Tnpsc

30th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘ஆனந்தா’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ) பாரத வங்கி

ஆ) பணியாளர் வருங்கால வைப்பு நிதியம்

இ) இந்திய அஞ்சல்துறை

ஈ) இந்திய ஆயுள்காப்பீட்டு கழகம் 🗹

  • ஆத்மநிர்பார் திட்டத்தின் ஒருபகுதியாக, LIC முகவர்கள் வாடிக்கையாள -ர்களை பல்வேறு காப்பீடுகளில் சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ‘ஆனந்தா’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Atma Nirbhar Agents New-business Digital Application என்பதின் சுருக்கந்தான் ‘ANANDA’.
  • இப்புதிய செயலிமூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதிசெய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன்மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.

2. சுஜலாம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) ஜல் சக்தி அமைச்சகம் 

இ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • விடுதலையின் அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 100 நாள் ‘சுஜலாம்’ பிரச்சாரத்தை ஆக.25 அன்று நடுவண் ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • கழிவுநீர் மேலாண்மையை கிராம அளவில் மேற்கொண்டு, திறந்த வெளி மலங்கழித்தலற்ற கிராமங்களை அதிகளவில் உருவாக்குவதை இப்பிரச்சாரம் நோக்கமாகக்கொண்டுள்ளது. 10 இலட்சம் குட்டைகளை அமைப்பது உள்பட, கிராமங்களில் கழிவு & கழிவுநீர் மேலாண்மைக்கு தேவையான உட்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவ -தோடு மட்டுமில்லாமல் நீர்நிலைகளின் நீடித்த மேலாண்மையையும் இந்தப் பிரச்சாரம் கருத்தில்கொள்ளும்.

3. EASE 3.0’இன்கீழ், அடிப்படை செயல்திறனில் இருந்து சிறந்த முன்னேற்றத்திற்கான விருதை வென்ற வங்கி எது?

அ) கனரா வங்கி

ஆ) பஞ்சாப் நேஷனல் வங்கி

இ) இந்தியன் வங்கி 

ஈ) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

  • தொழில்நுட்பம் சார்ந்த, எளிமையான மற்றும் கூட்டு வங்கியியலுக்கான 2021-22ஆம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல்திட்டம் – EASE 4.0 என்னும் நான்காம் பதிப்பை மத்திய நிதி & பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராம் வெளியிட்டார்.
  • 2020-21ஆம் ஆண்டுக்கான பொதுத்துறை வங்கிகள் சீர்திருத்த செயல் திட்டம் – EASE 3.0’இன் வருடாந்திர அறிக்கையையும் வெளியிட்ட அவர், EASE 3.0 வங்கிகள் சீர்திருத்த குறியீட்டில் சிறந்து விளங்கிய வங்கிகளை கௌரவிப்பதற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பாரத வங்கி, பரோடா வங்கி மற்றும் இந்திய யூனியன் வங்கி ஆகியவை EASE 3.0 வங்கிகள் சீர்திருத்த குறியீட்டில் சிறந்து விளங்கியதற்கான பரிசுகளைப் பெற்றன. இந்தியன் வங்கி, EASE 3.0’ இன்கீழ், அடிப்படை செயல்திறனிலிருந்து சிறந்த முன்னேற்றத்திற்கான விருதை வென்றது

4. குஷ்மேன் & வேக்பீல்டின் நடப்பாண்டுக்கான (2021) உலக உற்பத்தி அபாயக்குறியீட்டின்படி, உலகில் அதிகம் விரும்பப்படும் உற்பத்தித் தளங்களில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது 

இ) மூன்றாவது

ஈ) நான்காவது

  • உலகளவில், ‘மிகவும் விரும்பப்படும் உற்பத்தி மையங்கள்’ பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருப்பதுதான் என, ‘குஷ்மேன் & வேக்பீல்டு’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாமிடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

5. காசநோயாளிகளில் கடுமையான COVID-19 நிலைமைகளின் தாக்கத்தை ஆய்வு செய்ய, எந்த நிறுவனத்துடன், பயோடெக்னாலஜி துறை ஒத்துழைத்துள்ளது?

