Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

30th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

30th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 30th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த அபாயகரமான இரசாயனத்தை சேமிப்பதற்கான விதிகளை இந்தியா சமீபத்தில் தளர்த்தியது?

அ) சோடியம் குளோரைடு

ஆ) நைட்ரிக் அமிலம்

இ) கந்தக அமிலம்

ஈ) அம்மோனியம் நைட்ரேட் & கால்சியம் கார்பைடு 

  • மேம்பட்ட பாதுகாப்பிற்காக, அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் கார்பைடு சேமிப்பு மற்றும் கையாளுதல் தொடர்பான விதிகளை இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) திருத்தியுள்ளது மற்றும் தளர்த்தியுள்ளது. துறைமுகத்தில் 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகள் சேமித்து வைத்ததன் காரணமாக ஏற்பட்ட கொடிய பெய்ரூட் (லெபனானின் தலைநகரம்) வெடி விபத்தின் பின்னணியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2. 2025-26ஆம் நிதியாண்டு வரை நிலையான நிதியுதவி தரும் விதமாக, இந்தியாவில், `30,000 கோடி கடன் வழங்க முடிவுசெய்து உள்ள வங்கி எது?

அ) பாரத ஸ்டேட் வங்கி

ஆ) ஆக்சிஸ் வங்கி 

இ) ஐசிஐசிஐ வங்கி

ஈ) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

  • இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, 2025-26ஆம் நிதியாண்டு வரை நிலையான நிதியுதவி வழங்கும் விதமாக `30,000 கோடி கடன் வழங்க ஆக்ஸிஸ் வங்கி முடிவுசெய்துள்ளது.
  • இந்த உறுதிப்பாடு, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதை நோக்கமாகக்கொண்டு உள்ளது. நேர்மறையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையான சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மொத்தக் கடன் வழங்கவும் ஆக்ஸிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

3. ‘உலக அல்சைமர் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 20

ஆ) செப்டம்பர் 21 

இ) செப்டம்பர் 22

ஈ) செப்டம்பர் 23

  • ஆண்டுதோறும் செப்.21 அன்று உலக அல்சைமர் தினமாக கடைபிடிக்க -ப்படுகிறது. இந்த நாள் அல்சைமர் நோய், அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை கையாளும் முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்சைமர் நோய் என்பது மூளையின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை குறைக்கின்ற ஒரு நோயாகும். முதியோர்களில் பொதுவாக காணப்படும் ஞாபக மறதி நோய்க்கு இது காரணமாகும்.

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற NDEAR மற்றும் NETF என்பது எந்த மத்திய அமைச்சகத்துடன் தொடர்புடைய முன்னெடுப்புகளாகும்?

அ) மின்துறை அமைச்சகம்

ஆ) கல்வி அமைச்சகம் 

இ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • “டிஜிட்டல் கல்விமூலம் தரமான கல்வியை அனைத்து இடங்களிலும் கிடைக்கச் செய்வது” குறித்த கூட்டத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நடத்தினார். ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூழலியலை உருவாக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் இணையத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
  • ஸ்வயம் பிரபா போன்ற முன்முயற்சிகளை வலுப்படுத்தவும், தேசிய டிஜிட்டல் கல்வி கட்டமைப்பு மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கவும் அவர் வலியுறுத்தினார். அவை 2020 தேசிய கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்டது.

5. G24 அரசாங்கங்களுக்கு இடையேயான சங்கத்தின் தலைமை நிலையம் அமைந்துள்ள இடம் எது?

அ) வாஷிங்டன் டிசி 

ஆ) ஜெனீவா

இ) பாரிஸ்

ஈ) ரோம்

  • சர்வதேச செலவாணி விவகாரங்கள் மற்றும் மேம்பாடு குறித்த 24 அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது கடந்த 1971’இல் பெருவின் லிமாவில் நிறுவப்பட்டது. இது வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. G77’இன் ஓர் அத்தியாயமான இது வளரும் நாடுகளை செலவாணி மற்றும் மேம்பாட்டு நிதி சிக்கல்களில் ஒருங்கிணைக்கிறது.
  • இந்தியா, மற்ற 24 (G24) உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, சமநிலை வரி போன்ற நடவடிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்மொழியப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் வரி ஒப்பந்தமானது 100 முன்னணி நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அது வளரும் நாடுகளுக்கு போதுமான வருவாய்க்கு வழிவகுக்காது என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.

6. ‘டூயிங் பிசினஸ்’ அறிக்கை என்பது எந்நிறுவனத்தின் முதன்மை வெளியீடாகும்?

