TnpscTnpsc Current Affairs

3rd & 4th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

3rd & 4th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 71ஆவது சீனியர் ஆடவர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் பட்டத்தை வென்ற அணி எது?

அ. தமிழ்நாடு 

ஆ. கேரளா

இ. பஞ்சாப்

ஈ. கர்நாடகா

 • 71ஆவது சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி பஞ்சாப்பை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் தெலுங்கானாவை வீழ்த்தி இந்திய இரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பிரிவில் தமிழ்நாடு 87-69 என்ற புள்ளிக்கணக்கில் நடப்புச் சாம்பியனான பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிருக்கான அரையிறுதியில் இரயில்வே அணி தமிழ்நாட்டை எதிர்த்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.

2. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘ரைசினா பேச்சுவார்த்தை’ என்பது எந்தத் துறைசார்ந்த மாநாடு ஆகும்?

அ. வெளியுறவுக் கொள்கை 

ஆ. பருவநிலை மாற்றம்

இ. தகவல்தொடர்பு தொழில்நுட்பம்

ஈ. வேளாண்மை

 • ‘ரைசினா பேச்சுவார்த்தை’ என்பது இந்தியாவின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை மற்றும் புவிசார்-பொருளாதார மாநாடு ஆகும். இதன் ஏழாவது பதிப்பை பிரதம விருந்தினரான ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில் 90 நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாடு வெளியுறவு அமைச்சகம் மற்றும் அப்சர்வர் ரிசர்ச் அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். “Terranova: Impassioned, Impatient, and Imperilled” என்பது இந்த ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தைகக்கானக் கருப்பொருளாகும்.

3. இம்மானுவேல் மக்ரோன், கீழ்காணும் எந்த நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்?

அ. UK

ஆ. பிரான்ஸ் 

இ. ஜெர்மனி

ஈ. தென்னாப்பிரிக்கா

 • பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் லு பென்னிற்கு எதிராக இம்மானுவேல் மக்ரோன் வெற்றிபெற்றுள்ளார். இருபது ஆண்டுகளில் மீண்டும் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரெஞ்சு தலைவர் என்ற பெருமையை மக்ரோன் பெற்றார்.

4. ‘அகில-இந்திய குடும்ப நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை’ நடத்துகிற நிறுவனம் எது?

அ. தேசிய புள்ளியியல் அலுவலகம் 

ஆ. NITI ஆயோக்

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. NABARD

 • அகில இந்திய குடும்ப நுகர்வோர் செலவின கணக்கெடுப்பானது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. வறுமை நிலைகளை மதிப்பிட உதவும் இக்கணக்கெடுப்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்படவுள்ளது. 2011-12இலிருந்து, இந்தியாவில் தனிநபர் குடும்ப செலவினங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் ஏதுமில்லை; இது வறுமை நிலைகளின் மதிப்பீடுகள் மற்றும் GDP போன்ற பொருளாதார குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்யும். தரவுத்தரச்சிக்கல்களுக்காக அரசாங்கம் கடந்த ஆய்வின் (2017–18) கண்டறிவுகளை இரத்து செய்தது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அம்ருத் சரோவர் முன்னெடுப்பின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழியை ஒழித்தல்

ஆ. நீர்நிலைகளுக்குப் புத்துயிரளித்தல் 

இ. கடல் நீரின் உப்புநீக்கம்

ஈ. மழைநீர் சேகரிப்பு

 • ‘அம்ருத் சரோவர்’ திட்டத்தின்கீழ், அமுதப்பெருவிழாவின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு புத்துயிர் ஊட்டப்படும். இந்தியாவின் முதல், ‘அம்ருத் சரோவர்’ உத்தரபிரதேச மாநிலத்தின் இராம்பூரில் உள்ள கிராமப்பஞ்சாயத்து பட்வாய்யில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இராம்பூரில் உள்ள எழுபத்தைந்து குளங்கள் ‘அம்ருத் சரோவராக’ உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

6. 2022 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும், ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் – 2021’ நடைபெறும் இடம் எது?

