Tnpsc

31st May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

31st May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

31st May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்திய தேசிய விளையாட்டு விருதுகளுள் இந்தியக்குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை என்ன?

அ) நான்கு

ஆ) ஆறு

இ) எட்டு

ஈ) பத்து

  • MAKA கோப்பை; அர்ஜுனா விருது; துரோணாச்சார்யா விருது; ராஜீவ் காந்தி கேல் இரத்னா; தியான் சந்த் விருது மற்றும் புரோட்சஹான் புரஸ்கார் ஆகியவை தேசிய விளையாட்டு விருதுகளாகும். 1956-57 காலகட்டத்திலிருந்து இந்தியக்குடியரசுத்தலைவர் அவர்களால் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “கிளைட் ஸ்பாட்” அமைந்துள்ள கோள் எது?

அ) புதன்

ஆ) செவ்வாய்

இ) பூமி

ஈ) வியாழன்

  • வியாழன் கோளில் உள்ள ‘கிளைட்ஸ் ஸ்பாட்’ ஆனது, கடந்த 2020ஆம் ஆண்டில், ஒரு வளர்ந்து வரும் வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அக்கோளின் ‘கிரேட் ரெட் ஸ்பாட்’க்கு அருகில் நீள்வட்டவடிவில் அமைந்துள்ளது. வியாழனைச்சுற்றிவரும் NASA’இன் ஜூனோ விண்கலம், 2021 ஏப்ரலில் அவிவிடத்தின் நிழற்படத்தை வெளியிட்டது.
  • அண்மையில் எடுக்கப்பட்ட நிழற்படத்தில், அவ்வஅமைப்பு ஒரு குழம்பிய குமிழ்போல தோன்றியது.

3. COVID-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் “ECMO” என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Echocardiogram Output

ஆ) Extracorporeal membrane oxygen

இ) Electrophysiology Output

ஈ) Endocrine membrane Oxygen

  • தீவிர COVID-19 சிகிச்சையின்போது, மருத்துவர்கள் ECMO அல்லது Extracorporeal membrane oxygen’ஐ தேர்வுசெய்கிறார்கள். நோயாளியி -ன் இயற்கை சுவாசம் செயல்படாதபோதும், எந்திர காற்றோட்டத்திற்கு பதிலளிக்க முடியாத நிலையிலும், மருத்துவர்கள் ECMO’ஐப் பயன்படுத்த முடிவு செய்கிறார்கள். இது ஒரு செயற்கை இருதயமாகவும், உடலுக்கு வெளியே செயற்கை நுரையீரலின் ஜோடியாகவும் செயல்படுகிறது.

4. குனோ தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மத்திய பிரதேசம்

ஆ) மகாராஷ்டிரா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கேரளா

  • 1947ஆம் ஆண்டில், சத்தீஸ்கரில் நாட்டிலிருந்த கடைசி சிறுத்தையும் இறந்த பின்னர், 1952ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • அவ்விலங்கு இவ்வாண்டு நவம்பரில் மீண்டும் இந்தியாவில் (மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில்) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வனவுயிரி நிறுவனமானது (WII) சில ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான திட்டத்தைத் தயாரித்திருந்தது.

5. அண்மையில் காலமான அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரின் பெயர் என்ன?

அ) சாந்தி பகாடியா

ஆ) ஸ்ரீகுமார் பானர்ஜி

இ) திபாங் டாடக்

ஈ) ராம் சாருப் லுகானி

  • அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அண்மையில் காலமானார். அவர் பாபா அணுவாராய்ச்சி மையத்தின் (BARC) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்ரீகுமார் பானர்ஜி, 2005 ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதும், 1989ஆம் ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் பெற்றார்.

6. கேரளத்தின் ‘டியூபர் மேன்’ என்றழைக்கப்படுகிற ஷாஜி NM அவர்களுக்கு சமீபத்தில் எவ்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது?