அ) IMF

ஆ) உலக வங்கி 

இ) WTO

ஈ) NITI ஆயோக்

  • ‘டூயிங் பிசினஸ்’ அறிக்கை உலக வங்கியின் முதன்மை வெளியீடாகும். 2018 மற்றும் 2020ஆம் ஆண்டின் அறிக்கைகளில் தரவு முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அறிக்கையின் எதிர்கால வெளியீடுக -ளை உலக வங்கி நிறுத்தியுள்ளது. சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவும் இதில் ஈடுபட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

7. ADB’இன் சமீபத்திய மதிப்பீட்டின்படி, 2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் என்ன?

அ) 14%

ஆ) 12%

இ) 10% 

ஈ) 8%

  • ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) இந்தியாவின் 2020-21ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை 10% ஆக குறைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 11% எனக் கணிக்கப்பட்டு இருந்தது. 2ஆவது COVID அலை காரணமாக ஏற்படும் இடையூறுகளே விகிதக் குறைப்புக்குக் காரணமாகும்.
  • 2021-22ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சிக்கணிப்பானது முந்தைய 7 சதவீதத்திலிருந்து 7.5%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2ஆவது அலையின் சீர்குலைவுகள் சேவைகள், உள்நாட்டு நுகர்வு மற்றும் நகர்ப்புற முறை சாரா துறையை மோசமாக பாதித்துள்ளது. 2020-21 நிதியாண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. இந்தியாவின் அதிக உயரத்தில் அமைந்துள்ள கல்வியமைப்பான SECMOL, அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ) சிக்கிம்

ஆ) லடாக் 

இ) உத்தரகாண்ட்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • லடாக்கின் மாணவர்களின் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (SECMOL) லடாக் யூனியன் பிரதேசத்தில் லைட் பிடிலிட்டி (LiFi) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய இணைப்பு பெற்ற முதல் நிறுவனமாக மாறி உள்ளது. SECMOL என்பது இந்தியாவின் அதிவுயரத்தில் அமைந்துள்ள கல்விநிறுவனமாகும். LiFi அமைப்புகள் அதிவேக தரவு இணைப்புகளை வழங்குகின்றன.

9. AC001 என்ற பெயரில் மின்சார வாகனங்களுக்கான உள்நாட்டு மின்னேற்றியை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ) DRDO

ஆ) ISRO

இ) ARAI 

ஈ) CSIR

  • இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) AC001 எனப்பெயரிடப்பட்ட மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றியை உள்நாட்டிலேயே வடி
    -வமைத்து உருவாக்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ்மூலம் இது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போது மின்சார வாகனங்களு -க்கான பெரும்பாலான மின்னேற்றி கூறுகள் இறக்குமதி செய்யப்படுகி -ன்றன. இக்கூறுகளின் உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிக்கும்.

10. “டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு” பிரிவின்கீழ், 2021’இன் கொள்முதல் விருதுகளில் ‘சிறப்பு CIPS’ விருது பெற்றுள்ள இந்தியாவின் தொழில்நுட்ப முன்னெடுப்பு எது?

அ) SDG டாஷ்போர்டு

ஆ) GeM 

இ) சாம்பியன்ஸ் போர்டல்

ஈ) GST போர்டல்

  • இந்திய அரசின் மின்னணு சந்தைத்தள (GeM) முன்னெடுப்பு, “டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு” பிரிவின்கீழ், 2021’இன் கொள் முதல் விருதுகளில் சிறப்பு CIPS விருது பெற்றுள்ளது.
  • இந்த விருது வழங்கும் விழா இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது. GeM என்பது இந்திய அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான ஓர் அர்ப்பணிக்கப்பட்ட இணையவழிச் சந்தையாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு – ‘பிஎம்-போஜன்’ என்ற பெயரில் மதிய உணவு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிஎம்-போஜன் என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது. தற்போது பள்ளிகளில் நடை முறையில் இருக்கும் தேசிய மதிய உணவு திட்டத்துக்கு பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 30,795 கோடி செலவிடப்படும். இத்திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஒருவேளை சூடான உணவு வழங்கப்படும்.

