Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd & 4th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd & 4th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd & 4th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. இந்தியாவின் எந்த ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) ஆகாஷ்

ஆ) நாக்

இ) அமோகா

ஈ) பிருத்வி

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தரையிலிருந்து 25 கிமீ தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய வான்படையிலும், 2015ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. இதுபோன்ற தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் இராணுவ தளவாடங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்த குழு ஒப்புதல் வழங்கும். பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

2. வெல்லக்கழிவு, கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் மற்றும் சமையல் எண்ணெய் விதைகள் போன்றவற்றிலிருந்து கீழ்க்காணும் எந்த வகை எத்தனால் தயாரிக்கப்படுகிறது?

அ) 1G எத்தனால்

ஆ) 2G எத்தனால்

இ) 3G எத்தனால்

ஈ) கிளீன் எத்தனால்

  • முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% எத்தனாலை சேர்க்கவும், 2030ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தரமான எத்தானல் தயாரிப்பை அதிகரிப்பதற்காக, உணவு தானியங்களான அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம், கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி செய்வதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது.
  • 2G உயிரி எரிபொருள்கள் தயாரிப்பதற்கு உண்ணத்தகாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விவசாய எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன; 3G உயிரி எரிபொருள்கள் தயாரிப்பதற்கு தொழிலக கழிவுகள், நகராட்சி திடக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

3. இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட செயலி எது?

அ) Bharat Connect

ஆ) Global Pravasi Rishta

இ) Hindustan Hamara

ஈ) Bharat Communicate

  • உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக ‘Global Pravasi Rishta’ என்ற இணையதளம் மற்றும் செயலியை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
  • 3.12 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே முவ்வழி தொடர்புகளை உருவாக்குவதே இந்தச்செயலி & இணையதளத்தின் நோக்கமாகும். இச்செயலியானது இந்திய புலம்பெயர்ந்தோராலும், இணையதளம் தூதரகங்களாலும் பயன்படுத்தப்படும்.

4. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற இலை-மூக்கு வெளவால், பொதுவாக எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?

அ) கேரளா

ஆ) கர்நாடகா

இ) பீகார்

ஈ) மேற்கு வங்கம்

  • வழக்கமாக கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள அனுமனஹள்ளி கிராமத்தில் உள்ள இரண்டு குகைகளில் மட்டுமே கோலார் இலை-மூக்கு வெளவால்கள் காணப்படுகின்றன.
  • சமீபத்தில், அவ்விரு குகைகளுள் ஒன்றனுள் வாழ்ந்து வெளவால்கள் அழிந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக மாநில வனத்துறை, இந்திய வெளவால்கள் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து மீதமுள்ள வெளவால்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

5. தேசிய ஓய்வூதிய முறைமையை நிர்வகிக்கும் அமைப்பு எது?

அ) IRDAI

ஆ) PFRDA

இ) நிதியமைச்சகம்

ஈ) இந்திய ரிசர்வ் வங்கி

  • ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) சந்தாதாரர்கள் இப்போது ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) வெளியேறலாம் என அறிவித்துள்ளது.
  • தேசிய ஓய்வூதிய முறை, 2004 ஜன.1 அன்று அமல்படுத்தப்பட்டது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 2009ஆம் ஆண்டு முதல் தன்னார்வ அடிப்படையில் நீட்டிக்கப்பட்டது. PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமை & ஓய்வூதிய துறையை ஒழுங்குபடுத்துகிறது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுகோ பள்ளத்தாக்கு, பின்வரும் எவ்விரு வடகிழக்கு மாநிலங்களிடையே உள்ளது?

