Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd December 2020 Current Affairs in Tamil & English

3rd December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சீ கார்டியன் டிரோன்கள், எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டன?

அ. இஸ்ரேல்

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. பிரான்ஸ்

  • இந்திய கடற்படையானது ஓர் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து இரு MQ-9B சீ கார்டியன் டிரோன்களை ஓராண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அடாமிகக்சால் தயாரிக்கப்பட்ட அந்த ஆளில்லா வானூர்திகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். இந்த வானூர்திகள் அனைத்தும் தமிழ்நாட்டின் கடற்படை வானூர்தி நிலையமான INS இராஜாளிக்கு வந்தடைந்தன.

2. ஆண்டுதோறும் நவம்பர்.29 அன்று, ஐநா அவையானது கீழ்க்காணும் எந்த நாடுடன் தொடர்புடைய ‘பன்னாட்டு ஒற்றுமை நாளை’ கடைப்பிடிக்கிறது?

அ. இஸ்ரேல்

ஆ. பாலஸ்தீனம்

இ. துருக்கி

ஈ. சிரியா

  • ‘பாலஸ்தீன மக்களுடனான பன்னாட்டு ஒற்றுமை நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், 1977ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது, 1947ஆம் ஆண்டில், ஐநா பொது அவையால் பாலஸ்தீனத்தை ஓர் அரபு அரசு (அல்லது) யூத அரசாகப் பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய நாளைக்குறிக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இரு-நாடு தீர்வை அடைவதற்காக ஐநா தலைவர் அழைப்பு விடுத்தார்.

3. CPCB மற்றும் IIT தில்லி ஆகியவற்றின் அண்மைய ஆய்வின்படி, இந்தியாவின் எந்தப் பகுதி, நாட்டில் அதிக மாசுபாடுடன் காணப்படுகிறது?

அ. இந்தோ-கங்கைச் சமவெளி

ஆ. மேலைக்கடற்கரைச் சமவெளி

இ. கீழைக்கடற்கரைச் சமவெளி

ஈ. வட இந்தியா முழுமையும்

  • சமீபத்தில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் IIT தில்லியும் நடத்திய ஆய்வின்படி, இந்தோ-கங்கை சமவெளிகள் PM 2.5 அளவுடன், நாட்டின் மிக மாசுபட்ட பிராந்தியமாகத் தொடர்கின்றன. 2000 மற்றும் 2019’க்கு இடையில், தெற்கு மற்றும் கிழக்கிந்தியாவின் மாசு அளவு அதிகரிப்பதற்கான விகிதம் இந்தோ-கங்கை சமவெளிகளை விட அதிகமாக உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • நாட்டின் கிராமப்புறங்களில் காற்று மாசு நகர்ப்புறங்களைப் போலவே அதிகரித்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

4. ’Guidelines on physical activity and sedentary behaviour’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்

ஆ. உலக நலவாழ்வு அமைப்பு

இ. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

ஈ. ஐக்கிய நாடுகள் அவை

  • உலக நலவாழ்வு அமைப்பானது ’Guidelines on physical activity and sedentary behaviour’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வழிகாட்டுதல்களின்படி, வாரத்திற்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள்வரை மிதமான மற்றும் தீவிரமான உயிர்வளிக்கோரும் பயிற்சியை அனைத்து பெரியோரும் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு பெரியோருள் ஒருவருக்கும், ஐந்து இளம் பருவத்தினருள் நான்கு பேருக்கும் போதுமான உடற்பயிற்சி மேற்கொள்வதில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இது, உற்பத்தித்திறனில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்துகிறது.

5. பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து சங்கத்தின் கூற்றுப்படி, கீழ்க்காணும் எந்த நகரம், வான்வழிப் போக்குவரத்தால் மிகவதிகமாக இணைக்கப்பட்டுள்ளது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. ஷாங்காய்

ஈ. மெல்பர்ன்

  • பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து சங்கத்தின் அண்மைய அறிக்கையின்படி, சீனாவின் ஷாங்காய் நகரம் வான்வழிப் போக்குவரத்தால் மிகவதிகமாக இணைக்கப்பட்டுள்ள நகரமாக மாறியுள்ளது. இதற்கு முன், இலண்டன் முதலிடத்திலிருந்தது. IATA’இன் கூற்றுப்படி, இலண்டன் தற்போதுள்ள COVID-19 தொற்றுநோய்ப்பரவலால் வான்வழிப் போக்குவரத்தில் 67% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஷாங்காய் முதலிடத்தைப் பிடித்ததை அடுத்து, மொத்தம் 4 சீன நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹூலோங் ஒன்’ என்பது கீழ்க்காணும் எந்த நாட்டினுடைய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுவுலையாகும்?

