Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

3rd & 4th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd & 4th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பொதுத்துறை தணிக்கையில் தகவல்களை பரிமாறிக்கொள்வதற் -காக, இந்தியா, எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) இலங்கை

ஆ) சுவிச்சர்லாந்து

இ) மாலத்தீவுகள் 

ஈ) கெய்மன் தீவுகள்

  • இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு மற்றும் மாலத்தீவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் ஹுசைன் நியாசி ஆகியோர் மாலேயில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு -த்திட்டனர். இது இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே பொதுத் துறை தணிக்கைதுறையில் தகவல்களை பரிமாறிக்கொள்வதை நோக்கமாகக்கொண்டதாகும். நாடுகள் அந்தந்த நிறுவனங்களின் தொழிற் முறை திறனை வலுப்படுத்தவும், பொது நிதி தணிக்கை துறையில் முறைகளை மேம்படுத்தவும் முயற்சி செய்கின்றன.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஷவ்கத் மிர்சியோயேவ், எந்த நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ) ஆப்கானிஸ்தான்

ஆ) உஸ்பெகிஸ்தான் 

இ) சிரியா

ஈ) மாலத்தீவுகள்

  • உஸ்பெகிஸ்தானின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், 2ஆவது 5 ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணையத்தின்படி, மிர்சியோயேவ் 80.1% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 64 வயதான அவர், கடந்த 2016’இல், உஸ்பெகிஸ்தானின் நீண்டகால அதிபராக இருந்த இஸ்லாம் கரிமோவ் இறந்ததைத்தொடர்ந்து அதிபராக பதவியேற்றார்.

3. ஐநா அவையின் ஆயுதக்குறைப்பு வாரமானது ஆண்டுதோறும் எந்த மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது?

அ) நவம்பர்

ஆ) அக்டோபர் 

இ) செப்டம்பர்

ஈ) ஆகஸ்ட்

  • ஐநா அவையின் ஆயுதக்குறைப்பு வாரமானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் (2021) ஆயுதக்குறைப்பு வாரமானது அக்டோபர்.24 அன்று தொடங்கி அக்டோபர் 30 வரை நடைபெற்றது. இது நாடுகளில் நிராயுதபாணியாக்கம் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகத்தில் அமைதியைக் கொண்டுவர ஆயுதங்களைப் பயன்படுத்துவதை, குறிப்பாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பதே இந்த அனுசரிப்பின் நோக்கமாகும். ஐநா ஆயுதக்குறைப்பு ஆணையமானது 1952’இல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின்கீழ் அனைத்து பேரழிவு ஆயுதங்களையும் வழிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராணி ஹியோ ஹ்வாங்-ஓக் நினைவுப்பூங்கா அமைந்துள்ள நாடு எது?

அ) தென் கொரியா

ஆ) இந்தியா 

இ) சீனா

ஈ) தாய்லாந்து

  • அயோத்தியில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள ராம் கதா பூங்கா என்று முன்பு அழைக்கப்பட்ட பூங்கா, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நவம்பர்.4ஆம் தேதி திறக்கப்பட்ட பிறகு, அந்தப் பூங்கா இராணி ஹியோ ஹ்வாங்-ஓக் நினைவுப்பூங்கா என்று அழைக்கப்படும். ஒரு கொரிய இராணியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு கொரிய இராணியான ஹியோ ஹ்வாங்-ஓக், அயோத்தி மன்னர் பத்மாசென் மற்றும் இந்துமதி ஆகியோரின் மகளாகப் பிறந்த அயோத்தியின் இளவரசி சூரிரத்னா என நம்பப்படுகிறது. பத்மாசென், கௌசலா இராச்சியத்தை ஆட்சி செய்தார். அது, இன்றைய உத்தரபிரதேசத்திலிருந்து ஒடிசா வரை பரவியிருந்தது.

