Tnpsc

30th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

30th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

30th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள சோ கார் ஈரநிலமானது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?

அ. பஞ்சாப்

ஆ. லடாக்

இ. மேற்கு வங்கம்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • லடாக்கில் அமைந்துள்ள சோ கார் ஈரநிலமானது இந்தியாவின் 42ஆவது ராம்சர் தளமாக அதாவது பன்னாட்டு முக்கியத்துவம்வாய்ந்த ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இதுபோன்ற தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடு இந்தியாவாகும். உயரமான இடத்தில் அமைந்துள்ள ஈரநிலமான சாங்தாங் பகுதி, லடாக்கில் உள்ள நன்னீர் ஏரியான ஸ்டார்சபுக் சோ மற்றும் மிகையுவர் ஏரியான சோ கார் ஆகிய இரண்டு இணைக்கப்பட்ட ஏரிகளைக் கொண்டுள்ளது.

2. அண்மையில் காலமான மூத்த எழுத்தாளரும் இயற்கை ஆர்வலருமான சுகதகுமாரி சார்ந்த மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • புகழ்மிக்க மலையாளக்கவியும், இயற்கை ஆர்வலரும், பெண்ணுரிமை ஆர்வலருமான சுகதகுமாரி (86) அண்மையில் காலமானார். 15 கவிதைத்தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். கேரள மாநில மகளிர் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்த அவர், ‘குடும்பஸ்ரீ திட்டங்கள்’ தொடங்குவதற்கு தலைமை தாங்கினார். ‘பத்மஸ்ரீ’, ‘சரஸ்வதி சம்மான்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

3. எந்த மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?

அ. பஞ்சாப்

ஆ. ஒடிசா

இ. மேற்கு வங்கம்

ஈ. கர்நாடகா

  • இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமானது ரூர்கேலா நகரில் கட்டப்படவுள்ளது என்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அமையவுள்ள இந்த மைதானத்தில், 2023ஆம் ஆண்டின் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. 20,000 இருக்கைகள் கொண்ட இவ்வரங்கம், பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படும்.

4. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘பாலின பூங்கா’ என்பது கீழ்க்காணும் எம்மாநிலத்தின் தன்னாட்சி அமைப்பாகும்?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. மிசோரம்

ஈ. கேரளா

  • ‘பாலின பூங்கா’ என்பது கேரள மாநில அரசின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மாநிலத்தில், பாலின சமத்துவம்குறித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அது ஏற்பாடு செய்து வருகிறது. புது தில்லியைச் சார்ந்த ஐநா பெண்கள் அமைப்பின் பன்னாட்டு அலுவலகத்துடன் இணைந்து, பெண்கள் தன்முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்திற்கான தெற்காசியாவின் மையமாக செயல்படுவதற்காக ஐநா பெண்கள் அமைப்புடன் கூட்டிணைய தயாராக இருப்பதாக சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்தது.

5. பசுமை சேனல் அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் தனியார் துறை பாதுகாப்பு நிறுவனம் எது?

அ. TATA குழுமம்

ஆ. L&T Defense

இ. கல்யாணி குழுமம்

ஈ. SSS Defense

  • L&T Defense நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ‘கிரீன் சேனல் அந்தஸ்தை’ வழங்கி உள்ளது. இதன்மூலம் இந்த அந்தஸ்தைப்பெற்ற முதல் தனியார் துறை பாதுகாப்பு நிறுவனமாக L&T Defense நிறுவனம் மாறியுள்ளது. ஒரு நிறுவனத்திற்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டால், அதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முன்னெடுப்பின் ஒருபகுதியாக பாதுகாப்பு அமைச்சகத்தால் ‘கிரீன் சேனல் கொள்கை’ ஆனது 2017’இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. இந்தியாவின் முதல் வெப்பக்காற்று பலூன் முறையிலான வனப்பயணம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

  • இந்தியாவின் முதல் வெப்பக்காற்று பலூன் முறையிலான வனப்பயணமானது, பந்தெளகர் புலிகள் காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இப்புலிகள் காப்பகம் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட இடையக பகுதிகளில் வாழும் புலிகள், சிறுத்தைகள், இந்திய தேனுண்ணுங்கரடிகள் மற்றும் பிற கானுயிரிகளை மக்கள் வெகு உயரத்திலிருந்து பார்க்கலாம்.

7. தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் யார்?

அ. ஹர்பஜன் சிங்

ஆ. V V S இலக்ஷ்மணன்

இ. சேத்தன் சர்மா

ஈ. முகமது கைப்

  • இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சர்மா, தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய சீனியர் தேர்வுக்குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்களை கிரிக்கெட் ஆலோசனைக்குழுமம் தேர்வுசெய்துள்ளது. ஓராண்டுகாலம்கழித்து, தெரிவு செய்யப்பட்டவர்களை மதிப்பாய்வு செய்து BCCI’க்கு அகில இந்திய சீனியர் தேர்வுக்குழு பரிந்துரைகளை வழங்கும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘PRADAN’ இணையதளத்துடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. UPSC

ஈ. UGC

  • சந்திரயான்-2 திட்டத்தின் முதல் தொகுப்பை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) அறிவித்துள்ளது. சந்திரயான்-2 திட்டம், 2019 ஜூலை.22 அன்று ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ISRO திட்டங்கள் குறித்த தரவுகளின் முதன்மை காப்பகமான இந்திய விண்வெளி அறிவியல் தரவு மையம், ‘PRADAN’ இணைய தளத்தின்மூலம் தரவுகளை வெளியிட்டுள்ளது.

9. அண்மையில், ‘பசல் ரகத் யோஜனா’ மற்றும் ‘பசுதன் யோஜனா’ ஆகியவற்றை தொடங்கிய மாநில அரசு எது?

அ. பீகார்

ஆ. ஜார்க்கண்ட்

இ. கர்நாடகா

ஈ. உத்தர பிரதேசம்

  • ஜார்கண்ட் மாநில அரசு தனது அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து உழவர்கள் மற்றும் வேளாண் கடன்களையும் `50,000 வரை தள்ளுபடி செய்ய முடிவுசெய்துள்ளது. பயிர் இழப்பை எதிர் கொண்ட உழவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, ‘பசல் ரகத் யோஜனா’ மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் குடும்பங்களின் வருவாயை அதிகரிக்க, ‘பசுதன் யோஜனா’ ஆகிய 2 திட்டத்திற்கும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10. ‘SKYROS’ என்ற பெயரில் இந்தியா மற்றும் கீழ்க்காணும் எந்த நாட்டின் போர் விமானங்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளன?

அ. இஸ்ரேல்

ஆ. பிரான்ஸ்

இ. இரஷ்யா

ஈ. ஆஸ்திரேலியா

  • இந்தியா மற்றும் பிரான்ஸின் ரபேல் போர்விமானங்கள், இராஜஸ்தானின் ஜோத்பூரில் ‘SKYROS’ என்ற பெயரில் போர் விளையாட்டுகளை மேற்கொள்ளவுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படவுள்ளது. 2020 ஆகஸ்ட்டில் சேவையில் சேர்க்கப்பட்ட ரபேல் போர்விமானங்கள் ஈடுபடும் இந்திய வான்படையின் முதல் பெரிய போர் விளையாட்டு இதுவாகும்.

30th December 2020 Tnpsc Current Affairs in English

1. Tso Kar Wetland Complex, which was declared a Ramsar site, is located in which Indian state/UT?

[A] Punjab

[B] Ladakh

[C] West Bengal

[D] Andhra Pradesh

  • Tso Kar Wetland Complex located in Ladakh has been declared as India’s 42nd Ramsar site i.e as wetland of international importance. This is the highest number of such sites in South Asia. The high–altitude wetland complex Changthang region is of two connected lakes, the freshwater Startsapuk Tso and the hypersaline Tso Kar, in Ladakh.