அ. இரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. சீனா

ஈ. ஜெர்மனி

  • சீனாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுவுலையான, ‘ஹுலோங் ஒன்’, சீன தேசிய அணுவாற்றல் நிறுவனத்தின்படி, அதன் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. மூன்றாம் தலைமுறை அழுத்தப்பட்ட நீர் அணுவுலையானது தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலையால், ஆண்டுதோறும் பத்து பில்லியன் கிலோவாட் / மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் கரியமில வாயு உமிழ்வை 8.16 மில்லியன் டன் அளவுக்கு குறைக்க முடியும்.

7. மெரியம்-வெப்ஸ்டரால் நடப்பாண்டின் (2020) சிறந்த சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் எது?

அ. Lockdown

ஆ. Pandemic

இ. Vaccine

ஈ. Immunity

  • அமெரிக்காவைச் சார்ந்த மெரியம்-வெப்ஸ்டர் அதன் அகராதிகளுக்கு பெயர்பெற்றது. அண்மையில், ‘Pandemic’ என்ற சொல்லை அதன் நடப்பாண்டின் (2020) சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. மார்ச்.11 அன்று உலக நலவாழ்வு அமைப்பு, COVID-19 பரவலை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததை அடுத்து, ‘Pandemic’ என்ற சொல்குறித்த தேடல்கள் பெருமளவில் உயர்ந்தன. இச்சொல்லுக்கு இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் வேர்கள் உள்ளன.

8. நடப்பாண்டில் (2020) கேம்பிரிட்ஜ் அகராதியில் மிகவதிகமாக தேடப்பட்ட சொற்களின்படி ‘2020ஆம் ஆண்டின் சொல்’ என்று அறிவிக்கப்பட்ட சொல் எது?

அ. Lockdown

ஆ. Quarantine

இ. Vaccine

ஈ. Immunity

  • நடப்பாண்டில் (2020) கேம்பிரிட்ஜ் அகராதியில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், ‘Quarantine’ என்ற சொல்லாகும் ஒன்றாகும் என்பதைக் காட்டிய தரவுகளின் அடிப்படையில், கேம்பிரிட்ஜ் அகராதியானது ‘Quarantine’ என்ற சொல்லை, ’2020ஆம் ஆண்டின் சொல்’ என்று அறிவித்துள்ளது.

9. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது இந்தியா – இலங்கை – மாலத்தீவு முத்தரப்பு கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. மாலத்தீவுகள்

ஈ. ஜப்பான்

  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு கூட்டத்தை இலங்கை நடத்தியது. இது கொழும்பில் நடைபெற்றது. இந்தியாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதிநிதித்துவப்படுத்தினார். முன்னதாக, இதுபோன்ற கூட்டங்கள் மாலத்தீவு (2011), இலங்கை (2013) மற்றும் இந்தியாவில் (2014) நடைபெற்றன.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தொழில்நுட்ப மந்தநிலை – Technical Recession’, தொடர்ச்சியாக எத்தனை காலாண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறுக்கத்தைக் குறிக்கிறது?

அ. இரண்டு

ஆ. நான்கு

இ. ஆறு

ஈ. எட்டு

  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சுருங்கியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறுக்கமானது தொடர்ச்சியாக இரண்டாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தியா, ‘தொழில்நுட்ப மந்தநிலை’யில் நுழைந்ததாக கூறப்படுகிறது. 2020-21 முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9% ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

1. Sea Guardian drones, which were seen in the news recently, were obtained from which country?

[A] Israel

[B] United States of America

[C] United Kingdom

[D] France

  • The Indian Navy has taken two MQ–9B Sea Guardian drones from an American defence company, on lease for 1 year. The unmanned aerial vehicles, manufactured by US firm General Atomics, have been obtained on lease, to enhance surveillance over the Indian Ocean Region (IOR). The vehicles arrived at the naval air station INS Rajali in Tamil Nadu.

