TnpscTnpsc Current Affairs

31st May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

31st May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 31st May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அஞ்சல்துறையானது எந்த மாநிலத்தில் முதன்முறையாக டிரோனைப் பயன்படுத்தி அஞ்சல்களை வழங்கியது?

அ. கேரளா

ஆ. தெலுங்கானா

இ. குஜராத் 

ஈ. ஒடிஸா

  • முதன்முறையாக குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் சோதனைத் திட்டத்தின் ஒருபகுதியாக டிரோனைப் பயன்படுத்தி அஞ்சல்துறை அஞ்சலை அனுப்பியது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்கீழ் அஞ்சல் துறையின்மூலம் புஜ் தாலுகாவில் இருந்து கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் தாலுகா வரையிலான 46 கிமீ தூரத்தை 25 நிமிடங்களில் டிரோன் கடந்தது. இந்தச் சோதனைத் திட்டம் டிரோன்கள்மூலம் அஞ்சல் அனுப்புவதற்கான செலவு மற்றும் இரண்டு மையங்களுக்கு இடையேயான புவியியல் இருப்பிடம் ஆகியவற்றை ஆய்வுசெய்தது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பந்தன் எக்ஸ்பிரஸ் மற்றும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே ஓடுகின்றன?

அ. நேபாளம்

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம் 

ஈ. மியான்மர்

  • COVID தொற்றுப்பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே இயங்கும் பந்தன் எக்ஸ்பிரஸ், 2 ஆண்டுகளுக்குப்பிறகு சமீபத்தில் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. மைத்ரீ எக்ஸ்பிரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சேவையைத்தொடங்கியது. கொல்கத்தா மற்றும் குல்னா இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது; மைத்ரீ எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவை டாக்காவுடன் இணைக்கிறது.

3. 2022 – ஐநாஇன் அமைதிகாக்கும் படையினர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. People Peace Progress: The Power of Partnerships 

ஆ. Peace for All

இ. Planet Peace Partnerships

ஈ. Tribute to Peacekeepers

  • சீருடை அணிந்த மற்றும் சிவிலியன் பணியாளர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே.29 அன்று ஐநாஇன் அமைதிகாக்கும் படையினருக்கான சர்வதேச நாள் கொண்டாடப்படுகிறது. 1948ஆம் ஆண்டு முதல் ஐநா-இன்கீழ் பணியாற்றிய சுமார் 4,200 அமைதிகாக்கும் படையினரை கௌரவிப்பதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு (2022), “People Peace Progress: The Power of Partnerships” என்ற கருப்பொருளின் கீழ் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.

4. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2020’ என்ற அறிக்கையின்படி, 2020-இல் எந்த மாநிலம்/UT-இல் அதிக விபத்துத்தீவிரம் பதிவாகியுள்ளது?

அ. கேரளா

ஆ. மிசோரம்

இ. அஸ்ஸாம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

  • ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2020’ என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, 2000ஆம் ஆண்டுக்குப்பிறகு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான சாலை விபத்துகளும், 2009-க்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளும், 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளன.
  • 100 விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக்கொண்டு ‘சாலை விபத்து தீவிரம்’ வரையறுக்கப்படுகிறது. 2020-இல் 36 என இந்த எண்ணிக்கை உள்ளது; இது 2000-க்குப் பிறகு உயர்ந்துள்ளது. மிசோரம் (79) அதிக விபத்துத்தீவிரத்தை பதிவுசெய்துள்ளது. அதைத்தொடர்ந்து பீகார் (78) மற்றும் பஞ்சாப் (75) உள்ளது.

