Tnpsc

30th September 2020 Current Affairs in Tamil & English

30th September 2020 Current Affairs in Tamil & English

30th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

30th September Tamil Current Affairs 2020

30th September English Current Affairs 2020

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Recently, the Lok Sabha passed the Companies (Amendment) Bill, 2020. The original Companies (Regulation) Act was passed in which year?

[A] 2005

[B] 2008

[C] 2013

[D] 2017

  • The Companies Act, 2013 is amended by the Companies (Amendment) Bill, 2020 which was introduced by the Minister for Corporate Affairs. The Bill decriminalizes company law offences and allows direct foreign listing of companies.
  • The Bill seeks to establish benches of the National Company Law Appellate Tribunal. These shall ordinarily sit in New Delhi or such other place as may be notified.

2. The Banking Regulation Act which seeks to regulate the functioning of banks and provides details on various aspects such as licensing, management and operations of banks was passed in the year?

[A] 1949

[B] 1953

[C] 1956

[D] 1967

  • The Banking Regulation Act was passed in 1949 and was recently amended by the Banking Regulation (Amendment) Bill, 2020. This amendment will allow RBI to initiate a scheme for amalgamation or reconstruction of a bank. It also puts cooperative banks under RBI ambit.

3. What is the name of the hackathon launched by Indian Council of Agricultural Research under National Agricultural Higher Education Project to promote innovation in farm mechanization?

[A] PRATIGYA

[B] KRITAGYA

[C] SAMYUGYA

[D] None of the above

  • The Indian Council of Agricultural Research (ICAR) under National Agricultural Higher Education Project (NAHEP) launched a hackathon named as ‘KRITAGYA’ in order to promote potential technology solutions for enhancing farm mechanization with special emphasis on women friendly equipments.

4. The scheme “Building Awareness on Intellectual Property Rights (IPR)” is implemented by which which Ministry?

[A] Ministry of Micro, Small & Medium Enterprises

[B] Ministry of Housing & Urban Affairs

[C] Ministry of Law & Justice

[D] Ministry of Commerce & Industry

  • The Ministry of Micro, Small and Medium Enterprises (MSME) is responsible for implementing the scheme “Building Awareness on Intellectual Property Rights (IPR)” in order to encourage registration of IPR by MSMEs to provide financial assistance.

5. In which year, the Second National Commission on Labour was setup?

[A] 2002

[B] 2006

[C] 2010

[D] 2016

  • The Second National Commission on Labour was set up in 2002 and recommended a separate law for small scale units with less stringent provisions for conditions such as payment of wages, welfare facilities, social security, etc

6. Which Indian State has the highest number of nursing colleges?

[A] Karnataka

[B] Kerala

[C] Madhya Pradesh

[D] Himachal Pradesh

  • Karnataka has the highest number nursing colleges in India. It has 314 total number of colleges among which 13 are government colleges and 301 are private colleges.
  • Health is a subject of State list, therefore opening of new nursing colleges falls under the purview of the respective state government.

7. Shinkun La Tunnel connects which two Indian states / union territories?

[A] Ladakh & Jammu – Kashmir

[B] Ladakh & Himachal Pradesh

[C] Himachal Pradesh & Uttarakhand

[D] Sikkim & Uttarakhand

  • The National Highways & Infrastructure Development Corporation Limited (NHIDCL) under the Ministry of Road, Transport & Highways has speeded up the detailed project report (DPR) work on the World’s Longest High–Altitude Shinkun La Tunnel (13.5 km long) along with its approach roads in UT of Ladakh and Lahaul–Spiti district of Himachal Pradesh.

8. Recently, the Cabinet Committee for Economic Affairs approved interim extension to Rashtriya Uchchatar Shiksha Abhiyan. In which year, this scheme was launched?

[A] 2010

[B] 2013

[C] 2015

[D] 2017

  • The Cabinet Committee for Economic Affairs approved the second phase of the centrally sponsored Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) for a period of three years i.e. 1st April 2017 to 31st March 2020. The scheme was launched in 2013.

9. Recently, The Government of India integrated which portal with the Geographic Information System (GIS) system of six states to provide an update on land availability?

[A] Industrial Information System

[B] Agricultural Information System

[C] Land & Revenue Information System

[D] All of the above

  • The Government of India has integrated the Industrial Information System (IIS) portal with the Geographic Information System (GIS) of six states to provide information and updates on land availability and plot level information to investors anywhere in the world on real time bass and help them to make informed decisions. Industrial Information System (IIS) portal is a GIS–enabled database of industrial areas/clusters across the country.

