TnpscTnpsc Current Affairs

31st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

31st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘ரேணுகாஜி அணை திட்டம்’ அமையவுள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) ஹிமாச்சல பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) பீகார்

  • `6,700 கோடி மதிப்பிலான ‘ரேணுகாஜி அணை திட்ட’த்திற்கு ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியிலிருந்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கிரி ஆற்றின் திட்டம் நிறைவேறியதும், 40 MW மின்னுற்பத்தி நிலையத்தில் 200 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அணையின் நீர்த்தேக்கக் கொள்ளளவு 498 மில்லியன் கன மீட்டராக இருக்கும், இது, தில்லியின் குடிநீர்த் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும்.

2. எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ், ‘போதைப்பொருள் தடுப்புப் பிரிவு’ செயல்படுகிறது?

அ) மத்திய நிதி அமைச்சகம்

ஆ) மத்திய உள்துறை அமைச்சகம் 

இ) மத்திய வெளியுறவு அமைச்சகம்

ஈ) மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

  • நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழித்தற்கு அனைத்து மாநிலங்களும் அந்தந்த அதிகார வரம்புகளில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவை உருவாக்கி அறிவிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இப்பணிக்குழு மாநில அளவில் நார்கோ ஒருங்கிணைப்பு மைய செயலகமாக செயல்பட முடியும்.

3. சாஹிப்சாதா திவாஸ் கொண்டாடப்படும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம் 

ஆ) மத்திய பிரதேசம்

இ) அஸ்ஸாம்

ஈ) நாகாலாந்து

  • உத்தரபிரதேச மாநிலம் சமீபத்தில் குருகோவிந்த் சிங்கின் 4 மகன்களின் (சாகிப்சாதாஸ்) தியாகத்தின் நினைவாக சாகிப்சாதா நாளை அனுசரித்தது. சீக்கிய குருக்களின் தியாகம் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த 2020ஆம் ஆண்டு முதல் சாகிப்சாதா திவாஸ் அனுசரிக்கப் -படும் இந்தியாவின் முதல் மாநிலமாக உபி ஆனது.

4. இந்திராவதி புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடமெது?

அ) கர்நாடகா

ஆ) சத்தீஸ்கர் 

இ) பீகார்

ஈ) மேற்கு வங்காளம்

  • சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திராவதி புலிகள் காப்பகம் சுமார் 2799.08 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது.
  • சமீபத்தில், 400 சகிமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்தக் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சமீபத்திய தரவுகளின்படி, அக்காப்பகத்தில் 3 புலிகள் இருந்தன.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற எட்வர்ட் ஓ வில்சன் யார்?

அ) உயிரியலாளர் 

ஆ) விண்வெளி வீரர்

இ) கிரிக்கெட் வீரர்

ஈ) நடனமாடுபவர்

  • ‘எறும்பு மனிதன்’ என்று அன்புடன் அழைக்கப்படும் எட்வர்ட் ஓ வில்சன், ஹார்வர்ட் உயிரியலாளர் மற்றும் பூச்சியியல் வல்லுநர் ஆவார். அவர் சமீபத்தில் தனது 92 ஆம் வயதில் இறந்தார். உயிரியலாளரான இவர் இரண்டு முறை புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆவார். 1975’இல் வெளியிடப்பட்ட “Sociobiology: The New Synthesis” என்ற நூலிற்காக உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றார்.

6. எத்தனை ஐரோப்பிய நாடுகளைச் சாராத நாடுகள் Europol’இல் உறுப்பினராக உள்ளன?

அ) 0

ஆ) 10 

இ) 20

ஈ) 30

  • தென் கொரியா அண்மையில் ஐரோப்பாவிற்கு வெளியே யூரோபோலில் இணைந்த 10ஆவது நாடாக மாறியுள்ளது. இது பயங்கரவாதம் மற்றும் பிற சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சட்ட அமலாக்க ஒத்துழைப்பு நிறுவனமாகும்.
  • தென் கொரியாவின் தேசிய காவல்துறை முகமை (NPA) இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்மூலம் யூரோபோலுடன் இணைந்தது. அது 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

7. அண்மையில் ஒடிஸா கடற்கரையில் பரிசோதனை செய்யப்பட்ட ‘பிரலே’ என்றால் என்ன?

