31st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

31st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

31st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியாவுடன் தாயக பாதுகாப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவுள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) அமெரிக்கா

இ) ஐக்கியப் பேரரசு

ஈ) இரஷ்யா

 • US தாயக பாதுகாப்புத் துறையின் அறிவிப்பின்படி, US – இந்தியா தாயக பாதுகாப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இணைவெளிப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை இப்பேச்சுவார்த்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • வன்முறை தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான முதல் தாயக பாதுகா -ப்பு பேச்சுவார்த்தை, கடந்த 2011ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2. எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் ஷாஹீத் பகத் சிங் ஸ்மாரக்கை, மத்திய கல்வி அமைச்சர் திறந்துவைத்தார்?

அ) பஞ்சாப்

ஆ) புது தில்லி

இ) உத்தர பிரதேசம்

ஈ) ஹரியானா

 • தில்லி பல்கலைக்கழகமானது பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் இராஜ்குரு ஆகியோரின் தியாகத்தின் 90 ஆண்டுகால நிறைவை நினைவுகூருவதற்காக ‘ஷாஹீத் திவாஸ்’ என்றவொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மத்திய கல்வியமைச்சர் ரமேஸ் பொக்ரியால், மெய்நிக -ராக இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.
 • பகத்சிங் ஸ்மராகில் தற்போதுள்ள விடுதலைப் போராளிகள் பற்றிய நூல் -களின் தொகுப்பு “ஷாஹித் ஸ்மிருதி புஸ்தகாலயா” என்று மாற்றப்படுவ -தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ‘Global Economic Outlook – GEO’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுகிற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் எது?

அ) Fitch Ratings

ஆ) CRISIL

இ) Standard & Poor

ஈ) Ind-RA

 • அமெரிக்க வரவு மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச், ‘Global Economic Outlook – GEO’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுகிறது. அதன் அண்மைய பதிப்பில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மதிப்பீட்டை அடுத்த நிதியாண்டில் 12.8% ஆக மாற்றியுள்ளது. முன்னதாக, இம்மதிப்பீட்டு நிறுவனம், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்
  -தை 11% என மதிப்பிட்டிருந்தது.
 • தளர்வான நிதிநிலைப்பாடு மற்றும் சிறந்த வைரஸ் கட்டுப்பாடு அம்சம் ஆகியவை இதற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன. 2023ஆம் நிதி ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி 5.8 சதவிகிதத்துக்கு குறையும் என்றும் பிட்ச் எதிர்பார்க்கிறது.

4. 7.5% என்ற விகிதத்தில், காசநோய் பாதிப்பில் மிகப்பெரிய சரிவை பதிவுசெய்துள்ள மாநில அரசு எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) மகாராஷ்டிரம்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

 • கேரள மாநிலத்தில், 2015-20’க்கு இடையில் காசநோய் பாதிப்பு 37.5% குறைந்துள்ளது. இதன்மூலம், ஆண்டு சரிவு விகிதத்தை 7.5% ஆக அம் மாநிலம் பதிவுசெய்துள்ளது. உலகளாவிய சரிவு விகிதம் 2-3% மட்டுமே இருக்கும் நிலையில், கேரளத்தின் இந்தச் சரிவு விகிதம் மிகவும் குறிப்பிட -த்தக்கதாகும்.
 • காசநோய் ஒழிப்பை நோக்கிய முன்னெடுப்புகளுக்காக, மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படும் சான்றிதழில், வெண்கலப்பதக்கத்தையும் கேரள மாநில அரசு வென்றுள்ளது.

5. அண்மைய பன்னாட்டு அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ) 20

ஆ) 30

இ) 40

ஈ) 50

 • பன்னாட்டு அறிவுசார் சொத்துக் குறியீட்டின் சமீபத்திய ஆண்டு பதிப்பில் இந்தியா 40ஆம் இடத்தில் உள்ளது. இக்குறியீட்டை, US Chamber of Commerce Global Innovation Policy Centre (GIPC) ஆண்டுதோறும் வெளியிடுகிறது. காப்புரிமை மற்றும் பதிப்புரிமை கொள்கைகள் முதல் அறிவுசார் சொத்துக்களை வணிகமயமாக்குதல் வரை பல கூறுகளில், 53 உலக பொருளாதாரங்களில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “மன்யங்கொண்டா ஜாதரா” என்றால் என்ன?

அ) பண்டைய ஹரப்பர் தளம்

ஆ) புத்த விகாரம்

இ) மாநிலங்களுக்கு இடையேயான மதஞ்சார் விழா

ஈ) விடுதலைக்கு முந்தைய இயக்கம்

 • மன்யங்கொண்டா ஜாதரா என்பது ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான மதஞ்சார் விழாவாகும். இந்த விழாவில், ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மொத்துகுதேம் மண்டலத்தில் உள்ள பொல்லூரு கிராமத்தில் ஒடிஸா மாநிலத்திற்கு கடவுளர் சிலைகளை மாற்றுவதும் அடங்கும்.
 • கடந்த காலங்களில், இந்தத் திருவிழாவின்போது விரும்பத்தகாத நிகழ்வு -களும் இடதுசாரி தீவிரவாதங்களும் பதிவாகியுள்ளன. ஆனால், ஏராள -மான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, இந்த ஆண்டின் திருவிழா அமைதியாக நடந்தேறியது.