5. சமீபத்தில் ‘செல்வ வரி’யை முன்மொழிந்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா 

இ) ரஷ்யா

ஈ) சுவிச்சர்லாந்து

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்கார அமெரிக்கர்களின் வருமானத்தின் மீதான வழக்கமான முன்மொழியப்ப -ட்ட விகித உயர்வை அறிவித்துள்ளார், இது ‘செல்வ வரி’ போன்றது. $1 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் அல்லது $100 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு இந்தப் புதிய வரி மூன்று ஆண்டு காலத்திற்குப் பொருந்தும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகம் அமைந்துள்ள மாவட்ட(ம்)ங்கள் எது/எவை?

அ) இராமநாதபுரம் & தூத்துக்குடி 

ஆ) திருநெல்வேலி

இ) சிவகங்கை & இராமநாதபுரம்

ஈ) கன்னியாகுமரி

  • மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகமானது, தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தீவுகள் மற்றும் அதனையொட்டிய பவளப்பாறைகளின் தொகுப்பாகும். ஆர்க்டிக் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா கடல் உயிர்க்கோள காப்பகத்திற்கு ஆண்டுதோறும் பல பறவைகள் வலசை வருகின்றன. இப்பூங்காவிற்குள் உள்ள மனோலி தீவுகளில் ஒரு பெரிய பறவைக்கூட்டம் அண்மையில் காணப்பட்டது.
  • அதில், ஆயிரக்கணக்கான ஆர்க்டிக் ஆலாக்கள் மற்றும் கடற்காகங்கள், நூற்றுக்கணக்கான நண்டுதின்னும் உப்புக்கொத்திகள் அடங்கும்.

7. ‘டிஜிட்டல் 2021: அக்டோபர் குளோபல் ஸ்னாப்ஷாட்’படி, கைபேசி பயன்படுத்துவோரின் சதவீதம் எவ்வளவு?

அ) 45

ஆ) 65 

இ) 75

ஈ) 80

  • ‘We Are Social’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் ‘டிஜிட்டல் 2021: அக்டோபர் குளோபல் ஸ்னாப்ஷாட்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் 65%’ க்கும் அதிகமானோர் கைபேசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • உலகளாவிய கைபேசி பயனர்கள் எண்ணிக்கை அக்டோபரில் 5.29 பில்லியனை எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலக மக்கள்தொகையில் 60% பேர் சமூக ஊடக பயனர்களாக வாய்ப்புள்ளது என இவ்வறிக்கை கூறுகிறது.

8. தடுப்பூசியை செலுத்துவதை அதிகரிப்பதற்காக, பின்வரும் எந்த நாடு ‘Knock Every Door’ என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ளது?

அ) சீனா

ஆ) இந்தியா 

இ) இந்தோனேசியா

ஈ) அமெரிக்கா

  • இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தடுப்பூசி செலுத்து விகிதங்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் ‘வீடு தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும்’ திட்டம் விரைவில் தொடங்க திட்டமிட -ப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு மக்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் 10.34 கோடிக்கும் அதிகமான மக்கள் COVID-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தாமல் உள்ளனர்.

9. இந்திய தலைமைத் தேர்தலாணையர் சுஷில் சந்திரா, சமீபத்தில் எந்த நாட்டின் அதிபர் தேர்தலை மேற்பார்வையிட்டார்?

அ) சிங்கப்பூர்

ஆ) உஸ்பெகிஸ்தான் 

இ) இலங்கை

ஈ) தாய்லாந்து

  • உஸ்பெகிஸ்தானின் அதிபர் தேர்தலை மேற்பார்வையிட இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்று உஸ்பெகிஸ்தானுக்குச் சென்றது. இந்த இந்திய அணி, சர்வதேச பார்வையாளராக தேர்தலை மேற்பார்வையிட்டுள்ளது.
  • உஸ்பெகிஸ்தானின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தேர்தலில் 80%’ க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 2ஆவது ஐந்தாண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுஷில் சந்திரா மற்றும் ஜைனிதின் நிஜாம்கோட்ஜேவ் தலைமையிலான உஸ்பெகிஸ்தானிய தேர்தல் ஆணையம் தேர்தல் ஒத்துழைப்பு குறித்த கூட்டத்தை நடத்தியது.

