TnpscTnpsc Current Affairs

3rd & 4th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

3rd & 4th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd & 4th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 840 என்ற படைப்பிரிவுக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டரான (ALH) Mk–IIIஐ தயாரிக்கும் நிறுவனம் எது?

அ. DRDO

ஆ. HAL

இ. மசகான் கப்பல்கட்டும் நிறுவனம்

ஈ. BHEL

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. HAL

  • இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் ரோந்துப்பணியை வலுப்படுத்துவதற்கான பெரும் ஊக்குவிப்பாக புதிய இலகுரக நவீன ஹெலிகாப்டர் வசதியுடன்கூடிய 840 என்ற புதிய படைப்பிரிவை கடலோர காவல்படை தலைமை இயக்குனர் V S பதானியா தொடங்கிவைத்தார்.
  • நடுவணரசின், ‘தற்சார்பு இந்தியா’ என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த இலகுரக ஹெலிகாப்டர் Mk–III, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ALH Mk–III என்ற இலகுரக ஹெலிகாப்டர்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்கள், சக்திவாய்ந்த என்ஜின்கள், முழுமையான கண்ணாடி காக்பிட், உயர்தீவிர தேடல் விளக்கு ஆகியவற்றின்மூலம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. கடலோரக் காவற்படையில் மொத்தம் 16 ALH Mk–III ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன, இவற்றில் நான்கு சென்னையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

2. இந்தியா, கீழ்க்காணும் எந்த நாட்டுடன் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பிற்கான, ‘பொருளியல் மேம்பாட்டு கூட்டுறவு நிதிக் கடன்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. பிரான்ஸ்

இ. தென் கொரியா

ஈ. ஸ்வீடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தென் கொரியா

  • 245 பில்லியனுக்கும் அதிகமான கொரியன் வோன் மதிப்புடைய, ‘பொருளியல் மேம்பாட்டு கூட்டுறவு நிதிக்கடன்’ தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும் தென் கொரியாவும் கையெழுத்திட்டன. தில்லியில் நாக்பூர்–மும்பை சூப்பர் கம்யூனிகேஷன் எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகும் இது. தென் கொரியா, கடந்த 2016ஆம் ஆண்டில் வளர்ச்சிக் கூட்டாண்மைக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி பங்காளராக நியமிக்கப்பட்டது.

3. 2022 நவம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த GST வருவாய் எவ்வளவு?

அ. ரூ.1.46 இலட்சம் கோடி

ஆ. ரூ.1.26 இலட்சம் கோடி

இ. ரூ.1.06 இலட்சம் கோடி

ஈ. ரூ.0.96 இலட்சம் கோடி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ரூ.1.46 இலட்சம் கோடி

  • 2022 நவம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் `1,45,867 கோடியாகும். 2022 நவம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாயைவிட 11% கூடுதல் ஆகும். மொத்த ஜிஎஸ்டி வருவாயில், சிஜிஎஸ்டி `25,681 கோடி, எஸ்ஜிஎஸ்டி `32,651 கோடி, ஐஜிஎஸ்டி `77,103 கோடி, செஸ் `10,433 கோடி ஆகும்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Wassenaar Arrangement’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ. மரபார்ந்த ஆயுதங்கள்

ஆ. பருவநிலை மாற்றம்

இ. கிரிப்டோகரன்சி

ஈ. அணுவாயுதங்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. மரபார்ந்த ஆயுதங்கள்

  • 2023 ஜன.1 அன்று ஓராண்டிற்கான வாசெனார் ஏற்பாட்டின் முழுக்குழுமத்தின் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா, நாற்பத்திரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இத்தன்னார்வ ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு குழுமத்தில் இணைந்தது. இந்தக் குழுமம் மரபார்ந்த ஆயுதங்கள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டை உடைய பொருட்களின் பரிமாற்றங்களைக் கண்காணிக்கிறது.

5. 2021 – ‘உலகளாவிய நீர் வளங்களின் நிலை’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. FAO

ஆ. WMO

இ. UNEP

ஈ. UNFCCC

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. WMO

  • உலக வானிலை அமைப்பானது (WMO) 2021 – ‘உலகளாவிய நீர் வளங்களின் நிலை’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, 2002 மற்றும் 2021–க்கு இடையில் கங்கையில் கிடைக்கப் பெறும் நீரினளவும் ஆற்றுப்படுகையில் நிலத்தடியில் கிடைக்கப்பெறும் நீரினளவும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதே போக்கைக் காட்டும் பல உலகளாவிய தலங்களையும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

6. காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின்படி, காலநிலை தணிப்பில் முன்னணியில் உள்ள நாடு எது?