அ. வாரணாசி

ஆ. டேராடூன்

இ. பெங்களூரு 

ஈ. புனே

 • ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள் – 2021’ ஆனது பெங்களூருவில் 24 ஏப்ரல் 2022 முதல் மே 3, 2022 வரை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 190 பல்கலைக்கழகங்களிலிருந்து 4,500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்த நிகழ்வின் போது மற்கம்பம் மற்றும் யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகள் உட்பட 20 வெவ்வேறு விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

7. ‘முத்தரப்பு வளர்ச்சிக் கழக நிதியம்’ என்பது எந்த நாட்டின் புதிய அரசியல் ரீதியான முன்னெடுப்பாகும்?

அ. ரஷ்யா

ஆ. இந்தியா 

இ. சீனா

ஈ. அமெரிக்கா

 • இந்தியாவின் மத்திய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் ‘முத்தரப்பு வளர்ச்சிக் கழக நிதியம்’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் பிற பிராந்தியங்களில் முதலீடு செய்வதற்கு அரசு ஆதரவுடன் தனியார் துறைகளை இந்த நிதியம் ஈடுபடுத்தும். இது சீனாவின் பட்டை-பாதை முன்னெடுப்புக்கு மாற்றாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. UK, பட்டை-பாதை முன்னெடுப்புக்காக 5G, அணு மற்றும் அதிவேக இரயில் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குரில் தீவுகளுக்கு உரிமைகோரும் நாடுகள் எவை?

அ. சீனா மற்றும் ரஷ்யா

ஆ. ஜப்பான் மற்றும் ரஷ்யா 

இ. உக்ரைன் மற்றும் ரஷ்யா

ஈ. இங்கிலாந்து மற்றும் ரஷ்யா

 • கடந்த 1945-இல் சோவியத் யூனியன் குரில் தீவுகளைக் கைப்பற்றியதிலிருந்து, அதனை தற்போது ஜப்பான் உரிமைகோரி சவால் செய்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2022 டிப்ளமேட்டிக் புளூபுக்கின் அண்மைய பதிப்பில், வடபகுதிகள், “ஜப்பானின் இறையாண்மையைக்கொண்ட தீவுகள், ஆனால் தற்போது ரஷ்யாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.

9. 2021ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவ செலவினங்கள் குறித்த SIPRI தரவுகளில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. இரண்டாவது

ஆ. மூன்றாவது 

இ. ஐந்தாவது

ஈ. ஆறாவது

 • ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) வெளியிட்ட உலகளாவிய இராணுவச் செலவு குறித்த புதிய தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் மொத்த உலகளாவிய இராணுவச்செலவு 0.7% அதிகரித்து 2113 பில்லியன் டாலர்களை எட்டியது. இது தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. மேலும் $2.1 டிரில்லியன் டாலர்களை கடந்தது இதுவே முதன்முறையாகும். 2021இல் முதல் ஐந்து இடங்களில் முறையே அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இவை முறையே 62 சதவீத செலவினங்களைக் கொண்டுள்ளன.

10. ஆசியாவின் மிகப்பெரிய பன்னாட்டு உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியான, ‘AAHAR – 2022’ நடைபெறும் இடம் எது?

அ. நைனிடால்

ஆ. புது தில்லி 

இ. காந்தி நகர்

ஈ. மும்பை

 • வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்புடன் (ITPO) இணைந்து ஆசியாவின் மிகப்பெரிய பன்னாட்டு உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியான, ‘AAHAR-2022’ஐ ஏற்பாடு செய்கிறது. இந்தக் கண்காட்சி புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, பல்வேறு பிரிவுகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்பார்கள். வடகிழக்கு பிராந்தியம் மற்றும் இமாலய மாநிலங்களைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், பெண் தொழில்முனைவோர், FPO-க்கள், துளிர் நிறுவல்கள் மற்றும் துறைசார் ஏற்றுமதியாளர்களுக்காக APEDA அரங்கங்களை உருவாக்கியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. தேசிய கயிறு வாரிய மாநாடு கோவையில் தொடக்கம்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