10. 2021 – பொது விவகாரங்கள் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) தெலுங்கானா

ஈ) குஜராத்

  • பெங்களூருவைச் சார்ந்த ஒரு இலாபநோக்கற்ற மதியுரையகமான பொது விவகாரங்கள் மையமானது ஒவ்வோர் ஆண்டும் பொது விவகாரங்கள் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு (2021) பொது விவகாரங்கள் குறியீட்டில் (PAI 2021), கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை நிர்வாக செயல்திறனில் பதினெட்டு பெரிய மாநிலங்களுள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
  • சமபங்கு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. COVID-19 மீண்டெழு குறியீடானது முதன்முறையாக இந்த ஆண்டு (2021) குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. சிக்கிம், கோவா மற்றும் மிசோரம் ஆகியவை சிறிய மாநிலங்களுள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. புதுச்சேரி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் சண்டிகர் ஆகியவை யூனியன் பிரதேசங்களுள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருது

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா உட்பட பன்னிரண்டு பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார், லவ்லினா, ஸ்ரீஜேஷ், அவனி லேகரா, பிரமோத் பகத், மிதாலி ராஜ், மன்பிரீத் சிங், சுனில் சேத்ரிக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தயான் சந்த் கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

அர்ஜுனா விருது:

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த 35 தடகள வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதற்கும் விளையாட்டு விருதுகள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஷிகர் தவான், வந்தனா கட்டாரியா, பவானி தேவி, அபிஷேக் வர்மா, தீபக் புனியா, ஹர்மன் பிரீத் சிங், மன்தீப் சிங், பவினா படேல், ஷரத் குமார், வருண் குமார் உள்பட 35 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

இதேபோன்று வாழ்நாள் பிரிவில் 5 பயிற்சியாளர்கள் உள்பட 10 பேருக்கு துரோணாச்சார்யா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஆயுதமின்றி தனித்து போராடும் வகையில் தமிழக சிறைக் காவலர்களுக்கு ‘க்ரவ் மேகா’ தற்காப்பு பயிற்சி

சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைக் காவலர்களுக்கு ஆயுதமின்றி தனித்துப் போராடும் ‘க்ரவ் மேகா’ தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப்பள்ளிகள் குற்றவியல் நீதியமைப்பு முறையின் முக்கிய கூறாக விளங்குகின்றன. நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது, கைதிகளின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, மனித உரிமை மீறலுக்கு இடமில்லாமல் கண்ணியத்துடன் நடத்துவது, சீர்திருத்தம், மறுவாழ்வு, திறன்சார் பயிற்சிகள் அளித்து பொறுப்பான குடிமக்களாக அவர்களை மாற்றுதல்ஆகியவை சிறைச்சாலைகளின் பணிகளாக உள்ளன.

தமிழகத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் 142 சிறைகள் உள்ளன. இதில் மத்திய சிறைச்சாலைகள் 9, பெண்களுக்கான தனிச்சிறைகள் 5, மாவட்ட சிறைச்சாலைகள் 14, ஆண்களுக்கான கிளைச் சிறைகள் 89, பெண்களுக்கான கிளைச் சிறைகள் 7, ஆண்களுக்கான தனி கிளைச் சிறை 1, பெண்களுக்கான தனி கிளைச் சிறைகள் 2, இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பள்ளிகள் 12 மற்றும் திறந்தவெளி சிறைச்சாலைகள் மூன்று ஆகியவை அடங்கும்.

இந்தச் சிறைகளில் 23,592 பேருக்கு இடவசதி உள்ளது. இவர்களை கண்காணித்து வழிநடத்த 5,452 சிறைத்துறைபணியாளர்கள் உள்ளனர். பொதுவாக சிறைச்சாலைகளில் மரண தண்டனை, ஆயுள் தண்டனை, 3 மாதங்களுக்கு மேல்தண்டனை பெற்றவர்கள், பெருங் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள், கொடுங் குற்றவாளிகள், தொடர்ந்துகுற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சக கைதி -களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவர்கள், கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் சிறைபடும் சிறைவாசிகள், தடுப்பு காவல் மற்றும் நீதிமன்ற காவல், விசாரணை சிறைவாசிகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சிறைத்துறை நன்னடத்தை அலுவலர்கள், சிறைவாசிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்குமிடையே ஒருஇணைப்பு பாலமாக செயல்படுகின்றனர். நுண்ணறிவு மற்றும் விழிப்புப்பணி பிரிவு சிறைக்குள் கிடைக்கும் நுண்ணறிவு தகவல்களை ரகசியமாக சேகரித்து இதர புலனாய்வு அமைப்புகளுக்கு பரிமாற்றம் செய்யும்.