10. Recently, the Parliament passed Jammu and Kashmir Official Languages Bill, 2020. Which among the following languages are included in the list of official languages in the Union Territory of Jammu and Kashmir?

[A] Kashmiri

[B] Dogri

[C] Hindi

[D] All of the above

  • The Parliament of India passes the Jammu and Kashmir Official Languages Bill, 2020 which take into account the inclusion of Kashmiri, Dogri and Hindi in the list of official languages in the Union Territory of Jammu and Kashmir, in addition to the existing Urdu and English.

நடப்பு நிகழ்வுகள்

1.அண்மையில், நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2020’ஐ இந்திய மக்களவை நிறைவேற்றியது. அசல் நிறுவனங்கள் (ஒழுங்காற்றுதல்) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

அ. 2005

ஆ. 2008

இ. 2013

ஈ. 2017

  • நிறுவனங்கள் சட்டம், 2013 ஆனது மத்திய பெருநிறுவன விவகார அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2020’ஆல் திருத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறுவனத்தின் சட்ட ரீதியிலான குற்றங்களை மறுபரிசீலனை செய்கிறது. மேலும், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அமர்வுகளை நிறுவுவதற்கும் இம்மசோதா முற்படுகிறது. இந்த அமர்வுகள், பொதுவாக புது தில்லியில் அல்லது அறிவிக்கப்படக்கூடிய வேறு இடங்களில் அமைந்திருக்கும்.

2.வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த முற்படும் மற்றும் வங்கிகளின் உரிமம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவரங்களை வழங்கும் வங்கி ஒழுங்காற்றுதல் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

அ. 1949

ஆ. 1953

இ. 1956

ஈ. 1967

  • கடந்த 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வங்கி ஒழுங்காற்றுதல் சட்டமானது அண்மைய 2020ஆம் ஆண்டு வங்கி ஒழுங்காற்றுதல் (திருத்த) மசோதாவால் திருத்தப்பட்டது. இத்திருத்தம், ஒரு வங்கியை ஒன்றிணைத்தல் அல்லது சீரமைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுமதியளிக்கிறது. இது கூட்டுறவு வங்கிகளையும் RBI’இன்கீழ் கொண்டுவருகிறது.

3.வேளாண் எந்திரமயமாக்கலில் புத்தாக்கங்களை ஊக்கப்படுத்துவதற்காக, தேசிய வேளாண்மை உயர் கல்வித்திட்டத்தின்கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் தொடங்கிய ஹேக்கத்தானின் பெயரென்ன?

அ. பிரதிக்யா

ஆ. கிரிதக்யா

இ. சம்யுக்யா

ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

  • பெண்களுக்கு உதவியாக இருக்கும் உபகரணங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, வேளாண் எந்திரமயமாக்கலை மேம்படுத்துவதற்கு சாத்தியமான தொழில்நுட்ப தீர்வுகளை மேம்படுத்துவதற்காக, “கிரிதக்யா” என்ற பெயரில் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டிக்கு தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின்கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

4. “அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வைக் கட்டமைத்தல்” என்ற திட்டத்தை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ. குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

ஆ. வீட்டுவசதி & நகரப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

இ. சட்டம் & நீதித்துறை அமைச்சகம்

ஈ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

  • நிதியுதவி பெறுவதற்காக MSME’களால் IPR பதிவு செய்துகொள்ளப்படுதலை ஊக்குவிக்கும் பொருட்டு, “அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வைக் கட்டமைத்தல்” (IPR) என்ற திட்டத்தை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் (MSME) செயல்படுத்துகிறது.

5.தொழிலாளர் தொடர்பான இரண்டாவது தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2002

ஆ. 2006

இ. 2010

ஈ. 2016

  • தொழிலாளர் தொடர்பான இரண்டாவது தேசிய ஆணையமானது கடந்த 2002’இல் அமைக்கப்பட்டது. ஊதியம் வழங்குதல், நலத்திட்ட வசதிகள், சமூகப் பாதுகாப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு குறைந்த கடுமையான விதிமுறைகளைக்கொண்ட சிறிய அளவிலான அலகுகளுக்கு ஒரு தனிச்சட்டத்தை இந்த ஆணையம் பரிந்துரைத்தது.

