TnpscTnpsc Current Affairs

3rd & 4th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

3rd & 4th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd & 4th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. புதிய கடற்படைக் கொடியில் தேசிய இலச்சினையானது எந்த வடிவத்தினுள் உள்ளது?

அ. பச்சை அறுங்கோணம்

ஆ. நீல எண்கோணம்

இ. ஆரஞ்சு அறுங்கோணம்

ஈ. வெள்ளை எண்கோணம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நீல எண்கோணம்

  • கொச்சியில் அமைந்துள்ள கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் புதிய கடற்படைக் கொடியை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்தியக்கொடியானது இக்கொடியின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில் தேசிய இலச்சினை உள்ளடக்கிய நீல எண்கோண வடிவம் வலதுபுறத்தில் ஒரு நங்கூரத்தின் மேல் அமர்த்தப்பட்டுள்ளது. இது வலிவுறுதியை எடுத்துக்கூறும் விதமாக உள்ளது. எண்கோண வடிவம் எட்டுத்திசைகளைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; அது பல திசைகள் மற்றும் இந்திய கடற்படையின் எல்லையை எடுத்துக்கூறும் விதமாக உள்ளது. அதைச்சுற்றியுள்ள இரட்டை தங்கநிற கரைகோடுகள் சத்ரபதி சிவாஜியின் கப்பற்படையைக் குறிக்கிறது.

2. பன்னாட்டு செலாவணி நிதியமானது (IMF) எந்த நாட்டிற்கு அதன் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க $2.9 பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஈரான்

ஆ. ஆப்கானிஸ்தான்

இ. இலங்கை

ஈ. வெனிசுலா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இலங்கை

  • பன்னாட்டு செலாவணி நிதியமானது (IMF) இலங்கைத்தீவுக்கு $2.9 பில்லியன் டாலர் அளவுக்குக் கடனுதவி வழங்க ஒப்புதலளித்துள்ளது. கடந்த 1948ஆம் ஆண்டில் அந்நாடு விடுதலை அடைந்ததிலிருந்து தற்போதுதான் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் நிதியமைச்சராகவும் இருக்கும் இலங்கை அதிபர் விக்ரம சிங்கே தனது முதல் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார்; அது வருவாயை அதிகரிப்பதையும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது.

3. ஸ்மார்ட் தீர்வுகள் சவால் மற்றும் உள்ளடக்கிய நகரங்கள் விருதுகளை வழங்கும் நடுவண் அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2022ஆம் ஆண்டுக்கான, ‘Smart Solutions Challenge & Inclusive Cities’ விருதுகள் வழங்கினார். இந்த விருதுகள் 2022 ஏப்ரலில் நிறுவப்பட்டன. இந்த விருதுகள் என்பது மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் எதிர்கொள்ளும் நகர அளவிலான அணுகல் மற்றும் உள்ளடக்கிய சவால்களை எதிர்கொள்வதற்காக தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் மற்றும் இந்தியாவில் உள்ள ஐநா அவை ஆகியவற்றின் ஒரு கூட்டிணைந்த முனைவாகும்.

4. தேஜாஸ் மார்க்–2 போர் விமானங்களை தயாரிக்கின்ற நிறுவனம் எது?

அ. DRDO

ஆ. BEL

இ. HAL

ஈ. BDL

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. HAL

  • பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு தேஜாஸ் மார்க்–2 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேஜாஸ் மார்க்–2 போர் விமானத்தை வடிவமைத்து மேம்படுத்த `6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL) நிறுவனத்தால் தயாரிக்கப்படும். உள்நாட்டு தேஜாஸ் இலகுரக போர் விமானத்தின் அதி நவீன பதிப்பு, மென்மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவம் பெறும். தேஜாஸ் 2.0 அதிக ஆற்றல்வாய்ந்த எஞ்சின்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன்டு அரே (AESA) ரேடார் ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்டிருக்கும்.

5. EV மின்கலப் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவர் யார்?

அ. நந்தன் நிலேகனி

ஆ. இரமேஷ் சந்த்

இ. பரமேஸ்வரன்

ஈ. டாடா நரசிங்க இராவ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. டாடா நரசிங்க இராவ்

  • சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டாடா நரசிங்க ராவ் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அவர் ஹைதராபாத்தில் உள்ள துகள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான பன்னாட்டு மேம்பட்ட ஆய்வுமையத்தின் இயக்குநராக உள்ளார். வல்லுநர் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில், மின்கலங்கள் தொடர்பான கூடுதல் பாதுகாப்புத்தேவைகள், ஆன்–போர்டு சார்ஜர், பேட்டரி பேக்கின் வடிவமைப்பு, மின்கலத்தின் உள்ளே குறுக்குச்சுற்று காரணமாக வெப்பப்பரவலால் ஏற்படும் தீக்குத் தீர்வுகாணுதல் உள்ளிட்ட திருத்தங்களை அவ்வமைச்சகம் வெளியிட்டுள்ளது.