அ) குறுகிய தூரம் செல்லும் எறிகணை 

ஆ) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

இ) வான்வழி ஏவப்படும் எறிகணை

ஈ) கப்பவழி ஏவப்படும் எறிகணை

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து செலுத்தக்கூடிய ‘பிரலே’ எறிகணை, ஒடிஸா கடற்கரைப் பகுதியில் உள்ள Dr ஏ பி ஜே அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
  • இந்த ஏவுகணை திட எரிபொருள் ராக்கெட் மோட்டார் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இயங்கக் கூடியது. இது 150 முதல் 500 கிமீ தொலைவு வரை பாய்ந்துசென்று தாக்கக்கூடியது என்பதோடு நடமா -டும் சாதனத்திலிருந்து செலுத்தக் கூடியதாகும்.

8. போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐநா அலுவலகத்தின்படி, அபின் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ) ஆப்கானிஸ்தான் 

ஆ) இலங்கை

இ) இஸ்ரேல்

ஈ) ஈரான்

  • போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐநா அலுவலகத்தின்படி, அபின் உற்பத்தியில் ஆப்கானிசுதான் முதலிடத்தில் உள்ளது.
  • நடப்பு 2021ஆம் ஆண்டில், உலகளவில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட ஹெராயினில் 90 சதவீதத்துக்கும் அதிகமானது ஆப்கானிஸ்தானுடையதாகும். இதன்மூலம் 2001 முதல், உலகின் மிகப்பெரிய சட்டவிரோத போதைப் பொருள் உற்பத்தியாளராக ஆப்கானிஸ்தான் உள்ளது.

9. கலகக்காரர்களிடமிருந்தே சேதமடைடைந்த சொத்துக் -களுக்கான பணத்தை வசூலிக்கும் மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றிய மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) மத்திய பிரதேசம் 

இ) உத்தர பிரதேசம்

ஈ) பஞ்சாப்

  • கலகக்காரர்களிடமிருந்தே சேதமடைடைந்த சொத்துக்க
    -ளுக்கான பணத்தை வசூலிக்கும் மசோதாவை மத்திய பிரதேச மாநில அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
  • கலவரங்கள் அல்லது மக்கள் போராட்டங்களின்போது ஏற்படும் சொத்துசேதம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் தீர்ப்பாயம் அமைப்பதற்கும் இம்மசோதா வகை செய்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீடு இல்லாமல் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாது என்று அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10. “ரேடியோ உஜாலா பஞ்சாப்” என்பது எந்த மத்திய சிறையின் பண்பலையாகும்?

அ) பாட்டியாலா மத்திய சிறை

ஆ) லூதியானா மத்திய சிறை 

இ) அமிர்தசரஸ் மத்திய சிறை

ஈ) ஜலந்தர் மத்திய சிறை

  • பஞ்சாபின் லூதியானா மத்திய சிறை தற்போது தனது சொந்த வானொலி அலைவரிசையான “ரேடியோ உஜாலா பஞ்சாப்பைத்” தொடங்கியுள்ளது. இச்சிறையில் உள்ள சிறைவாசிகள் மட்டுமே இந்த ரேடியோ சேனலை நடத்துவார்கள். மேலும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் -களாக பணிபுரியும் சிறைவாசிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
  • இந்தத் திட்டம் கைதிகளுக்கு மறுவாழ்வு மற்றும் நலன்புரி வாய்ப்புகளை வழங்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2021-இல் இந்தியாவில் 126 புலிகள் உயிரிழப்பு

இந்தியாவில் நடப்பு ஆண்டில் 126 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த ஆணைய அதிகாரிகள் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் புலிகள் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வனப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிப்பது, புலிகளை வேட்டையாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவை மூலம் புலிகளைக் காக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 44 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக ஆய்வு நடைபெறுகிறது.