அ) BRICS 

ஆ) G20

இ) G7

ஈ) BIMSTEC

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை, BRICS நாடுகளுடன் ஒருங்கிணைந்து, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே தீவிர COVID-19 தொற்றின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்வதற்காக SARS–CoV2 NGS–BRICS கூட்டமைப்பை செயல்படுத்தி வருகிறது. சிறந்த நோய் மேலாண்மைக்காக COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத நுரையீரல் காசநோய் நோயாளிகளில் இணைநோய் குறித்த தகவலை இந்த ஒருங்கிணைந்த ஆய்வு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆலோசனைகளுக்காக நிரந்தர இருதரப்பு சேனலை உருவாக்குவதற்காக, இந்தியா, எந்நாட்டோடு ஒப்புக்கொண்டுள்ளது?

அ) ரஷ்யா 

ஆ) ஈரான்

இ) சீனா

ஈ) அமெரிக்கா

  • ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆலோசனைகளுக்கு நிரந்தர இருதரப்பு சேனலை உருவாக்க இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 1996-2001’க்கு இடையில், காபூலில் இஸ்லாமியக் குழு கடைசியாக ஆட்சியில் இருந்தபோது இந்தியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை தலிபான் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தன.

7. வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) பத்மஜா சுந்துரு

ஆ) SS மல்லிகார்ஜுன ராவ்

இ) T M பாசின் 

ஈ) ஹஸ்முக் ஆதியா

  • மத்திய விஜிலென்ஸ் கமிஷன்மூலம் வங்கி & நிதிமோசடிகளுக்கான ஆலோசனைக்குழுவின் தலைவராக TM பாசின் நியமிக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகாலத்திற்கு அவர் இப்பதவியிலிருப்பார். `50 கோடிக்கும் அதிகமான வங்கி மோசடிகளை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக இக்குழு உருவாப்பட்டது.

8. பயனர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்வதற்காக, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் கூட்டுசேர்ந்துள்ள நிறுவனம் எது?

அ) வாட்ஸ்ஆப் 

ஆ) டுவிட்டர்

இ) டெலிகிராம்

ஈ) கூகிள்

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் வாட்ஸ்ஆப் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்மூலம் வாட்ஸ்ஆப்பில், MyGov கொரோனா உதவி எண்ணுக்கு ‘Book Slot’ என அனுப்புவதன்மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துகொள்ளவியலும். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாதற்கான சான்றிதழையும் வாட்ஸ்ஆப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

9. எந்த மாநிலத்தின் திட்டமிடல் துறையுடன் இணைந்து, இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் ‘தடுப்பூசி இந்தியா’ திட்டத்தைத் தொடங்கினார்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) தெலங்கானா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா 

  • இந்தியக்குடியரசுத்துணைத்தலைவர், M வெங்கையா, ஆக.24 அன்று ‘தடுப்பூசி இந்தியா’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தை பெங்களூரில் ‘கிவ்விங் இந்தியா’ அறக்கட்டளை & நீடித்த இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தன. இது கர்நாடக மாநில அரசின் திட்டமிடல் துறையுடன் இணைந்து CSIR’இன் கீழ் தொடங்கப்பட்டது. இந்தியா தனது COVID-19 தடுப்பூசி திட்டத்தை 2021 ஜனவரி.16 அன்று தொடங்கியது.

10. உலக தண்ணீர் வாரமானது ஆகஸ்ட் மாதத்தில் எத்தேதியில் இருந்து எத்தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டது?

