TnpscTnpsc Current Affairs

30th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

30th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘தக் கர்மயோகி’ இணையதளத்தின் நோக்கம் என்ன?

அ. குறை நிவர்த்தி

ஆ. ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல் 

இ. சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கல்

ஈ. பொதுமக்கள் பங்கேற்பு

  • அஞ்சல் துறையின், ‘தக் கர்மயோகி’ என்னும் இ–கற்றல் இணையத்தளத்தை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட, ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்தின்கீழ் இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹெர்மிட்’ என்றால் என்ன?

அ. ஏவுகணை

ஆ. செயற்கைக்கோள்

இ. உளவு நிரல் 

ஈ. தடுப்பூசி

  • அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ஹெர்மிட்’ என்பது சமீபத்திய அதிநவீன உளவு நிரலின் பெயராகும். இது இத்தாலி மற்றும் கஜகஸ்தானில் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களை குறிவைத்ததாக நம்பப்படுகிறது. ‘RCS லேப்’ என்ற இத்தாலிய விற்பனையாளரால் இந்த உளவு நிரல் உருவாக்கப்பட்டுள்ளது. கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக்குழு சமீபத்தில் ‘ஹெர்மிட்’ எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த ஒரு விரிவான வலைப்பதிவு இடுகையை வெளியிட்டது.

3. தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்புறு விருதுகள் (NHEA) எவ்வகையினரைப் பாராட்டுவதற்காக நிறுவப்பட்டது?

அ. நிறுவனங்கள் 

ஆ. பொதுமக்கள்

இ. அதிகாரத்துவவாதிகள்

ஈ. பணியாளர்கள்

  • நாட்டில் சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் வலுப்படுத்துவதற்காக, சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்த, நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்புறு விருதுகளை வழங்கி வருகிறது. இது சாலைக் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோரிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும். நாடு முழுவதுமுள்ள சாலை சொத்துக்களை சரியாகப் பராமரித்து வரும் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கான நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக விருது வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற RAMP திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகத்துடன் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம் 

இ. வேளாண் அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • புது தில்லியில் நிகழ்ந்த ‘உத்யமி பாரத்’ நிகழ்வில், ‘MSME செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல்’ (RAMP) திட்டத்தைத் தொடங்க பிரதமர் மோடி பங்கேற்றார். ‘முதன்முறை MSME ஏற்றுமதியாளர்களின் திறனைக் கட்டமைத்தல்’ திட்டத்தையும், ‘பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்’ (PMEGP) புதிய அம்சங்களையும் அவர் தொடங்கினார். MSME Idea Hackathon, 2022–இன் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேசிய MSME விருதுகள் அப்போது வழங்கப்பட்டன.

5. ‘தேசிய காப்பீட்டு விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.25

ஆ. ஜூன்.27

இ. ஜூன்.28 

ஈ. ஜூன்.30

  • காப்பீட்டுத்திட்டத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற் –காக ஆண்டுதோறும் ஜூன்.28ஆம் தேதி தேசிய காப்பீட்டு விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. லண்டனில் நிகழ்ந்த ஒரு பெரிய தீ விபத்துக்குப்பிறகு, நிக்கோலஸ் பார்பன் என்பார் கிபி 1666–இல் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை நிறுவினார். அதன்பிறகு, காப்பீட்டு சந்தை பல புதிய துறைகளுக்கு விரிவடைந்துள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கிஹோடோ ஹோலோஹான்’ தீர்ப்புடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. மகாராஷ்டிரா 

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

  • மகாராஷ்டிர மாநில அரசியல் நெருக்கடிக்கு இடையில், துணை சபாநாயகரின் பங்கு மற்றும் அதிகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ‘கிஹோடோ ஹோலோஹான் எதிர் சாசில்ஹு & அதர்ஸ்’ (1992) என்ற வரலாற்றில் பதிந்த தீர்ப்பில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளை முடிவெடுப்பதில் சபாநாயகருக்கு இருக்கும் முழுமையான விருப்புரிமையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருந்தது.

7. இந்தியாவில், ‘குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டது எப்போது?

