Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

30th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

30th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. PRIME (Program for Researchers for Innovation, Market Readiness and Entrepreneurship) என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?

அ. திறன் இந்தியா இயக்கம்

ஆ. NITI ஆயோக் 

இ. NASSCOM

ஈ. NCERT

  • மத்திய சுகாதாரம் & குடும்ப நலத்துறை இணையமைச்சரானவர் அடல் புத்தாக்க இயக்கம் – PRIME (புதுமை, சந்தை தயார்நிலை மற்றும் தொழில்முனைவுக்கான ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்) பிளேபுக் மற்றும் ஸ்டார்ட்-அப் கண்காட்சியை புது தில்லியில் தொடங்கினார். நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான துறைகளிலும் வலுவான உள்நாட்டு உற்பத்தித் திறன்களை உருவாக்குவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2. 1ஆவது செசபிள் சன்வே பார்மென்டெரா-2022 போட்டியை வென்றதை அடுத்து ஹாட்ரிக் பட்டங்களை வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் யார்?

அ. D குகேஷ் 

ஆ. R பிரக்ஞானந்தா

இ. அதிபன் பாஸ்கரன்

ஈ. P ஹரிகிருஷ்ணா

  • இந்திய கிராண்ட்மாஸ்டர் D குகேஷ் 1ஆவது செசபிள் சன்வே பார்மென்டெரா ஓப்பன் – 2022 செஸ் போட்டியில் சாம்பியனானார். இதற்குமுன்பு அண்மைய வாரங்களில் நடந்த லா ரோடா போட்டி மற்றும் மெனோர்கா ஓப்பனை வென்றதால் இது அவருக்கு ஹாட்ரிக் பட்டமாக அமைந்தது. 15 வயதான குகேஷ் 9 சுற்றுகளிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின்மூலம் உலகத் தரவரிசையில் 64ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

3. மார்கோஸ் ஜூனியர் என்பார் எந்த நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. பிலிப்பைன்ஸ் 

ஆ. இந்தோனேசியா

இ. மியான்மர்

ஈ. நேபாளம்

  • மறைந்த பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்கோஸின் மகன் மார்கோஸ் ஜூனியர் அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்றார். மார்கோஸ் ஜூனியர் 30 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்றார்; இந்த எண்ணிக்கை அவருக்கு எதிராக போட்டியிட்ட தாராளவாத வேட்பாளரான லெனி ராப்ரெடோவின் எண்ணிக்கை -யைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். 1986-இல், மார்கோஸ் சீனியரும் அவரது குடும்பத்தினரும் நாட்டில் மக்கள் சக்தி புரட்சியால் நாடுகடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. 17ஆவது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புக்கவனம் பெறும் நாடு எது?

அ. பூட்டான்

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம் 

ஈ. நேபாளம்

  • ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17ஆம் பதிப்பு (MIFF-2022) 2022 மே.29 முதல் ஜூன் 4 வரை மும்பையிலுள்ள திரைப்படப்பிரிவு வளாகத்தில் நடக்கிறது. உலகெங்கிலும் உள்ள ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களை உள்ளடக்கிய இவ்விழாவில் வங்காளதேசம், ‘சிறப்புக்கவனம் பெறும் நாடாக’ உள்ளது.

5. கீழ்காணும் எந்த மாநிலத்தில், நானோ யூரியா (திரவ) ஆலையை பிரதமர் சமீபத்தில் திறந்து வைத்தார்?

அ. குஜராத் 

ஆ. மத்திய பிரதேசம்

இ. இராஜஸ்தான்

ஈ. மகாராஷ்டிரா

  • 2022 மே.28 அன்று, IFFCO, கலோலில் (குஜராத்) நிறுவப்பட்ட நானோ யூரியா (திரவ) ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், ‘சகாகர் சே பிராஸ்பரிட்டி’ குறித்து பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்களிடம் அவர் உரையாற்றினார். தோராயமாக `175 கோடி மதிப்பிலான நானோ யூரியா (திரவ) ஆலையானது வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உழவரின் வருவாயை அதிகரிக்கவும் உதவும். இந்த ஆலை ஒரு நாளைக்கு 500 மில்லி கொள்ளளவுகொண்ட 1.5 இலட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்யும்.

6. இந்திய ஆயுதப்படைகளில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட INS கோமதி என்பது ஓர் _____?

அ. இலகுரக விமானந்தாங்கிக்கப்பல்

ஆ. ஏவுகணை போர்க்கப்பல் 

இ. வேகமான போர்க்கப்பல்

ஈ. தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல்

  • INS கோமதி (வழிசெலுத்தப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல்) தனது 34 ஆண்டு சேவைக்குப்பின் 2022 மே.28 அன்று மும்பையிலுள்ள கடற்படை கப்பல் தளத்தில் சூரிய அஸ்தமனத்தின்போது பணிநீக்கஞ்செய்யப்பட்டது. கோமதி ஆற்றின் பெயரால் அழைக்கப்படும் INS கோமதி, 1988 ஏப்.16 அன்று அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் அவர்களால் பம்பாயில் உள்ள மசகான் டாக் லிட் நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டது.