நீதிமன்ற வழக்குகளை நிர்வகித்து, குற்ற வழக்குகளில் தகுந்த ஆலோசனை வழங்க சட்ட ஆலோசனைப் பிரிவும், சிறைக்குள் நவீன தொழில்நுட்பத்தை கையாள தொழில்நுட்ப பிரிவும் உள்ளது.

3. தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க காஷ்மீரில் புதிதாக மாநில புலனாய்வு அமைப்பு:

தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஜம்மு-காஷ்மீரில் புதிதாக மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) அமைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை, விவகாரங்களை எஸ்ஐஏ விசாரிக்கும். வழக்குகளை விரைந்து முடிக்கவும், திறமையான முறையில் வழக்குகளை விசாரிப்பதற்கும் இந்த எஸ்ஐஏ அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்ளிட்ட இதர மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் இந்த எஸ்ஐஏ உதவியாக இருக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குற்றப்பிரிவு விசாரணை அமைப்பின் (சிஐடி) தலைவரே, எஸ்ஐஏ அமைப்பின் இயக்குநராகவும் இருப்பார் என்றும் தெரியவந்துள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் தேவைப்படும் தகவல்களை யூனியன்பிரதேசத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளும் எஸ்ஐஏ இயக்குநருக்குத் தரவேண்டும்.

மேலும் போலீஸ் டிஜிபிக்குத் தெரிவித்த பின்னர் தாமாகவே முன்வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் அதிகாரமும் எஸ்ஐஏவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

4. 2070-க்குள் பசுமைக்குடில் வாயு மாசு பூஜ்ஜியமாகும்: ஐ.நா. பருவ நிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

இந்தியாவில் வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பசுமைக் குடில் வாயுக்கள் மாசு பூஜ்ஜியமாகும் என்று ஐநா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா. பருவநிலை மாற்றமாநாடு கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

பருவநிலை மாற்றத்தால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பருவமழை பொய்ப்பது, அதிக மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் புயல்களால் பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப குடிநீர் ஆதாரம், வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கட்டமைப்பது அவசியமாகிறது. இதன்படி இந்தியாவில் குழாய் குடிநீர் திட்டம், தூய்மை இந்தியாதிட்டம், ஏழைகளுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் இந்தியமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இயற்கையோடு இணைந்து வாழும் அறிவை மக்கள் பெற்றுள்ளனர்.

5 வாக்குறுதிகள்

உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். எனினும் சர்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியா 5 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது. பாரிஸ் உடன்பாட்டை இந்தியா உறுதியுடன் பின்பற்றி வருகிறது. இதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா சார்பில் 5 வாக்குறுதிகளை அளிக்கிறேன்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின் உற்பத்தி திறன் பெருக்கப்படும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்படும். இப்போது முதல் வரும் 2030-ம் ஆண்டுக்குள் கரியமிய வாயு வெளியேற்றம் 100 கோடி டன் அளவுக்கு குறைக்கப்படும்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தில் கரியமில வாயு பங்களிப்பு 45% அளவுக்கு குறைக்கப்படும். இந்தியாவில் வரும் 2070-ம் ஆண்டுக்குள் பசுமைக் குடில் வாயு மாசு பூஜ்ஜியமாகும்.