அ. ஜூன் 01–07

ஆ. ஜூன் 12–20 

இ. ஜூன் 20–27

ஈ. ஜூலை 01–07

  • குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாளை முன்னிட்டு (ஜூன்.12) ஜூன்.12 முதல் ஜூன்.20 வரை 75 இடங்களில் தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், NCPCR ‘குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்’ கடைப்பிடித்தது. இவ்வார கடைப்பிடிப்பின்போது மாநில ஆணையம், மாவட்ட அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுக்கள்போன்ற அதிகாரிகளின் உதவியுடன், நாடு முழுவதும் 75 இடங்களில் வேலையில் ஈடுபட்டுள்ள குழந்தைகள் மீட்கப்படுவார்கள்.

8. எந்த நாட்டில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தனது தேசிய சாதனையை முறியடித்தார்?

அ. இந்தோனேசியா

ஆ. மங்கோலியா

இ. பின்லாந்து

ஈ. துருக்கி

  • பின்லாந்தின் துர்கு நகரத்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தனது தேசிய சாதனையை முறியடித்தார். அங்கு அவர் 89.30 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து, அவரின் டோக்கியோ ஒலிம்பிக் சாதனையை (87.58 மீட்டர்) விஞ்சி புதிய தேசிய சாதனையைப் படைத்தார். இது அவரை தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரர் எனவாக்கியது. அவரது சமீபத்திய ஈட்டியெறிதல், அவருக்கு வெள்ளியைப் பெற்றுத்தந்தது.

9. இந்திய இரயில்வேயின் ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின்கீழ் இயக்கப்பட்ட முதல் இரயில் கீழ்க்காணும் எவ்விரு நகரங்களுக்கு இடையே கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது?

அ. மும்பை–ஆமதாபாத்

ஆ. கோயம்புத்தூர்–ஷீரடி 

இ. இராமேஸ்வரம்–அயோத்தி

ஈ. பூரி–ஹைதராபாத்

  • இந்திய ரயில்வேயின், ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின்கீழ் முதல் இரயில், மகாராஷ்டிர மாநிலத்தின் சாய்நகர் ஷீரடிக்கும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்திற்கும் இடையே கொடியசைத்துத் தொடக்கிவைக்கப்பட்டது. இக்குறிப்பிட்ட இரயிலை, ‘சௌத் ஸ்டார் ரயில்’ என்ற தனியார் நிறுவனம் இயக்கும். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் கோயம்புத்தூரிலிருந்து புறப்படும் இது வியாழக்கிழமைகளில் ஷீரடியை சென்றடையும். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று இடங்களை இந்தியா மற்றும் உலக மக்களுக்கு காட்சிப்படுத்துவதே இந்த ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் நோக்கமாகும்.

10. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உலகளாவிய மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஜப்பான்

இ. எகிப்து 

ஈ. பிரான்ஸ்

  • எகிப்து, ஷர்ம் எல் ஷேக்கில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எட்டாவது உலகளாவிய மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டைப் பிரதிநிதிகள் சபை மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் (IPU) கூட்டாக ஏற்பாடு செய்துள்ளது. 60 நாடுகளைச் சேர்ந்த சுமார் இருநூறு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். நாகாலாந்தின் முதல் பெண் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ் பாங்கோன் கொன்யாக் இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு

அட்டர்னி ஜெனரலாக (நடுவணரசுத்தலைமை வழக்குரைஞர்) K K வேணுகோபால் (91) மேலும் 3 மாதங்களுக்கு பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய அரசின் வேண்டுகோளை அடுத்து அவர் பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் ஜூன்.30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தனிப்பட்ட காரணங்களால் அவர் பதவியில் தொடர விரும்பம் தெரிவிக்கவில்லை. எனினும், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவர் அடுத்த 3 மாதங்களுக்கு பணியில் தொடரவிருக்கிறார்.