7. இந்தியாவின் UPSC’க்கும் பின்வரும் எந்த நாட்டின் தேர்வாணையத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) இலங்கை

ஆ) வங்காளதேசம்

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) பாகிஸ்தான்

 • இந்தியாவின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் ஆப்கானிஸ்தானின் சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப் பணிகள் ஆணையம் (IARCSC) ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. IARCSC மற்றும் UPSC ஆகியவற்றுக்கு இடையேயான உறவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்தும்.
 • பணியாளர்கள் தேர்வில் இருதரப்புக்கும் உள்ள அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளவும் இது வழிவகுக்கும்.

8. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையத்தின் 116ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ) லாகூர்

ஆ) புது தில்லி

இ) ஜெய்ப்பூர்

ஈ) ஜலந்தர்

 • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையக்கூட்டத்தின் 116ஆவது கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பின்னர் நடந்தது. பாகிஸ்தான் தேசிய நாளுடன் இச்சந்திப்பு ஒத்துப்போனது. இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டம், இந்திய தரப்பில் சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையில் நடைபெற்றது.

9. 1921’இல், பின்வரும் எந்த இந்தியத்தலைவரின் ஒடிஸா பயணம் குறித்த நினைவு அஞ்சல்தலை அண்மையில் வெளியிடப்பட்டது?

அ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

ஆ) பாபாசாகேப் அம்பேத்கர்

இ) ‘மகாத்மா’ காந்தி

ஈ) ‘கர்மவீரர்’ காமராஜர்

 • ‘மகாத்மா’ காந்தி, கடந்த 1921ஆம் ஆண்டில் (100 ஆண்டுகளுக்கு முன்பு) முதன்முறையாக ஒடிஸா மாநிலத்துக்கு வருகைதந்தார். மேலும் அவரது ஒத்துழையாமை இயக்கத்தின் ஒருபகுதியாக மக்கள் கூட்டத்தின்முன் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ‘மகாத்மா காந்தியின் ஒடிஸாவுக்கான முதல் வருகையின் நூறாம் ஆண்டு’ குறித்த நினைவு அஞ்சல்தலை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

10. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) பங்கஜ் குமார்

ஆ) குருபிரசாத் மோகபத்ரா

இ) அருண்குமார்

ஈ) சஞ்சீவ் குமார்

 • மகாராஷ்டிர கேடரின் 1991ஆம் ஆண்டு தொகுதி இ. ஆ. ப அதிகாரியான சஞ்சீவ் குமார், இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, ஆதிஷ் சந்திரா, இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பார். வெவ்வேறு அமைச்சகங்களுக் -கு, 22 அதிகாரத்துவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. டி20 தரவரிசை: முதலிடத்தில் தொடரும் ஷஃபாலி வர்மா

மகளிருக்கான ICC டி20 தரவரிசையில் பேட்ஸ்வுமன்கள் பிரிவில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான தொடர் நிறைவடைந்த நிலையில், அவர் 776 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்க, ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 741 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்தின் சோபி டிவைன் 712 புள்ளிகளுடன் 3’ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஓரிடம் முன்னேறி 693 புள்ளிகளுடன் 6ஆவது இடத்துக்கு வந்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள்ளாக மற்றொரு இந்தியராக ஜெமிமா ரோட்ரிகஸ் 640 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் சுனே லஸ் ஓரிடம் முன்னேறி 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பௌலர்கள் பிரிவில் இந்தியாவின் இராஜேஷ்வரி கெய்க்வாட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்ததன் பேரில் 12 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளா -ர். தரவரிசை வரலாற்றில் முதல்முறையாக அவர் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 658 புள்ளிகளுடன் அந்த இடத்திலிருக்க, அருந்ததி ரெட்டி 15 இடங்கள் முன்னேறி 56ஆவது இடத்தை எட்டியுள்ளார். முதல் 10 இடங்களுக்குள்ளாக தீப்தி சர்மா 705 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், இராதா யாதவ் 702 புள்ளிகளுடன் 8ஆம் இடத்திலும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் டுமி சிகுகுனே 7 இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தை எட்டியுள்ளார். நாடினே கிளார்க் 2 இடங்கள் முன்னேறி, சக நாட்டவரான மொஸ்லின் டேனியல்ஸுடன் 66ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டன் (799), தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் (763), இங்கிலாந்தின் சாராகிளென் (755) ஆகியோர் பௌலர்கள் பிரிவில் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

1. Which country is set to re–establish the Homeland Security Dialogue with India?

A) Japan

B) USA

C) United Kingdom

D) Russia

 • India and the U.S. have recently agreed to re–establish the U.S.– India Homeland Security Dialogue, as per the announcement of the U.S. Department of Homeland Security (DHS). The Dialogue aims to discuss important issues such as cybersecurity and emerging technology. It also aims to address violent extremism. The first Homeland Security Dialogue between the two countries was held in 2011.