கிளாஸ்கோ மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்கால சந்ததியின -ருக்கு பாதுகாப்பான, வளமான எதிர்காலம் உறுதி செய்யப்படும். இவ்
-வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

5. குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை 3,800 கி.மீ. தூரத்தை 9 நாளில் சைக்கிளில் பயணித்து கின்னஸ் சாதனை படைத்த ராணுவ அதிகாரி

குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை சைக்கிளில் குறுகிய நாட்களில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ராணுவ அதிகாரி. இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் மெக்கானிக்கல் இன்ஜினீயர் பிரிவில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவர் பாரத் பன்னு. இவர் அண்மையில் குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான 3,800 கிமீட்டர் தூரத்தை வேகமாகக் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்தத் தூரத்தை கடக்க அவர் 9 நாட்கள், 7 மணி நேரம், 5 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து இவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

6. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 10%: நீதி ஆயோக்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என NITI ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பன்னாட்டு நிதியம் 2021 இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. பன்னாட்டு நிதிய கூற்றுப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா வேகமாக பொருளாதாரமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறைவான மதிப்பீடாகும்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்துக்கும் கூடுதலாகவே இருக்கும். 2022-23’இல் இந்த வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றார் அவர்.

7. கிராண்ட் ஸ்விஸ் செஸ்: சசிகிரண் வெற்றி

லாத்வியாவில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கே சசிகிரண் 6ஆவது சுற்றில் வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போதைய நிலையில் போட்டியின் முதலிடம், அவர் உள்பட 5 பேரால் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. சசிகிரண் 6ஆவது சுற்றில் ரஷியாவின் அலெக்ஸாண்டர் பிரெட்கேவை 53 நகர்வுகளில் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் அவர் பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் லாக்ரேவை எதிர்கொள்கிறார்.

இதர ஆடவர்களில் நிஹல் சரின் – செக் குடியரசின் டேவிட் நவாராவை தோற்கடித்து 2ஆவது இடத்தில் இருக்கிறார். பி ஹரிகிருஷ்ணா – ஜெர்மனியின் மதியாஸ் புளுபௌமுடன் டிரா செய்தார். இந்தியர்கள் இருவர் மோதிக்கொண்ட ஒரு சுற்றில் ரௌனக் சந்த்வானி – டி குகேஷிடம் தோல்விகண்டார். பிரக்னானந்தா – ரஷியாவின் அலெக்ஸா சரானாவிடமும், எஸ் பி சேதுராமன் – ரஷியாவின் ஆன்டன் டெம்சென்
-கோவிடமும் தோல்வி கண்டனர். மகளிர் பிரிவில் துரோணவள்ளி ஹரிகா – ஜார்ஜியாவின் நினோ பாசிலாஷ்விலியுடன் டிரா செய்தார். அதேபோல், வைஷாலியும் டிரா செய்ய, வந்திகா அகர்வால், பத்மினி ரௌத், திவ்யா தேஷ்முக் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர்.

8. உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: காந்திகிராம கிராமியப் பல்கலை. பேராசிரியர்கள் 5 பேர் இடம்

உலகின் 2% சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகநிலைப் பல்கலையைச்சேர்ந்த 5 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக காந்திகிராம கிராமியப் பல்கலை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

உலகத்தரம் வாய்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் ஆய்வுக்கட்டுரைகள், அதற்கான மேற்கோள்கள் தரப்படுத்தப்பட்ட ஒரு கூட்டுக்குறிகாட்டி மூலமாக ஓராண்டு கால தாக்கத்துக்கு வகைப்படுத்தப்பட்டது. மேலும், மேற்கோள்கள் இல்லாத அளவீடுகள், மேற்கோள் தாள்கள் விகிதம் ஆகியவற்றின் மூலமாக 22 அறிவியல் துறைகள் மற்றும் 126 துணைத் துறைகளில் விஞ்ஞானிகள் வகைப்படு -த்தப்பட்டிருந்தனர். குறைந்தபட்சம் ஐந்து கட்டுரைகளை வெளியிட்ட அனைத்து விஞ்ஞானிகளும், புலன் மற்றும் துணைபுலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டனர்.