6.அதிக எண்ணிக்கையிலான செவிலியர் கல்லூரிகளைக் கொண்ட இந்திய மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. கேரளம்

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

  • நாட்டில் அதிக எண்ணிக்கையிலான செவிலியர் கல்லூரிகளை கர்நாடக மாநிலம் கொண்டுள்ளது. மொத்தம் 314 கல்லூரிகளை அம்மாநிலம் கொண்டுள்ளது. அவற்றுள் 13 அரசு கல்லூரிகளும் 301 தனியார் கல்லூரிகளும் ஆகும். உடல்நலம் என்பது மாநிலப் பட்டியலின் கீழ் உள்ள ஒரு துறையாகும்; எனவே புதிய செவிலியர் கல்லூரிகளைத் திறப்பது என்பது அந்தந்த மாநில அரசுகளின்கீழ் உள்ளது.

7.கீழ்க்காணும் எந்த இரு இந்திய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை ஷிங்குன் லா சுரங்கப்பாதை இணைக்கிறது?

அ. லடாக் & ஜம்மு–காஷ்மீர்

ஆ. லடாக் & ஹிமாச்சல பிரதேசம்

இ. ஹிமாச்சல பிரதேசம் & உத்தரகண்ட்

ஈ. சிக்கிம் & உத்தரகண்ட்

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NHIDCL) உலகின் மிகநீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப்பாதை (13.5 கிமீ) பணியை விரைவுபடுத்தியுள்ளது. இந்தச் சுரங்கப்பாதையுடன் இணையும் லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹால்-ஸ்பிட்டி மாவட்டச்சாலை பணியும் வேகமாக நடைபெறுகிறது. இச்சுரங்கப்பாதை பணி நிறைவடையும்போது, மணாலி-கார்கில் நெடுஞ்சாலை ஆண்டு முழுவதும் போக்குவரத்துக்கு திறந்திருக்கும்.

8.அண்மையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இராஷ்டிரிய உச்சதார் சிக்ஷா அபியானுக்கான இடைக்கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2010

ஆ. 2013

இ. 2015

ஈ. 2017

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நடுவணரசின் நிதியுதவிபெற்ற இராஷ்டிரிய உச்சதார் சிக்ஷா அபியானின் 2ஆம் கட்ட திட்டத்திற்கு 2017 ஏப்ரல்.1 முதல் 2020 மார்ச்.31 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு ஒப்புதல் அளித்தது. கடந்த 2013ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

9.அண்மையில், நிலம் கிடைப்பு குறித்த நிகழ்நேர தகவலை வழங்குவதற்காக, 6 மாநிலங்களின் புவிக் கோளத் தகவல் அமைப்புடன் (GIS) எந்த வலைத்தளத்தை இந்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது?

அ. தொழிற்துறை தகவல் அமைப்பு

ஆ. வேளாண் தகவல் அமைப்பு

இ. நிலம் & வருவாய் தகவல் அமைப்பு

ஈ. மேற்கண்ட அனைத்தும்

  • உலகில் எங்கிருந்தும் முதலீட்டாளர்களுக்கு நிகழ்நேர அடிப்படையில் நிலம் கிடைப்பு தகவல்களையும் புதுப்பித்தல்களையும் வழங்குவதற்காக, இந்திய அரசு, 6 மாநிலங்களின் புவிக்கோளத் தகவல் அமைப்பு (GIS)’உடன் தொழிற்துறை தகவலமைப்பு (IIS) தளத்தை ஒருங்கிணைத்துள்ளது.
  • தொழிற்துறை தகவலமைப்பு தளம் என்பது நாடு முழுவதுமுள்ள தொழிலக பகுதிகள் / தொகுதிகளின் GIS வசதிகொண்ட தரவுத்தளமாகும்.

10.அண்மையில், ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா, 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அலுவல்பூர்வ மொழிகளின் பட்டியலில், பின்வரும் மொழிகளுள் எ(து)வை சேர்க்கப்பட்டுள்ள(து)ன?

அ. கஷ்மீரி

ஆ. ஹிந்தி

இ. டோக்ரி

ஈ. மேற்கண்ட அனைத்தும்

  • ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அது கஷ்மீரி, டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், ஏற்கனவே அலுவல்பூர்வ மொழிகளாக உள்ள உருது & ஆங்கிலத்திற்கு கூடுதலாக சேர்க்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • மின்சார போக்குவரவுக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக, FAME இந்தியா திட்டத்தின் 2ஆம் கட்டத்தின்கீழ் மகாராட்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 மின்சார பேருந்துகளுக்கும், தமிழ்நாடு, மபிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேரில் 241 மின்னேற்ற நிலையங்களுக்கும் இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் 25 மின்னேற்ற நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!