Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. நடப்பாண்டுக்கான (2021) பேரிடர் அபாயக் குறைப்பு – வறட்சி குறித்த சிறப்பு அறிக்கையின் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) FAO

ஆ) UNDRR

இ) WFP

ஈ) UNESCO

  • பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐநா அலுவலகமானது (UNDRR) 2021 வறட்சி அபாயக் குறைப்பு – சிறப்பு அறிக்கை குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டில் இதுவரை 1.5 பில்லியன் மக்களை, வறட்சி, நேரடியாக பாதித்துள்ளது. இந்த அதிகரித்த எண்ணிக்கைக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் காரணமாகும்.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘ICMED 13485 PLUS’ என்றால் என்ன?

அ) தரச்சான்றிதழ் திட்டம்

ஆ) வறுமையொழிப்புத் திட்டம்

இ) சாலை திட்டம்

ஈ) தடுப்பூசி திட்டம்

  • ICMED என்பது 2016ஆம் ஆண்டில் மருத்துவ சாதனங்கள் சான்றிதழ் பெறுவதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். சமீபத்தில், இந்திய தர கவுன்சிலும் இந்திய மருத்துவ சாதனங்களின் உற்பத்தியாளர்கள் சங்க -மும் இந்தத் திட்டத்தில் சில அம்சங்களைச் சேர்த்துள்ளன இந்தப் புதிய திட்டத்தின் பெயர் “ICMED 13485 PLUS” ஆகும். இது, மருத்துவ சாதனங் -களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை சரிபார்க்கும்.

3. பன்னாட்டு கார்பன் விலை தளத்தை அமைக்கவுள்ள அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

  • புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதற்காக பன்னாட்டு கார்பன் விலை தளத்தை அமைக்க பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) முன்மொழிந்துள்ளது. இந்த தசாப்தத்தில், குறைந்த கார்பன் வெளியேற்ற -த்தை நோக்கிச்செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பன்னாட்டுச் செலவாணி நிதிய தலைவரின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதலை 1.5 முதல் 2 டிகிரி அளவுக்கு மட்டுப்படுத்தினால் 2030’க்குள் உமிழ்வை கால் முதல் அரை பங்கு வரை குறைக்க வேண்டும்.

4. இந்தியாவில் எத்தனால் உற்பத்திக்கான மாற்றுதீவன ஆதாரமாக அடையாளங்காணப்பட்டுள்ள பயிர் எது?

அ) பருத்தி

ஆ) சணல்

இ) மரவள்ளிக்கிழங்கு

ஈ) உருளைக்கிழங்கு

  • ICAR-மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிறுவனம் மரவள்ளிக்கிழங்கை உயிரி எத்தனால் உற்பத்திக்கான ஓர் உறுதியான மூலப்பொருளாகக் கண்டறிந்துள்ளது. ஓர் உயிரி எரிபொருள் பயிராக, கரும்புடன் ஒப்பிடும் போது மரவள்ளிக்கிழங்கு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
  • மரவள்ளிக்கிழங்கில் அதிக மாவுச்சத்து உள்ளடக்கம் மற்றும் குறைந்த மேலாண்மை நிலைமைகளின்கீழ் வளரும் திறனுள்ளது. இது, இந்தியா -வின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்ட இலக்கு 2025’ஐ அடைய உதவும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெருந்தடுப்புப்பவளத்திட்டு அமைந்துள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஜப்பான்

ஈ) இந்தியா

  • ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் 2300 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ள பெருந்தடுப்புப்பவளத்திட்டானது அதன் அறிவியல் மற்றும் உள்ளார்ந்த முக்கியத்துவத்தின் காரணமாக கடந்த 1981’இல் உலக பாரம்பரிய தரவரிசையைப் பெற்றது. சமீபத்தில், UNESCO பெருந்தடுப்புப் பவளத்திட்டு, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் வைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.

6. சமீபத்தில் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட M-யோகா செயலி, எந்த அமைப்போடு இணைந்து உருவாக்கப்பட்டது?