2. The Union Minster of Education has inaugurated the Shaheed Bhagat Singh Smarak in which state/UT?

A) Punjab

B) New Delhi

C) Uttar Pradesh

D) Haryana

 • The University of Delhi organized a programme to commemorate 90 years of martyrdom of the leaders: Bhagat Singh, Sukhdev Thapar and Shivaram Rajguru on ‘Shaheed Diwas’.
 • Union Minister of Education, Ramesh Pokhriyal ‘Nishank’ virtually inaugurated the Shaheed Bhagat Singh Smarak. The existing collection of books on freedom fighters in the Bhagat Singh Smarak has been announced to be converted into “Shaheed Smriti Pustakalaya”.

3. Which global rating agency releases report titled ‘Global Economic Outlook’ GEO?

A) Fitch Ratings

B) CRISIL

C) Standard & Poor

D) Ind–RA

 • American credit rating agency Fitch releases the report titled ‘Global Economic Outlook GEO’. In its recent edition, it has revised India’s GDP growth estimate to 12.8% for next fiscal. Earlier, the ratings agency had estimated a growth rate of 11%. The reasons stated are a stronger carryover effect, a looser fiscal stance, and better virus containment. Fitch also expects GDP growth to ease to 5.8% in Fiscal Year 2023.

4. Which Indian state has recorded a huge decline in the incidence of Tuberculosis, at a rate of 7.5%?

A) Tamil Nadu

B) Kerala

C) Maharashtra

D) Himachal Pradesh

 • In the state of Kerala, the estimated incidence of tuberculosis (TB) went down by 37.5% between 2015–20. With this, the southern state has registered an annual decline rate of 7.5%. As the global reduction rate would only be 2–3% and hence the state’s reduction rate is very significant. The state has also won the bronze medal in the Health Ministry’s Certification of Efforts Towards Elimination of TB.

5. What is the rank of India in the latest International Intellectual Property (IP) Index?

A) 20

B) 30

C) 40

D) 50

 • India has been ranked 40 on the latest annual edition of the International Intellectual Property (IP) Index. The IP index is released annually by the US Chamber of Commerce Global Innovation Policy Centre (GIPC). It assesses the Intellectual Property rights in 53 global economies in several areas from patent and copyright policies to commercialisation of IP assets etc.

6. What is “Manyamkonda Jatara”, that is seen in the news recently?

A) Ancient Harappan Site

B) Buddhist Vihara

C) Interstate Religious Festival

D) Pre–Independence Movement

 • Manyamkonda Jatara is an interstate religious festival of Andhra Pradesh and Odisha. This festival involves shifting idols from Odisha to Andhra at Polluru village in Mothugudem mandal of East Godavari District. Incidents of untoward incidents and left–wing extremisms have been reported in the past during this festival.
 • But, due to abundant precautionary measures, this year’s festival went on peacefully.

7. Union Cabinet has approved MoU between UPSC of India and its counterpart in which country?

A) Sri Lanka

B) Bangladesh

C) Afghanistan

D) Pakistan

 • The Union Cabinet has approved signing of Memorandum of Understanding (MoU) between Union Public Service Commission (UPSC) of India and Independent Administrative Reforms and Civil Services Commission (IARCSC) of Afghanistan.
 • This MoU is aimed to share experience, expertise between the two agencies in recruitment of civil servants.

8. Where was the 116th Meeting of the Permanent Indus Commission between India and Pakistan held?

A) Lahore

B) New Delhi

C) Jaipur

D) Jalandar

 • The 116th meeting of the Permanent Indus Commission meeting between India and Pakistan was held recently in New Delhi. This meeting took place after a gap of more than two and half years. This meeting coincided with the National Day of Pakistan.
 • It is a 2–day meeting which on the Indian side is headed by Indus Water Commissioner Pradeep Kumar Saxena.

9. Commemorative stamp of which Indian leader’s visit to Odisha in 1921 has been released recently?

A) Netaji Subash Chandra Bose

B) Babasaheb Ambedkar

C) ‘Mahatma’ Gandhi

D) ‘Karmaveerar’ Kamarajar

 • Mahatma Gandhi visited Odisha for the first time in the year 1921 (100 years ago) and had addressed a massive gathering of people as a part of his non–cooperation movement.
 • To commemorate this event, a commemorative postage stamp on ‘100 years of first visit of Mahatma Gandhi to Odisha’ has been released recently.

10. Who has been appointed as the Chairman of the Airports Authority of India?

A) Pankaj Kumar

B) Guruprasad Mohapatra

C) Arun Kumar

D) Sanjeev Kumar

 • Sanjeev Kumar, a 1991 batch IAS officer of Maharashtra cadre, has been appointed as the Chairman of the Airports Authority of India (AAI), it said. As per the order issued by the Personnel Ministry, Atish Chandra will be Chairman and Managing Director, Food Corporation of India in the rank and pay of Additional Secretary. As many as 22 bureaucrats have been appointed to different ministries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *