Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

31st December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

31st December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st December 2020 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

31st December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. தர்ம ஸ்வதந்திரியா (மத சுதந்திரம்) மசோதா 2020’க்கு ஒப்புதலளித்துள்ள மாநில அமைச்சரவை எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. ஒடிசா

ஈ. ஜார்க்கண்ட்

  • மத்திய பிரதேச மாநில அமைச்சரவையானது சமீபத்தில் தர்ம ஸ்வதந்திரியா (மத சுதந்திரம்) மசோதா -2020’க்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச்சட்டமானது மத மாற்றங்களை நோக்கமாகக்கொண்ட திரு -மணங்களை சட்டத்துக்குப்புறம்பானதாக மாற்றுகிறது.
  • இந்தப் புதிய மசோதாவின்கீழ், ஒருவர்மீது மத மாற்றத்தை நிர்பந்தித்தால் 1-5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் `25,000 அபராதமும் விதிக்கப்படும். முன்னதாக, உத்தர பிரதேச மாநில அமைச்சரவையும் இதேபோன்ற ஓர் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது.

2. ‘வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை’ நிறைவு செய்ததை அடுத்து, கீழ்க்காணும் எந்த மாநிலத்திற்கு `2731 கோடி கடன் பெற்றுக்கொள்ள நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது?

அ. குஜராத்

ஆ. கேரளா

இ. இராஜஸ்தான்

ஈ. ஒடிசா

  • மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையால் பரிந்துரைக்கப்பட்ட ‘வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை’ நிறைவுசெய்த ஆறாவது மாநிலமாக இராஜஸ்தான் மாறியது. இதன் காரணமாக, திறந்தவெளிச்சந்தைகளில் இருந்து கூடுதலாக `2,731 கோடி கடனாகப்பெறுவதற்கு அந்த மாநிலம் தகுதிபெற்றது. ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் இந்தச்சீர்திருத்தங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. நாட்டின் மிகச்சிறந்த மாநகராட்சியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள மாநகராட்சி எது?

அ. சென்னை

ஆ. விசாகப்பட்டிணம்

இ. கொச்சின்

ஈ. மைசூரு

  • விசாகப்பட்டிணம் பெருநகர மாநகராட்சியானது நாட்டின் மிகச்சிறந்த மாநகராட்சியாக தேர்வுசெய்யப்பட் -டுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பபட்ட PMAY-நகர்ப்புறத் திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், “சிறந்து விளங்கும்” மாநகராட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதுகளின்கீழ் இதனை அறிவித்தது. ஆந்திர பிரதேச மாநிலம் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

4. ‘பசுமை உந்துவிசை – Green Propulsion’ தொழினுட்பத்தை உருவாக்கிவருகிற இந்திய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. BARC

ஈ. OFB

  • இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் தலைவரான K சிவன், ISRO’இன் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்திற்காக ISRO ‘பசுமை உந்துவிசை’யை உருவாக்கிவருவதாக சமீபத்தில் அறிவித்தார். தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து உந்துவிசை முறைகளும் எதிர்காலத்தில் பசுமை உந்துவிசை முறையை பின்பற்றக்கூடும் என்றும் அவர் கூறினார். மின்னாற்றலில் இயங்கும் வாகன -ங்களில் பயன்படுத்தக்கூடிய லித்தியம் அயன் மின்கலங்களையும் ISRO உருவாக்கியுள்ளது.

5. கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில், தெளபால் பல்நோக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர்

இ. மேற்கு வங்கம்

ஈ. பீகார்

  • மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, சமீபத்தில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தெளபால் பல்நோக்கு திட்டத்தை (தெளபால் அணை) காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்தத் திட்டம் முதலில் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 462 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின்மூலம், 35104 ஹெக்டேர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டி மையம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

6. பள்ளி பாடத்திட்டத்தில் சீக்கிய குருக்களின் வரலாற்றை உள்ளடக்குவதாக அறிவித்த மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. குஜராத்

ஈ. பஞ்சாப்

  • சீக்கிய குருக்களின் வரலாறு பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில முதல -மைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் மற்றும் அவரது நான்கு மகன்கள் மற்றும் அவரது தாயின் உயிர்த்தியாகத்தை குறிக்கும், ‘சாகிப்ஸாதா திவாஸ்’ அனைத்து பள்ளிகளிலும் அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

