அறிகுறிகள் இல்லாத, லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலனளிப்பதாக நாட்டின் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம் – அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம் ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவுசெய்தன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கரோனா மேலாண்மைக்கான தேசிய பணிக்குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.

2. இந்தியாவுக்கு 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தது ரஷியா

COVID தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித்தவித்துவரும் இந்தியா -வுக்கு உதவுவதற்காக 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்களை ரஷியா அனுப்பிவைத்துள்ளது. அந்த நிவாரணப் பொருள்கள் இந்தியாவை வந்தடைந்தன.

வங்கதேசம் உதவிக்கரம்: கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு அவசரகால மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதாக அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசம் அறிவித்துள்ளது.

சீனா ஆதரவு: இந்தியாவுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதேபோல், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர்க், சிங்கப்பூர், போர்ச்சுகல், சுவீடன், நியூசிலாந்து, குவைத், மோரீஷஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளன.

3. சொந்த விண்வெளி நிலையத்துகான கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா

விண்வெளியில் சொந்த ஆய்வு நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள சீனா, அதற்கான முக்கிய கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதுகுறித்து PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் விண்வெளி நிலையத் திட்டத்தின் ஒருபகுதியாக, அந்த நிலையத்தின் முக்கிய பகுதியாக அமையவிருக்கும் கலத்தை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ‘தியான்ஹே’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி ஆய்வுக் கலம், சீனாவின் ‘லாங் மார்ச்-5B Y2’ இரக ஏவுகலம்மூலம் ஹைனான் மாகாணத்திலுள்ள வென்சாங் ஏவுதளத்திலிருந்து விண்ணிலேவப்பட்டது.

ஏற்கனவே, சிறு அளவிலான, குறைந்த நேரமே செயல்படும் 2 விண்வெளி நிலையக்கலங்களை சீனா சோதனை முறையில் விண்ணில் ஏவியுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக மிகப்பெரிய அளவிலான ஆய்வு நிலையக்கலத்தை சீனா முதல்முறையாக விண்ணில் செலுத்தியுள்து. இவ்விண்வெளி நிலையக்கலம், 16.6 மீ நீளமும் 4.2 மீ அகலமும் கொண்டது. விண்வெளி நிலையத்துக்கு வரும் வீரர்கள் தங்கியிருப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இதில் உள்ளது.

இக்கலத்தைப் போலவே, ‘தியான்காங்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது எதிர்கால விண்வெளி நிலையத்துக்கான மேலும் 10 தொகுதிகளை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அவற்றைக்கொண்டு உருவா -க்கப்படும் சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் 10 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து 340 கிமீ முதல் 450 கிமீ வரையிலான தொலைவில் வலம் வந்து அந்த ஆய்வுக்கலம் செயல்படும் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டணியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையம் மட்டுமே விண்வெளியில் இயங்கி வருகிறது. எனினும், அந்த ஆய்வு நிலையத் திட்டத்தில் சீனா பங்கேற்க அமெரிக்கா அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க சீனா முடிவுசெய்தது. அதன் விளைவாகவே, ‘தியான்காங்’ விண்வெளி நிலைய திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையம் வரும் 2024ஆம் ஆண்டுடன் ஓய்வுபெறுகிறது. அதற்குள் சீனா விண்வெளி நிலையம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டால், விண்ணில் செயல்படவிருக்கும் ஒரே ஆய்வுநிலையமா -க அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

4. முதுகுளத்தூர் அருகே சங்ககால பொருள்கள் கண்டெடுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கருங்கலக்குறிச்சியில் 2,000 ஆண்டுகள் பழைமையான சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இங்கு கிடைத்த ஒரு முழு செங்கல்லின் நீளம் 29 செமீ அகலம் 15 செமீ உயரம் 7 செமீ ஆகும். இது பொ ஆ 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதேபோன்ற செங்கல் கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது. இரு கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான “உ, ஏ” போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் “உ” போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரைப்புக்கல் சிவப்புநிற கல்லிலும், குழவி கருங்கல்லிலும் செய்யப்பட்டுள் -ளது.

1. Which type of institutions have been allowed to start functioning in Gujarat’s GIFT City?

A) Payment Banks

B) Non–Banking Financial Company

C) All India Financial Institutions

D) Neo Banks

  • Non–bank finance companies both local and global, are allowed to start operations in Gujarat’s GIFT City, by the International Financial Services Centre. They will be allowed to offer the complete range of financial services including loans, investment banking & 3rd party product sales.

