Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “ஆசிய மற்றும் பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின்” (UNECSCAP) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) பாரிஸ்

ஆ) பாங்காக் 🗹

இ) ரோம்

ஈ) வியன்னா

  • தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையம், சமீபத்தில், டிஜிட்டல் மற்றும் நிலைத்த வர்த்தகவசதி குறித்த உலகளாவிய ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்கீழ் 143 நாடுகள் ஐந்து முக்கிய குறிகாட்டிகளில் மதிப்பெண்கள் பெற்றுள்ளன. நடப்பு 2021ஆம் ஆண்டில் இந்தியா 90.32% மதிப்பெண்களைப்பெற்றுள்ளது. 2019’இல் அது 78.49 சதவீதமாக இருந்தது. வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில், இந்தியா, நடப்பு 2021ஆம் ஆண்டில் 100% பெற்றுள்ளது.

2. இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.23 

ஆ) ஜூலை.25

இ) ஜூலை.27

ஈ) ஜூலை.29

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.23 அன்று இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1927ஆம் ஆண்டு இதே நாளின் போது, நாட்டின் முதல் வானொலி ஒலிபரப்பு, அன்றைய பம்பாய் நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த முதல் ஒலிபரப்பை இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி என்ற தனியார் அமைப்பு மேற்கொண்டது. தற்போது, பிரஸார் பாரதி, தேசிய பொதுச்சேவை ஒலிபரப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது தூர்தர்ஷன் தொலைக்காட்சி வலையமைப்பு மற்றும் அகில இந்திய வானொலி (AIR) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், அகில இந்திய வானொலி புதுதில்லியில் “புதிய இந்தியாவை உருவாக்குதல் மற்றும் ஒலிபரப்பு ஊடகம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

3. இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.24 

ஆ) ஜூலை.26

இ) ஜூலை.28

ஈ) ஜூலை.30

  • வருமான வரி நாளானது ஆண்டுதோறும் ஜூலை.24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தாலும் அதுசார் அலுவலகங்களாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது விடுதலைப்போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, 1860ஆம் ஆண்டில் இதேநாளில், வருமான வரி என்னுமொரு புதிய வரி, முதன்முதலில் சர் ஜேம்ஸ் வில்சனால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் (2021) வரும் வருமான வரி நாள், அந்நாளின் 161ஆவது ஆண்டுநாளாகும்.

4. டோக்கியோ 2021’க்கான இந்தியாவின் ஒலிம்பிக் குழுவில் உள்ள பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை என்ன?

அ) 100

ஆ) 127 

இ) 153

ஈ) 200

  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2021’க்கு 127 பங்கேற்பாளர்களைக் கொண்ட பெரிய குழுவை இந்தியா அனுப்பியுள்ளது. அவர்கள் 18 வெவ்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பர். இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளில் 2 மாற்று வீரர்கள் மற்றும் தலா ஒரு ரிசர்வ் கோல் கீப்பரும் அடங்குவர். முந்தைய 2016 ஒலிம்பிக்கில், 117 விளையாட்டு வீரர்கள், 15 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

5. நடப்பாண்டின் (2021) G20 எரிசக்தி & சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ) இந்தியா

ஆ) இத்தாலி 

இ) அமெரிக்கா

ஈ) பிரான்ஸ்

  • இத்தாலியால் நடத்தப்படும் G20 நாடுகளின் எரிசக்தி & சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் நேபிள்ஸில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு, கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாநாடு – சிஓபி 26 நடைபெறுவதற்கு 100 நாட்களுக்கு முன்னதாக கூட்டப்பட்டிருப்பதால் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • ஆனால் உறுப்புநாடுகள், தங்களது இறுதி அறிக்கையில், முக்கிய பருவ நிலைமாற்ற உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளத்தவறியதால் இந்தச் சந்திப்பு விமர்சனத்துக்கு உள்ளானது.

6. இந்தியாவில் தேசிய மீன் விவசாயிகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.10 

ஆ) ஜூலை.15

இ) ஜூலை.20

ஈ) ஜூலை.25

  • மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர்களான Dr K H அலிகுனி மற்றும் Dr H L செளத்ரி ஆகியோர் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை.10ஆம் தேதி அன்று தேசிய மீன் விவசாயிகள் நாள் (National Fish Farmers Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
  • மீனவர்களின் மீன்வளத் தொழிலின் மேம்பாட்டுக்காக பிரதம மந்திரி மீன்வளத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2021) வரும் மீன் விவசாயிகள் நாள், அந்நாளின் 21ஆம் ஆண்டுநாளாகும்.

7. ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.30 

ஆ) ஜூலை.31

இ) ஆகஸ்ட்.01

ஈ) ஆகஸ்ட்.02

  • ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 தேதியன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • கடந்த 2013’இல், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை.30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐநா அலுவலகம் அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது. “Victims’ Voices Lead the Way” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. நடப்பாண்டில் (2021) வரும் உலக தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பொருள் என்ன?

அ) Protect Breastfeeding: A Shared Responsibility 

ஆ) Innocenti Declaration Anniversary

இ) Exclusive Breastfeeding

ஈ) Support Lactating Mothers

  • உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வார காலத்தில் (ஆகஸ்ட் 1-7) உலகம் முழுவதும் 120 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
  • கடந்த 1992ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து தாய்பாலூட்டலுக்கான உலக கூட்டமைப்பு (WABA) இதனை கடைப்பிடித்து வந்தது. இன்னசென்டி தீர்மானத்தில் கையொப்பமிடப்பட்டதையும் இந்த வாரம் குறிக்கிறது.
  • “Protect Breastfeeding: A Shared Responsibility” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இவ்வாரத்துக்கான கருப்பொருளாகும்.

9. சமீபத்திய வாழ்க்கைத்தர ஆய்வின்படி, இந்தியாவில், மோசமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ள வயது வந்தோரின் சதவீதம் என்ன?

அ) 16.2%

ஆ) 25.6%

இ) 46.2% 

ஈ) 72.6%

  • உலக நலவாழ்வு அமைப்பின் கேள்விகள் மற்றும் கூடுதல் கருவிகளை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கைத்தர ஆய்வானது 2021 மே மற்றும் ஜூன் மாதத்திற்கு இடையில் பல்வேறு நகரங்களில் உள்ள இந்திய வயது வந்தோரிடையே நடத்தப்பட்டது. இது ஐந்தாவது புரத வாரத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த ஆய்வின்படி, இந்தியாவில் வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட 46.2% பேர் மோசமான வாழ்க்கைத் தரத்தை கொண்டுள்ளனர்.
  • இதில் மோசமான வாழ்க்கைத்தர மதிப்பெண்ணுடன் அதிக சதவீத வயது வந்தோரை (65%) கொல்கத்தா பதிவு செய்திருந்தாலும், மும்பை அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. புரத வாரமானது ஆண்டுதோறும் ஜூலை 24-30 வரை, டானோன் இந்தியாவால் CII உடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.

10. சோரா என்பது எம்மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்?

அ) அஸ்ஸாம்

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) மேகாலயா 

ஈ) மத்திய பிரதேசம்

  • ‘சிரபுஞ்சி’ என்றும் அழைக்கப்படுகிற சோரா என்பது, வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு நகரமாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோரா நகரத்தில், பசுமை சோரா காடுவளர்ப்பு இயக்கத்தை தொடங்கிவைத்தார். மேலும், பெருநகர சோரா நீர்வழங்கல் திட்டத்தையும் அவர் அப்போது தொடங்கிவைத்தார்.
  • இந்தக் காடுவளர்ப்பு இயக்கத்தை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் உதவியுடன் மேகாலய மாநில அரசு நடத்தும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிகர வரி வருவாய் 5% அதிகரிப்பு: நிதியமைச்சர்

மத்திய அரசின் நிகர நேரடி வருவாய் கடந்த நிதியாண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளதாவது:

நேரடி மற்றும் மறைமுக வரி வருவாயை அதிகரிக்க நடுவண் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல், வரி தளங்களை விரிவாக்குதல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், வரிதொடர்பான வழக்குகளை குறைத்தல் உள்ளிட்டவற்றின்மூலமாக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால், கடந்த 2020-21ஆம் ஆண்டில் நிகர வரி (நேரடி மற்றும் மறைமுக வரிகள்) வசூல் `14.24 இலட்சம் கோடியாக அதிகரித்தது. இது, முந்தைய நிதியாண்டின் வரி வசூலான `13.56 இலட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகம். இருப்பினும், வரிசாரா வருவாய் வசூல் கடந்த நிதியாண்டில் `3.27 இலட்சம் கோடியிலிருந்து 36 சதவீதம் குறைந்து `2.08 இலட்சம் கோடியானது.