2. Veteran writer and conservationist Sugathakumari, who recently passed away, was from which state?

[A] Kerala

[B] Andhra Pradesh

[C] Karnataka

[D] Maharashtra

  • Renowned Malayalam poet, conservationist and women’s rights activist Sugathakumari (86) has passed away recently. She has released 15 collections of much–acclaimed poems. Sugathakumari was also the first chairperson of the Kerala State Women Commission and led the launch of Kudumbashree Missions. She had received various awards including the Padma Shri, the Saraswati Samman among others.

3. India’s largest hockey stadium is planned to be setup in which state?

[A] Punjab

[B] Odisha

[C] West Bengal

[D] Karnataka

  • Odisha Chief Minister Naveen Patnaik announced that India’s biggest hockey stadium is to be built in the city of Rourkela in the state. The upcoming facility is likely to host matches of men’s Hockey World Cup in 2023. The stadium with a 20000–seat capacity, will be constructed in the Biju Patnaik University of Technology campus.

4. The Gender Park, which was seen in the news recently, is an autonomous body of which Indian state?

[A] Arunachal Pradesh

[B] Assam

[C] Mizoram

[D] Kerala

  • The Gender Park is an autonomous body under the Kerala state government, organises various projects and programmes on gender equality in the state. Recently, the agency announced that it is set to partner with UN Women to promote women empowerment and function as a South Asia hub for gender equality, in association with the New Delhi based UN Women Multi–Country Office.

5. Which is the first private sector Defence company to be granted Green channel status?

[A] TATA Group

[B] L&T Defense

[C] Kalyani Group

[D] SSS Defense

  • The Defence Ministry has recently granted ‘Green channel status’ to L&T Defence, which became the first private sector defence company to be granted this status. If a company is granted this status, it would have several benefits. The Green Channel Policy was introduced in 2017 by the Defence Ministry, as part of the ‘Make in India’ initiative.

6. India’s first hot air balloon wildlife safari has been launched in which state?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Gujarat

[D] Maharashtra

  • India’s first hot air balloon wildlife safari in a tiger reserve has been launched in the Bandhavgarh Tiger Reserve. The Tiger Reserve is situated in the state of Madhya Pradesh. Under the programme, people can watch tigers, leopards, Indian sloth bear and other wild animals from a height, in restricted buffer areas.

7. Which Indian player has been appointed as the Chief selector of the national men’s cricket team?

[A] Harbhajan Singh

[B] V V S Laxman

[C] Chetan Sharma

[D] Mohammad Kaif

  • Former India pacer Chetan Sharma has been appointed Chief selector of the national men’s cricket team. The Cricket Advisory Committee also selected two more members to the All–India Senior Selection Committee. The CAC will review the candidates after one year and make recommendations to the BCCI.

8. PRADAN portal, which was seen in the news recently, is associated with which organisation?

[A] DRDO

[B] ISRO

[C] UPSC

[D] UGC

  • The Indian Space Research Organisation announced that it has released the first set of data from the Chandrayaan–2 mission, for the general public. India’s second mission to the moon was launched on July 22, 2019 from the Satish Dhawan Space Centre at Sriharikota. The data has been released through the ‘PRADAN’ portal hosted by Indian Space Science Data Centre (ISSDC), the nodal centre of data archive for ISRO missions.

9. Which Indian state has recently launched ‘Fasal rahat yojana’ and ‘Pasudhan yojana’?

[A] Bihar

[B] Jharkhand

[C] Karnataka

[D] Uttar Pradesh

  • The Jharkhand government in its recent cabinet meeting has decided to waive all agriculture and farm loans up to Rs 50,000. The Cabinet also approved ‘Fasal rahat yojana’ to provide relief to the farmers who have faced crop loss and ‘Pasudhan yojana’ to improve income of the families involved in cattle farming.

10. The fighter jets of India and which other country is to organise an exercise named ‘SKYROS’?

[A] Israel

[B] France

[C] Russia

[D] Australia

  • The Rafale fighter jets of India and France are set to carry out wargames named ‘SKYROS’ in Jodhpur, Rajasthan. The exercise is to be organised in the third week of January next year. This would be the first major wargame of the Indian Air Force involving the Rafale fighters which were inducted into the service in August 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!