பிஎம்-போஜன் திட்டம் தொடர் பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிஎம்-போஜன் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர். 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான 5 வருட காலத்துக்கு இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.54,061 கோடியே 73 லட்சம் செலவிடும். இது தவிர உணவு தானியத்துக்கான கூடுதல் செலவாக ரூ.45 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏற்கும்.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.31,733 கோடியே 17 லட்சம் செலவு ஏற்படும். எனவே, இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட் ரூ.1 லட்சத்து 30,794 கோடியே 90 லட்சமாக இருக்கும். அரசு மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் இயங்கும் மழலையர் வகுப்புகள் மற்றும் அங்கன்வாடிகள் தற்போதுஇத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த வகுப்புகளுக்கும் இத்திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்படும். பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் ஏற்படுத்தவும் அரசு ஊக்குவிக்கும். இவ்வாறு மத்திய அரசின் அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

2. குஜராத் கடற்பகுதியில் புதிய புயல் ‘ஷாகீன்’

குஜராத் கடற்பகுதியில் ‘ஷாகீன்’ என்ற புதிய புயல் நாளை (அக்.1) காலைக்குள் உருவாகி பாகிஸ்தானை நோக்கி செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயலானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்தது. இப்புயலில் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து, நேற்று தெற்கு குஜராத் மீதிருந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இவை காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். பிறகு இது வெள்ளிக்கிழமை (அக்.1) காலைக்குள் வட அரபிக் கடலில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இப்புயலுக்கு கத்தார் நாடு அளித்த பரிந்துரையின்படி ‘ஷாகீன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை. என்றாலும் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் மீனவர்கள் அக்டோபர் 2 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா, குஜராத் கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். 55 முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘தவுக்தே’ புயலுக்குப் பிறகு அரபிக் கடலில் உருவாகும் இரண்டாவது புயல் இதுவாகும்.

இதனிடையே குஜராத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. வடக்கு கொங்கன், குஜராத் கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

3. சிங்காரச் சென்னை 2.0 திட்டம்; ரூ.500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (செப். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழக முதல்வர், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சரியான முன்னேற்றம் இல்லாததால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 2021-22ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தைச் செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சரியான முன்னேற்றம் இல்லாததால் இக்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சென்னை மாநகரக் கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும், சிங்காரச் சென்னை 2.0 என்னும் புதிய திட்டம் இவ்வரசால் தீட்டப்பட்டு இவ்வாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் வேறு பல திட்டங்களை இணைத்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என அறிவித்தார்.

4. மதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்

நாட்டில் முதல் முறையாக 2 அடுக்கு சாலையாக அமையவுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

5. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் – நெல் விற்பனைக்கு பதிவு செய்ய புதிய செயலி :

திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனைக்கு பதிவு செய்ய e-DPC என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரிபருவத்தில், அரசு உத்தரவின்படி, இதுவரை 48 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-22-ல் விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் தேவையின்றிநீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும் எளிதில் பதிவுசெய்து உடனடியாக விற்பனைசெய்யவும் ஏதுவாக தமிழக அரசு e-DPC என்ற புதியசெயலியை அறிமுகம் செய்துள்ளது.

இச்செயலியை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in என்ற இணைய தளங்களில் காணலாம். இச்செயலியில் விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார் எண், புல எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலியில் விவசாயிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி பதிவேற்றம் செய்யலாம்.

6. 17 மருத்துவ சிகிச்சைகளை உள்ளடக்கிய கலைஞரின் – வரும்முன் காப்போம் திட்டம் தொடக்கம் : பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

வாழப்பாடியில் நேற்று கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இணைக்கவும், ஓராண்டில் 1,250 முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் திட்ட’ தொடக்கவிழா சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசும்போது, “முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தில் இருதயம், மகப்பேறு, எலும்பு சிகிச்சை, பல், கண் என 17 மருத்துவப் பிரிவுகளை உள்ளடக்கி, கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கிராமம் தொடங்கி, நகரம் வரை ஓராண்டில், 1,250 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் முகாம்கள் மூலம்மக்களுக்கு நோய்களை கண்டறிந்து மருந்து, மாத்திரை வழங்கப்படும். சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். வரும்முன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துடன் இணைக்கப்படும்” என்றார்.

7. 60 வயது முதியோர் வேலை தேட புதிய இணையதளம் தொடக்கம்: மத்திய சமூக நீதித் துறை அறிமுகம்

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் மீண்டும் வேலைவாய்ப்பை தேட, புதிய இணையதளத்தை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் நாளை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, கடந்த 2001-ம்ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிஇந்த எண்ணிக்கை 10.4 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 60 வயதைக் கடந்த முதியோர் பலர் பல்வேறு காரணங்களால் மீண்டும் வேலை செய்ய விருப்பப்படுகின்றனர். அதை கருத்தில் கொண்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம் முதல் முறையாக புதிய இணையதளத்தை அறிமுகம் செய்கிறது. நாட்டில் 60 வயது அல்லதுஅதற்கு மேற்பட்ட முதியோருக்கு மீண்டும் கவுரவமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கம். இதற்காக ‘சீனியர் ஏபுள் சிட்டிசன் பார் ரீ-எம்ப்ளாய்மென்ட் இன் டிக்னிட்டி (சேக்ரட்) போர்ட்டல்’ என்ற பெயரில்மத்திய அமைச்சகம் இணையதளத்தை அறிமுகம் செய்கிறது. இது நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. மீண்டும் வேலை செய்ய விரும்பும் முதியோர் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