அ) 19-23 ஆகஸ்ட்

ஆ) 23-27 ஆகஸ்ட் 

இ) 20-26 ஆகஸ்ட்

ஈ) 27-31 ஆகஸ்ட்

  • உலக நீர் வாரம் என்பது ஸ்டாக்ஹோம் பன்னாட்டு நீர் நிறுவனத்தால் (SIWI) கடந்த 1991ஆம் ஆண்டு முதல் உலகளாவிய நீர் பிரச்சனைகள் மற்றும் பன்னாட்டு வளர்ச்சி தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படுகிற வருடாந்திர நிகழ்வாகும். உலக நீர் வாரம், 2021 ஆக.23-27 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் (2021) நிகழ்வு முற்றிலும் மெய்நிகரான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “Building Resilience Faster” என்பது 2021 உலக நீர் வாரத்திற்கான கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. டோக்கியோ பாராலிம்பிக்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. ஒலிம்பிக் போட்டிகளைத் தொடா்ந்து பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டோக்கியோ நகரில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 4,400-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனா். இந்தியா சாா்பில் தமிழகத்தின் தங்கவேலு மாரியப்பன் உள்பட 54 போ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனா்,.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகளிா் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பவினா பென் படேல் 0-3 என்ற கேம் கணக்கில் உலகின் நம்பா் ஒன் நிலை வீராங்கனை சீனாவின் யிங் ஸூவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கமாகவும், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் பதக்கமாகவும் இது அமைந்தது.

உயரம் தாண்டுதல்-நிஷாத் குமாா்:

ஆடவா் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் 21 வயதே ஆன இந்திய வீரா் நிஷாத் குமாா் 2.06 மீட்டா் குதித்து புதிய ஆசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினாா். ஹிமாசலபிரதேசம் ஆம்ப் நகரைச் சோ்ந்த நிஷாத் குமாா் தங்கள் விவசாய நிலத்தில் புற்களை வெட்டும் போது அந்த இயந்திரத்தில் வலது கையை இழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டு எறிதல்-வினோத் குமாா்:

41 வயதான பிஎஸ்எப் வீரரான வினோத்குமாா் வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் 19.91 தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா். வினோத்குமாரும் புதிய ஆசிய சாதனையை படைத்தாா். வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேல், நிஷாத்குமாா், வெண்கலம் வென்ற வினோத்குமாா் உள்ளிட்டோருக்கு தலைவா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் பாராட்டுகளை தெரிவித்துள்ளனா்.

2. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய வயது வரம்பு அதிகரிப்பு

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) இணைவதற்கான உச்ச வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை-வளா்ச்சி ஆணையம் (பிஎஃப்ஆா்டிஏ) செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தில் இணைவது, திட்டத்தின் பலன்களைப் பெறுவது உள்ளிட்டவை தொடா்பான மாற்றப்பட்ட விதிமுறைகளை பிஎஃப்ஆா்டிஏ வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வயது வரம்பு 18-ஆகவே நீடிக்கிறது. இந்தியா்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் ஆகியோா் 75 வயது வரை தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பிஎஃப்ஆா்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோரின் சேமிப்புத் தொகை எந்த வகையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதைப் பொருத்து முதலீட்டு சதவீதம் மாறுபடும். 65 வயதைக் கடந்தோா் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும்போது, ஏற்கெனவே தீா்மானிக்கப்பட்ட சொத்துகளில் (ஆட்டோ சாய்ஸ்) 15 சதவீதம் வரை மட்டுமே முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

சொத்துகள் மீதான முதலீடுகளை ஓய்வூதியதாரா்களே முடிவு செய்தால் (ஆக்டிவ் சாய்ஸ்), அதில் 50 சதவீதம் வரையிலான தொகையை முதலீடு செய்ய முடியும். 65 வயதைக் கடந்தவா்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தால், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குப் பிறகே திட்டத்தை விட்டு வெளியேற முடியும். திட்டத்தில் இருந்து வெளியேறும் ஓய்வூதியதாரா்கள், குறைந்தபட்சம் 40 சதவீதத் தொகையை எதிா்கால ஓய்வூதியத்துக்காக வைத்துக் கொண்டு மீதத்தொகையை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. முறிந்த எலும்பை விரைவாக இணைக்கும் ஆராய்ச்சி: கும்மிடிப்பூண்டி மாணவா் சாதனை

கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த உயிரியல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவா், முறிந்த எலும்புகளை 15 நாள்களுக்குள் ஒட்ட வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வெற்றி பெற்றுள்ளாா். கும்மிடிப்பூண்டியை சோ்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியின் மகன் வைத்தியநாதன் (21). இவா் தஞ்சை சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொழில்நுட்பப் படிப்பில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவா் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்த அறிக்கை, பலரின் கவனத்தை ஈா்த்து வருகிறது. எலும்பு முறிவு சிகிச்சையில், முறிந்த எலும்புகள் ஒன்றுகூட, ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க, முறிந்த எலும்புகள் விரைந்து கூடுவதற்கான ஆராய்ச்சியை வைத்தியநாதன் தோ்வு செய்தாா்.

இவரது ஆராய்ச்சியின் பலனாக, எலும்புகளை விரைந்துகூட வைக்கும் ‘கய்டோசன்’ என்ற பயோ பாலிமருடன், தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில்வா் நானோ துகள்கள் கலந்து தயாரித்த கலவையை, முறிந்த எலும்புகளுக்கு இடையே நிரப்ப வேண்டும். அப்படி செய்தால், முறிந்த எலும்புகள், 15 நாள்களுக்குள் ஒன்றுகூடும் என ஆராய்ச்சி அறிக்கையை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பல்கலைக்கழகத்தில் வைத்தியநாதன் சமா்ப்பித்தாா். அவரது ஆராய்ச்சியை, மத்திய அரசின் உயிரியல் தொழில்நுட்பத் துறை அங்கீகரித்தது. இதையடுத்து, 2021-ஆம் ஆண்டின் இளம் சாதனையாளா் விருதான இன்ஸ்டிட்டியூட் ஆப் ஸ்காலா்ஸ் விருதினை வழங்கியது.

அதைத் தொடா்ந்து பாக்ஸ் க்ளூஸ் மற்றும் ஜி நியூஸ் இணைந்து, 2021-ஆம் ஆண்டின் ‘இந்தியா பிரைம் குவாலிட்டி எஜுகேஷன்’ விருதினை வைத்தியநாதனுக்கு வழங்கியது. இந்த உயிரியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பால், அவருக்கு விருதுகளும் பாராட்டுகளும் தொடா்ந்து குவிந்து வருகின்றன.

1. Which organization has launched a mobile app called ANANDA?

A) State Bank of India

B) Employees’ Provident Fund Organisation

C) India Post

D) Life Insurance Corporation of India 

  • Life Insurance Corporation of India (LIC) launched a mobile app called “Ananda mobile app” for its agents and intermediaries in order to onboard the prospective customers. ANANDA stands for Atma Nirbhar Agents New Business Digital Application. ANANDA is the paperless solution for new business processes.
  • This digital application will help in onboarding process to get insurance policy by a paperless module with the help of agent or intermediary. The app comprises of all distinctive features of the digital app. App could be developed as a result of high–level usage of ANANDA module. It was built on paperless KYC process by using Aadhaar based e–authentication. It provides an easy access to the field force in reaching out the prospective customers by means of latest technology.

2. Which ministry has launched the SUJALAM campaign?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Jal Shakti 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Rural Development

  • Ministry of Jal Shakti started the SUJALAM campaign on August 25, 2021. SUJALAM Campaign is a 100 days campaign launched as a part of the Azadi Ka Amrit Mahotsav celebrations. This campaign seeks to create more Open Defecation Free (ODF) Plus villages by undertaking waste water management across villages in India.
  • During the campaign, ten lakh Soak–pits will be created. Efforts under the campaign would be directed towards achieving the Open Defecation Free (ODF) plus status for villages in an accelerated manner.