2. On Nov.29 every year, the UN observes ‘International Day of Solidarity’ related to which country?

[A] Israel

[B] Palestine

[C] Turkey

[D] Syria

  • ‘International Day of Solidarity with the Palestinian People’ is observed every year on November 29, across the world. The day was established in the year 1977 and it marks the day in 1947 when the UN General Assembly adopted a resolution partitioning Palestine into an Arab State and a Jewish State. The UN Chief called on Israel and Palestine to achieve a two–State solution.

3. Which region of India is the most polluted in the country, as per the recent study by CPCB and IIT Delhi?

[A] Indo–Gangetic Plain

[B] Western Coastal Plain

[C] Eastern Coastal Plain

[D] All over North India

  • As per the recent study conducted by the Central Pollution control board and IIT– Delhi, Indo–Gangetic plains continue to be the most polluted region in the country, in terms of PM 2.5 levels. The study also revealed that the rate of increase in pollution levels southern and eastern India is greater than the Indo–Gangetic plains, between 2000 and 2019. It also found that air pollution in rural areas of the country increased similar to that of urban areas.

4. Which organisation released ‘Guidelines on physical activity and sedentary behaviour’?

[A] Centers for Disease Control and Prevention

[B] World Health Organization

[C] Indian Council of Medical Research

[D] United Nations

  • The World Health Organisation has released ‘Guidelines on physical activity and sedentary behaviour’. As per the guidelines, at least 150 to 300 minutes of moderate to vigorous aerobic activity per week is recommended for all adults.
  • It also highlights that one in four adults, and four out of five adolescents, do not get enough physical activity, which causes a significant loss in productivity.

5. Which city has become the world’s most air connected city, as per the International Air Transport Association (IATA)?

[A] Chennai

[B] New Delhi

[C] Shanghai

[D] Melbourne

  • As per International Air Transport Association’s (IATA), recent report, China’s Shanghai has become the world’s most connected city, replacing London from the top spot. According to the IATA, London has witnessed a 67% fall in air connectivity due to the prevalent COVID–19 pandemic. With Shanghai added to the top list, world’s four most connected cities are now in China.

6. ‘Hualong One’, which was seen in news recently, was the first domestically made nuclear reactor of which country?

[A] Russia

[B] China

[C] Israel

[D] Germany

  • China’s first domestically made nuclear reactor ‘Hualong One’, has started its operations, as per the China National Nuclear Corp (CNNC). The third–generation pressurised water nuclear reactor has been connected to the national grid. The reactor can generate 10 billion kw–hours of electricity each year and cut carbon emissions by 8.16 million tons.

7. Which word has been selected as the ‘Top Word of 2020’, by Merriam–Webster?

[A] Lockdown

[B] Pandemic

[C] Vaccine

[D] Immunity

  • US based– Merriam–Webster, known for its dictionaries, has recently announced ‘pandemic’ as its 2020 word of the year.
  • As per the company, when the World Health Organisation declared the novel coronavirus outbreak a global pandemic on March 11, the searches on the site for ‘pandemic’ rose hugely. The word has roots in Latin and Greek. It is a combination of pan, meaning all, and demos, meaning people.

8. Which word is named as the ‘Word of the Year 2020’ as per the most searched words on the Cambridge Dictionary in 2020?

[A] Lockdown

[B] Quarantine

[C] Vaccine

[D] Immunity

  • The Cambridge Dictionary has named ‘Quarantine’ as the Word of the Year 2020 based on its data which showed that the word ‘Quarantine’ is one of the most searched words on the Cambridge Dictionary in 2020.

9. Which country hosted the 4th India – Sri Lanka – Maldives Trilateral Meeting on Maritime Security Cooperation?

[A] India

[B] Sri Lanka

[C] Maldives

[D] Japan

  • The 4th Trilateral Meeting on Maritime Security Cooperation between India, Sri Lanka, and Maldives was hosted by Sri Lanka. It was held in Colombo and India was represented by the National Security Advisor Ajit Doval. The earlier such meetings were held in Maldives (2011), Sri Lanka (2013) and in India (2014).

10. ‘Technical Recession’, which was making news recently refers to the contraction of GDP for how many consecutive quarters?

[A] Two

[B] Four

[C] Six

[D] Eight

  • The Gross Domestic Product (GDP) of India has contracted by 7.5% in the second quarter of the financial year 2020–21. The contraction in GDP is registered for the second consecutive quarter and hence India is said to have entered ‘Technical Recession’. The real GDP in the first quarter of 2020–21 (April – June) registered a record low of 23.9% contraction.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!