5. தேசிய பூங்காவிற்குள் சமூக வன வளத்தை அங்கீகரிக்கும் இரண்டாவது மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மத்திய பிரதேசம்

இ. சத்தீஸ்கர் 

ஈ. மகாராஷ்டிரா

  • சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கேர்காட்டி தேசிய பூங்காவில் உள்ள குடியாபதர் மற்றும் நாகல்சர் கிராமங்களின் சமூக வன வள உரிமைகோரல்களுக்கு மாநில அரசு ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம், ஒடிசாவிற்கு அடுத்தபடியாக தேசிய பூங்காவிற்குள் சமூக வன வளத்தை அங்கீகரித்த இரண்டாவது மாநிலமாக சத்தீஸ்கர் ஆனது. இந்த உரிமைகள் வனவாசிகளுக்கு பல்வேறு அரசாங்கத் திட்டங்களின்கீழ் கிடைக்கும் நிதியைப் பெற முடிவெடுக்கும் மற்றும் வன நிர்வாகத்தில் அதிகாரமளிக்கின்றன.

6. எந்த நாட்டின் செவ்வாய் தரையிறங்கி, சமீபத்தில் மற்றொரு கிரகத்தில் காணப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறிந்தது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. அமெரிக்கா 

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

  • NASAஇன் இன்சைட் செவ்வாய் தரையிறங்கியாயனது வேறொரு கிரகத்தில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிலநடுக்கத்தை கண்டறிந்துள்ளது. இந்த ஊர்தி 2018 நவம்பரில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இதுவரை 1,313 நிலநடுக்கங்களை அது கேட்டுள்ளது. அவற்றுள் மிகப்பெரியதான ‘மார்ஸ்கக்’ 2021 ஆகஸ்ட் மாதத்தில் கண்டறியப்பட்டது. பூமியில் நிலநடுக்கங்கள் டெக்டோனிக் திட்டுகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகின்றன, ஆனால் செவ்வாய் கிரகத்தில் டெக்டோனிக் தட்டுகள் ஏதுமில்லை.

7. ‘Fostering Effective Energy Transition’ என்ற அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. உலகப் பொருளாதார மன்றம் 

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. பன்னாட்டு எரிசக்தி நிறுவனம்

  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) சமீபத்தில் ‘Fostering Effective Energy Transition’ அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வின்படி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தாங்குமை திறன் ஆகியவற்றுக்கான சவால்களை எதிர்கொள்ள, ஒரு மீளாற்றல் மாற்றத்தை உறுதிசெய்ய தனியார் மற்றும் பொதுத்துறைகளின் அவசர நடவடிக்கை தேவை. அக்சென்ச்சர் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்ட சிறப்புப் பதிப்பு அறிக்கை, ஆற்றல் மாற்றத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கங்கள், நிறுவனங்கள், நுகர்வோர்களுக்கான பரிந்துரைகளை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

8. $250,000 மதிப்புள்ள குளோபல் நர்சிங் விருது – 2022 வென்ற அன்னா கபாலே துபா சார்ந்த நாடு எது?

அ. கென்யா 

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. நைஜீரியா

ஈ. தென்னாப்பிரிக்கா

  • கென்யா நாட்டைச் சேர்ந்த அன்னா கபாலே துபா ‘ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது – 2022’இன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது சுகாதாரத் துறையில் $250,000 டாலர்கள் மதிப்புடைய சிறந்த விருதுகளுள் ஒன்றாகும். கபாலே துபா அறக்கட்டளையின்கீழ், அவர் தனது கிராமத்தில் ஒரு பள்ளியைக்கட்டினார். அங்கு குழந்தைகள் காலையில் படிக்கலாம் மற்றும் பெரியவர்கள் மதியம் படிக்கலாம். அவர் தனது சமூகத்தில் பாலின சமத்துவம் மற்றும் கல்விக்காக வாதிடுபவராக உள்ளார்.

9. எந்த நாட்டு அறிவியலாளர்கள் நிலவின் மண்ணில் முதன்முறையாக தாவரங்களை வளர்த்துள்ளனர்?