மத்திய அரசின் நிகர வருவாய் (வரி மற்றும் வரிசாரா வருவாய்) வசூல் கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் 3.09 சதவீதம் குறைந்து `16.32 இலட்சம் கோடியானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2. கரோனா சிகிச்சையில் அஸ்வகந்தா மூலிகை: ஆய்வு மேற்கொள்கிறது ஆயுஷ் அமைச்சகம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஸ்வகந்தா மூலிகையால் தயாரிக்கப்பட்ட மருந்து எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்ய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும், பிரிட்டனைச் சேர்ந்த இலண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ மையமும் இணைந்து இந்த ஆய்வை நடத்தவுள்ளன. இதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளன.

இதன்படி, பிரிட்டனில் உள்ள லெஸ்டர்ஷைர், பர்மிங்ஹாம், லண்டன் ஆகிய மூன்று நகரங்களைச் சேர்ந்த 2,000 பேர் தேர்வுசெய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர் என ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய இந்திய மூலிகையான அஸ்வகந்தா மனிதர்களின் உடல் ஆற்றலை அதிகரிக்கவும், மனவழுத்தத்தை குறைக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு அஸ்வகந்தா மூலிகை எவ்வாறு பலனளிக்கிறது என இதுவரை பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், முதல்முறையாக வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து கரோனா சிகிச்சையில் அஸ்வகந்தாவின் பலன்குறித்த ஆய்வை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொள்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்பவர்கள் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தலா 1000 பேர் என இரு பிரிவாகப் பிரிக்கப்படுவர். ஒரு பிரிவினருக்கு தினமும் இருவேளை அஸ்வகந்தா மாத்திரை 500 மிகி வழங்கப்படும். மற்றொரு பிரிவினருக்கு அஸ்வகந்தா மாத்திரையின் வடிவம், சுவையில் வேறுபாடு தெரியாத அளவு தீங்கற்ற மாத்திரை வழங்கப்படும். மூன்று மாதம் கழித்து அவர்களின் மன மற்றும் உடல் நலத்தின் மாற்றங்கள்குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இச்சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைக்கு அறிவியல்பூர்வமான மதிப்பீடு கிடைக்கும்.

3. ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கல்வி, ஆராய்ச்சிகளில் இணைந்து செயல்பட – நார்டிக் அறிவியல் தொழில்நுட்பக்கழகம் – தமிழ்ப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்:

தமிழ்க்கல்வி, ஆராய்ச்சிகளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகமும், நார்டிக் அறிவியல், தொழில்நுட்பக்கழகமும் இணைந்து பணியாற்றும் விதமாக நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழ் கற்பித்தல், ஆராய்ச்சிப் பணி மற்றும் மாணவர் பரிமாற்ற நிகழ்வுகளில் இணைந்து செயல்பட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த நார்டிக் அறிவியல் & தொழில்நுட்பக்கழகம், பன்னாட்டுத் தமிழர்ப்பேரவை ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

அந்த ஒப்பந்தத்தில், ஆராய்ச்சி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், கூட்டு ஆராய்ச்சி நிகழ்வு, பன்னாட்டு நிதிநல்கையில் ஆய்வு மேற்கொள்ளுதல், குறுகியகாலப் பயிற்சிகளை நடத்துதல், பண்பாட்டுப் பயிற்சிகளை நடத்துதல் ஆகியவற்றை இணைந்து நடத்துவது என உறுதிசெய்யப்பட்டது.

தமிழ்ப்பல்கலை துணைவேந்தர், நார்டிக் அறிவியல் & தொழில்நுட்பக் கழகத்தின் சார்பாக சுவீடனின் சால்மர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர் விஜய் அசோகன், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1. Where is the “United Nations Economic and Social Commission for Asia and the Pacific” (UNECSCAP) headquartered?

A) Paris

B) Bangkok 

C) Rome

D) Vienna

  • UN Economic and Social Commission for Asia Pacific, which is headquartered in Bangkok, Thailand has recently released a Global Survey on Digital and Sustainable Trade Facilitation. Under this evaluation 143 countries have been scored on 5 key indicators. India has scored 90.32 per cent for the year 2021 as against its score of 78.49 per cent in 2019. In terms of transparency, India scored 100 per cent in 2021.