7. திராவிட அரசியல் தலைவரும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்த காலஞ்சென்ற ‘கலைஞர்’ மு கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச்சிலை, கீழ்காணும் எவ்விடத்தில் திறக்கப்பட்டது?

அ. சென்னை 

ஆ. திருவாரூர்

இ. மதுரை

ஈ. சேலம்

  • திராவிட அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்த மறைந்த ‘கலைஞர்’ மு கருணாநிதி அவர்களின் 16 அடி உயர வெண்கலச்சிலையை (14 அடி உயர பீடத்தில் நிற்கும்) துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா சென்னையில் 2022 மே.28 அன்று திறந்து வைத்தார்.

8. சேவைகளை மேம்படுத்துவதற்காக தேசிய தரவு ஆளுமை கட்டமைப்பை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?

அ. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

ஆ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

இ. வணிகம் & தொழில் அமைச்சகம்

ஈ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

  • பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் சேவைகளை மேம்படுத்துவதற்காக குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை திரட்டுவதற்கான வரைவு தேசிய தரவு ஆளுகை கட்டமைப்பை மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவுக்கொள்கையானது தனிப்பட்ட தரவு அடிப்படையிலான இந்திய தரவுத்தொகுப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்மொழிகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தனிப்பட்ட மற்றும் அநாமதேய தரவுகள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பால் பாதுகாப்பாக அணுகப்படுவதை உறுதிசெய்வதற்கான முறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் குறிப்பிடுகிறது.

9. கூகுள் டிரான்ஸ்லேட் என்னும் மொழிபெயர்ப்புக் கருவியில் அண்மையில் எத்தனை புதிய இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டன?

அ. 2

ஆ. 4

இ. 6

ஈ. 8 

  • கூகுள் சமீபத்தில் அஸ்ஸாமி, போஜ்புரி, சமற்கிருதம், டோக்ரி, கொங்கனி, மெய்ட்டீலோன் (மணிப்பூரி), மிசோ மற்றும் மைதிலி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளை அதன் கூகுள் டிரான்ஸ்லேட் மொழிபெயர்ப்புக் கருவியில் சேர்த்துள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மொத்தம் 133 மொழிகளை உள்ளடக்கிய கூகுள் டிரான்ஸ்லேட் மொழி பெயர்ப்புக்கருவியில் கூகுள் மேலும் 24 மொழிகளைச்சேர்த்துள்ளது. கூகுள் கெச்சுவா (பெரு, பொலிவியா, ஈக்வடார்), குரானி (பராகுவே மற்றும் பொலிவியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா), மற்றும் ஐமாரா (பொலிவியா, பெரு மற்றும் சிலி) ஆகியவற்றை முதன்முறையாக சேர்க்கிறது.

10. அண்மையில் $18.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம்போன, ‘தி ராக்’ என்பதொரு ____?

அ. ஓவியம்

ஆ. வைரம் 

இ. பிரம்மாண்ட படகு

ஈ. சிற்பம்

  • இதுவரை ஏலம் விடப்பட்டதிலேயே மிகப்பெரிய வெண் வைரமான ‘தி ராக்’ 18.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு ($18.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) விற்கப்பட்டது. கோல்ப் பந்தைக் காட்டிலும் சற்று பெரியதாக இருந்த 228.31 காரட் கல், ஜெனிவாவில் கிறிஸ்டியின் ஏல நிறுவனத்தால் விற்கப்பட்டது. $33.7 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெண் வைரத்தின் உலக சாதனையை, ‘தி ராக்’ முறியடிக்கும் என்று அதிகம் நம்பப்பட்டது. இப்பெரிய வைரமானது 2000 -களின் முற்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஜெனிவாவில் அதன் திட்டமிடப்பட்ட விற்பனைக்கு முன் துபாய், தைபே மற்றும் நியூயார்க்கில் அது காட்சிப்படுத்தப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. முதன்முறையாக டிரோன்மூலம் பார்சல் விநியோகம்: குஜராத்தில் அஞ்சல்துறை முயற்சி வெற்றி

நாட்டிலேயே முதன்முறையாக ஆளில்லா விமானம் (டிரோன்)மூலம் இந்திய அஞ்சல் துறை, மருந்து பார்சலை விநியோகம் செய்துள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்தச் சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது.

2. ஒரே வலைதளத்தில் மத்திய அரசின் சேவைகள்

பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு வழிவகுக்கும். ‘ஜன் சமர்த்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் 15 கடன்சார்ந்த திட்டங்களை முதல்கட்டமாக வலைதளத்தில் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் நோக்கில் இந்த வலைதளம் செயல்படுத்தப்படவுள்ளது.

1. PRIME (Program for Researchers for Innovation, Market Readiness and Entrepreneurship) is an initiative of which institution?

A. Skill India Mission

B. NITI Aayog 

C. NASSCOM

D. NCERT

  • Union Minister of State for Health and Family Welfare launched Atal Innovation Mission – PRIME (Program for Researchers for Innovation, Market Readiness and Enterpreneurship) Playbook and Start–up showcase in New Delhi. The program has been launched to create strong indigenous manufacturing capabilities in all critical sectors in the country.