கயிறு தொழிற்சாலை சட்டம் 1953இன்படி மத்திய கயிறு வாரியம் அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள கயிறு உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கான இவ்வாரியம், தென்னை உபபொருட்களின் மேம்பாட்டுக்கான அறிவியல், தொழில்நுட்பம், நவீனமயமக்கால், தரமேம்பாடு, மனித வள மேம்பாடு, சந்தை மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலத்திற்கான அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது. கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வாரியத்தின்கீழ் நாடு முழுவதும் 48 அமைப்புகள், 29 சந்தை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் கிராமப்புற பொருளாதரத்தில் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தென்னை நார் தொழிற்சாலைகள் கேரளாவில் அதிக அளவில் உள்ளன. நாட்டின் பிற பாகங்களில் பரவலாக உள்ளன.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சிறப்பான தென்னை நார், கயிறு மேம்பாட்டுக்கான திட்டங்களை கலந்து ஆலோசனை செய்வதாகும். இந்தத் தொழில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவும், சிறந்த முறையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநில அரசுகள் முக்கிய பங்காற்றிடவும் வழி வகுக்கப்படும். மேலும் புதுமையான படைப்புகள் குறித்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்க ஒரு தளமாக இது அமையும்.

2. அரசுப்பள்ளிகளில் கலைத்திருவிழா, கல்விச்சுற்றுலா, காய்கறித்தோட்டம்: புதிய முன்னெடுப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

அரசுப்பள்ளிகளில் கலைத்திருவிழா, மாணவர்களுக்கான தேன்சிட்டு இதழ், ஹேக்கத்தான், நன்னெறி வகுப்புகள் ஆகிவை உள்பட 10க்கும் மேற்பட்ட புதிய முன்னெடுப்புகள் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் எனப்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இயந்திரனியல் மன்றம்: மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திலும் கணினியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கணினி நிரல் மன்றங்களும் இயந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும். மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ‘ஹேக்கத்தான்’ போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் சதுரங்கப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும். அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தேன்சிட்டு-ஊஞ்சல் இதழ்கள்: மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ‘தேன்சிட்டு’ என்கிற இதழும் வெளிவரவுள்ளன. மேலும், ஆசிரியர்களுக்கென நாட்டிலேயே முதல்முறையாக, ‘கனவு ஆசிரியர்’ என்ற இதழும் வெளிவரவிருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த இதழ்களுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.

3. ஜூனியர் பளுதூக்குதல்: ஹர்ஷதா சாம்பியன்

கிரீஸில் நடைபெறும் ஜூனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹர்ஷதா சரத் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அஞ்சலி படேல் 148 கிலோ (67+81) எடையைத் தூக்கி 5-ஆம் இடம் பிடித்தார். இதற்குமுன் இப்போட்டியில் சாய்கோம் மிராபாய் சானு வெண்கலமும் (2013), அசிந்தா ஷியுலி வெள்ளியும் (2021) வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

4. கீழடி அகழாய்வில் மனித முகம் போன்ற அமைப்புடைய சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், மனித முகம் போன்ற அமைப்பு கொண்ட சுடுமண் சிற்பம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகே உள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு இங்கும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.

கீழடி அகழாய்வில் வண்ண பாசி மணிகள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மனித முகம் போன்ற உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1. Which team won the men’s’ title in the 71st Senior National Basketball Championship?

A. Tamil Nadu 

B. Kerala

C. Punjab

D. Karnataka

 • Tamil Nadu defeated Punjab in the men’s final of the 71st Senior National Basketball Championship. While the Indian Railways team won the women’s title, beating Telangana. Tamil Nadu outplayed the defending champions Punjab 87–69 in the final to win the men’s title. The women’s semi–final saw the Railways register a big win over Tamil Nadu.

2. ‘Raisina Dialogue’ which was inaugurated recently, is a Conference in which field?

A. Foreign policy 

B. Climate Change

C. Information and Communication Technology

D. Agriculture

 • Raisina Dialogue is India’s flagship foreign policy and geo–economics conference. Prime Minister Narendra Modi inaugurated the seventh edition with the chief guest Ursula von der Leyen, the President of European Union Commission.
 • Over 200 speakers from 90 countries are participating in the seventh edition. The conference is a joint venture of the Ministry of External Affairs (MEA) and think tank Observer Research Foundation (ORF). This year’s theme is “Terranova: Impassioned, Impatient, and Imperilled”.