3. Under EASE 3.0, which bank has won the award for the best improvement from the baseline performance?

A) Canara Bank

B) Punjab National Bank

C) Indian Bank 

D) Union Bank of India

  • Union Minister of Finance and Corporate Affairs Nirmala Sitharaman today unveiled the fourth edition of the Public Sector Bank (PSB) Reforms Agenda ‘EASE 4.0’ for 2021–22 – tech–enabled, simplified, and collaborative banking.
  • She unveiled the annual report for the PSB Reforms Agenda EASE 3.0 for 2020–21 and participated in the awards ceremony to felicitate best performing banks on EASE 3.0 Banking Reforms Index.
  • State Bank of India, Bank of Baroda and Union Bank of India have won the awards for best performing banks for PSB Reforms EASE 3.0 based on the EASE index. Indian Bank won the award for the best improvement from the baseline performance. SBI, BoB, Union Bank of India, Punjab National Bank and Canara Bank won the top awards in different themes of the PSB Reforms Agenda EASE 3.0.

4. According to Cushman & Wakefield’s 2021 World Manufacturing Danger Index, what is India’s rank in the most sought–after manufacturing destination across the world?

A) First

B) Second 

C) Third

D) Fourth

  • India has emerged as the second most sought after manufacturing destination across the world. According to Cushman & Wakefield’s 2021 World Manufacturing Danger Index, India has surpassed the United States as the world’s second most desired manufacturing destination.
  • This year, India and the United States traded second and third place, respectively, putting India one rank higher than last year’s rankings, when India was ranked third.

5. With which organization, Department of Biotechnology has collaborated to study the impact of severe COVID–19 conditions on TB patients?

A) BRICS 

B) G20

C) G7

D) BIMSTEC

  • Department of Biotechnology, Ministry of Science and Technology, in collaboration with BRICS countries is implementing SARS–CoV–2 NGS–BRICS consortium and multi centric programme to study the impact of severe COVID–19 conditions on TB patients. The SARS–CoV–2 NGS–BRICS consortium will advance COVID–19 health–relevant knowledge and contribute to improvements in health outcomes.

6. With which country, India has agreed to form a permanent bilateral channel for consultations on Afghanistan?

A) Russia 

B) Iran

C) China

D) United States of America

  • India and Russia have agreed to form a permanent bilateral channel for consultations on Afghanistan. India, Russia and Iran were previously the main backers of an anti–Taliban alliance when the Islamist group was last in power in Kabul between 1996–2001.

7. Who has been appointed as the Chairman of Advisory Board for Banking and Financial Frauds?

A) Padmaja Chunduru

B) SS Mallikarjuna Rao

C) T M Bhasin 

D) Hasmukh Adhia

  • T M Bhasin has been re–appointed as the Chairman of Advisory Board for Banking and Financial Frauds by Central Vigilance Commission. His tenure will be of 2 years. The board was constituted to examine bank frauds of over Rs 50 crore and recommend action.

8. With which organization, Ministry of Health and Family Welfare has partnered to enable users to book vaccination appointments?

A) WhatsApp 

B) Twitter

C) Telegram

D) Google

  • WhatsApp has partnered with the Ministry of Health and Family Welfare (MoHFW) to enable users to book vaccination appointments through its platform. Users can now book vaccination slots by sending ‘Book Slot’ to MyGov Corona Helpdesk bot on WhatsApp. The messaging service recently added a feature to enable users to download their vaccination certificate from WhatsApp.

9. In association with the Planning Department of which state has the Vice President of India launched Vaccinate India Programme?

A) Uttar Pradesh

B) Telangana

C) Andhra Pradesh

D) Karnataka 

  • Vice President of India, M. Venkaiah Naidu, launched “Vaccinate India Programme” on August 24, 2021. This programme was organised by Give India Foundation and Sustainable Goals Coordination Centre in Bengaluru. It was launched under CSR in association with Planning Department of the Karnataka government. India started its COVID–19 vaccines programme on January 16, 2021.

10. World Water Week is organized from which date in August?

A) 19–23 August

B) 23–27 August 

C) 20–26 August

D) 27–31 August

  • The World Water Week is an annual event organized by Stockholm International Water Institute (SIWI) since the year 1991 with the aim to address the global water issues and related concerns of international development.
  • The World Water Week 2021 has been organised from 23–27 August. This year’s event has been organized entirely in digital format. The theme for World Water Week 2021 is ‘Building Resilience Faster’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!