8. ஹாசனில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்: உரிமையை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி

கர்நாடக மாநிலம் கொப்பலில் கோயிலில் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல குல்பர்காவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ஹாசன் மாவட்டத்தின் தின்டகூரு உள்ளிட்ட பிற இடங்களிலும் தலித் மக்களை ஆதிக்க சாதியினர் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னராயபட்டணா வட்டாட்சியர் ஜே.பி.மாருதி அனைத்து சாதியினரையும் அழைத்து தின்டகூருவில் கூட்டம் நடத்தினார். இதை பெரும்பாலான சாதியினர் புறக்கணித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாரிகள் மற்றும் போலீஸார் முன்னிலையில் தலித் மக்கள் தின்டகூரு கோயிலுக்குள் நுழைந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து தின்டகூருவை சுற்றியுள்ள சோமேஷ்வரா கோயில், மஹாலட்சுமி கோயில், கேசவா கோயில் ஆகியவற்றிலும் நேற்று போலீஸார் முன்னிலையில் தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்தினர்

இதுகுறித்து 75 வயது திம்மையாகூறும்போது, “நான் இதேகிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இதுவரை கோயிலுக்குள் சென்றதில்லை. திருவிழா நாட்களில் கோயிலுக்கு வெளியே நின்று வணங்குவேன். என் அப்பா, தாத்தாவும் இந்த கோயிலுக்குள் நுழைந்ததில்லை. முதல் முறையாக கோயிலுக்குள் பூஜை செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். பீர் ஆர்மி அமைப்பின் நிர்வாகி சந்தோஷ் கூறும்போது, “ஹாசன் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக தலித் மக்களுக்கு மறுக்கப் பட்டிருந்த ஆலய நுழைவு உரிமைபெற்றது பெரிய சாதனை ஆகும். இதற்காக நீண்ட காலமாக தலித் மக்கள் போராடி வந்துள்ளனர்.

ஏராளமானோர் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். தற்போது கோயிலுக்கு சென்று பூஜை செய்ததை விட, அதற்கான உரிமையை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். தலித் மக்களின் ஆலய நுழைவை தொடர்ந்து தின்டகூருவை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஹாசன் மாவட்டம் தின்டகூருவில் உள்ள மல்லேஸ்வரா கோயிலுக்குள் சென்று வழிபட்ட தலித் மக்கள்.

9. இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி

இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர். சமீபத்தில் என்சிஆரின் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், 2.08 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார் கல்யாணி பொடேகர். இதன் மூலம் இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார் கல்யாணி பொடேகர். இதற்குமுன்னர் கல்யாணி 2.16 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். இந்த சாதனையை தற்போது டுகாட்டி பனிகல் வி 4 சூப்பர் பைக் மூலம் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து கல்யாணி பொடேகர் கூறும்போது, “மோட்டார் சைக்கிள்கள், ஓட்டப்பந்தயம், வேகம் இவை அனைத்தும் என்னை கவர்ந்தது. மற்ற குழந்தைகள் சைக்கிளில் மிதிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டிருந்த வயதில், நான் 9 வயதிலேயே துல்லியமாக இருக்க கனரக இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருந்தேன். என் கால்கள் சரியாக தரையை தொடாத நிலையில் அப்பாவின் ஆர்எக்ஸ் 100 பைக்கை ஓட்டத் தொடங்கினேன். எனது அப்பா பின்னால் அமர்ந்து கொண்டு கியர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொடுத்தார்.

