Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

30th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கீச்சன் செவெல், எந்த நாட்டுக் காவல்துறையின் முதல் பெண் தலைவராக ஆனார்?

அ) ஆஸ்திரேலியா

ஆ) ஜெர்மனி

இ) அமெரிக்கா 

ஈ) பின்லாந்து

  • நியூயார்க் நகரத்தின் அடுத்த காவல்துறை ஆணையராக கீச்சன்ட் செவெல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் காவல்துறைக்கு தலைமைதாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
  • கீச்சன் செவெல், நீள் தீவு காவல் அதிகாரியாவார். 49 வயதான அவர் நியூயார்க் காவல்துறை ஆணையராக பணியாற்றும் மூன்றாவது கறுப்பினத்தவர் ஆவார்.

2. YouGov மேற்கொண்ட சர்வதேச ஆய்வின்படி, உலகில் அதிகம் போற்றப்படும் மனிதர் யார்?

அ) எலோன் மஸ்க்

ஆ) இரஜினிகாந்த்

இ) நரேந்திர மோடி

ஈ) பராக் ஒபாமா 

  • YouGov மேற்கொண்ட சர்வதேச ஆய்வின்படி, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, உலகின் மிகவும் போற்ற -ப்படும் மனிதர்களில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • இந்த ஆய்வுக்காக, முப்பத்தெட்டு நாடுகளைச் சேர்ந்த 42,000 பேரிடம் யாரை அதிகம் போற்றுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. ஆடவர் பட்டியலில் பில் கேட்ஸ் 2ஆவது இடத்திலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3ஆவது இடத்திலும் உள்ளனர். இந்தியப் பிரதமர் மோடி மிகவும் போற்றப்படும் மனிதர்கள் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். மகளிருள் மிச்செல் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.

3. பிரதமர் கிருஷி சிஞ்சாயி யோஜனா என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ) ஜல் சக்தி அமைச்சகம் 

ஆ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

இ) உணவு பதப்படுத்துதல் அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • `93,068 கோடி செலவில் 2021-26ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாய் யோஜனாவை (PMKSY) செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2015-16’இல் PMKSY தொடங்கப்பட்டது.
  • துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம், ஹர் கெத் கோ பானி மற்றும் நீர்நிலை மேம்பாட்டுக் கூறுகள் ஆகிய 3 கூறுகள் 2021-26’இல் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட் -டுள்ளன. துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம் ஜல் சக்தி அமைச்சகத்தாலும் ஒரு சொட்டு – அதிக பயிர் திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனத்திட்டம் வேளாண் அமைச்சகத்தாலும் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டம் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தாலும் செயல்படுத்தப்படுகிறது.

4. லக்வார் பல்நோக்கு திட்டம் அமையவுள்ள மாநிலம் எது?

அ) உத்தரப்பிரதேசம்

ஆ) உத்தரகாண்ட் 

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) பஞ்சாப்

  • இந்தியப்பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனை ஆற்றில் லக்வார் பல்நோக்குத் திட்டத்தைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரகாண்ட் ஜல் வித்யுத் நிகாம் லிட்மூலம் கட்டப்படும் அணை மற்றும் நிலத்தடி மின் நிலைய கட்டுமானம் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டம் உத்தரகாண்ட், தில்லி, இராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

5. ஜெனரல் பிபின் இராவத்தின் மறைவைத் தொடர்ந்து, பணியாளர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) M M நரவனே 

ஆ) கரம்பீர் சிங்

இ) R K S பதௌரியா

ஈ) விஜய் குமார் சிங்

  • ஜெனரல் பிபின் இராவத்தின் மறைவைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தளபதி மனோஜ் முகுந்த் நரவனேவை, ராணுவப் பணியாளர்கள் குழுவின் தலைவராக இந்திய அரசு நியமித்தது.