6. ‘மிஷன் ஸ்வவலம்பன்’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் முதன்மை முனைவாகும்?

அ. NITI ஆயோக்

ஆ. நபார்டு

இ. SIDBI

ஈ. PFRDA

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. SIDBI

  • இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (SIDBI) 6 மாநிலங்களின் 10 மாவட்டங்களில் 300 ஸ்வவலம்பன் சிலை பள்ளிகளை அமைப்பதற்கான ஐந்தாம் கட்டப்பணிகளைத் தொடங்கியுள்ளது. இது அதன் முதன்மை முயற்சியான ஸ்வவலம்பன் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இது சத்தீஸ்கர், ஹரியானா, கோவா, புதுச்சேரி, ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை உள்ளடக்கும். தொழில்முனைவோர் கலாச்சாரத்தை (உத்யம் சே ஆசாதி) பின்பற்றி மகளிரைச் சார்ந்திருப்பவர்களாக அல்லாமல் சுதந்திரமானவர்களாக இது மாற்றும்.

7. ‘2022 – பீமா மந்தன்’ என்ற ஹேக்கத்தான் போட்டியைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. PFRDA

ஆ. IRDAI

இ. GIC

ஈ. NITI ஆயோக்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. IRDAI

  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தன்னியக்க இறப்புக் கோரிக்கை (automated death claim) தீர்வுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கு, காப்பீடு தொடர்பான பல்வேறு பிற துறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘2022 – பீமா மந்தன்’ என்ற அதன் முதல் ஹேக்கத்தானின் ஒருபகுதியாக, ‘காப்பீட்டில் புதுமை’ என்ற கருப்பொருளுடன் இது தொடங்கப்பட்டுள்ளது.

8. NaBFIDஇன் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. வைரல் ஆச்சார்யா

ஆ. K V காமத்

இ. உர்ஜித் படேல்

ஈ. இராஜ்கிரண் இராய் ஜி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. இராஜ்கிரண் இராய் ஜி

  • இராஜ்கிரண் இராய் ஜி என்பவர் நிதியுதவி உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் (NaBFID) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்; அவர் 5 ஆண்டு காலத்திற்கு அப்பதவியில் இருப்பார். கடந்த 2021ஆம் ஆண்டில், இந்திய அரசு K V காமத்தை மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமித்தது. உட்கட்டமைப்புத் துறையில் முதலீடுகளைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் `20,000 கோடியை NaBFID–க்கு செலுத்தியுள்ளது.

9. உடான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்

  • உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் விமான சேவையை கடந்த 2017 ஏப்.27 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார். சாதாரண மக்களும் விமானப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் கடந்த 2016 அக்.21 அன்று இது தொடங்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது மற்றும் 3ஆவது தர நகரங்கள் விமானப்போக்குவரத்துடன் இணைக்கப்பட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு 74 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், உடான் திட்டத்தின்மூலம் தற்போது 141ஆக அது அதிகரித்துள்ளது. உடான் திட்டத்தின் கீழ் செயல்படாத 68 விமான நிலையங்கள் இணைக்கப்பட்டன. 425 புதிய வழித்தடங்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டன.

10. 2022–இல் வடகிழக்கு ஒலிம்பிக்கின் 2ஆவது பதிப்பை நடத்துகிற மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேகாலயா

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மேகாலயா

  • மேகாலயாவில் இரண்டாவது வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள் அக்.3 முதல் நவ.6 வரை ஷில்லாங்கில் நடைபெற உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டின்போது மணிப்பூரில் பன்னிரண்டு பிரிவுகளுடன் முதல் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. மேகாலயா மாநிலம் தனது ஐம்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் பதிப்பில், எட்டு வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த 4,000 பங்கேற்பாளர்கள் 18 பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவின் முதலாவது, ‘இரவு வான் சரணாலயம்’ லடாக்கில் அமைக்கப்படவுள்ளது

நடுவணரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, ஒரு தனித்துவமான மற்றும் முதல்-வகையான முயற்சியாக, லடாக்கில் இந்தியாவின் முதல், ‘இரவு வான சரணாலயம்’ அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது; இது அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும். உத்தேச இரவு வான் சரணாலயம், சாங்தாங் வனவுயிரிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக லடாக்கிலுள்ள ஹான்லேயில் அமைக்கப்படும். இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்கும். மேலும் இது ஆப்டிகல், அகச்சிவப்புக்கதிர் மற்றும் காமா-கதிர் தொலைநோக்கிகளுக்கான உலகின் மிகவுயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும்.