2017 ஜூலை முதல் அவர் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றி வருகிறார். மூத்த வழக்குரைஞரான அவர், அரசியல்சாசன சட்டம், பெருநிறுவனச்சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வருகிறார். 1979-80-ஆம் ஆண்டுகளில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் அவர் பதவி வகித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருதும், 2015-ஆம் ஆண்டு ‘பத்ம விபூஷண்’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

2. ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். அவருடன் ஹிந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் என்பவருக்கும் ஆவணப் படங்கள் பிரிவில், சுஷ்மித் கோஷ் மற்றும் ரின்டு தாமஸ் ஆகிய இருவருக்கும், எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாட்டில் உறுப்பினர்கள் எண்ணிக்கை

குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 234 பேரும், மக்களவை உறுப்பி -னர்கள் 39 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 18 பேரும் உள்ளனர். மொத்தமாக 291 பேர் வாக்காளர்கள்.

4. சிறந்த மாணவ நகரங்கள் தரவரிசை: 125-ஆவது இடத்தில் சென்னை

பிரிட்டன் தலைநகரம் லண்டனில் உள்ள குவாக்வரெல்லி சிமண்ட்ஸ் (QS) உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனம், வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான அந்தப்பட்டியலில் சென்னை 125-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உயர்கல்வியின் நிலை குறித்து அறிய, கடந்த 2010-11-ஆம் ஆண்டு முதல் அனைத்து இந்திய உயர்கல்வி ஆய்வை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. 2018-19-ஆம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியப்பல்கலைக்கழகங்களில் 47,427 வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

5. வான்வழி இலக்கை அழிக்கும் அதிவேக, ‘அப்யாஸ்’ சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக ‘அப்யாஸ்’ வான்வழி இலக்கு வாகனம் (ஹீட்) ஒடிஸா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஒடிஸா சந்திப்பூர் ஐடிஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் உள்ள வானூர்தி அபிவிருத்தி நிறுவனத்தால் ‘அப்யாஸ்’ உருவாக்கப்பட்டது. வானிலுள்ள இலக்குகளைக் குறைந்த உயரத்தில் விரைந்து சென்று தாக்குவதும், தரையிலிருந்து கட்டுப்படுத்தும் வகையில் ஆளில்லாத விமானம் போலச் செயல்படுவதும் ‘அப்யாஸ்’ வாகனத்தின் சிறப்பாகும். இச்சோதனையின்போது, குறைந்த உயரத்தில் பாயும் தன்மையுள்ள இலக்கு வாகனத்தின் செயல்திறன், நிலைத்தன்மை, அதிக தாக்கும் திறன் உள்ளிட்டவை உறுதிசெய்யப்பட்டன. இந்த இலக்கு வாகனம், தரைக் கட்டுப்பாட்டிலிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி குறைந்த உயர விமானப்பாதையில் பறந்தது.

இது ரேடார் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிக்கல் இலக்கமைப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து ஏற்கெனவே நிறுவப்பட்ட பல்வேறு கண்காணிப்பு சென்சார்களால் கண்காணிக்கப்பட்டது.

ஒலியின் வேகத்தில் பாதி வேகத்துடன் (சப்-சோனிக்) நீண்ட தூரத்துக்கு பயணம் செய்யும் வகையில் எரிவாயு டர்பைன்களால் இந்த வாகனம் இயங்குகிறது. மைக்ரோ-எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் அடிப்படையிலான கட்டுப்பாட்டுக் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. What is the objective of ‘Dak Karmayogi’ portal, which was launched recently?

A. Grievance Redressal

B. Training Employees 

C. Awarding Best Performers

D. Participation of Public

  • The ‘Dak Karmayogi’ e–learning portal of the Department of Posts was launched by Ashwini Vaishnaw, Minister of Communications. This portal has been developed in–house under vision of ‘Mission Karmayogi’, conceptualized by Prime Minister Narendra Modi to promote efficiency of Government employees.

2. What is ‘Hermit’, which was seen in the news recently?

A. Missile

B. Satellite

C. Spyware 

D. Vaccine

  • ‘Hermit’ is the name of the latest sophisticated spyware seen in the news. It is believed to have targeted iPhones and Android devices in Italy and Kazakhstan. The spyware has been developed by an Italian vendor called RCS Lab. Google’s Threat Analysis Group (TAG) put out a detailed blog post recently, explaining how they believed Hermit was used to target devices.