அ) ஐநா

ஆ) WHO

இ) CDC

ஈ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

  • இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, ‘உலக நலவாழ்வு அமைப்பு M-யோகா’ செயலியை அறிமுகப்படுத்தினார். பொது யோகா செயல்முறையின் அடிப்படையிலான பல்வேறு யோகா பயிற்சிகள் மற்றும் செய்முறைகள் குறித்த காணொளிகளை பல மொழிகளில் இந்தச் செயலி வழங்கும்.
  • இந்தச் செயலியை உலக நலவாழ்வு அமைப்பும் (WHO) இந்திய அரசின் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி (AYUSH அமைச்சகம்) அமைச்சகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

7. ஒலிம்பிக்கில் போட்டியிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை விளையாட்டு வீராங்கனையான லாரல் ஹப்பார்ட் சார்ந்த நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ரஷ்யா

இ) நியூசிலாந்து

ஈ) தென்னாப்பிரிக்கா

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடும் முதல் திருநங்கை விளையாட் -டு வீராங்கனையாக நியூசிலாந்தைச் சார்ந்த 43 வயதான லாரல் ஹப்பார்ட் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சூப்பர் ஹெவிவெயிட் பெண்கள் போட்டியில் பங்கேற்கும்போது, ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை விளையாட்டு வீராங்கனையாக இருப்பார்.
  • பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) குறிப்பிட்டிருக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் அவர் சூப்பர் ஹெவிவெயிட் 87 கிலோ பிரிவில் போட்டியிடுவார்.

8. 100% கச்சா எண்ணெய் / 100% எத்தனால் பயன்படுத்தக்கூடிய எஞ்சினின் பெயர் என்ன?

அ) பல எரிபொருள் எஞ்சின்

ஆ) பிளெக்ஸ் எரிபொருள் எஞ்சின்

இ) மாற்று எஞ்சின்

ஈ) நிலையான எஞ்சின்

  • ஆட்டோமொபைல் தொழிலுக்காக, பிளெக்ஸ் எரிபொருள் எஞ்சின்கள் கட்டாயமாக உருவாக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவித்தார்.
  • பிளெக்ஸ் எரிபொருள் எஞ்சின்களில், 100% கச்சா எண்ணெயோ (அ) 100% எத்தனாலையோ பயன்படுத்தவியலும். பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்கான இலக்கு ஆண்டை, இந்தியா, 2030லிருந்து 2025க்கு மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

9. நடப்பாண்டின் (2021) உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) UNCTAD

ஆ) WTO

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) உலக வங்கி

  • ஐநா வர்த்தக & மேம்பாட்டு கூட்டமைப்பானது (UNCTAD) அண்மையில் நடப்பாண்டின் (2021) உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. COVID தொற்றுநோயால் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 35% குறைந்துள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.
  • 2020ஆம் ஆண்டில், உலகில், அந்நிய நேரடி முதலீடு (FDI) வருவாயைப் பெறுவதில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருப்பதாகவும் அதன் மதிப்பு $64 பில்லியன் டாலராக இருப்பதாகவும் UNCTAD கூறியுள்ளது.

10. எஸ்தர் டப்லோ மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரைக்கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மேற்கு வங்கம்

ஈ) ஆந்திர பிரதேசம்

  • தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மேம்பாட்டு பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச்செயலாளர் S நாராயண் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கொந்தகை அகழாய்வு: மேலும் ஒரு சமநிலை எலும்புக்கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் வெள்ளிக்கிழமை சமநிலையில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் கடந்த பிப்.13 முதல் 7ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளின் அடிப்படையில் கொந்தகை பண்டைய காலத்தில் ஈமக் காடாக இருந்தது தெரியவந்துள்ளது.

இங்கு தோண்டப்பட்ட குழிகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் சமநிலையில் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே அகழாய்வுக் குழியில் ஏற்கெனவே கிடைத்த சமநிலை எலும்புக்கூடுக்கு அருகிலேயே, மற்றொரு சமநிலை எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3.5 அடி நீளமுள்ள இந்த எலும்பு -க்கூட்டின் பாலினம் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2. உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த தீரத் சிங் ராவத் ராஜிநாமா செய்ததையடுத்து, டேராடூனில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1. Which institution released the Global Assessment Report on Disaster Risk Reduction–Special Report on Drought 2021?

A) FAO

B) UNDRR

C) WFP

D) UNESCO

  • The United Nations Office for Disaster Risk Reduction (UNDRR) has released the Global Assessment Report on Disaster Risk Reduction–Special Report on Drought 2021. As per the assessment, Drought has directly affected 1.5 billion people so far this century, more than any other disaster. This increased number is due to climate change, environmental degradation and demographic shifts.