6. ஆறு அணு உலைகள் அமைக்கப்படவுள்ள ஜெய்தாபூர் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா 

ஆ) உத்தர பிரதேசம்

இ) பீகார்

ஈ) மேற்கு வங்காளம்

  • மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜெய்தாபூரில் ஆறு அணு உலைகளை அமைக்க மத்திய அரசு ‘கொள்கை அளவில்’ ஒப்புதல் அளித்துள்ளது. தலா 1,650 MW திறன்கொண்ட ஆறு அணுமின் உலைகள் பிரான்சின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் நிறுவப்படும். இது 9,900 மெகாவாட் (MW) திறன்கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தி உற்பத்தி தளமாக இருக்கும்.

7. 2021’இல் “அனைத்திந்திய மேயர்கள் மாநாட்டை” நடத்திய நகரம் எது?

அ) சென்னை

ஆ) திருவனந்தபுரம்

இ) வாரணாசி 

ஈ) நாக்பூர்

  • வாரணாசியில் நடந்த “அகில இந்திய மேயர் மாநாட்டை” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். “புதிய நகர்ப்புற இந்தியா” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 120 மேயர்கள் பங்கேற்றனர்.

8. உலகின் முதல் ‘AI வழக்கறிஞரை’ உருவாக்கிய நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) சீனா 

இ) ரஷ்யா

ஈ) இந்தியா

  • செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி வாதாடக் கூடிய உலகின் முதல் எந்திரத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அவ்விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த “AI வழக்கறிஞரால்” 97 சதவீதத்திற்கும் மேலான துல்லியத்துடன் மக்களைத் தண்டிக்க முடியும். இது வாய் மொழி விளக்கமும் அளிக்கும்.

9. “இந்தியா ஔட்” பிரச்சாரத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ) இலங்கை

ஆ) மியான்மர்

இ) மாலத்தீவுகள் 

ஈ) நேபாளம்

  • மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையில் “இந்தியா ஔட்” பிரச்சாரம் நடைபெற்றது. சமீபத்தில், மாலத்தீவில் உள்ள அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. “இந்தியா ஔட்” என்ற முழக்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.
  • ‘இந்தியா ஔட்’ பிரச்சாரமானது மாலத்தீவில் தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பின்மூலம் ஒரு இராணுவ தளத்தை நிறுவ இந்தியா எண்ணுகிறது என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டுள்ளது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “சைக் திட்டம்” உருவாக்கப்பட்டு வருகிற நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) UK

இ) ரஷ்யா

ஈ) இஸ்ரேல்

  • 2022ஆம் ஆண்டில் ஏவப்படவுள்ள ‘சைக் திட்டத்தில்’ NASA செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் இலக்கு செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள முக்கிய பட்டையில் உள்ள ‘சைக்’ என்றும் அழைக்கப்படும் உலோகம் நிறைந்த சிறுகோள் ஆகும். இந்த இடத்திற்கு இதுவரை வேறு எந்த விண்கலமும் சென்றதில்லை.
  • இவ்விண்கலம் 2026ஆம் ஆண்டில் சிறுகோள் இருக்கும் பட்டையைச் சென்றடையும். ரேடார் தரவுகளில் இருந்து, அச்சிறுகோள் உருளைக்கிழங்கு வடிவில் இருப்பதும், அது அதன் பக்கத்தில் சுழல்வதும் கவனிக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரதமர் மோடி பெயரில் சிக்கிமில் புதிய சாலை திறப்பு

சிக்கிமில் பிரதமா் நரேந்திர மோடி பெயரில் புதிய சாலை புதன்கிழமை திறக்கப்பட்டது. அந்த மாநில ஆளுநா் கங்கா பிரசாத் இந்தச் சாலையைத் திறந்துவைத்தாா்.

சோம்கோ ஏரி, நாதுலா எல்லைப் பகுதி ஆகியவற்றை சிக்கிம் தலைநகா் காங்டாக்குடன் இந்தச் சாலை இணைக்கிறது. இதற்கு முன்பு இதே பகுதிகளுக்கு இடையிலான சாலை ஜவாஹா்லால் நேரு சாலை என்று அழைக்கப்பட்டு வந்தது.

இப்போது அந்தப் பகுதிகளுக்குச் செல்ல புதிய இருவழிச் சாலை உருவாக்கப்பட்டு, அதற்கு ‘நரேந்திர மோடி மாா்க்’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்தச் சாலை மூலம் காங்டாக்-சோம்கோ ஏரி இடையிலான பயணத் தொலைவு 15 கி.மீ. குறைந்துள்ளது.

2. அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது; பால புரஸ்கார் விருதுக்கு மு.முருகேஷ் தேர்வு

தமிழின் முக்கியமான பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது இந்த ஆண்டு கவிஞர் மு.முருகேஷுக்கு வழங்கப்படுகிறது.

நாட்டின் 24 மொழிகளில் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெண்ணியம் சார்ந்து படைப்புகளை எழுதி வருபவர்களில் முக்கியமானவர் அம்பை. தமிழில் இயங்கிவரும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் சமரசமில்லாத பெண்ணியக் கோட்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது படைப்புகளின் மூலம் பெண்ணியம் சார்ந்த வலிமிகுந்த உணர்வுகளை கூர்மையோடும் அழகியலோடும் வெளிப்படுத்திய வகையில் அம்பையே முதல் இடத்திலும் முன்னோடியாகவும் நிற்கிறார். அவரது ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, ‘காட்டில் ஒரு மான்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘சிறகுகள் முறியும்’ போன்ற படைப்புகள் வாழ்க்கையில் பெண்ணுக்கான இடத்தையும் வெளியில் சொல்ல இயலாத மன இயல்புகளையும் ஆழ்ந்த சிரத்தையோடு வெளிப்படுத்தியுள்ளன.

அம்பை, மு.முருகேஷ் நூல்கள்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அம்பையின் நூல் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பால புரஸ்கார் விருது: ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ தளத்தில் நீண்டகாலமாக இயங்கி தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர் கவிஞர் மு.முருகேஷ். பின்னர் சிறுவர்களுக்கான நூல்களைப் படைப்பதிலும் ஈடுபடத் தொடங்கினார்.

‘பூவின் நிழல்’ உள்ளிட்ட 8 கவிதை நூல்களும், ‘விரல் நுனியில் வானம்’ எனத் தொடங்கி ‘குக்கூவென…’ வரை 11 ஹைக்கூ நூல்களையும், ‘இருளில் மறையும் நிழல்கள்’ என்ற சிறுகதை நூலையும் முருகேஷ் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, ‘பெரிய வயிறு குருவி’ தொடங்கி ‘சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம்’ வரை 18 குழந்தைகளுக்கான நூல்களைப் படைத்துள்ளார். மேலும் பிற நூல்கள் வரிசையில் 20 என ஏராளமான நூல்களின் ஆசிரியராக முருகேஷ் திகழ்கிறார்.

மு.முருகேஷ், ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற குழந்தை இலக்கிய நூலுக்காக இம்முறை பால புரஸ்கார் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. திருப்புமுனை தினம்! | இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை தினம் குறித்த தலையங்கம்

பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்வதன் மூலம்தான் நமது இளைய தலைமுறையினருக்கு தேசப்பற்றையும் தேசிய உணர்வையும் ஊட்ட முடியும். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பல நிகழ்வுகள், சுதந்திர இந்தியாவில் சரித்திரப் புத்தகங்களுடன் நின்றுவிடுகின்றன. பள்ளிக்கூடங்களில்கூட அவை குறித்த பதிவுகள் இல்லாமல் இருப்பது பெரும் அவலம்.

இன்றைய டிசம்பர் 31-ம் தேதிக்கு, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும் அவர்கள் அதை அநேகமாக மறந்துபோயிருப்பார்கள்.

இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு இருப்பது போன்ற முக்கியத்துவம் டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் உண்டு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்ந்த அந்த நாளை, வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை தினமாகவே கருதுவார்கள்.

1929 டிசம்பர் 31-ம் தேதி லாகூர் ராவி நதிக்கரையில் பெரும்திரளாகக்கூடிய தொண்டர் கூட்டத்துக்கு நடுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றிய நிகழ்வு மறந்து விடக்கூடியதா என்ன? அதற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களின் நீட்சியாகத்தான் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாம் பார்க்க வேண்டும்.

1927-இல் இந்திய அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் பிரிட்டிஷ் காலனிய அரசு ஜான் சைமன் குழுவை அமைத்தது. அந்த சைமன் குழுவுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் பெரும் திரளாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தின்போது லாலா லஜபதி ராய் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தது மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது.

இர்வின் பிரபு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தார். அதை இந்தியத் தலைவர்கள் பலர் வரவேற்றனர். ஆனால் பிரிட்டனில் அதற்கு எதிர்ப்பு அதிகரித்ததால் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

இதற்கிடையில் ‘முழுமையான சுதந்திரம்’ என்கிற அறைகூவலை பகத் சிங் விடுத்திருந்தார். பண்டித நேருவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம் அதை ஆதரித்தனர். லாகூரில் கூட இருந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திரம் கோரிக்கையை நிறைவேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு லாகூர் நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது லாகூரிலுள்ள பார்ஸ்டல் சிறையில் பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். லாலா லஜபதி ராயை தாக்கியதற்கு பழிவாங்கும் நோக்கில் நடத்திய கொலைக்காக அவர்கள் மரண தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 1929 டிசம்பர் மாதம் அதே பார்ஸ்டல் சிறையில் இன்னும் பல விடுதலைப் போராளிகளும் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறையில் இருந்த விடுதலைப் போராளிகள் லாகூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் பரிபூரண சுதந்திரம் தீர்மானத்தால் உற்சாகம் அடைந்திருந்தனர். கடுமையான தடையுத்தரவுகளையும் மீறி லாகூர் நகரம் காங்கிரஸ் மாநாட்டுக்காகவும், அதில் நிறைவேற்றப்பட இருக்கும் பூர்ண ஸ்வராஜ் தீர்மானத்தை ஆதரித்தும் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

டிசம்பர் 30 நள்ளிரவில், ராவி நதிக்கரையில் ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றுவதாக இருக்கிறார் என்கிற செய்தியும், அங்கிருந்தபடி பூர்ண ஸ்சுவராஜ் கோஷத்தை அவர் முன்வைப்பார் என்கிற தகவலும் பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட போராளிகளை எட்டியதும் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். தண்டனைக் கைதி ஒருவர் மூலம் பகத் சிங்கிடம் தொடர்பு கொண்டார் ஒரு போராளி. அன்று நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடியை ஏற்றும்போது பார்ஸ்டல் சிறைச்சாலையில் உள்ள விடுதலைப் போராளிகள் அனைவரும் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும் என்கிற அந்தக் கோரிக்கையை பகத் சிங்கும் வரவேற்றார். சிறைச்சாலையில் இருந்த போராளிகள் அனைவருக்கும் தகவல் பரவியது.

நள்ளிரவு 12 மணி, ராவி நதிக்கரையில் பெருந்திரளான மக்கள் கூட்டத்துக்கு நடுவே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதே நேரத்தில் பார்ஸ்டல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை விடுதலைப் போராளிகளும் ஒரே குரலில் “வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என்று முழங்கத் தொடங்கினர். அங்கிருந்த காவலர்கள் அவர்களை அமைதியாக இருக்கும்படி கெஞ்சிப் பார்த்தும் விண்ணைப் பிளக்கும் அந்த கோஷம் அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒலித்தது.

ஆச்சர்யம் அதுவல்ல. லாகூர் பார்ஸ்டல் சிறைச்சாலையைப் போலவே, மேற்கு வங்கத்து அலிப்பூர் சிறைச்சாலையிலும், இந்தியாவின் தென்கோடியிலுள்ள கண்ணனூர் சிறையிலும், ஏனைய பல சிறைகளிலும் 1929 டிசம்பர் 31-ம் தேதி அதேபோல வந்தே மாதரம் கோஷம் எழுப்பப்பட்டதே, எப்படி? யார் சொல்லி அவர்களுக்குத் தகவல் போனது?

இப்போதுபோல தகவல் தொடர்புகள் இல்லாத, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அந்த காலத்தில் விடுதலை வேட்கையும் தேசிய உணர்வும் அவர்களை இணைத்திருக்க வேண்டும்.

மகாகவி பாரதி கூறிய,

‘முப்பது கோடி முகம்உடையாள் – உயிர்

மொய்ம்புற ஒன்று உடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில்

சிந்தனை ஒன்று உடையாள்’

என்பதன் பொருள் விளங்குகிறது!

4. பிரமோஸ் ஏவுகணை விற்பனை: இந்தியா-பிலிப்பின்ஸ் விரைவில் ஒப்பந்தம்

பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்குவதற்காக, அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் இறுதியாகவுள்ளது.

இந்த ஒப்பந்தம், இந்தியா-பிலிப்பின்ஸ் இடையேயான உறவில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தும் வரும் சீனாவை எதிா்கொள்வதற்காக பிலிப்பின்ஸ் அரசு தனது கடற்படையின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியாவிடம் இருந்து சூப்பா்சானிக் வகை பிரமோஸ் ஏவுகணைகளை அந்நாட்டு அரசு கொள்முதல் செய்யவுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: பிரமோஸ் ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்காக, பிலிப்பின்ஸ் அரசின் பட்ஜெட் மேலாண்மைத் துறை சிறப்பு நிதியாக ரூ.189 கோடி, ரூ.224 கோடி ஆகியவற்றைத் தனித்தனியே ஒதுக்கீடு செய்துள்ளது. இது, பிலிப்பின்ஸ் கடற்படைக்குத் தேவையான தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான முதல்கட்ட நிதியாக இருக்கும்.

ஏவுகணை கொள்முதல் தொடா்பாக, இரு நாட்டு அரசுகளுக்கு இடையே பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த சில வாரங்களில் அதிகாரபூா்வமாக ஒப்பந்தம் இறுதியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய- ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ், சூப்பா்சானிக் வகை பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. ஒலியைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணைகளை கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் நிலப்பரப்பில் இருந்து செலுத்த முடியும்.

5. கனடா: 3 இந்திய வம்சாவளியினருக்கு தேசிய விருது

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 3 போ் அந்த நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தேசிய விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்திய வம்சவளியைச் சோ்ந்த விஞ்ஞானி வைகுண்டம் ஐயா் லக்ஷ்மணன், தொழிலதிபா் பாப் சிங் தில்லான், மருத்துவா் பிரதீப் மொ்ச்சண்ட் ஆகியோா் கனடாவின் இரண்டாவது பெரிய தேசிய விருதான ‘ஆா்டா் ஆஃப் கனடா’வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஆண்டுக்கான விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 135 பேரின் பட்டியலில் அவா்களும் இடம் பெற்றுள்ளனா்.

தங்களது துறைகளில் அவா்கள் ஆற்றி வரும் சாதனைகள், அா்ப்பணிப்பு உணா்வு, நாட்டு முன்னேற்றத்துக்கு அளிக்கும் பங்களிப்பு, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவது போன்ற காரணங்களுக்காக அவா்களுக்கு அந்த விருது வழங்கப்படுவதாக தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

இவா்களில் வைகுண்டம் ஐயா் லக்ஷ்மணன் புகழ்பெற்ற விஞ்ஞானியும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருபவரும் ஆவாா்.

நவ்ஜீத் சிங் தில்லான் என்றும் அழைக்கப்படும் பிரபல மனைவணிக தொழிலதிபா் பாப் சிங் தில்லான், சமூக சேவைகளுக்கு நன்கொடைகள் அளித்து வருகிறாா்.

குழந்தைகள் மருத்துவத்தில் பிரதீப் மொ்ச்சண்ட் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. Keechant Sewell, is the first female head of the Police Force of which country?

A) Australia

B) Germany

C) United States of America 

D) Finland

  • Keechant Sewell has been named the New York City’s next police commissioner, making her the first woman to lead the nation’s largest police force. Keechant Sewell was a Long Island police official. The 49–year–old will also be the third Black person to serve as New York Police Department commissioner.