அ) மணிப்பூர்-நாகாலாந்து

ஆ) அஸ்ஸாம்-மணிப்பூர்

இ) மணிப்பூர்-சிக்கிம்

ஈ) அஸ்ஸாம்-மேகாலயா

  • மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் உள்ள பிரபலமான மலையேற்ற இடமான சுகோ பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஒரு காட்டுத்தீ ஏற்பட்டது. இது, நாகாலாந்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்காட்டுத்தீயைத்தடுக்க இந்திய வான்படையின் Mi-17V5 உலங்கூர்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

7. கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தின் காகங்களில் ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) பாதிப்பு காணப்படுகிறது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஜார்க்கண்ட்

இ) இராஜஸ்தான்

ஈ) தெலங்கானா

  • இராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில், ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) காரணமாக 50 காகங்கள் சமீபத்தில் இறந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்தப் பகுதியை சுற்றி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஜோத்பூர் நகரத்திலிருந்தும் காகங்களின் மரணம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்தவும், மாதிரிகளை போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பவும் நிர்வாகம் உத்தரவிட்டது.

8. ‘டிஜிட்டல் கொடுப்பனவு குறியீடு – Digital Payments Index’ஐ வெளியிட்டுள்ள நிதி அமைப்பு எது?

அ) பாரத வங்கி

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி

இ) IRDAI

ஈ) SEBI

  • இந்தியா முழுவதும், கொடுப்பனவுகளின் டிஜிட்டல் மயமாக்கலின் விரிவாக்கத்தை பதிவுசெய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, ‘டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை’ உருவாக்கியுள்ளது. இக்குறியீட்டு எண் 2018 மார்ச்சை அடிப்படைக்காலமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மார்ச் 2019 மற்றும் மார்ச் 2020’க்கான குறியீட்டெண் முறையே 153.47 மற்றும் 207.84 ஆக உள்ளது. 5 அளவுருக்களை இந்தக் குறியீடு கொண்டுள்ளது.

9. ஐக்கியப் பேரரசின் (UK) ஹானர்ஸ் பட்டியலில், பின்வரும் எந்த விளையாட்டு வீரருக்கு ‘நைட்ஹூட்’ பட்டம் வழங்கப்பட்டது?

அ) விஸ்வநாதன் ஆனந்த்

ஆ) ரபேல் நடால்

இ) லூயிஸ் ஹாமில்டன்

ஈ) வாலான்டினோ ராஸி

  • பிரிட்டிஷ் கார்பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஐக்கியப் பேரரசின் பாரம்பரிய புத்தாண்டு கெளரவ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வணிகம், விளையாட்டு மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாதனையாளர்களை இந்தப் பட்டியல் அங்கீகரிக்கிறது.

10. இந்தியாவின் உயரமான வானிலை மையம், பின்வரும் எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது?

அ) ஹிமாச்சல பிரதேசம்

ஆ) சிக்கிம்

இ) லடாக்

ஈ) ஜம்மு-காஷ்மீர்

  • லே’இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
  • கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும். சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த மையம், வானிலை தொடர்பான விஷயங்களில் லடாக் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்

3rd & 4th January 2021 Tnpsc Current Affairs in English

1. The Union Cabinet has approved the export of which missile system of India?

A) Akash

B) Nag

C) Amogha

D) Prithvi

  • The Union Cabinet chaired by Prime Minister Narendra Modi, recently approved to the sale of Akash surface–to–air missile systems to friendly foreign countries. A high–powered panel for quicker approval to export of the military equipment was also set up, with Defence minister, External affairs minister and the National security adviser.
  • Indian Government has earlier set a target of achieving defence exports worth USD 5 billion by 2024.

2. Which type of Ethanol is made from sources like molasses, sugarcane, sugar beet, sorghum and edible oil seeds?

A) 1G Ethanol

B) 2G Ethanol

C) 3G Ethanol

D) Clean Ethanol

  • The Union Cabinet has recently approved a modified scheme to enhance ethanol distillation capacity in the country, to produce 1st Generation (1G) ethanol.
  • 1G Ethanol is produced from edible seeds, molasses, sugarcane, sugar beet, sorghum among others. While 2G biofuels use non–edible oilseeds, used cooking oil, agriculture residue, the 3G biofuels use industrial waste, municipal solid waste.