அ. நார்வே

ஆ. ஜெர்மனி

இ. டென்மார்க்

ஈ. ஸ்வீடன்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. டென்மார்க்

  • காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின்படி (Climate Change Performance Index – CCPI), காலநிலை தணிப்பில் டென்மார்க் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. ‘உயரிய’ தேசிய மற்றும் ‘மிகவுயரிய’ மதிப்பிடப்பட்ட சர்வதேச காலநிலைக் கொள்கையைக் கொண்ட ஒரே நாடு டென்மார்க் ஆகும். உலகின் எந்த நாடும் முதல் மூன்று இடங்களைப் பெறவில்லை. டென்மார்க் நான்காம் இடத்தையும் ஸ்வீடன் அதைத் தொடர்ந்தும் உள்ளது. இந்தியா எட்டாமிடத்தில் உள்ளது.

7. இந்திய கடற்படையானது நாடு தழுவிய தற்காப்புப் பயிற்சியான, ‘சீ விஜில்–22’ஐ கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் இருந்து தொடங்கியது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. ஒடிஸா

இ. கோவா

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஒடிஸா

  • ஒடிஸா மாநிலத்தின் பாரதீப் துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படை மிகப்பெரிய நாடு தழுவிய கடலோர பாதுகாப்பு பயிற்சியான, ‘சீ விஜில்–22’ஐ தொடங்கியது. நாடு தழுவிய இக்கடலோர பாதுகாப்புப் பயிற்சியின் மூன்றாவது பதிப்பு இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும். இந்தத் தேசிய அளவிலான கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியானது கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டில் கருத்தாக்கப்பட்டது. கடலோர காவல்படை மற்றும் பிற அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புடன் இந்திய கடற்படையால் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.

8. யுத் அபியாஸ் 22 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் ஒரு பாதுகாப்பு பயிற்சியாகும்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இலங்கை

இ. அமெரிக்கா

ஈ. பிரான்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அமெரிக்கா

  • இந்தியா–அமெரிக்க கூட்டுப் பயிற்சியின் 18ஆவது பதிப்பு, ‘யுத் அபியாஸ்–22’ இம்மாதம் உத்தரகாண்டில் நடத்தப்பட உள்ளது. பயிற்சியின் முந்தைய பதிப்பு 2021 அக்டோபரில் அலாஸ்காவில் நடத்தப்பட்டது. வருடாந்திர பயிற்சியான இது சிறந்த நடைமுறைகள் மற்றும் தந்திரோபாயங்களைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருநாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையேயான இந்தக்கூட்டுப்பயிற்சி மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தும்.

9. இந்தியாவில், ‘தேசிய பத்திரிகை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர்.12

ஆ. நவம்பர்.16

இ. நவம்பர்.17

ஈ. நவம்பர்.19

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நவம்பர்.16

  • பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவானது நவம்பர்.16 அன்று தேசிய பத்திரிகை நாளை, “The Media’s Role in Nation Building” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடியது. நடுவண் தகவல் & ஒலிபரப்புத்துறை அமைச்சர் ‘பத்திரிகை நடத்தை விதிமுறைகள், 2022’ஐ வெளியிட்டார். இந்த நாளில்தான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு தார்மீக கண்காணிப்பு அமைப்பாக செயல்படத் தொடங்கியது.

10. ஒவ்வோர் ஆண்டும், ‘தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரம்’ அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. நவம்பர்

ஆ. டிசம்பர்

இ. ஜனவரி

ஈ. பிப்ரவரி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நவம்பர்

  • தேசிய சுகாதார இயக்கமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15–21 வரை தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரத்தை அனுசரிக்கிறது. குழந்தைகளின் உயிர்வாழ்வு மற்றும் நலமான தேசத்திற்காக பச்சிளங்குழந்தையைப் பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இது அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, “Ensuring quality health care for every newborn – ஒவ்வொரு பச்சிளங்குழந்தைக்கும் தரமான சுகாதாரத்தை உறுதிசெய்தல்” என்ற தலைப்பில் இந்த வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் இரயில்வே கடல்பாலம் நாட்டின் பிரதான நிலப்பகுதியை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கிறது.