2. Who is the most admired man in the world, as per the international survey carried out by YouGov?

A) Elon Musk

B) Rajinikanth

C) Narendra Modi

D) Barack Obama 

  • Former US President Barack Obama has retained his position at the most admired man in the world as per an international survey carried out by YouGov. For this survey, 42,000 people from 38 countries were asked who they admired most. Bill Gates is in second spot among men while Chinese President Xi Jinping is on third place. India’s Prime Minister Narendra Modi was listed as 8th most admired man. Among women, Michelle Obama bagged the top spot.

3. Pradhan Mantri Krishi Sinchayee Yojana is a flagship programme of which Union Ministry?

A) Ministry of Jal Shakti 

B) Ministry of Agriculture and Farmers Welfare

C) Ministry of Food Processing

D) Ministry of Rural Development

  • The Union Cabinet approved the implementation of Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) for 2021–26 with an outlay of Rs.93,068 crore. PMKSY was launched in 2015–16. The three components: Accelerated Irrigation Benefit Programme (AIBP), Har Khet ko Paani (HKKP) and Watershed Development components have been approved for continuation during 2021–26.
  • AIBP is implemented by Ministry of Jal Shakti; Per Drop–More Crop and Micro Irrigation scheme of Agriculture Ministry and Watershed Development by Rural Development Ministry.

4. Lakhwar Multipurpose Project is coming up in which state?

A) Uttar Pradesh

B) Uttarakhand 

C) Himachal Pradesh

D) Punjab

  • The Union Cabinet headed by the Prime Minister of India has approved the construction of the Lakhwar Multipurpose Project in Uttarakhand, on the Yamuna River. The project includes construction of a dam and a underground power house, to be constructed by Uttarakhand Jal Vidyut Nigam Ltd. This project would benefit Uttarakhand, Delhi, Rajasthan, Haryana, and Himachal Pradesh.

5. Who has been appointed as the Chief of Staff Committee, following the demise of General Bipin Rawat?

A) M M Naravane 

B) Karambir Singh

C) R K S Bhadauria

D) Vijay Kumar Singh

  • The Government of India has appointed Indian Army Chief General Manoj Mukund Naravane as Chairman of the Chiefs of Staff Committee, following the demise of General Bipin Rawat.

6. Jaitapur, where six nuclear power reactor is to be set up, is located in which state?

A) Maharashtra 

B) Uttar Pradesh

C) Bihar

D) West Bengal

  • The Centre has given ‘in–principle’ approval to set up six nuclear power reactors at Jaitapur in Maharashtra. The six nuclear power reactors, which will have a capacity of 1,650 MW each, will be established with technical cooperation from France.
  • It will be India’s largest nuclear power generating site with a total capacity of 9,900 MW.

7. Which city hosted the “All India Mayors’ Conference” in 2021?

A) Chennai

B) Tiruvananthapuram

C) Varanasi 

D) Nagpur

  • Prime Minister Narendra Modi recently inaugurated the All–India Mayors’ Conference at Varanasi via video conferencing.
  • As many as 120 mayors from various states of the country participated in the conference, which was conducted with the theme of “New Urban India”.

8. Which country has developed the world’s first ‘AI Prosecutor’?

A) USA

B) China 

C) Russia

D) India

  • Chinese scientists have developed the world’s first machine that can charge people with crime using artificial intelligence. As per the scientists, the AI “prosecutor” can charge people with over 97 per cent accuracy and it works on verbal description.

9. “India Out” campaign is associated with which country?

A) Sri Lanka

B) Myanmar

C) Maldives 

D) Nepal

  • “India Out” campaign was led by former Maldives President Abdulla Yameen. Recently, political parties in the Maldives have opposed the campaign. “India Out” slogan has been witnessed on social media over the past three years. The “India Out” campaign centres around the allegations that India is seeking to establish a military presence in the Maldives through ongoing security cooperation.

10. Psyche mission, which was seen in the news, is being developed by which country?

A) USA 

B) UK

C) Russia

D) Israel

  • NASA is working on the Psyche mission, which is to be launched in the year 2022. The target of the mission is a metal–rich asteroid, also called Psyche, in the main belt between Mars and Jupiter. This place has never been visited by any other spacecraft.
  • The spacecraft would arrive at the asteroid belt in 2026. From radar data, it has been observed that the asteroid is shaped like a potato and it spins on its side.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!