அ) இந்திய பல்லுயிர்ப்பெருக்க விருது – 2021

ஆ) சர்தார் படேல் சிறப்பு ICAR விருது

இ) கிருஷி விக்யான் புரோத்ஷஹான் புரஸ்கர்

ஈ) ஹரிதா கீர்த்தி விருது

  • கேரளாவின் ‘கிழங்கு மனிதன்’ என்றழைக்கப்படும் ஷாஜி NM, இந்திய பல்லுயிர்ப்பெருக்க விருது – 2021 வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். ‘பழக்கப்படுத்தப்பட்ட உயிரினங்களின் பாதுகாப்பு’ என்ற தனிப்பட்ட பிரி -வில் அவர்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அவர் பழங்குடிப்பகுதிகள் மற்றும் காடுகளுக்குச்சென்று 200 கிழங்கு பயிர்களை சேகரித்து அவற்றை தனது பண்ணைகளில் பாதுகாத்து வளர்த்து வருகிறார். அவர் தனது முயற்சிகளுக்காக ஏழு முறை மாநில விருதுகளைப்பெற்றுள்ளார், மேலும் அவர், 2015ஆம் ஆண்டுக்கான தாவர ஜீனோம் மீட்பர் வெகுமதியையும் பெற்றுள்ளார்.

7. நடப்பாண்டில் (2021) வரும் உயிரியல் பன்முகத்தன்மைக்கான பன்னாட்டு நாளின் கருப்பொருள் என்ன?

அ) We’re part of the solution

ஆ) Our solutions are in Nature

இ) Pandemic Management

ஈ) Ecosystem Restoration Ahead

  • பன்னாட்டளவில் உயிரியல் பல்வகைமைபற்றிய புரிதல் மற்றும் விழிப்பு -ணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே.22 அன்று பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “We’re part of the solution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

8. “கலப்பின அரிசியின் தந்தை” எனக்கருதப்படும் யுவான் லாங்பிங், எந்த நாட்டைச் சார்ந்த பிரபல வேளாண் அறிவியலாளராவார்?

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) தென் கொரியா

ஈ) வியட்நாம்

  • “கலப்பின அரிசியின் தந்தை” எனக்கருதப்படும் சீன வேளாண் அறிவிய -லாளரான யுவான் லாங்பிங் (91) காலமானார். 1970களில் முதல் கலப்பின அரிசி வகைகளை உருவாக்கியதற்காக அவர் அறியப்பட்டார்.
  • 2004ஆம் ஆண்டில், அதிக மகசூல் தரும் கலப்பின அரிசி வகைகளை இனப்பெருக்கம் செய்வதற்குத் தேவையான மரபணு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கியதில் அவர் செய்த சாதனைக்காக அவருக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது.

9. 2021ஆம் ஆண்டில் உருவான முதல் அட்லாண்டிக் புயலின் பெயர் என்ன?

அ) பெல்லா

ஆ) ஹாரி

இ) அனா

ஈ) டாவ்

  • 2021ஆம் ஆண்டில் உருவான ‘அனா’ எனப் பெயரிடப்பட்ட முதலாவது அட்லாண்டிக் புயலானது அட்லாண்டிக் பெருங்கடலில் வடகிழக்கு திசை நோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையத்தின் கூற்றுப்படி, இந்தப் புயல் பெர்முடாவிலிருந்து வடகிழக்கில் 435 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

10. மே.23 அன்று உலக நாளாக அனுசரிக்கப்படும், மகப்பேற்றின் போது ஏற்படும் காயத்தின் பெயர் என்ன?

அ) Obstetric fistula

ஆ) Intrauterine Hypoxia

இ) Meconium Aspiration Syndrome

ஈ) Placenta Previa

  • மகப்பேற்றுப் புண் என்பது மிகவும் கடுமையான பிரசவ காயங்களுள் ஒன்றாகும். இது பிறப்பு கால்வாய் மற்றும் சிறுநீர்ப்பை அல்லது மலக்குடலுக்கு இடையே ஏற்படும் ஒரு துளையாகும். சரியான சமயத்தில் மரு -த்துவ சிகிச்சை அணுகல் கிடைக்காதபோதும் நீடித்த அல்லது தடைபட்ட பிரசவத்தினாலும் இது ஏற்படுகிறது. “Women’s rights are human rights! End fistula now!” என்பது நடப்பாண்டிற்கான கருப்பொருளாகும்.

1. India’s National Sports Awards includes how many sports awards presented by the President of India?

A) Four

B) Six

C) Eight

D) Ten

  • The National Sports Awards is the collective name given to the six sports awards MAKA Trophy; Arjuna Award; Dronacharya Award; Rajiv Gandhi Khel Ratna; Dhyan Chand Award and Protsahan Puruskar. They are being awarded by the President of India to outstanding sportspersons of India, since 1956–57. The Sports Ministry has recently invited applications for the national sports awards.

2. “Clyde’s Spot”, which was making news recently, is a place located in which planet?