புலிகள் உயிரிழப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் தனித்தனியாக விசாரணை நடத்துவது வழக்கம். நாட்டில் உள்ள மொத்த புலிகளில் 30 சதவீதம் புலிகள் சரணாலயங்களுக்கு வெளியே உள்ளன. இதனால், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 26 புலிகளும், கா்நாடகத்தில் 16 புலிகளும் இந்த ஆண்டில் உயிரிழந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

2. உருக்கு துறை செயலராக சஞ்சய் குமார் சிங் பொறுப்பேற்பு

மத்திய உருக்குத் துறை செயலராக சஞ்சய் குமாா் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய உருக்குத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உருக்கு அமைச்சக துறையின்புதிய செயலராக சஞ்சய் குமாா் சிங் இன்று (டிச.30) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பாக, நிா்வாகம் மறுசீரமைப்பு & பொது குறைதீா், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியா் நலத் துறையின் செயலராக பொறுப்பு வகித்தவா்.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சஞ்சய் குமாா் சிங், 1987-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு தோ்வானவா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்த்தாய் வாழ்த்து இனி அரசின் மாநில பாடல்!

அப்படி தமிழர்களின் சுவாசமாக திகழும் ஒப்புயர்வற்ற உயர்தனி செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியை தாயாக போற்றும் தமிழர்கள், உள்ளம் மகிழ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடுவது வழக்கம்.

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும், சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும், தக்கசிறு பிறைநுதலும் தரித்தனறும் திலகமுமே, அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே, தமிழணங்கே, உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே, “ என்ற பாடலை பாடும்போது தமிழர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் தமிழ் உணர்வுகள் தழைக்கும்.

இந்த தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 100 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உண்டு. 1913-ம் ஆண்டு கரந்தை தமிழ்ச்சங்கத்தின் 3-ம் ஆண்டு அறிக்கையில் நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. 1914-ம் ஆண்டு முதல், கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாக்களில் எந்த நிகழ்ச்சிகள் என்றாலும் சரி தொடக்கத்தில் இந்த பாடலை பாடியே மகிழ்ந்தார்கள். 1967-ல் மறைந்த பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற நேரத்தில், கரந்தை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அண்ணாவிடம் இதை மாநில பாடலாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அண்ணா இதுகுறித்து பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்கும் முன்பே மறைந்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி பதவி ஏற்றவுடன், 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இந்த பாடலை அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பாடும் வாழ்த்து பாடலாக அமையும் என்று கூறி, தொடர்ந்து மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசை அமைக்க, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடும் ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசை தட்டுகளாக வெளியிடப்பட்டு, அரசு விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய இந்த பாடல் அன்று முதல் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் இசை தட்டுகள் மூலம் ஒலிபரப்பப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் சமீபத்தில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதி, “தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு இறைவணக்க பாடல் தான். தேசிய கீதம் அல்ல. இந்த பாடலை பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்று எந்தவித சட்டமோ, நிர்வாக உத்தரவோ இல்லை” என்று கூறினார். இந்த உத்தரவு வந்த உடனேயே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற வகையில், ஒரு அரசாணை வெளியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவில், “நீராரும் கடலுடுத்த” தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது. 55 வினாடிகளில் முல்லைப்பாணியில் (மோகன ராகத்தில்) இந்த பாடல் பாடப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும். இதில் முக்கியமாக, இந்த வாழ்த்து பாடலை இசை தட்டுக்கள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடவேண்டும். இந்த பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்கவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவிடம் வைத்த கோரிக்கை மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகவும் வாழ்த்துக்குரியது. வரவேற்புக்குரியது. தமிழ் மக்கள் நெஞ்சில் தாய்மொழி உணர்வை தட்டி எழுப்ப இந்த உத்தரவு வழிதிறந்துவிட்டது. இந்த பாடலை ஏதோ ஓரிருவர் மட்டுமல்லாமல் அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்பவர்கள் ஒருசேர பாடினால்தான் போற்றுதலுக்குரியதாக இருக்கும்.

4. புத்தாண்டில் முதன்முதலாக சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது, இஸ்ரோ

கொரோனா வைரஸ் தொற்றால் நடப்பு 2021-ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களும் பாதித்துள்ளன. இதன் காரணமாக புத்தாண்டில் புதிய வேகம் காட்டுவதில் இஸ்ரோ முழு முனைப்பாக உள்ளது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் ககன்யான் திட்டம், புத்தாண்டில் குறிப்பிடத்தக்க திட்டமாக உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்கலத்தில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீரர்களை அனுப்புவதற்கு முன்பாக புத்தாண்டில் ஜூன் மாதத்துக்கு பின்னும், ஆண்டின் இறுதியிலும் என 2 முறை ஆள் இல்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன்பின்னர், விண்வெளி வீரர்கள் (இந்திய விமானப்படையின் 3 அதிகாரிகள்) விண்கலம் மூலம் 2023-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதன் மூலம் புத்தாண்டில் ககன்யான் திட்டம் சிறகுகளை விரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. .

ககன்யான் திட்டப்பணிக்காக 4 இந்திய விமானப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய ஏவுகணை வாகனத்தில் விண்வெளி வீரர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக்கொண்டு வரும் திறனை அடைவதுதான் ககன்யான் கனவு திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டத்தை இஸ்ரோ கையில் வைத்துள்ளது. கொரோனாவால் தாமதமாகி வந்த இந்த திட்டமும் புத்தாண்டில் தொடங்கப்படும். ஆதித்யா-எல்1 திட்டம், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட்- 1 (எல்-1) -ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் செருகப்படும். இது இஸ்ரோவின் 2-வது உயர்நிலை விண்வெளி இலக்குப் பணியாகும்.

புத்தாண்டின் 3-வது காலாண்டு அதாவது செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ தொடங்க இருக்கிறது. ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிவது உட்பட முக்கிய கண்டுபிடிப்புகள் அரங்கேறின.

சந்திரயான் 2 திட்டத்தில், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் கருவியான லேண்டர் மற்றும் ரோவர் விபத்துக்குள்ளான நிலையில், ஆர்பிட்டர் மட்டும் நிலவின் மேல்பரப்பில் சுற்றி வட்டமிட்டு ஆய்வு செய்து வருகிறது. அதை சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இது சந்திரயான்-2 போன்ற கட்டமைப்பு தான், ஆனால் அதில் ஆர்பிட்டர் இருக்காது. சந்திரயான்-2-ன் போது ஏவப்பட்ட ஆர்பிட்டர் சந்திரயான்-3-க்கு பயன்படுத்தப்படும். சந்திரயான்-3 திட்டம் 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும்.

குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் முன்னோடியாக விளங்கும் இஸ்ரோ, சிறிய செயற்கைகோள்களை எளிதாக விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. என்ற சிறிய வகை ராக்கெட்டை உருவாக்கி வருகிறது.

இதனை புத்தாண்டின் முதல் காலாண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டை பொறுத்தவரையில் 500 கிலோ மீட்டர் தூர சுற்றுப்பாதையில் 500 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், மூன்று நிலைகளுடன் அனைத்து திட வாகனமாக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை உருவாக்க ரூ.169 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புத்தாண்டில் இஸ்ரோ புதிய சகாப்தங்களை படைக்கும்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

5. பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு

பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான நியூசிலாந்தின் டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான நியூசிலாந்தின் ஒருநாள் தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

37 வயதாகும் ராஸ் டெய்லர் இதுவரை 445 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 18,074 ரன்கள் எடுத்த அவர் 40 சதங்களை விளாசியுள்ளார். மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையையும் ராஸ் டெய்லர் பெற்றுள்ளார்.

1. ‘Renukaji Dam project’, seen in the news, is to come up in which Indian state?

A) Maharashtra

B) Himachal Pradesh 

C) Gujarat

D) Bihar

  • Prime Minister Narendra Modi laid the foundation of the Rs 6,700–crore Renukaji Dam project from Himachal Pradesh’s Mandi. Once completed, the project on the Giri river is expected to generate 200 million units of energy in a 40 MW surface power house. The storage capacity of the dam would be 498 million cubic meters which would fulfil about 40 per cent of drinking water requirement of Delhi.

2. ‘Narcotics Control Bureau’ functions under the aegis of which Union Ministry?