இராமேஸ்வரம் தீவை தமிழ்நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2.05 கிமீ நீள புதிய பாம்பன் இரயில் பாலத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் இரயில்வே கடல்பாலமாக இருக்கும். இது 2023 மார்ச்சுக்குள் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. `535 கோடி செலவில் இரயில் விகாஸ் நிகம் லிட்மூலம் இக்கடல்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் அதிக வேகத்தில் இரயில்களை இயக்க அனுமதிக்கும். இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கும்.

இராமேசுவரத்தை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் இரயில்பாலம் 105 ஆண்டுகள் பழமையானது. மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இராமேஸ்வரம் தீவுடன் மண்டபத்தை இணைக்க 1914ஆம் ஆண்டு அசல் பாலம் கட்டப்பட்டது. 1988இல் கடல் இரயில்பாலத்துக்கு இணையாக ஒரு புதிய சாலைப்பாலம் கட்டப்படும் வரை இரண்டு இடங்களையும் இணைக்கும் ஒரே இணைப்பாக இது இருந்தது.

2. இராஜஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க உதயப்பூரில் ஜி20 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகளின் முதல் அமர்வு தொடக்கம்.

இராஜஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க உதயப்பூரில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் முதல் அமர்வு 4.12.2022 அன்று தொடங்கியது. இந்த அமர்வு அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்துகின்ற குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி, காலநிலை மாற்றம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் இதர முக்கிய தலைப்புகளில் பல்வேறு கட்ட விவாதங்கள் நடைபெறுகிறது. அண்மையில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்தியாவின் தலைமையின்கீழ், செயல்படும் பல்வேறு குழுக்களுக்கான பணிகளும், செயலாற்ற வேண்டிய நடைமுறை விளக்கங்களும் விரிவாக விளக்கப்படும். உலக அளவில் நிலவும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் நோக்கில் இந்தியா மற்ற நாடுகளோடு இணைந்து, தீர்வுகளுக்காக முயற்சியை முன்னெடுத்துச் செல்லும்.

3. எழுத்தாளர் கி இராஜநாராயணன் நினைவரங்கம்

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற மறைந்த எழுத்தாளர் கி இராஜநாராயணனின் நினைவரங்கம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவரங்கத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எழுத்தாளர் கி இராஜநாராயணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டில் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் – இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 16.09.1922 அன்று பிறந்தார். பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி இராஜநாராயணன், பேச்சுத்தமிழில் மண்மணம்மிக்க சிறு கதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன.

கி இராஜநாராயணன் அவர்கள் கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக்கதைகள்போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு, “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

கி இராஜநாராயணன் அவர்களுக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள்மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழ்ந்த கி இராஜநாராயணன் அவர்கள் 17.05.2021 அன்று மறைந்தார்.

3. 03-12-2022 – உலக மாற்றுத்திறனாளிகள் நாள்.

கருப்பொருள்: Transformative solutions for inclusive development: the role of innovation in fuelling an accessible and equitable world.

4.  மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு; மாதம் `1500

பார்வையற்றோர் உள்பட 4.39 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. `1000லிருந்து `1,500ஆக உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தொகை வரும் ஜன.1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

5. ‘முதல்வரின் முகவரி’ துறைக்கு வரும் மனுக்களுக்கு தரமதிப்பீடு: தமிழ்நாட்டரசின் புதிய முயற்சி

‘முதல்வரின் முகவரி’ துறைக்கு வரும் மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அவற்றுக்கு தரமதிப்பீடு வழங்கும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. மனுக்களின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொது மக்களின் குறைகளைக் களைவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், ‘முதல்வரின் முகவரி’ துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் துறையை உருவாக்கியுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் அதனை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

தரமதிப்பீடு அளிப்பு: தனியார் துறைகளில் சேவையளிக்கும் பிரிவுகளில் தரமதிப்பீடு வழங்குவது வழக்கம். அதாவது, வாடிக்கையாளர்களுக்குச் சேவை எந்த அளவுக்கு திருப்திகரமாக இருந்தது என்பதைத் தெரிவிக்க நட்சத்திர குறியீட்டை வழங்கச் சொல்வார்கள். அதுபோன்றே, ‘முதல்வரின் முகவரி’ துறையும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தரமதிப்பீடு அளிக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என்ற மூன்று மதிப்பீடுகள் அளிக்கப்படுகின்றன.

‘ஏ’ என்றால், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது முழுமையாகத் தீர்வு கண்டதாக அர்த்தம். அதாவது, முழுமையாக பைசல் செய்யப்பட்ட மனுக்கள், ‘ஏ’ என்று தரவரிசைப்படுத்தப்படுகிறது. பகுதியளவு தீர்வுகாணப்பட்டிருந்தால் ‘பி’ என தரவரிசை அளிக்கப்படுகிறது. அதாவது, பொதுமக்கள் அளித்த மனுவானது வேறு துறையின் பரிசீலனைக்கோ அல்லது ‘முதல்வரின் முகவரி’ துறையின் பரிசீலனையிலோ இருந்தால் அது ‘பி’ தரவரிசைக்கு உட்படுத்தப்படுகிறது. மனுக்கள்மீது நடவடிக்கைகள் தொடங்கப்படாதபட்சத்தில் அவை ‘சி’ என தரவரிசைக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ‘முதல்வரின் முகவரி’ துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து விரைவாக சீரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அரசுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

6. உலகளாவிய விமானப்போக்குவரத்து பாதுகாப்பு: இந்தியா 48ஆவது இடத்துக்கு முன்னேற்றம்.

சர்வதேச வான்போக்குவரத்து அமைப்பின் உலகளாவிய வான்போக்குவரத்து பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 48ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகளாவிய விமானப்போக்குவரத்து தரவரிசையில் 4 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா 102ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், முக்கிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் எவ்வாறு செயல்படுத்தியுள்ளது என்பதை கடந்த மாதம் ஐசிஏஓ தணிக்கை செய்தது. இதில் அந்த அம்சங்களை செயல்படுத்தியதில் இந்தியாவின் மதிப்பெண் 85.49 சதவீதமாக உயர்ந்தது.

இந்தத் தரவரிசையில் முதலிடத்தில் சிங்கப்பூர், இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம், மூன்றாவது இடத்தில் தென்கொரியா ஆகியவை உள்ளன. சீனா 49ஆவது இடத்தில் உள்ளது.

7. சிறுவிவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு: இந்திய புத்தாக்க நிறுவனத்துக்கு பிரிட்டன் பரிசு.

பைங்குடில் விவசாயம் வாயிலாக சிறு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகண்டதற்காக, தெலங்கானாவைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமான கேத்தி நிறுவனத்துக்கு பிரிட்டன் இளவரசரால் நிறுவப்பட்ட ‘எர்த்ஷாட்’ பரிசு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறையின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இப்பரிசு, 1 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் `10 கோடி) மதிப்புடையதாகும்.

சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு சிறப்பாக பங்களிப்பவர்களை அங்கீகரிக்கும் வகையில், ‘எர்த்ஷாட்’ பரிசை பிரிட்டன் இளவரசர் வில்லியம் கடந்த ஆண்டு நிறுவினார். இயற்கைமீட்பு மற்றும் பாதுகாப்பு, வளிமண்டல தூய்மை, கடல்சார் மறுமலர்ச்சி, கழிவுகள் இல்லா வாழ்க்கை, பருவநிலை செயல்பாடு ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில், இயற்கைமீட்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின்கீழ் கேத்தி நிறுவனத்துக்கு பரிசு வழங்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், கேத்தி நிறுவனத்துக்கு பரிசு கிடைத்துள்ளது.

குறைந்த செலவில் பசுமைக்குடில் உபகரணங்கள் தொகுப்பை உருவாக்கி, அதன்மூலம் சிறு விவசாயிகளுக்கு குறைவான உற்பத்தி செலவு, அதிகப்படியான மகசூல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் புதுமையான தீர்வை அளித்தமைக்காக கேத்தி நிறுவனம் இப்பரிசை வென்றுள்ளது.

3rd & 4th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which institution manufactures the Advanced Light Helicopter (ALH) Mk–III for squadron–840 Sqn (CG)?

A. DRDO

B. HAL

C. Mazagon Dock

D. BHEL

Answer & Explanation

Answer: B. HAL

  • An Indian Coast Guard Advanced Light Helicopter (ALH) Mk–III squadron– 840 Sqn (CG), was commissioned by DG VS Pathania at ICG Air Station, Chennai. The ALH Mk–III helicopters are indigenously manufactured by Hindustan Aeronautics Limited (HAL). They feature advanced RADAR, Shakti engines, advanced communication systems, search–and–rescue homer among other equipment for reconnaissance. A total of 16 ALH Mk–III aircraft have been inducted in the Indian Coast Guard in a phased manner.

2. India signed ‘Economic Development Cooperation Fund loan’ agreement for Intelligent Transport System, with which country?