அ. அமெரிக்கா 

ஆ. இந்தியா

இ. ஜப்பான்

ஈ. சீனா

  • அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிலவின் மண்ணில் தாவரங்கள் வெற்றிகரமாக முளைத்து வளரமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர். தாவரங்கள் வளர்க்கப்பட்ட நிலவின் மண் ‘சந்திர ரெகோலித்’ என்று அழைக்கப்படுகிறது. அப்பல்லோ பயணங்களில் விண்வெளி வீரர்களால் பூமிக்கு அது கொண்டுவரப்பட்டது. அரபிடோப்சிஸ் தாவரம் அதன் மரபணு குறியீடு முழுமையாக வரைபடமாக்கப்பட்டுள்ளதால் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. இது எதிர்கால விண்வெளி பயணங்களின்போது நிலவில் உணவு மற்றும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கான ஒருபடியாக பார்க்கப்படுகிறது.

10. எந்த இந்திய மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்றார்?

அ. அஸ்ஸாம்

ஆ. திரிபுரா 

இ. மேகாலயா

ஈ. மணிப்பூர்

  • திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநிலங்களவை உறுப்பினரும் மாநில கட்சித்தலைவருமான மாணிக் சாஹா புதிய அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. குரங்கு அம்மை: நைஜீரியாவில் முதல் உயிரிழப்பு

குரங்கு அம்மை நோய்த்தொற்றுக்கு நிகழாண்டு முதல்முறையாக நைஜீரியாவில் ஒருவர் உயிரிழந்தார். பெரியம்மை வகையைச் சேர்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. மே 26-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 23 நாடுகளில் சுமார் 257 பேருக்கு இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. 2017-ஆம் ஆண்டு குரங்கு அம்மை நோய்த்தொற்று நைஜீரியாவில் முதலில் கண்டறியப்பட்டது. நிகழாண்டில் இதுவரை 21 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2. `9.27 இலட்சம் கோடி வர்த்தகம்: சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியான அமெரிக்கா

கடந்த நிதியாண்டில் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக மதிப்பு 119.42 பில்லியன் டாலர்களை (சுமார் `9.27 இலட்சம் கோடி) எட்டியது. இதன்மூலம் சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளியாகியுள்ளது அமெரிக்கா.

இந்தப் புள்ளிவிவரத்தை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்தப் புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2013-14 முதல் 2017-18-ஆம் நிதியாண்டு வரையும், 2020-21-ஆம் நிதியாண்டிலும் இந்தியாவின் முதன்மை வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவுடன் உபரி, சீனாவுடன் பற்றாக்குறை: இந்தியா-சீனா இடையே வர்த்தகப்பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 44 பில்லியன் டாலர்களாக (`3.41 இலட்சம் கோடி) இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 72.91 பில்லியன் டாலர்களாக (`5.66 இலட்சம் கோடி) அதிகரித்தது. அதேவேளையில், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உபரி நிலவுகிறது. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி 32.8 பில்லியன் டாலர்களாக (`2.54 இலட்சம் கோடியாக) இருந்தது.

1. In which state, the Department of Posts delivered mail using a drone for the first time?

A. Kerala

B. Telangana

C. Gujarat 

D. Odisha

  • The Department of Posts delivered mail using a drone as part of a pilot project in Gujarat’s Kutch district, for the first time. The project covered a distance of 46 km in 25 minutes, from Bhuj taluk to Bhachau taluk of Kutch district by the postal department under the guidance of the Union Ministry of Communications. The pilot project studied the cost of delivery by drones and geographical location between the two centres.

2. Bandhan Express and Maitree Express, which were seen in the news, run between India and which country?

A. Nepal

B. Sri Lanka

C. Bangladesh 

D. Myanmar

  • Bandhan Express, which runs between India and Bangladesh, recently resumed service after two years, which was earlier stopped due to the COVID pandemic. Maitree Express also resumed services after a long gap of more than two years. Bandhan Express between Kolkata and Khulna runs two days a week, Maitree Express connects Kolkata with Dhaka running five days a week.