A) Union Finance Ministry

B) Union Home Ministry 

C) Union External Affairs Ministry

D) Union Defence Ministry

  • The Union Home Minister Amit Shah has asked all the states to form and notify a dedicated Anti–Narcotics Task Force (ANTF) in their respective jurisdictions, with an aim to eradicate drugs from the country. As per the official notification, these ANTF can act as Narco Coordination Centre (NCORD) secretariat at the state level.

3. Which state is the first state in India to observe Sahibzada Diwas?

A) Uttar Pradesh 

B) Madhya Pradesh

C) Assam

D) Nagaland

  • Uttar Pradesh has recently observed Sahibzada Day in remembrance of martyrdom of four sons (Sahibzadas) of Guru Gobind Singh. Uttar Pradesh is the first state in India to observe Sahibzada Diwas since the year 2020 when chief minister Yogi Adityanath announced that the sacrifice of the Sikh Gurus should be part of the school curriculum.

4. Where is Indravati Tiger Reserve located?

A) Karnataka

B) Chhattisgarh 

C) Bihar

D) West Bengal

  • The Indravati Tiger Reserve is located in the state of Chhattisgarh with a total area of approximately 2799.08 square km. Recently, tiger counting was carried out in the reserve covering more than 400 square kilometers. As per the latest data, the reserve had 3 tigers.

5. Who was Edward O Wilson, who has been in news recently?

A) Biologist 

B) Cosmonaut

C) Cricketer

D) Dancer

  • Edward O Wilson, who was known affectionately as ‘the ant man’ was a Harvard biologist and an entomologist. He died recently at the age of 92. The biologist is a two–time Pulitzer Prize–winning author and gained widespread attention across the world for his book, “Sociobiology: The New Synthesis” released in 1975.

6. How many non–European countries are part of Europol?

A) 0

B) 10 

C) 20

D) 30

  • South Korea has recently become the 10th country outside of Europe to join the Europol. It is the European Union (EU) law enforcement cooperation agency that fights terrorism and other international crimes. The National Police Agency (NPA) of South Korea joined Europol by signing agreement, which was approved unanimously by the 27 EU nations.

7. What is ‘Pralay’, which was test–fired recently off the Odisha coast?

A) Short–range Ballistic Missile 

B) Intercontinental Missile

C) Air–launched Ballistic Missile

D) Sub–marine launched Ballistic Missile

  • The first successful test flight of short–range surface–to–surface Pralay ballistic missile was conducted from Dr APJ Abdul Kalam Island off the coast of Odisha.
  • The Defence Research and Development Organisation (DRDO) developed the short–range solid–fuel surface–to–surface missile. It can hit the target at a range of 150 to 500 kilometres. The missile, which can be launched from a mobile launcher, has efficient navigation mechanisms and integrated avionics.

8. As per UN Office on Drugs and Crime, which country is the top producer of Opium?

A) Afghanistan 

B) Sri Lanka

C) Israel

D) Iran

  • As per UN Office on Drugs and Crime, Afghanistan is the top producer of Opium poppy. By 2021, Afghanistan’s harvest will account for more than 90% of worldwide illegal heroin production. Since 2001, the country has been the world’s biggest illicit drug producer.

9. Which state recently passed Bill to recover property damages from protesters?

A) Gujarat

B) Madhya Pradesh 

C) Uttar Pradesh

D) Punjab

  • The Madhya Pradesh Government recently passed a Bill to recover property damages from protesters. The bill also provides for setting up a tribunal which would look into the claims of property damage during riots or public protests. The State Assembly also passed a resolution that panchayat elections will not be held without Other Backward Classes (OBC) reservation.

10. “Radio Ujala Punjab,” is the radio channel of which Central Jail?

A) Patiala Central Jail

B) Ludhiana Central Jail 

C) Amritsar Central Jail

D) Jalandhar Central Jail

  • Punjab’s Ludhiana Central Jail now has recently inaugurated its own radio channel, “Radio Ujala Punjab,”. Only jail inmates will be running the radio channel and prisoners who work as ‘Radio Jockeys’ have undergone training. Six other jails of Punjab would also get their own radio channels in the coming days. This programme aims to rehabilitate the prisoners and provide welfare opportunities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!