நான் வளர்ந்தவுடன், பைக்பந்தயத்தில் பங்கேற்க விரும்பினேன். பின்னர் 2017 ல், நான் கலிபோர்னியா சூப்பர்பைக் பள்ளியில் பயிற்சி பெற்றேன், பைக்கை நான் நன்றாக நிர்வகிக்க மற்றும் சவாரி செய்ய முடிந்தாலும், என் கால்கள் தரையை எட்டாததால் தெளிவற்ற காரணத்தைக் கூறி, ஒரு குறிப்பிட்ட பிராண்ட் மோட்டார் சைக்கிளை சவாரி செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு வருடம் கழித்து, அதே பைக்கில் நான் சென்றபோது எனக்குவாய்ப்பு வழங்க மறுத்த அதே நபர் என்னுடன் செல்ஃபி எடுத்தார். எனது அத்தைகூட இந்த பைக்கிற்கு எப்படி பெட்ரோல் நிரப்புவாய்? அதனால் நீ வேலைக்குச் செல் என ஏளனமாக கூறுவார். அவர்களது கருத்துகளை எடுத்துக் கொண்டு அவர்கள் மீதே அடியெடுத்து வைத்து முன்னேறிச் செல்ல வேண்டும்” என்றார்.

கல்யாணி பொடேகர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். உலகின் உயரமான பந்தயமான ரைடுடி ஹிமாலயா, இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப் ஆதரவளிக்கும் இந்திய தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கல்யாணிகலந்து கொண்டுள்ளார்.

10. பள்ளி மாணவா்களுக்கு பிரதமா் ஊட்டச்சத்து திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; 11.80 கோடி போ் பலனடைவா்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க வகை செய்யும் ‘பிரதமா் ஊட்டச்சத்து திட்டத்துக்கு’ (பிஎம்-போஷண்) மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. நாடு முழுவதுமுள்ள 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் சுமாா் 11.80 கோடி மாணவா்கள் இத்திட்டத்தின் வாயிலாகப் பலனடைவா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘பிரதமரின் போஷண் சக்தி நிா்மாண்’ (பிஎம்-போஷண்) திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் 2025-2026-ஆம் நிதியாண்டு வரை சூடான மதிய உணவு வழங்கப்படவுள்ளது. இதே நோக்கில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டமானது பிஎம்-போஷண் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் மாணவா்கள், பால்வாடி மையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது

புதிய திட்டத்தில் மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக மத்திய தகவல்-தொடா்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். ரூ.1.3 லட்சம் கோடி செலவு: திட்டம் தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பிஎம்-போஷண் திட்டத்துக்கு 2025-26-ஆம் நிதியாண்டு வரை ரூ.5,4061.73 கோடியை மத்திய அரசும், ரூ.31,733.17 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் செலவு செய்யவுள்ளன. உணவு தானியங்களுக்கான சுமாா் ரூ.45,000 கோடி கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்கும். ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் பட்ஜெட் மதிப்பு ரூ.1,30,794.90 கோடியாக உள்ளது. பிஎம்-போஷண் திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 11.20 லட்சம் பள்ளிகளில் பயிலும் 11.80 கோடி மாணவா்கள் பலனடைவா்.

உள்ளூா் பொருளாதாரம் மேம்படும்: பண்டிகை காலங்களில் மாணவா்களுக்கு சிறப்பு உணவு வழங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாணவா்களுக்கு இயற்கை மற்றும் தோட்டங்கள் தொடா்பான அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் வளா்க்கப்படும். ரத்தசோகை அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களில் உள்ள மாணவா்களுக்குக் கூடுதல் ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதில் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும். இத்திட்டத்துக்கு உள்ளூா் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உள்ளூா் பொருளாதாரம் மேம்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இசிஜிசி நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிட ஒப்புதல்: பொதுத் துறை நிறுவனமான ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை (இசிஜிசி) பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நடவடிக்கை மூலமாக 5 ஆண்டுகளில் ரூ.4,400 கோடி வரை முதலீடுகளை ஈா்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அடுத்த நிதியாண்டில் இசிஜிசி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். எவ்வளவு பங்குகளை வெளியிடுவது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அதன்மூலம் கிடைக்கும் முதலீட்டுத் தொகையானது, ஏற்றுமதி நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்கப் பயன்படுத்தப்படும். 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் இசிஜிசி நிறுவனத்தின் கடன் வழங்கும் மதிப்பை ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.03 லட்சம் கோடியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றாா்.