3. What is the theme of the ‘2022 International Day of United Nations Peacekeepers’?

A. People Peace Progress: The Power of Partnerships 

B. Peace for All

C. Planet Peace Partnerships

D. Tribute to Peacekeepers

  • The International Day of United Nations Peacekeepers is celebrated on 29 May annually to pay tribute to the contributions of uniformed and civilian personnel. It aims to honour around 4,200 peacekeepers who had lost their lives serving under UN since 1948. Last year, as many as 135 personnel lost their lives last year. This year, the United Nations observed the day under the theme, “People Peace Progress: The Power of Partnerships”.

4. As per the ‘Road accidents in India – 2020’ report released recently, which state/UT recorded the highest accident severity in 2020?

A. Kerala

B. Mizoram 

C. Assam

D. Himachal Pradesh

  • As per the report titled ‘Road accidents in India – 2020’, saw the lowest number of road accidents since 2000 and least deaths since 2009, in the year 2020.
  • ‘Road accident severity’, defined as the number of persons killed per 100 accidents, increased in 2020 to 36, which is the highest since 2000. Mizoram (79) has recorded the highest accident severity, followed by Bihar (78) and Punjab (75) in 2020.

5. Which is the second state to recognise Community Forest Resource (CFR) rights inside a National Park?

A. Gujarat

B. Madhya Pradesh

C. Chhattisgarh 

D. Maharashtra

  • Chhattisgarh state government approved the CFR claims of Gudiyapadar and Nagalsar villages in Kanger Ghati National Park in the state. With this, Chhattisgarh is the second state after Odisha to have recognised Community Forest Resource (CFR) rights inside a National Park. The rights empower forest dwellers in decision–making and forest governance with access to funds available under various government programs.

6. Which country’s Mars lander recently detected the largest quake that was observed on another planet?

A. UAE

B. USA 

C. China

D. Israel

  • NASA’s InSight Mars lander detected the largest quake that was ever observed on another planet. The rover landed on Mars in November 2018 and has heard 1,313 quakes so far, of which the largest “Marsquake” was detected in August 2021. On Earth the quakes are caused by shifts in tectonic plates, but Mars does not have tectonic plates and its crust is a giant plate.

7. Which institution releases the ‘Fostering Effective Energy Transition’ Report?

A. World Bank

B. World Economic Forum 

C. International Monetary Fund

D. International Energy Agency

  • The World Economic Forum released the ‘Fostering Effective Energy Transition’ Report recently. As per the study, an urgent action by both private and public sectors is required to ensure a resilient energy transition to address the challenges to environmental sustainability, energy security and affordability. The special edition report, launched in collaboration with Accenture, listed recommendations for governments, companies, consumers to progress the energy transition.

8. Anna Qabale Duba, who won the $250,000 Global Nursing Award 2022, is from which country?

A. Kenya

B. UAE

C. Nigeria

D. South Africa

  • Anna Qabale Duba from Kenya has been announced as the winner of the Aster Guardians Global Nursing Award 2022. It is one of the top awards with the highest prize money in the healthcare community worth USD 250,000. Under the Qabale Duba Foundation, she built a school in her village where children could study in the morning and adults in the afternoon. She is an advocate for gender equality and education in her community.

9. Which country’s scientists have grown plants in lunar soil for the first time?

A. USA

B. India

C. Japan

D. China

  • The researchers at the University of Florida (UF) in the US demonstrated that plants can successfully sprout and grow in lunar soil. Plants were grown in Moon’s soil, also known as lunar regolith, brought back to Earth by astronauts in the Apollo missions. Arabidopsis plant is used in the research as its genetic code is fully mapped. This is a step towards producing food and oxygen on the Moon during future space missions.

10. Manik Saha was sworn in as the new Chief Minister of which Indian state?

A. Assam

B. Tripura 

C. Meghalaya

D. Manipur

  • Tripura Chief Minister Biplab Kumar Deb resigned from the post in the state, where Assembly elections are due early next year. State party president Manik Saha, who is also a Rajya Sabha member, was elected as the new Leader of the House. Manik Saha took oath as Tripura’s new Chief Minister.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!