7. MoRTH’இன் அறிவிப்புப்படி, காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் தேதி எது வரை நீட்டிக்கப்படுகிறது?

அ. ஜனவரி 31, 2021

ஆ. மார்ச் 31, 2021

இ. ஜூன் 30, 2021

ஈ. ஆகஸ்ட் 31, 2021

  • COVID-19 பெருங்கொள்ளைநோயின் பரவலைத்தடுப்பதற்காக, ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ்கள், அனுமதிகள் போன்றவற்றுக்கான காலக்கெடுவை 2021 மார்ச்.31 வரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதில் 2020 பிப்.1 முதல் அல்லது 2021 மார்ச் 31 வரை காலாவதியாகும் அனைத்து ஆவணங்களும் அடங்கும். நடுவணரசால் இதுபோன்று நீட்டிப்பு வழங்கப்படுவது இது நான்காவது முறையாகும்.

8. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, பொம்பெயி என்ற அகழாய்வுத்தளம் அமைந்துள்ள நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. இத்தாலி

இ. ஜெர்மனி

ஈ. கிரேக்கம்

  • பொ. ஆ 79’இல் எரிமலை வெடிப்பின் காரணமாக புதையுண்ட பொம்பெயி என்ற இடத்தில் ஈராயிரம் ஆண்டு பழமையான உணவு & பானங்கள் கடையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள -னர். டெர்மோபோலியம் (இலத்தீன் மொழியில் சூடான பானங்கள் விற்கும் அங்காடி எனப்பொருள்) என அழைக்கப்படும் கடையில், சுடு உணவைக்கொண்ட சில டெர்ரா கோட்டா ஜாடிகளில் உணவின் தடயங்களையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அது, இத்தாலியில் பே நேபிள்ஸ் கடற்கரைக்கு அருகே உள்ள தொல்பொருள் பூங்காவின் ரெஜியோ வி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

9. தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டம் எது?

அ. தென்காசி

ஆ. செங்கல்பட்டு

இ. மயிலாடுதுறை

ஈ. கள்ளக்குறிச்சி

  • டிசம்பர் 28 அன்று தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவானது. நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய்கோட்டத்திலிருந்த நான்கு வருவாய் வட்டங்களை உள்ளடக்கி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • மயிலாடுதுறை மாவட்டத்தின் முதன்மை தொழிலாக விவசாயமும், மீன்பிடி தொழிலும் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1172 ச. கிலோ மீட்டர்கள். மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டம் சீர்காழி கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களும்; மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளும்; 5 ஊராட்சி ஒன்றியங்களும்; சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 2 நகராட்சிகளும்; 4 பேரூராட்சிகளும் அமைந்துள்ளன.

10. கடல் தரவு மேலாண்மைக்காக புவி அறிவியல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பயன்பாட்டின் பெயர் என்ன?

அ. Digital Ocean

ஆ. Ocean Digital

இ. Ocean Data

ஈ. Data Ocean

  • புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இயங்கிவரும் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) கடல் தரவு மேலாண்மைக்கென மின்னணு அடிப்படையிலான பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘டிஜிட்டல் ஓசன்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தளம், கடல் தரவு மற்றும் முன்னறிவிப்பு சேவைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தளம் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி சமூகம், கடல்சார் தொழிற் துறைகள் மற்றும் பொதுமக்கள்போன்ற பல்வேறு துறைகளுக்கான தரவினை வழங்குகிறது.

31st December 2020 Tnpsc Current Affairs in English

1. Which state cabinet has approved Dharma Swatantrya (Religious Freedom) Bill 2020?

[A] Andhra Pradesh

[B] Madhya Pradesh

[C] Odisha

[D] Jharkhand

  • Madhya Pradesh cabinet has recently approved the Dharma Swatantrya (Religious Freedom) Bill 2020. This ordinance outlaws the marriages which are done with an aim of religious conversions. Under the new Bill, forcing religious conversion on someone will attract 1–5 years of imprisonment and a minimum Rs 25,000 fine. Earlier, Uttar Pradesh cabinet passed a similar ordinance.

2. Which state has been permitted by the Finance Ministry to borrow Rs 2731 after it achieved ‘Ease of doing business reform?

[A] Gujarat

[B] Kerala

[C] Rajasthan

[D] Odisha

  • The Finance Ministry has recently permitted Rajasthan to borrow an additional Rs 2,731 crore after the state achieved ease of doing business reforms. Rajasthan has now joined the five other states namely, Andhra Pradesh, Karnataka, Madhya Pradesh, Tamil Nadu and Telangana, which were granted additional borrowing permission, through open market borrowings.