A. Australia

B. France

C. South Korea

D. Sweden

Answer & Explanation

Answer: C. South Korea

  • India and South Korea signed the arrangement regarding Economic Development Cooperation Fund loan of over 245 billion Korean won. The agreement is for the establishment of Intelligent Transport System on Nagpur–Mumbai Super Communication Expressway Project in Delhi. South Korea was designated as India’s Official Development Assistance partner for development cooperation in, 2016.

3. What is the gross GST revenue collected in the month of November 2022?

A. Rs 1.46 lakh crore

B. Rs 1.26 lakh crore

C. Rs 1.06 lakh crore

D. Rs 0.96 lakh crore

Answer & Explanation

Answer: A. Rs 1.46 lakh crore

  • The gross GST revenue collected in the month of November 2022 is ₹1,45,867 crore. The revenues for the month of November are 11% higher than the GST revenues in the same month last year. Out of the total revenue, CGST is ₹25,681 crore, SGST is ₹32,651 crore, IGST is ₹77,103 crore and Cess is ₹10,433 crore.

4. Wassenaar Arrangement, which was seen in the news, is associated with which field?

A. Conventional weapons

B. Climate Change

C. Cryptocurrency

D. Nuclear Weapons

Answer & Explanation

Answer: A. Conventional weapons

  • India will assume chairmanship of the plenary of the Wassenaar Arrangement for a year on January 1, 2023. Five years ago, India joined the 42–member voluntary export control regime, which monitors transfers of conventional weapons and dual–use goods.

5. India supported the proposal of which country to include digitization in International Maritime Organization’s (IMO) Strategic Plan?

A. FAO

B. WMO

C. UNEP

D. UNFCCC

Answer & Explanation

Answer: B. WMO

  • World Meteorological Organisation (WMO) released a report titled ‘State of Global Water Resources 2021’. As per the report, the volume of water available in the Ganga and the groundwater in the river–basin reduced significantly between 2002 and 2021. The report has also identified several other global hot spots that show the same trend.

6. Which country is the frontrunner in climate mitigation, as per the Climate Change Performance Index (CCPI)?

A. Norway

B. Germany

C. Denmark

D. Sweden

Answer & Explanation

Answer: C. Denmark

  • As per the Climate Change Performance Index (CCPI), the current frontrunner in climate mitigation continues to be Denmark. Denmark is the only country with a ‘high’ national and even ‘very high’ rated international climate policy.  No country is ranked first to third while Denmark is ranked fourth followed by Sweden. India is ranked eighth.

7. The Indian Navy began the nationwide Defense Exercise ‘Sea Vigil–22’ from which state?

A. Andhra Pradesh

B. Odisha

C. Goa

D. West Bengal

Answer & Explanation

Answer: B. Odisha

  • The Indian Navy began the largest nationwide Coastal Defense Exercise Sea Vigil–22 from the Paradip port of Odisha. This is the third edition of the ‘Pan–India’ Coastal Defence Exercise ‘Sea Vigil–22’ and will be conducted over two days. This national level coastal defence exercise was conceptualized in 2018 towards enhancing maritime security. The exercise is being conducted by the Indian Navy in coordination with the Coast Guard and other related ministries.

8. YUDH ABHYAS 22’ is a defence exercise conducted between India and which country?

A. Australia

B. Sri Lanka

C. USA

D. France

Answer & Explanation

Answer: C. USA

  • The 18th edition of the India–US joint training exercise “Yudh Abhyas 22″ is scheduled to be conducted in Uttarakhand this month. The previous edition of the exercise was conducted in Alaska in October 2021. The annual exercise aims of exchanging best practices and tactics between the armies of the two countries. The joint exercise will also focus on Humanitarian Assistance and Disaster Relief (HADR) operations.

9. When is the ‘National Press Day’ observed in India?

A. November.12

B. November.16

C. November.17

D. November.19

Answer & Explanation

Answer: B. November.16

  • The Press Council of India celebrated the National Press Day on November 16 on the theme ‘The Media’s Role in Nation Building’. The Union Minister of Information and Broadcasting released the ‘Norms of Journalistic Conduct, 2022’. This was the day on which the Press Council of India started functioning as a moral watchdog to ensure the press is not affected by influence or threats.

10. ‘National Newborn Week’ is observed in which month every year?

A. November

B. December

C. January

D. February

Answer & Explanation

Answer: A. November

  • National Health Mission (NHM) observes the National Newborn Week, 2022 from November 15 to 21, every year. It is observed with an objective to spread awareness on child survival and care for the newborn for a healthy nation. For this year, the week is being observed on the theme ‘Ensuring quality health care for every newborn’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!