இதில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ப. பாலசுப்பிரமணியம் (கணிதத் துறை), எஸ் ஆபிரகாம் ஜான் மற்றும் எஸ் மீனாட்சி (வேதியல் துறை) ஆகிய 3 பேரும் தொழில் மற்றும் நீண்ட தாக்கத்துக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஓராண்டு தாக்கத்துக்கான பட்டியலில், விஞ்ஞானிகள் எஸ். மீனாட்சி மற்றும் ப. பாலசுப்பிரமணியம் ஆகியோருடன், சேதுராமன் (வேதியியல் துறை), கே மாரிமுத்து (இயற்பியல் துறை) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலிலும், இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ப பாலசுப்ரமணியம், கே ராமச்சந்திரன், எம் ஜி சேதுராமன், எஸ் மீனாட்சி, எஸ் ஆபிரகாம் ஜான், கே மாரிமுத்து மற்றும் ஜி சிவராமன் ஆகிய 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.

தற்போது இரண்டாவது முறையாக ப பாலசுப்பிரமணியம், எஸ் மீனாட்சி, எஸ் ஆபிரகாம் ஜான், கே மாரிமுத்து, எம் ஜி சேதுராமன் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. கிளாஸ்கோ பருவ நிலை மாற்ற மாநாடு; பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள்: உலக தலைவர்களுக்கு தமிழக சிறுமி கோரிக்கை

கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவ நிலை மாற்ற மாநாட்டில் பேசிய தமிழக சிறுமி வினிசா உமாசங்கர் “சுற்றுச்சூழல் விவகாரத்தில் உலகத் தலைவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

உலகத்தலைவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத -தால் இன்றைய தலைமுறையினர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர் என்று அந்தச் சிறுமி பேசியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் தூய்மை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதற்கு தமிழகத்தின் திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த பதினான்கு வயதான சிறுமி வினிஷா உமாசங்கருக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இவர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்தற்காக சுற்றுச்சூழலுக்கான ஆஸ்கார் எனப்படும் ‘எர்த்ஷாட்’ விருதுக்குத் தேர்வானவர் ஆவார்.

இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உட்பட 100’க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் வினிஷா ஆற்றிய உரையில் கூறியதாவது:

உலகத் தலைவர்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள். புதைப் படிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபட்ட சூழல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத் துக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகள், திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பழைய விவாதங்களையே தொடராமல் எதிர்காலத்துக்கான புதிய சிந்தனையை முன்னெடுக்க வேண்டும்.

எர்த்ஷாட் விருது பெற்றவர்கள் மற்றும் தேர்வானவர்களின் கண்டுபிடிப்புகள், முயற்சிகளுக்கு உதவ வேண்டும். உங்களுடைய நேரம், பணம் மற்றும் முயற்சி ஆகியவற்றை வளமான எதிர்காலத்தை உருவாக்க எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

அதேசமயம் தெளிவாக சொல்கிறேன். நீங்கள் செயல்பட தாமதமானாலும், எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் நாங்கள் நிறுத்த மாட்டோம், தொடர்ந்து பயணிப்போம். நீங்கள் கடந்த காலத்திலேயே முடங்கியிருந்தால் நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம். ஆனால் தயவுசெய்து என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அதற்காக ஒருபோதும் நீங்கள் வருந்தும்படி ஆகாது. உலகத் தலைவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இன்றைய தலைமுறையினர் பெரும் கோபத்திலும், விரக்தியிலும் உள்ளனர். எங்களுடைய கோபத்
-தை வெளிப்படுத்த காரணங்களும் உரிமையும் உள்ளது. ஆனால் எங்களுக்கு இப்போது கோபம் கொள்ள நேரமில்லை. அதைவிட முக்கியமானது செயலாற்றுவதுதான். நான் இந்தியாவை சேர்ந்த பெண் மட்டுமல்ல. இந்த பூமியைச் சேர்ந்த பெண்ணும் கூட என்றே கருதுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

10. எழும்பூர் காவல் கட்டுப்பாட்டறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்: டிஜிபியிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழும்பூர் மாநில காவல் கட்டுப்பாட்டறைக்கு வழங்கப்பட்டுள்ள ஐஎஸ்ஓ சர்வதேச தரச்சான்றிதழை தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ -து:

அவசர கால உதவி எண்கள்

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112, 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீனஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரை `1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்புக்கு பிரிட்டீஷ்ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூஷனால் ஐஎஸ்ஓ 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாடு வனத்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்ட
-றையின் செயல்பாட்டுக்கு இந்த தரச்சான்று பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

11. போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு: முதல்வர் உத்தரவு

தமிழக காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக்காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக்காவலர் வரையிலான காவலர்க -ள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 3-11-2021 அன்று உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்.

12. பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி: ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசுப் பணி ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுவுக்குத் துணை மேலாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

13. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது; தமிழகத்தில் 6 பேர் தேர்வு

மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதற்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஐநா சபை பிரகடனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு, மாநில மற்றும் மத்திய அரசுகள் விருது வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த வேங்கடகிருஷ்ணன், மந்தவெளியைச் சேர்ந்த ஜோதி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம், கானத்துார் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்த தினேஷ். மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மானஷா தண்டபாணி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளை யத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர், தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில், சிறந்த மாநிலமாக தமிழகம்; சிறந்த மாவட்டமாக, சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டிச., 3ம் தேதி டில்லியில் நடக்க உள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில், இவ்விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளன. இத்தகவலை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் லால்வேனா தெரிவித்துள்ளார்.

14. இந்திய நிறுவனம் தயாரித்த – கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி:

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால அனுமதி வழங்கி உள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல் -டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 107 கோடி பேருக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது. ஆனால், கோவாக்சினுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமலிருந்தது. இதனால் கோவாக்சின்தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தடையின்றியும் தனிமைப் படுத்துதல் கெடுபிடி இன்றியும் இனி வெளிநாடுகளுக்குச் செல்லலாம். கோவாக்சின் கரோனாவுக்கு எதிராக 77.8% திறன் வாய்ந்தது ஆகும்.

15. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்:

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நியமித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

டி20உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தபின், நியூஸிலாந்து தொடரிலிருந்து இந்திய அணிக்கு பயிற்சியாளர் பணியை திராவிட் கவனிக்க உள்ளார். 2023ஆம் ஆண்டு நடக்கும் 50 ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டி வரை திராவிட் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருப்பார்.

16. `169.11 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்து 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது: முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நபார்டு திட்டத்தின் கீழ், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள 65 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் `114 கோடியே 88 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இங்கு வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அரியலூர், மதுரை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைந்துள்ள 45 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 9 உண்டு உறைவிடப் பள்ளிகளில் 49 கோடியே 24 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்.

சிவகங்கை மாவட்டம், செம்பனூர், மெய்யம்மை காசி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கொண்ட கட்டடம், மாவட்ட கனிமவள நிதியிலிருந்து திருப்பூர் மாவட்டம், புக்கலம், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு `55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைக் கட்டடம், காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப் பாக்கத்தில் ரூ.63 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகம், மதுரை மாவட்டம் – அவணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் நலநிதியிலிருந்து `3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை ஆசிரியர் இல்லக் கட்டடம், என மொத்தம் ரூ.169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங் -களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்.

1. India signed a MoU with which country to exchange information in the field of public sector audit?

A) Sri Lanka

B) Switzerland

C) Maldives 

D) Cayman Islands

  • A memorandum of understanding was signed by the Comptroller and Auditor General of India (CAG) Girish Chandra Murmu and his counterpart Hussain Niyazy at Male. It aimed at exchanging information in the field of public sector audit between India and Maldives. The countries seek to strengthen their respective institutions’ professional capacity and improve methodologies in the field of public finance audit.

2. Shavkat Mirziyoyev, who was seen in the news, has been re–elected as the President of which country?

A) Afghanistan

B) Uzbekistan 

C) Syria

D) Maldives

  • Uzbekistan’s President Shavkat Mirziyoyev has been re–elected for a second five–year term, according to the preliminary results of a poll. Mirziyoyev won the elections with 80.1 percent of the vote as per Uzbekistan’s Central Election Commission. The 64–year–old leader took office in 2016 following the death of long–time President Islam Karimov.

3. The UN Disarmament Week is observed annually during which month?

A) November

B) November 

C) September

D) August

  • The UN Disarmament Week is observed annually during the month of November. This year disarmament week started on November 24 and the week–long observance will continue till November 30. It aims to promote the awareness and understanding the issues of disarmament in several countries. The observance aims to reduce the use of weapons, specifically nuclear weapons, to bring peace in the society. The United Nations Disarmament Commission (UNDC) was set up in 1952 under the UN Security Council to eliminate all weapons of mass destruction.