3. Which Municipal Corporation has been selected as the best performing civic body in the country?

[A] Chennai

[B] Visakhapatnam

[C] Cochin

[D] Mysuru

  • Greater Visakhapatnam Municipal Corporation (GVMC) has been selected as the best performing civic body in the country. Union Ministry of Housing and Urban Affairs announced this under the Annual awards for excellence, for its contribution of PMAY–Urban scheme in 2019. Andhra Pradesh has secured the third position in the best performing State category.

4. Which Indian organisation is developing ‘Green propulsion’ technology, that was seen in the news recently?

[A] DRDO

[B] ISRO

[C] BARC

[D] OFB

  • Indian Space Research Organisation Chairman K Sivan announced that the organisation was developing ‘Green propulsion’ for its human space flight mission, ‘Gaganyaan’. He also said that all the propulsion stages may adopt green propulsion in the future. ISRO has developed space grade lithium–ion batteries also used for mass adoption of electric vehicles.

5. Thoubal Multipurpose Project has been inaugurated in which Indian state?

[A] Assam

[B] Manipur

[C] West Bengal

[D] Bihar

  • The Union Home Minister Amit Shah has recently inaugurated Thoubal Multipurpose Project (Thoubal Dam) in Imphal, Manipur through virtual mode. The project was originally launched in the year 2014. The 462–crore project aims to irrigate 35,104 hectares in the state. The Minister also laid foundation stone for projects including an Integrated Command and Control Center.

6. Which state announced that it will include the History of Sikh gurus in school curriculum?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Gujarat

[D] Punjab

  • The Uttar Pradesh Chief Minister Yogi Adityanath announced that the history of Sikh gurus will be included in the school curriculum. He also declared that ‘Sahibzada Diwas’, which marks the martyrdom of four sons of 10th Sikh Guru Gobind Singh and his mother, will be celebrated in all schools.

7. As per the notification of MoRTH, the validity of expiring Motor Vehicle Documents is extended till which date?

[A] January 31, 2021

[B] March 31, 2021

[C] June 30, 2021

[D] August 31, 2021

  • As per the Road Transport and Highways Ministry, the validity of expiring driving licences (DL) and motor vehicle documents has been extended till 31 March, 2021. This move has been taken in view of the COVID–19 crisis. The documents including Driving Licenses, which expired on or after 1 February, but could not be renewed due to the pandemic, will remain valid till the mentioned date. This is the fourth extension by the Centre.

8. An archaeological site named Pompeii, which was making news recently, is located in which country?

[A] France

[B] Italy

[C] Germany

[D] Greece

  • Archaeologists have discovered a 2000–year–old food and drinks shop in the site of Pompeii, the site which was buried in a volcanic eruption in 79 AD. They have also found traces of food in some of the deep terra cotta jars containing hot food in the shop known as termopolium (Latin for hot drinks counter). It was discovered in the archaeological park’s Regio V site, near the coast of Bay of Naples, in Italy.

9. Which is the 38th district of Tamil Nadu?

[A] Tenkasi

[B] Chengalpattu

[C] Mayiladuthurai

[D] Kallakurichi

  • Mayiladuthurai district became the 38th district of Tamil Nadu on December 28. Mayiladuthurai has been formed as a new district by dividing it from Nagappattinam district and incorporating four revenue circles from the Mayiladuthurai revenue division. Agriculture and Fishing are the main occupations of Mayiladuthurai district. The total area of ​​the district is 1172 SqKms.
  • Following the formation of Mayiladuthurai district, Sirkazhi Taluk in Mayiladuthurai district has been declared as Sirkazhi division. Mayiladuthurai district has 4 Taluks namely Mayiladuthurai, Sirkazhi, Kuthalam and Tharangambadi; Mayiladuthurai, Sirkazhi and Poompuhar are the constituencies present in Mayiladuthurai; 5 Panchayat Unions; 2 Municipalities namely Sirkazhi and Mayiladuthurai are also located in this district.

10. What is the name of the application launched by the Ministry of Earth Sciences, for ocean data management?

[A] Digital Ocean

[B] Ocean Digital

[C] Ocean Data

[D] Data Ocean

  • Indian National Centre for Ocean Information Services (INCOIS), an autonomous body under the Ministry of Earth Sciences has launched a web–based application for ocean data management. Named ‘Digital Ocean’, the platform aims to share information on marine data and forecast services. The platform provides data for several sectors like research institutions, academic community, maritime industry and the public.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!