2. What is ‘ICMED 13485 PLUS’, which was seen in the news recently?

A) Quality Certification Scheme

B) Poverty Allevation Scheme

C) Road Project

D) Vaccination Scheme

  • ICMED is the name of the scheme that was launched for Certification of Medical Devices in the year 2016. Recently, the Quality Council of India (QCI), and the Association of Indian Manufacturers of Medical Devices (AiMeD) have added some features to the scheme. The new scheme is renamed as ICMED 13485 PLUS. It will undertake verification of the quality, safety and efficacy of medical devices.

3. Which organisation has proposed to set up an International Carbon Price Floor?

A) IMF

B) World Bank

C) ADB

D) AIIB

  • The International Monetary Fund (IMF) has proposed to set up an International Carbon price floor to help limit global warming. It aims to achieve the transition toward low carbon growth over this decade. As per the IMF chief, limiting global warming to 1.5 to 2 degrees will require emissions to be cut by a quarter to a half by 2030.

4. Which crop has been identified as an alternate feedstock source for Ethanol production in India?

A) Cotton

B) Jute

C) Cassava

D) Potato

  • ICAR–Central Tuber Crops Research Institute (CTCRI) has found cassava (tapioca) as a promising raw material for bioethanol production. As a biofuel crop, cassava has several advantages compared to sugarcane. Cassava has high starch content and ability to grow under low management conditions. This will help meet India’s Ethanol Blending Petrol (EBP) programme target of 2025.

5. Great Barrier Reef, which was seen in the news recently, is a famous coral reef situated in which country?

A) USA

B) Australia

C) Japan

D) India

  • Great Barrier Reef spans for 2300 km off Australia’s north–east coast. It gained World Heritage ranking in 1981 due to its scientific and intrinsic importance. Recently, UNESCO recently said the Great Barrier Reef should be put on a list of World Heritage Sites.

6. M–Yoga application, launched by India recently, was developed in association with which organisation?

A) UN

B) WHO

C) CDC

D) John Hopkins University

  • India Prime Minister Narendra Modi announced the launch of M–Yoga app, which will host training videos to be available worldwide in different languages.
  • The app is a collaborative work between the World Health Organisation and Ministry of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (Ministry of AYUSH), Government of India.

7. Laurel Hubbard, who is selected as the first transgender athlete to compete at the Olympics, is from which country?

A) USA

B) Russia

C) New Zealand

D) South Africa

  • 43–year–old Laurel Hubbard from New Zealand has been selected as the first transgender athlete to compete at the Tokyo Olympics.
  • Hubbard will be the first Trans Olympian when she takes part in the super–heavyweight women’s competition. She will compete in the super–heavyweight 87–kg category after testosterone levels required by the International Olympic Committee (IOC) are met.

8. What is the name of the Engine which can be used with 100 percent crude oil or 100 percent ethanol?

A) Multi fuel Engine

B) Flex fuel Engine

C) Alternative Engine

D) Sustainable Engine

  • The union minister for Road Transport and Highways announced that the Ministry will make the Flex–fuel engines, mandatory for the automobile industry. In a flex fuel engine, there will be choice for the people to use 100 percent crude oil or 100 percent ethanol. India has earlier preponed the cut–off date for mixing 20 per cent ethanol in petrol from 2030 to 2025.

9. Which organization has released the World Investment Report 2021?

A) UNCTAD

B) WTO

C) IMF

D) World Bank

  • The UN Conference on Trade and Development (UNCTAD) has recently released the World Investment Report 2021. The report noted that global FDI has fallen by 35% due to COVID pandemic.
  • UNCTAD has stated that India is the fifth largest recipient of Foreign Direct Investment (FDI) inflows in the world for 2020 and its value stood at USD 64 billion.

10. Which state is set to form an economic advisory council composed of Esther Duflo and Raghuram Rajan?

A) Tamil Nadu

B) Kerala

C) West Bengal

D) Andhra Pradesh

  • The state Government of Tamil Nadu has proposed to set up an Economic advisory council, which would comprise of eminent economists like Nobel laureate Esther Duflo, former Reserve Bank of India governor Raghuram Rajan, Former Chief Economic Advisor Arvind Subramanian, development economist Jean Dreze and former Union Finance secretary S Narayan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!