3. Emmanuel Macron has won the Presidential Election of which country?

A. UK

B. France 

C. Germany

D. South Africa

 • Emmanuel Macron has won the Presidential Election of France amidst historic challenge from far–right candidate Marine Le Pen. Macron became the first French leader to be re–elected to the Office in 20 years.

4. Which institution conducts the ‘All–India Household Consumer Expenditure Survey’?

A. National Statistical Office 

B. NITI Aayog

C. Reserve Bank of India

D. NABARD

 • The All–India Household Consumer Expenditure Survey is conducted by the National Statistical Office (NSO) every five years. The survey, which helps to arrive at estimates of poverty levels, is set to resume this year after a prolonged break.
 • Since 2011–12, India does not have any official estimates on per capita household spending, used to arrive at estimates of poverty levels and to review economic indicators like GDP. The government scrapped the findings of the last Survey (2017–18) for data quality issues.

5. What is the primary objective of ‘Amrit Sarovar initiative’, which was seen in the news recently?

A. Elimination of Single Use Plastic

B. Rejuvenation of Water Bodies 

C. Desalination of Sea Water

D. Rain Water Harvesting

 • Under the Amrit Sarovar initiative, 75 water bodies will be developed and rejuvenated in each district as part of Azadi Ka Amrit Mahotsav. India’s first ‘Amrit Sarovar’ has been completed in Rampur’s Gram Panchayat Patwai, in the state of Uttar Pradesh. Seventy–five ponds in Rampur were selected to be developed as Amrit Sarovar.

6. Which is the venue of the ‘Khelo India University Games 2021’, being held in April–May 2022?

A. Varanasi

B. Dehradun

C. Bengaluru 

D. Pune

 • The ‘Khelo India University Games 2021’ is being hosted in Bengaluru from 24 April 2022 to 3 May 2022. Over 4,500 participants from 190 universities across the country are competing with each other at the Khelo India University Games. The athletes will participate across 20 different sports including indigenous sports like Mallakhamba and yogasana during the event.

7. ‘Trilateral Development Corporation (TDC) Fund’ is a new diplomatic initiative of which country?

A. Russia

B. India 

C. China

D. USA

 • Union Ministry of External Affairs of India has recently launched a platform called the Trilateral Development Corporation (TDC). The fund would involve private sectors with state support for investments in the Indo–Pacific region and other regions. It aims to provide an alternative to China’s Belt–Road Initiative (BRI). UK offers 5G, nuclear and high–speed rail technologies for BRI.

8. Kuril Islands, which was seen in the news, is claimed by which countries?

A. China and Russia

B. Japan and Russia 

C. Ukraine and Russia

D. UK and Russia

 • Ever since the Soviet Union conquered the Kuril Islands in 1945, the ownership has been challenged by Japan. In the latest version of the 2022 Diplomatic Bluebook, which was published by the Japanese Ministry of Foreign Affairs, the Northern Territories are “islands over which Japan has sovereignty, but now are illegally occupied by Russia.”

9. What is the rank of India in the SIPRI Data on Global Military expenditure in 2021?

A. Second

B. Third 

C. Fifth

D. Sixth

 • According to new data on global military spending published by the Stockholm International Peace Research Institute (SIPRI), total global military expenditure increased by 0.7 per cent in 2021, to reach USD 2113 billion. This was the seventh consecutive year that spending increased and the first time to cross USD 2.1 trillion. The five largest spenders in 2021 were the United States, China, India, the United Kingdom and Russia, respectively together accounting for 62 per cent of expenditure.

10. Which is the venue of Asia’s biggest international food and hospitality fair ‘AAHAR 2022’?

A. Nainital

B. New Delhi 

C. Gandhi Nagar

D. Mumbai

 • Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) in association with the India Trade Promotion Organization (ITPO) is organising Asia’s biggest international food and hospitality fair AAHAR 2022. The fair is being organised at Pragati Maidan in New Delhi.
 • As per the Commerce and Industry Ministry, more than 80 exporters from different segments of agricultural products will participate in the fair. APEDA has created stalls for exporters from North East Region and Himalayan states, women entrepreneurs, FPOs, Start Ups and exporters of millets.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button