என்இஐஏ திட்டத்துக்கு ரூ.1,650 கோடி: தேசிய ஏற்றுமதி காப்பீட்டுக் கணக்கு (என்இஐஏ) திட்டத்துக்கு 5 ஆண்டுக்குள் ரூ.1,650 கோடியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் ரூ.33,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும், சுமாா் 2.6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரட்டை ரயில் பாதைகளுக்கு ஒப்புதல்: குஜராத்தின் ராஜ்கோட்- கனாலஸ், மத்திய பிரதேசத்தின் நிமச்-ரத்லம் இடையேயான ரயில் வழித்தடத்தை இரட்டிப்பாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜ்கோட்- கனாலஸ் இடையேயான 111.20 கி.மீ. வழித்தடத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்காக ரூ. 1,168.13 கோடியை செலவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தைப் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தி வருகின்றன. எதிா்காலத்தில் இந்த வழித்தடத்தில் நிலக்கரி, சிமென்ட், உரங்கள், உணவு தானியங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் கொண்டு செல்லப்படும். சுற்றுலா மேம்படும்: நிமச்-ரத்லம் இடையேயான 132.92 கி.மீ தூரத்துக்கு ரூ.1,184.67 கோடி செலவில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் மின் நிலையங்கள், சிமென்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால் சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும்; பயணிகள் ரயில் போக்குவரத்து அதிகரித்து சுற்றுலாத் துறையும் மேம்படும். இரு திட்டங்களும் 4 ஆண்டுகளில் நிறைவடையும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

11. இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மாா்ச் இறுதி நிலவரப்படி ரூ.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பு 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாத இறுதி நிலவரப்படி 57,000 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக் கடன் அளவானது கரோனா நெருக்கடிக்கு இடையிலும் 2.1 சதவீதம் மட்டுமே மிதமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மாா்ச்சில் 21.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தக் கடனுக்கான ஒதுக்கீட்டு விகிதம் 85.6 சதவீதத்திலிருந்து 101.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வழக்கமாக வெளிநாட்டுக் கடனில் டாலா் சாா்ந்த கடனே அதிக அளவில் உள்ளது. மொத்தக் கடனில் இதன் பங்களிப்பு 52.1 சதவீதமாகும். இதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (33.3 சதவீதம்), யென் (5.8 சதவீதம்), எஸ்டிஆா் (4.4 சதவீதம்), யூரோ (3.5 சதவீதம்) ஆகியவை உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

12. 38-ஆவது ‘பிரகதி’ கூட்டம்: ரூ.50,000 கோடி திட்டங்களை ஆய்வு செய்தாா் பிரதமா் மோடி

38-ஆவது ‘பிரகதி’ கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.50,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டும் வரும் பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறனை மதிப்பிடுவது, அரசின் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவையே ‘பிரகதி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015-இல் இந்த பிரகதி திட்டம் தொடங்கப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் 8 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் நான்கு ரயில்வே அமைச்சக திட்டங்கள், 2 மின் அமைச்சக திட்டங்களாகும். இது தவிர சாலைப் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தலா ஒரு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டன. ஒடிஸா, ஆந்திரம், பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய 7 மாநிலங்களில் நடைபெறும் இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.50,000 கோடியாகும். இதற்கு முன்பு நடைபெற்ற 37 பிரகதி கூட்டங்களில், ரூ.14.39 லட்சம் கோடி மதிப்பிலான 297 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

13. ஐ.நா. பொதுச் சபையில் உலக நாடுகள் உரக்கச் சொன்னது என்ன?

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் செப். 21-ஆம் தேதி தொடங்கி செப். 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்று உரையாற்றினர். சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட விடியோ உரை காணொலி முறையில் ஒளிபரப்பப்பட்டது. கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் சிறிது சிறிதாக மீண்டு வரும் நிலையில் நேரடியாக நடத்தப்பட்ட இக்கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் உரையில் முக்கியமாக வலியுறுத்திய கருத்துகள்…

இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றினார். சர்வதேச தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அதனாலேயே ஆபத்து ஏற்படும் என பாகிஸ்தானை மறைமுகமாக மோடி குறிப்பிட்டார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சீனாவை மறைமுகமாகச் சாடிய மோடி, பெருங்கடல்கள் பகிரப்பட்ட பாரம்பரியம். அவற்றை நாடுகளின் விரிவாக்க நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய சர்வதேச சமூகத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கா

சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், அந்நாட்டுடன் அதிகரித்து வரும் பதற்றம் குறித்த கவலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புக்கொண்டார். அதேவேளையில், “நாங்கள் புதிய பனிப் போரையோ அல்லது பிளவுபட்ட உலகத்தையோ விரும்பவில்லை’ என்றார். ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது குறித்து, “இடைவிடாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். உலகம் முழுவதும் மக்களை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளில் எங்களது திறனை முதலீடு செய்யும் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளோம்’ என்றார்.

பிரிட்டன்

பருவநிலை மாற்றம் குறித்த பிரச்னைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கியத்துவம் அளித்தார். அவர் தனது உரையில், “தொழில்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட உலகின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்துவதற்கான மாற்றங்களை உலகம் இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீஸன் தனது பதிவு செய்யப்பட்ட உரையில், சர்வதேச கூட்டணியின் மதிப்பை வலியுறுத்தினார். அமெரிக்கா- பிரிட்டன்- ஆஸ்திரேலியா இடையிலான “ஆக்கஸ்’ கூட்டணிக்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர் இக்கருத்தைக் கூறினார்.