4. Queen Heo Hwang–ok Memorial Park, which was seen in the news recently, is located in which country?

A) South Korea

B) India 

C) China

D) Thailand

  • The Park, which was earlier known as Ram Katha Park, situated on the banks of the Sarayu in Ayodhya, is being renovated. After it is inaugurated on November 4, the space will be known as Queen Heo Hwang–ok Memorial Park. It is named after a Korean queen.
  • Queen Heo Hwang–ok was a Korean queen who is believed to have been born Princess Suriratna of Ayodhya, daughter of King Padmasen and Indumati. Padmasen ruled the kingdom of Kausala, a region which extended from present–day Uttar Pradesh to Odisha.

5. Which country has recently proposed a ‘Wealth Tax’?

A) India

B) USA 

C) Russia

D) Switzerland

  • US President Joe Biden has announced more conventional proposed rate hikes on the income of large corporations and the wealthiest Americans, similar to a ‘Wealth Tax’. This new tax would apply to people with over $1 billion in assets or $100 million in income for three straight years.

6. Gulf of Mannar Marine Biosphere Reserve, which was seen in the news recently, is located in which district(s)?

A) Ramanathapuram & Thoothukudi 

B) Tirunelveli

C) Sivagangai & Ramanathapuram

D) Kanyakumari

  • Gulf of Mannar Marine Biosphere Reserve includes a chain of islands and adjoining coral reefs off the coasts, located in Tamil Nadu. The annual migration of birds from the Arctic to the Gulf of Mannar Marine Biosphere Reserve has begun recently. A big flock of birds was sighted in the Manoli Islands inside the park. Thousands of Arctic terns and gulls, hundreds of grey plovers.

7. As per the ‘Digital 2021: November Global Snapshot”, what is the world’s population that uses a mobile phone?

A) 45

B) 65 

C) 75

D) 80

  • Research firm We Are Social released a report titled ‘Digital 2021: November Global Snapshot”. As per the report, more than 65% of the world’s population now uses a mobile phone. Global mobile phone users reached 5.29 billion in November. The report also highlighted that, social media users are likely to be adopted by 60% of the global population in the first half of 2022.

8. Which country is set to start ‘Knock Every Door’ campaign to boost vaccination?

A) China

B) India 

C) Indonesia

D) USA

  • According to a release issued by the Union Health Ministry of India, “Har Ghar Dastak” (Knock Every Door) campaign is scheduled to start soon in districts with low vaccination rates. It aims to motivate people to get vaccinated. As per the Health Ministry, there were more than 10.34 crore people in the country who had missed the second dose of COVID–19 vaccine that they were due to take.

9. India’s Chief Election Commissioner Sushil Chandra has recently overseen the presidential election of which country?

A) Singapore

B) Uzbekistan 

C) Sri Lanka

D) Thailand

  • India’s Chief Election Commissioner Sushil Chandra led a three–member delegation to Uzbekistan to oversee the country’s presidential election. Indian team has overseen the election as an international observer.
  • Uzbekistan’s President Shavkat Mirziyoyev got over than 80% of the vote in the elections and was re–elected for a second five–year term. CEC Sushil Chandra and Uzbekistan’s election commission, led by Zainiddin Nizamkhodjaev, held a meeting on electoral cooperation.

10. Which Indian state has topped the Public Affairs Index?

A) Tamil Nadu

B) Kerala 

C) Telangana

D) Gujarat

  • Public Affairs Centre (PAC), a Bengaluru–based non–profit think tank releases the Public Affairs Index every year. In this year’s Public Affairs Index (PAI 2021), Kerala, Tamil Nadu and Telangana have taken the top three positions, among the 18 large states in governance performance.
  • The index is based on scores secured by the states in governance performance across the pillars of equity, growth and sustainability. COVID response index has been added to this year’s index for the first time. Sikkim, Goa and Mizoram are winners among the small states, Puducherry, J&K and Chandigarh topped among the UTs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!