2. ‘INS விக்ராந்த்’ சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான INS விக்ராந்த்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்த் செப்.2ஆம் தேதி இந்தியக் கடற்படையில் இணையும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலானது `20,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன்மூலமாக விமானந்தாங்கிக்கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன்கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது. 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக்-29கே போர் விமானங்கள், கமோவ் – 31 ஹெலிகாப்டர்கள், MH-60R ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமார் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

இந்தக் கப்பலில், இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைகள், பரிசோதனை மையங்கள், சிடி ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம்பெற்றுள்ளது. மருத்துவப்பணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

3. உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா

பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் 5-ஆவது மிகப்பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (IMF) தரவுகளின் அடிப்படையில் ‘புளூம்பெர்க்’ ஊடக நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.

கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட உலகப்பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் மீண்டும் நிலைமையை மாற்றியது. உணவுப்பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

முக்கியமாக, பிரிட்டனில் அந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அந்நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரிட்டனில் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக அளவில் பெரும் பொருளாதார மதிப்பைக்கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத்தள்ளி இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கீட்டின்படி, இந்தியாவின் பொருளாதார மதிப்பு 85,470 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. அதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதார மதிப்பு 81,600 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

2021-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் என பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ள போதிலும், பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புடன் ஒப்பிடுகையில் வலுவடைந்தே உள்ளது.

நடப்பு 2022-23ஆம் நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5% வளர்ச்சி கண்டிருந்தது. நிகழ் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சுமார் 7% வளர்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

உலக அளவில் மிகப்பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்கி வருகிறது. அதற்கடுத்த இடங்களில் சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 6ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பொருளாதார மதிப்பு இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரும் 10 பொருளாதார நாடுகள்

1. அமெரிக்கா

2. சீனா

3. ஜப்பான்

4. ஜெர்மனி

5. இந்தியா

6. பிரிட்டன்

7. பிரான்ஸ்

8. இத்தாலி

9. பிரேஸில்

10. கனடா

4. ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்

27 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ். மகளிர் ஒற்றையர் பிரிவில் முடிசூடா இராணியாக திகழ்ந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். உலகின் நம்பர்.1 வீராங்கனையாகவும் நீண்டகாலம் இருந்த பெருமையும் அவர் வசம் உள்ளது.

இந்நிலையில் நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற யுஎஸ் ஓபன் போட்டி மூன்றாவது சுற்றில் ஆஸி. வீராங்கனை அஜ்லா டாம்ஜனோவிக்கிடம் 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த செரீனா டென்னிஸில் இருந்து ஓய்வுபெறுவதாக மைதானத்தில் கண்ணீருடன் அறிவித்தார்.

3rd & 4th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. The New Naval Ensign features the national emblem inside which shape?

A. Green Hexagon

B. Blue Octagon

C. Orange Hexagon

D. White Octagon

Answer & Explanation

Answer: B. Blue Octagon

  • Prime Minister Narendra Modi unveiled the new Naval Ensign (flag) at Cochin Shipyard Limited in Kochi. The Indian Flag is placed on the top left of the flag, while a blue octagonal shape that encompasses the national emblem sits atop an anchor on the right, which depicts steadfastness. The octagonal shape has been designed to represent eight directions, depicting the multi–directional reach and of the Indian Navy. The twin golden borders surrounding it are inspired from Chhatrapati Shivaji.

2. The International Monetary Fund (IMF) approved a loan of USD 2.9 billion to which country to tackle its economic crisis?

A. Iran

B. Afghanistan

C. Sri Lanka

D. Venezuela

Answer & Explanation

Answer: C. Sri Lanka

  • The International Monetary Fund (IMF) approved a loan of USD 2.9 billion to Sri Lanka. The country is battling its worst economic crisis since independence in 1948. Sri Lankan President Wickremesinghe, who is also the country’s Finance Minister, presented his first budget, which aimed to boost revenue and fight inflation.

3. Which Union Ministry presents Smart Solutions Challenge and Inclusive Cities Awards?

A. Ministry of MSME

B. Ministry of Housing and Urban Affairs

C. Ministry of Commerce and Industry

D. Ministry of Science and Technology

Answer & Explanation

Answer: B. Ministry of Housing and Urban Affairs

  • The Minister for Housing and Urban Affairs Hardeep Singh Puri presented Smart Solutions Challenge & Inclusive Cities Awards 2022. They were launched in April 2022. These awards are an initiative of the National Institute of Urban Affairs (NIUA) and the United Nations (UN) in India to address city–level accessibility and inclusion challenges faced by persons with disabilities (PwD), women, girls and the elderly.