2. When is the National Broadcasting Day observed in India?

A) July.23 

B) July.25

C) July.27

D) July.29

  • National Broadcasting Day is celebrated in India on July 23 every year. On the same day in the year 1927, the first ever radio broadcast in the country was carried out from the Bombay Station. The first broadcast was done by a private organisation called the Indian Broadcasting Company. At present, Prasar Bharati is the National public service broadcasting agency.
  • It comprises of Doordarshan Television Network and All India Radio. To commemorate this, the All–India Radio organized a symposium on “Creation of New India and Broadcasting Medium” in New Delhi.

3. When is Income Tax Day is celebrated in India?

A) July.24 

B) July.26

C) July.28

D) July.30

  • Income Tax Day is celebrated on July 24 by the Central Board of Direct Taxes (CBDT) and all field offices. On the same day in the year 1860, Income tax was originally introduced in India by Sir James Wilson, to compensate for the losses incurred during the first war of independence. This is the 161st anniversary of Income Tax Day.

4. How many participants are part of India’s Olympic contingent for Tokyo 2021?

A) 100

B) 127 

C) 153

D) 200

  • India has sent a large contingent of 127 participants for the Tokyo Olympics 2021, who will be participating in 18 sport events. These include two alternate players and one reserve goalie in men’s and women’s hockey squads. In the previous Olympics of 2016, 117 athletes participated in 15 sporting events.

5. Which country played host for the G20 Energy and Environment ministers’ meeting 2021?

A) India

B) Italy 

C) USA

D) France

  • The Energy and environment ministers meeting of the G20 countries, hosted by Italy was held at Naples. This meeting has assumed significant importance since it has been convened 100 days ahead of the UN Climate conference – COP 26 at Glasgow.
  • But this meeting has been criticized since the member nations have failed to agree on the wording of key climate change commitments in their final communique.

6. When is the National Fish Farmers Day observed in India?

A) July.10 

B) July.15

C) July.20

D) July.25

  • National Fish Farmers Day is celebrated in India on July 10, every year, to commemorate the two scientists: Dr K H Alikunhi and Dr. H.L. Chaudhury, who had invented ‘Induced breeding technology’ on this day in 1957. The Government has launched Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) for fish farmers. 2021 will mark 21st National Fish Farmers’ Day.

7. When is ‘World Day against Trafficking in Persons’ observed?

A) July.30 

B) July.31

C) August.01

D) August.02

  • ‘World Day against Trafficking in Persons’ is observed every year on July 30 across the world, to raise awareness of the situation of victims of human trafficking and for protection of their rights.
  • In the year 2013, the United Nations General Assembly held a high–level meeting to review the Global Plan of Action and designated July 30 as the World Day against Trafficking in Persons. The United Nations Office on Drugs and Crime assists member countries in their efforts. The theme of the day is, “Victims’ Voices Lead the Way”.

8. What is the theme of ‘World Breastfeeding Week’ 2021?

A) Protect Breastfeeding: A Shared Responsibility 

B) Innocenti Declaration Anniversary

C) Exclusive Breastfeeding

D) Support Lactating Mothers

  • World Breastfeeding Week is celebrated during the first week of August (August 1–7) across the world in many countries.
  • The campaign was initially organised by the World Alliance for Breastfeeding Action (WABA) in association with the World Health Organisation (WHO) and UNICEF in 1992. The week also marks the signing of the Innocenti Declaration. The theme of this year (2021) is “Protect Breastfeeding: A Shared Responsibility”.

9. As per the recent Quality of Life (QoL) survey, what is the percent of adults in India leading a poor quality of life?

A) 16.2%

B) 25.6%

C) 46.2% 

D) 72.6%

  • The Quality of Life (QoL) survey, based on a WHO questionnaire and additional tools, was conducted between May and June 2021 among Indian adults in several cities. It marks the launch of fifth year of Protein Week. As per the survey, nearly 46.2 percent of adults in India lead a poor quality of life.
  • While Kolkata recorded the highest percentage of adults (65 percent) with poor QoL score, Mumbai topped the list with high score. The Protein Week is celebrated annually between July 24–30, by Danone India in collaboration with CII.

10. Sohra is a town located in which Indian state?

A) Assam

B) Arunachal Pradesh

C) Meghalaya 

D) Madhya Pradesh

  • Sohra, also known as Cherrapunjee, is a high–altitude town in the northeast Indian state of Meghalaya. The Union Home Minister Amit Shah, launched the Green Sohra Afforestation Campaign at Sohra. Amit Shah also inaugurated the Greater Sohra Water Supply Scheme. This afforestation campaign will be run by the Meghalaya Government with the help of Assam Rifles.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!