3. National Highways Excellence Awards (NHEA) were instituted to felicitate which category?

A. Companies 

B. Public

C. Bureaucrats

D. Employees

  • With a view to strengthen and augment the road infrastructure in the country, Ministry of Road Transport and Highways (MoRTH) initiated “National Highways Excellence Awards” (NHEA) in 2018 in order to incentivize stakeholders in the highway construction and maintenance process and to create a spirit of healthy competitiveness amongst them.

4. RAMP scheme, which was seen in the news, is associated with which Union Ministry?

A. Ministry of Education

B. Ministry of MSME 

C. Ministry of Agriculture

D. Ministry of Commerce and Industry

  • Prime Minister Narendra Modi participated in the ‘Udyami Bharat’ programme in New Delhi to launch the ‘Raising and Accelerating MSME Performance’ (RAMP) scheme. He also launched the ‘Capacity Building of First–Time MSME Exporters’ (CBFTE) scheme and new features of the ‘Prime Minister’s Employment Generation Programme’ (PMEGP). The results of MSME Idea Hackathon, 2022 were announced and National MSME Awards were distributed.

5. When is the ‘National Insurance Awareness Day’ observed?

A. June.25

B. June.27

C. June.28 

D. June.30

  • The National Insurance Awareness Day is observed on 28 June annually to make people aware about the benefits of investing in an insurance plan. After a huge fire in London, Nicholas Barbon set up the first fire insurance company in 1666 AD. Since then, the insurance market has expanded to several new sectors.

6. ‘Kihoto Hollohan’ Judgement, which was seen in the news, is associated with which state?

A. Sikkim

B. Maharashtra 

C. Madhya Pradesh

D. Gujarat

  • Amid the political crisis in Maharashtra, the role and powers of the Deputy Speaker are being discussed. In the landmark judgment of ‘Kihoto Hollohan vs Zachillhu And Others’ (1992), the Supreme Court upheld the sweeping discretion available to the Speaker in deciding cases of disqualification of MLAs.

7. When is the ‘Elimination of Child Labour Week’ observed in India?

A. June 01–07

B. June 12–20 

C. June 20–27

D. July 01–07

  • National Commission for Protection of Child Rights, NCPCR is observing ‘Elimination of Child Labour Week’ in honour of World Day Against Child Labour (12 June) in 75 places from June 12 to June 20. The NCPCR has developed a draft SOP on the rescue and post–rescue of child labour. Rescue operations in 75 places where children are involved in labour work across the country shall be conducted during this week, with the help of authorities like State Commission, District authorities, Child Welfare Committees etc.

8. Neeraj Chopra bettered his national record in Javelin throw, in the Paavo Nurmi Games held in which country?

A. Indonesia

B. Mongolia

C. Finland 

D. Turkey

  • Neeraj Chopra bettered his national record in Javelin throw, in the Paavo Nurmi Games held in Turku, Finland. With a throw of 89.30 metres, he created a new national record, better than his Tokyo Olympics performance of 87.58m. It made him India’s first track and field gold medallist. His recent throw, which fetched him a silver medal.

9. The first train under the Indian Railways’ ‘Bharat Gaurav’ scheme was flagged off between which cities?

A. Mumbai–Ahmedabad

B. Coimbatore–Shirdi 

C. Rameswaram–Ayodhya

D. Puri–Hyderabad

  • The first train under the Indian Railways’ ‘Bharat Gaurav’ scheme was flagged off between Coimbatore North railway station in Tamil Nadu for Sainagar Shirdi in Maharashtra. This particular train will be operated by a private operator ‘South Star Rail’. It will depart from Coimbatore every Tuesday reach Shirdi on Thursdays. The objective of the theme is to showcase India’s rich cultural heritage and historical places, to the people of India and the world.

10. Which country hosted the ‘Global Conference of Young Parliamentarians’?

A. USA

B. Japan

C. Egypt 

D. France

  • Egypt has hosted the Eighth Global Conference of Young Parliamentarians in Sharm El Sheikh. The conference is jointly organized by the House of Representatives and the Inter–Parliamentary Union (IPU). Around 200 young MPs, from 60 countries are participating to discuss strategies to mitigate the impact of climate change. Nagaland’s first woman elected as Member of Parliament to Rajya Sabha S. Phangon Konyak is representing India at the Conference.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!