A) Mercury

B) Mars

C) Earth

D) Jupiter

  • “Clyde’s Spot” was discovered on Jupiter in 2020 by an amateur astronomer. It appeared as an oval–shaped feature near the planet’s famous “Great Red Spot.” NASA’s Juno spacecraft, which is orbiting the Jupiter has revealed a photo of the spot in April 2021. In the recent photo taken during the craft’s 33rd close pass over Jupiter’s clouds, that oval structure looks more like a swirling, chaotic blob.

3. What is the expansion of ECMO, used in the Covid–19 treatment?

A) Echocardiogram Output

B) Extracorporeal membrane oxygen

C) Electrophysiology Output

D) Endocrine membrane Oxygen

  • In extreme cases of COVID–19, doctors choose to apply ECMO or Extracorporeal membrane oxygen for critically ill patients.
  • When oxygen support fails and when patients are not able to respond to interventions like mechanical ventilation, doctors may choose to apply ECMO, which acts as an artificial heart and pair of artificial lungs outside the body.

4. Where is Kuno National Park situated in India?

A) Madhya Pradesh

B) Maharashtra

C) Andhra Pradesh

D) Kerala

  • Cheetah, the world’s fastest land animal which was declared extinct in India in 1952, after the country’s last spotted cheetah died in Chhattisgarh in 1947. The animal is expected to be re–introduced into the country in November this year at the Kuno National Park in Madhya Pradesh. The Wildlife Institute of India (WII) prepared a cheetah re–introduction project a few years ago.

5. What is the name of the Ex–Chairman of the Atomic Energy Commission, who recently passed away?

A) Shanti Pahadia

B) Srikumar Banerjee

C) Dibang Tatak

D) Ram Sarup Lugani

  • Former Atomic Energy Commission Chairman Srikumar Banerjee has recently passed away. He also served as the director of the Bhabha Atomic Research Centre (BARC). Dr Banerjee had received the Padma Shri in 2005 and the Shanti Swarup Bhatnagar Award in 1989 for his significant service in the field of science.

6. Shaji NM, also called as ‘Tuber Man’ of Kerala has been presented with which award recently?

A) India Biodiversity Award 2021

B) Sardar Patel Outstanding ICAR award

C) Krishi Vigyan Protshahan Puraskar

D) Haritha Keerthi Award

  • Shaji NM, also called as ‘Tuber Man’ of Kerala has been presented with the India Biodiversity Award 2021, in the individual category of ‘Conservation of Domesticated Species’. He has collected as many as 200 tuber crops by travelling to tribal areas and forests and conserves them in his farms. He has received State awards seven times for his outstanding efforts and he also received the Plant Genome Savior Reward 2015.

7. What is the theme of the ‘International Day for Biological Diversity, 2021’?

A) We’re part of the solution

B) Our solutions are in Nature

C) Pandemic Management

D) Ecosystem Restoration Ahead

  • The International Day for Biological Diversity is observed every year on 22nd May to increase under standing and awareness about biodiversity issues on a global scale. The 2021 theme for International Day for Biological Diversity is “We’re part of the solution”.

8. Yuan Longping, regarded as the “Father of hybrid rice”, was a famous agricultural scientist from which country?

A) Japan

B) China

C) South Korea

D) Vietnam

  • Yuan Longping, the Chinese agricultural scientist, regarded as the “father of hybrid rice”, has recently passed away at the age of 91. He was known for developing the first hybrid rice varieties in the 1970s. In 2004, he was honoured with the World Food Prize for his achievement in developing the genetic materials and technologies essential for breeding high–yielding hybrid rice varieties.

9. What is the name of the first named Atlantic storm of 2021?

A) Bella

B) Harry

C) Ana

D) Daav

  • The first named Atlantic storm of the season, Ana is expected to drift northeast over the Atlantic Ocean after bringing rain to Bermuda. As per the National Hurricane Center in Miami says Subtropical Storm Ana was located about 435 kilometers northeast of Bermuda.

10. What is the name of the child–birth injury, which is being observed as an international day on May 23?

A) Obstetric fistula

B) Intrauterine Hypoxia

C) Meconium Aspiration Syndrome

D) Placenta Previa

  • Obstetric fistula is one of the most serious and tragic childbirth injuries. It is a hole between the birth canal and bladder or rectum, and is caused by prolonged or obstructed labour without access to timely, medical treatment. The theme for this year is “Women’s rights are human rights! End fistula now!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!