2. Which Indian Grandmaster won hat–trick titles after he clinched the 1st Chessable Sunway Formentera 2022 tournament?

A. D Gukesh 

B. R Praggnanandhaa

C. Adhiban Baskaran

D. P Harikrishna

  • Indian Grandmaster D Gukesh emerged champion in the 1st Chessable Sunway Formentera Open 2022 chess tournament. It was a hat–trick of titles for him as previously won the La Roda tournament and the Menorca Open in recent weeks. The 15–year–old Gukesh remained unbeaten through the nine rounds. With this victory, he moved up to no.64 in the world rankings.

3. Marcos Junior has been elected as the new President of which country?

A. Philippines 

B. Indonesia

C. Myanmar

D. Nepal

  • Marcos Junior, the son of late Philippines dictator Ferdinand Marcos won a landslide Presidential election victory. Marcos Junior secured over 30 million votes, more than double the tally of his nearest rival, liberal candidate Leni Robredo. In 1986, Marcos Senior and his family were chased into exile by the People Power revolution in the country.

4. Which of the following is the focus country of the 17th Mumbai International Film Festival?

A. Bhutan

B. Sri Lanka

C. Bangladesh

D. Nepal

  • The 17th edition of the Mumbai International Film Festival for Documentary, Short Fiction and Animation Films (MIFF–2022) is being held from May 29 to June 4, 2022 at Films Division Complex, Mumbai. Bangladesh is the ‘country of focus’ at the festival which will include documentaries, short stories and animation films from around the world.

5. In which state, the Prime Minister recently inaugurated Nano Urea (Liquid) plant?

A. Gujarat 

B. Madhya Pradesh

C. Rajasthan

D. Maharashtra

  • On May 28, 2022 Prime Minister Narendra Modi inaugurated the Nano Urea (Liquid) Plant manufactured at IFFCO, Kalol (Gujarat). He also addressed the leaders of various cooperative institutions on ‘Sahakar Se Prosperity’ at Mahatma Mandir in Gandhinagar.
  • The Nano Urea (Liquid) Plant, approximately Rs.175 crore, will provide the means to help farmers increase productivity and increase their income. The plant will produce around 1.5 lakh bottles of 500 ml capacity per day.

6. INS Gomti, which was recently decommissioned after 34 years of service to Indian armed forces, was a__?

A. Light Aircraft Carrier

B. Missile Frigate 

C. Fast Battleship

D. Attacker Submarine

  • INS Gomti (a guided missile frigate) was decommissioned at sunset on 28 May 2022 at the Naval Dockyard in Mumbai after 34 years of service. INS Gomti takes its name from the vibrant river Gomti and was commissioned on 16 April 1988 by Defense Minister KC Pant at Mazagon Dock Limited, Bombay.

7. A 16–feet tall bronze statue of Dravidian political leader and five–time Chief Minister of Tamil Nadu Late ‘Kalaignar’ M Karunanidhi was unveiled at ______?

A. Chennai 

B. Thiruvarur

C. Madurai

D. Salem

  • Vice President M Venkaiah unveiled a 16–feet tall bronze statue (standing on a 14–feet high pedestal) of Dravidian political leader and five–time Chief Minister of Tamil Nadu Late ‘Kalaignar’ M Karunanidhi in Chennai on May 28, 2022.

8. Which ministry has released the draft National Data Governance Framework to improve services?

A. Ministry of Information and Broadcasting

B. Ministry of Science and Technology

C. Ministry of Commerce and Industry

D. Ministry of Electronics and IT 

  • The Ministry of Electronics and IT (MeitY) has released the draft National Data Governance Framework for mobilizing non–personal data of citizens for use by both public and private entities to improve services. The draft policy proposes the launch of a non–personal data–based India dataset programme. Addresses methods and regulations to ensure that non–personal and anonymous data from both government and private entities are securely accessible by the research and innovation ecosystem.

9. How many new Indian languages have been added in Google Translate language translation tool recently?

A. 2

B. 4

C. 6

D. 8 

  • Google has recently added 8 Indian languages including Assamese, Bhojpuri, Sanskrit, Dogri, Konkani, Meiteilon (Manipuri), Mizo, and Maithili. Google has added 24 more languages to its Google Translate language translation tool, covering a total of 133 languages used around the world. Google is also adding Quechua (Peru, Bolivia, Ecuador), Guarani (Paraguay and Bolivia, Brazil and Argentina), and Aymara (Bolivia, Peru, and Chile) for the first time.

10. ‘The Rock’, which was auctioned recently for USD 18.8 million, is a _____?

A. Painting

B. Diamond 

C. Mega Yacht

D. Sculpture

  • ‘The Rock’, the biggest white diamond ever auctioned, was sold for a price of 18.6 million Swiss francs (USD 18.8 million). The 228.31–carat stone, which was larger than a golf ball, was sold in Geneva by Christie’s auction house. There were high hopes that ‘The Rock’ would break the world record for a white diamond, which stands at USD 33.7 million. The large diamond was extracted from a mine in South Africa in the early 2000s and has been displayed in Dubai, Taipei and New York before its scheduled sale in Geneva.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!