Tnpsc

3rd 4th 5th and 8th Class Books Are Changing – in 2019-20 Academic Year

3rd 4th 5th and 8th Class books are changing – in 2019-20 Academic year

The Government Order issued by Pradeep Yadav, Principal Secretary, Government of Tamil Nadu, New curriculum for classes 1, 6, 9 and 11 has been implemented in 2018-19 academic year and the new textbook is distributed to all schools. Subsequent to the preparation of textbooks for Classes 2, 7, 10 and 12, the work is due to end in April 2019.

3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் – வரும் கல்வியாண்டு முதல் அமலாகிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2018-19-ம் கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு புதிய பாடப்புத்தகம் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

அதைத்தொடர்ந்து 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

2020-21-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு உரிய முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வழங்க முடியும் என்றும், தற்சமயம் மேற்கண்ட வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, புத்தக வடிவமைப்பு பணியில் உள்ளது என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து முதல் பருவம் முடிந்து ஒரு மாதத்துக்குள் 2-ம் பருவ பாடங்களுக்கான குறுந்தகடுகளும் தயாரிக்க முடியும் என்றும், 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான சிறுபான்மை பாடங்களின் குறுந்தகட்டினை அடுத்த கல்வியாண்டில் (2020-2021) 3 பருவங்களுக்கும் மொத்தமாக வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும், 2020-2021-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குரிய பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டிலேயே(2019-2020) நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்து பாடப்புத்தகங்களை 2019- 2020-ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக் குனருக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.

? New & Old Samacheer Books Pdf

✅ Download: https://wp.me/p7JanY-7HC

? Book Back Questions Pdf

✅ Download: https://wp.me/p7JanY-7rK

? One Mark Questions Pdf

✅ Download: https://wp.me/p7JanY-8e7

The Director of the State Education Research and Training Institute has said that textbooks for the first season of 3, 4, 5 and 8 classes to be implemented in the 2020-21 academic year will be provided by the end of April and the textbooks for the above classes are currently being prepared and book design work.

Subsequently, he said that the CDs for the 2nd and 2nd seasons will be able to produce within a month of the first season and the whole of the minority subjects for 3, 4, 5 and 8 classes will be able to provide a total of 3 seasons in the next academic year (2020-2021).

The Director of State Education Research and Training Institute has also requested to grant permission for implementation of the courses of classes 3, 4, 5 and 8, which will be implemented in the academic year (2020-2021).

The Government has carefully reviewed the conclusion and decided to change the curriculum for the 3, 4, 5 and 8 classes and decide on the courses to be implemented by the State Education Institute for Research and Training in 2019-2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!