சீனா

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தை மறைமுகமாக தனது பதிவு செய்யப்பட்ட உரையில் குறிப்பிட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். “நாடுகளுக்கு இடையிலான சச்சரவுகள் பேச்சுவார்த்தை மூலம் கையாளப்பட வேண்டும். ஒரு நாட்டின் வெற்றியானது மற்றொரு நாட்டின் தோல்வியாக கருதப்படக் கூடாது. மோதலையும், ஒரு குறிப்பிட்ட நாட்டை தனிமைப்படுத்துவதையும் உலகத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்’ என்றார் அவர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரையில், “ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைக்கு பாகிஸ்தான் காரணம் என அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய யூனியனிலிருந்தும் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் தவிர அதிகம் பாதிக்கப்பட்டது பாகிஸ்தான்’ என்றார்.

இலங்கை

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தலைவர் மிஷெல் பாச்சலெட் அண்மையில் கண்டித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அதிபர் கோத்தபய ராஜபட்ச, “இலங்கையில் தமிழர்களுக்கு நீடித்த அமைதியை அடைய உள்நாட்டு அமைப்புகள் மூலம் முயற்சிப்பது அவசியம்’ என்றார். “அமைதியை அடைவது என்பது தொடர்ச்சியான செயல்முறை ஆகும். உள்நாட்டு அமைப்புகளுக்கு இதற்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும். இந்த அமைப்புகள் செய்யும் பணியை வெளி அமைப்புகள் மாற்றியமைக்கக் கூடாது’ என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது உரையில், தடுப்பூசி சமநிலை, கரோனா தொற்றிலிருந்து நிலையான மீட்பு, பருவநிலை சவால்கள் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார். தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் தம் சொந்த நாடான மியான்மருக்கு திரும்ப சர்வதேச சமூகம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.

ஜப்பான்

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தனது உரையில், “கரோனா நோய்த்தொற்றால் உலகம் அளவிட முடியாத துயரத்தை எதிர்கொண்டாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது மக்களிடையே உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக நிரூபிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் எங்களது கடமையை நிறைவேற்றினோம்’ எனப் பெருமிதம் கொண்டார்.

ரஷியா, பிரான்ஸ்

ரஷியா சார்பில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி வி லாவ்ரோவ் கலந்துகொண்டார். “ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள், கோட்பாடுகளை நிலைநாட்ட புதிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரான்ஸ் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜான் ஈவ் லெட்ரியன் பங்கேற்று, கரோனா, பருவநிலை மாற்றம், நாடுகள் இடையிலான சச்சரவுகள் போன்றவற்றுக்கு தீர்வு காண பலதரப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.

பிரேஸில் ஏன் முதலில்?

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டு கூட்டத்தில் முதலில் உரையாற்றும் வாய்ப்பு பிரேஸிலுக்கு வழங்கப்படுவது பாரம்பரியமாக உள்ளது. பிரேஸிலுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவது என்பது குறித்து இரு கருத்துகள் உள்ளன. 1. ஐ.நா. சபை 1945-இல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் ஆண்டுக் கூட்டத்தில் முதலில் உரையாற்ற எந்த நாடும் தயாராக இல்லை. பிரேஸில்தான் முதலில் உரையாற்ற தாமாக முன்வந்தது. அதுமுதல் பிரேஸிலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து வருகிறது. 2. பிரேஸில் பிரதிநிதி ஓஸ்வால்டோ அரன்கா ஐ.நா. பொதுச் சபையின் முதல் சிறப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். பொதுச் சபையின் இரண்டாவது கூட்டத்துக்கும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமுதல் பிரேஸிலுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

1. India has recently come out with easing the rules for storage of which hazardous chemical?

A) Sodium Chloride

B) Nitric Acid

C) Sulphuric Acid

D) Ammonium nitrate and Calcium carbide 

  • The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Government of India has revised and eased the rules pertaining to storage and handling of ammonium nitrate and calcium carbide, for improved safety. This revision comes at the backdrop of the deadly Beirut (capital of Lebanon) explosion which occurred due to storage of 3,000 tons of ammonium nitrate at the port for 6 years.