2. Which country has recently joined the Leadership Group for Industry Transition “LeadIT”?

A) USA

B) China

C) Russia

D) Japan

  • The United States of America (USA) has joined Leadership Group for Industry Transition “LeadIT” – which is a climate initiative by India and Sweden. With USA joining the LeadIT, it is expected that the partnership would help meet Paris Agreement goals, strengthen competitiveness and create new sustainable jobs in all the three countries.

3. By what % India’s export of processed food products has grown during April–February 2020–21, as per APEDA?

A) 5.51%

B) 10.51%

C) 26.51%

D) 50.51%

  • As per a statement by APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority), the export of processed food by India has increased by 26.51 per cent during April–February 2020–21. By value, the increase stood at Rs.43,798 crore. This increase has been achieved despite COVID 19 pandemic prevailing throughout the world.

4. The World’s most powerful climate–change forecasting super computer is to be built in which country?

A) India

B) UK

C) China

D) USA

  • Microsoft and Met Office (UK) have joined hands to build the world’s most powerful supercomputer to forecast weather and climate–change. The supercomputer, which is likely to be operational in 2022, will provide accurate warnings on severe weather and help protect from impact of extreme storms, floods and snow in the country.

5. Sterlite copper smelter plant, which was making news recently, is located in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Maharashtra

D) Punjab

  • After an all–party meet chaired by Chief Minister Edappadi K Palaniswami, the Tamil Nadu state government decided to reopen the Sterlite copper smelter plant at Thoothukudi. The plant was permitted to operate for a period of four months to produce medical oxygen.
  • The company will not be allowed to open or operate other plants used for copper production. This plant was shut down by the Government of Tamil Nadu in 2018 after protests from locals.

6. Which player has clinched the 12th Barcelona Open title in tennis?

A) Rafael Nadal

B) Stefanos Tsitsipas

C) Jannik Sinner

D) Andrey Rublev

  • In the 12th Barcelona Open tournament, Spanish professional tennis player Rafael Nadal clinched the title. This victory marks his 87th title. He defeated his opponent Stefanos Tsitsipas of Greece, who is also one among the top ten international players.
  • The final match played between Nadal and Tsitsipas is considered to be longest ATP match in the year 2021.

7. ‘Varuna’ is a multilateral Defence Exercise between India and …………?

A) Australia

B) France

C) Indonesia

D) Italy

  • VARUNA is a multilateral Naval Exercise between India and France. The 19th edition of the bilateral exercise ‘VARUNA–2021’ concluded on 27th April 2021. Conducted in the Arabian Sea, the exercise included advanced air defence and anti–submarine programmes, intense flying operations, surface and anti–air weapon firings and other maritime security operations.

8. As per the Sero survey conducted by the CSIR, the recurrence of coronavirus outbreak in March is due to the lack of ……….?

A) Antigens

B) Antibodies

C) Lymphocytes

D) White Blood Cells

  • As per the Sero survey conducted by the Council for Scientific and Industrial Research (CSIR), the recurrence of coronavirus outbreak in March could be due to lack of meaningful antibodies in seropositive people after a peak in September 2020. The CSIR conducted a sero–survey on 10,427 people from 17 states and two union territories. The average sero positivity was 10.14 per cent, among the sample people.

9. What is the name of the medical device which concentrates oxygen from ambient air?

A) Nebuliser

B) Oxygen Concentrator

C) Oxygen Ventilator

D) Oxygen Generator

  • An oxygen concentrator is a medical device which concentrates oxygen from ambient air. During the COVID–19 pandemic, it is highly needed for treating patients.
  • The oxygen concentrator takes in the atmospheric air, which has 78 % Nitrogen and 21 % oxygen, filters it through a sieve, releases the nitrogen back into the air, and works on the remaining oxygen.

10. What is the theme of the “World Immunization Week” 2021?

A) Vaccines bring us closer

B) Vaccine Works

C) Educate and Immunise

D) Vaccination Vacation

  • The “World Immunization Week” is observed every year in the last week of April. It aims to promote the use of vaccines to protect people of all ages against disease. This year, the theme of the week is ‘Vaccines bring us closer’. Google also created a Doodle to thank the health workers on the onset of the World Immunization Week 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!