3. Which application has been launched by the External Affairs Ministry to connect with Indian diaspora?

A) Bharat Connect

B) Global Pravasi Rishta

C) Hindustan Hamara

D) Bharat Communicate

  • The External Affairs Ministry has recently launched the Global Pravasi Rishta portal and application to connect with the Indian diaspora across the world.
  • The application and portal aim to create a three–way communication between the External Affairs Ministry, Indian missions and the diaspora, who are around 3.12–crore. While the app will be used by the diaspora, the portal will be used by the missions.

4. Leaf–Nosed Bat, which was seen in the news recently, is typically found in which state?

A) Kerala

B) Karnataka

C) Bihar

D) West Bengal

  • The Kolar Leaf–Nosed Bat, which is usually found in only two caves in the Hanumanahalli village in Kolar district of Karnataka.
  • Recently, the bat became extinct in one of the two caves. In response, the Karnataka Forest Department, along with the Bat Conservation India Trust (BCIT), are undertaking measures to save the remaining bats.

5. National Pension System (NPS) is managed by which organisation?

A) IRDAI

B) PFRDA

C) Finance Ministry

D) RBI

  • The Pension Fund Regulatory and Development Authority (PFRDA) has announced that subscribers can now use online mode also to exit from the National Pension System.
  • The National Pension System (NPS) was implemented with effect from the 1st January, 2004. It was extended to all citizens of the country from 2009 on a voluntary basis. PFRDA regulates the National pension system (NPS) as well as the pension sector.

6. Dzukou Valley, which recorded a massive wild–fire, is located on which border?

A) Manipur–Nagaland

B) Assam–Manipur

C) Manipur–Sikkim

D) Assam–Meghalaya

  • A wildfire has recently started in the Dzukou Valley, a popular trekking destination located on the Manipur–Nagaland border. It is said to have started three days ago from the Nagaland.
  • The Indian Air Force has deployed an Mi–17V5 helicopter to put off the massive wildfire in Dzukou Valley.

7. Avian influenza (Bird flu) has been found in crows in which Indian state?

A) Uttar Pradesh

B) Rajasthan

C) Punjab

D) Gujarat

  • In the Jhalawar District of Rajasthan, 50 crows had died of Avian influenza (Bird flu) recently. In response, a curfew was imposed surrounding the area. While, death of crows has also been reported from the city of Jodhpur.
  • The administration ordered to sanitise the affected area and send the samples to the National High Security Animal Disease Laboratory (NHSADL), Bhopal.

8. Which financial institution has launched “Digital Payments Index (DPI)”?

A) SBI

B) RBI

C) IRDAI

D) SEBI

  • The Reserve Bank of India (RBI) has developed the Digital Payments Index (DPI), to record the expansion of digitisation of payments across the country. The index has been constructed with March 2018 as the base period.
  • As per the RBI, the DPI for March 2019 and March 2020 stand at 153.47 and 207.84 respectively. The index includes 5 parameters.

9. Which sportsperson has been awarded knighthood in the UK Honours list?

A) Viswanathan Anand

B) Rafael Nadal

C) Lewis Hamilton

D) Valantino Rossi

  • British Racing Driver Lewis Hamilton has been knighted in the traditional New Year Honours list of the United Kingdom. The list recognises outstanding achievements in various fields including business, sport and politics among others.

10. India’s highest meteorological centre has been inaugurated in which state/UT?

A) Himachal Pradesh

B) Sikkim

C) Ladakh

D) Jammu–Kashmir

  • Union Earth Sciences Minister Dr. Harsh Vardhan has recently inaugurated the country’s highest meteorological centre in the Union Territory of Ladakh. The centre located above 3500 metres, would provide localised weather forecasts and early warning for Leh and Kargil districts of the Union Territory as well as various tourist places.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!