2. Which Bank has committed a sum of Rs.30,000 crore lending in India, towards sustainable financing till FY 2026?

A) State Bank of India

B) Axis Bank 

C) ICICI Bank

D) Union Bank of India

  • India’s leading private sector Bank – Axis Bank, has committed a sum of Rs.30,000 crore for lending to sustainable financing till the financial year 2025–26, which is in line with the Sustainable Development Goals.
  • This commitment is intended to assist India to reach the SDG targets by 2030. The Bank intends to make wholesale lending to Sustainable Development projects which would have positive social and environmental impact.

3. When is the ‘World Alzheimer’s Day’ observed every year?

A) September 20

B) September 21 

C) September 22

D) September 23

  • Every year, 21st September is observed as World Alzheimer’s Day. This day aims to raise awareness about the Alzheimer’s disease, its causes, symptoms and the ways to handle it. Alzheimer’s disease is a brain condition which retards memory and cognitive abilities of the affected person. It is the most frequent cause of dementia in older individuals, which may cause brain cells to weaken and die.

4. NDEAR and NETF, which were seen in the news recently, are initiatives associated with which Union Ministry?

A) Ministry of Power

B) Ministry of Education 

C) Ministry of Housing and Urban Affairs

D) Ministry of Science and Technology

  • Union Education Minister Dharmendra Pradhan held a meeting on ‘Universalisation of quality education through digital education’.
  • The discussion focussed on using satellite technology and internet to develop an integrated digital ecosystem. The meeting also called for strengthening the existing Swayam Prabha Initiative and coordinate initiatives like National Digital Education Architecture (NDEAR) and National Educational Technology Forum (NETF). They were announced in the National Education Policy (NEP) 2020.

5. Where is the headquarters of the G–24 intergovernmental association located?

A) Washington D.C 

B) Geneva

C) Paris

D) Rome

  • The Intergovernmental Group of 24 on International Monetary Affairs and Development, or the Group of 24 was established in 1971 at Lima, Peru. It is headquartered at Washington D.C.
  • It is a chapter of G–77, to coordinate developing countries on monetary and development finance issues. India, along with other Group of 24 (G24) member countries, has objected to the withdrawal of measures like the Equalisation levy (EL). India is worried that the proposed global digital tax deal covering only top 100 companies may not lead to sufficient revenue for developing countries.

6. ‘Doing Business’ report was the flagship publication of which institution?

A) IMF

B) World Bank 

C) WTO

D) NITI Aayog

  • ‘Doing Business’ report was the flagship publication of the World Bank. After data irregularities were reported internally, on Doing Business reports of 2018 & 2020, World Bank management paused the next Doing Business report.
  • International Monetary Fund Managing Director Kristalina Georgieva has also been cited by the World Bank in the probe.

7. What is the expected Growth rate of India for FY21, as per the recent estimate of ADB?

A) 14%

B) 12%

C) 10% 

D) 8%

  • The Asian Development Bank slashed India’s gross domestic product (GDP) growth forecast to 10% for FY21, down from 11% projected in April. The reason for the rate cut is the disruptions due to the second Covid wave. Growth projection for FY22 is raised to 7.5% from 7% forecast earlier.
  • The Second wave disruptions have adversely impacted services, domestic consumption, and the urban informal sector. The economy is projected to rebound in the last three quarters of FY2021.

8. SECMOL, India’s highest altitude educational organisation, is located in which state/UT?

A) Sikkim

B) Ladakh 

C) Uttarakhand

D) Arunachal Pradesh

  • The Students’ Educational and Cultural Movement of Ladakh (SECMOL) has become the first–of–its–kind institute in the Union Territory of Ladakh to have an internet connection using Light Fidelity (LiFi) technology. SECMOL is India’s highest altitude educational organisation. Li–Fi systems provide ultra–fast data connections.

9. Which organization has developed an indigenous charger for electric vehicles named AC001?

A) DRDO

B) ISRO

C) ARAI 

D) CSIR

  • The Automotive Research Association of India (ARAI) has designed and developed indigenously, a charger for electric vehicles, named AC001. This is taken up for large scale manufacturing by Bharat Electronics. Presently most of the charging components for electric vehicles are imported. The indigenous development & manufacturing of these components would boost electric mobility in India.

10. Which tech initiative of India has bagged CIPS Excellence in Procurement Awards 2021, under the “Best Use of Digital Technology” category?

A) SDG Dashboard

B) GeM 

C) Champions Portal

D) GST Portal

  • The Government of India’s Government e Marketplace (GeM) initiative has been adjudged as the winner of CIPS Excellence in Procurement Awards 2021, under the “Best Use of Digital Technology” category. The award ceremony was held in London, UK. GeM is a dedicated online marketplace for procurement of goods and services by Govt. Government Organisations, Departments and PSUs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!