4. Which organization manufactures Tejas Mark–2 Fighter Jets?

A. DRDO

B. BEL

C. HAL

D. BDL

Answer & Explanation

Answer: C. HAL

  • The Cabinet Committee on Security (CCS) has approved Tejas Mark–2 Project. It has sanctioned 6,500 crore rupees for designing and developing of Tejas Mark–2 fighter jet. It is manufactured by the Hindustan Aeronautics Limited (HAL). The advanced version of the indigenous Tejas light combat aircraft (LCA) will feature a series of additions to its flight and fight capabilities. Tejas 2.0 will be equipped with more powerful engines and indigenously developed Active Electronically Scanned Array (AESA) radar.

5. Who is the head of the Expert Committee constituted by the Ministry of Road Transport and Highways on EV battery safety standards?

A. Nandan Nilekani

B. Ramesh Chand

C. Parameswaran

D. Tata Narsingh Rao

Answer & Explanation

Answer: D. Tata Narsingh Rao

  • Ministry of Road Transport and Highway constituted an Expert Committee, chaired by Tata Narsingh Rao. He is the Director of International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI), Hyderabad. Based on the recommendations of the expert committee report, the Ministry has issued amendments including additional safety requirements related to battery cells, on–board charger, design of battery pack, thermal propagation due to internal cell short circuit leading to fire etc.

6. Mission Swavalamban is a flagship initiative of which institution?

A. NITI Aayog

B. NABARD

C. SIDBI

D. PFRDA

Answer & Explanation

Answer: C. SIDBI

  • Small Industries Development Bank of India (SIDBI) has launched the fifth phase of setting up of 300 Swavalamban Silai Schools across 10 districts of 6 States. This was launched under its flagship initiative Mission Swavalamban. It will cover Chhattisgarh, Haryana, Goa, Puducherry, Jammu & Kashmir and Ladakh, to empower women making them independent while pursuing entrepreneurship culture (Udyam Se Azadi).

7. Which institution launched its hackathon– Bima Manthan 2022?

A. PFRDA

B. IRDAI

C. GIC

D. NITI Aayog

Answer & Explanation

Answer: B. IRDAI

  • Insurance Regulatory and Development Authority of India (IRDAI) has invited individuals and institutions to develop technology–driven innovative solutions for automated death claim settlement, curtail miss–selling and other fields related to insurance. This was launched as a part of its first hackathon named ‘Bima Manthan 2022’ with the theme ‘Innovation in Insurance’.

8. Who has been appointed as the Managing Director (MD) of NaBFID?

A. Viral Acharya

B. K V Kamath

C. Urjit Patel

D. Rajkiran Rai G

Answer & Explanation

Answer: D. Rajkiran Rai G

  • Rajkiran Rai G has been appointed as the Managing Director (MD) of National Bank for Financing Infrastructure and Development (NaBFID) has appointed Rajkiran Rai G as its managing director (MD) for nearly five years. In 2021, the Government of India had appointed K V Kamath as chairperson of the development finance institution (DFI). The government has infused Rs 20,000 crore into NaBFID to start its operations to mobilise investment in infrastructure sector.

9. UDAN (Ude Desh ka Aam Nagrik) is a flagship scheme of which Union Ministry?

A. Ministry of External Affairs

B. Ministry of Civil Aviation

C. Ministry of Electronics and IT

D. Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: B. Ministry of Civil Aviation

  • Ministry of Civil Aviation’s flagship program Regional Connectivity Scheme UDAN (Ude Deshka Aam Nagrik) has completed 5 years of success since the launch of it first flight by Prime Minister on 27th April 2017. The scheme was initiatedon 21st October 2016. It provides an enhanced aviation infrastructure and air connectivity in tier II and tier III cities. In the last five years, UDAN has significantly increased the regional air–connectivity in the country. There were 74 operational airports in 2014. Because of the UDAN scheme this number has increased to 141 by now.

10. Which state is the host of the 2nd edition of the North East Olympics in 2022?

A. Assam

B. Meghalaya

C. Arunachal Pradesh

D. Sikkim

Answer & Explanation

Answer: B. Meghalaya

  • Meghalaya is set to host the 2nd edition of the North East Olympics from Oct.the 30th to Nov.6th in Shillong. The first edition of Games was held in Manipur in 2018, with 12 disciplines. The Games coincides when Meghalaya is celebrating the 50th year of its Statehood. In this edition, as many as 4,000 participants from eight North Eastern States will compete in 18 disciplines.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!