Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

3rd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2021இல் சர்வதேச அம்பேத்கர் மாநாட்டை நடத்துகிற நகரம் எது?

அ) புனே

ஆ) புது தில்லி 

இ) வாரணாசி

ஈ) சென்னை

  • சர்வதேச அம்பேத்கர் மாநாடு, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் சமீபத்தில் புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாநாட்டை எஸ்சி மற்றும் எஸ்டி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றமும் Dr அம்பேத்கர் வர்த்தக சபையும் ஏற்பாடு செய்துள்ளது.

2. IMF’இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படவுள்ள இந்தியப் பொருளாதார நிபுணர் யார்?

அ) உர்ஜித் படேல்

ஆ) ரகுராம் ராஜன்

இ) கீதா கோபிநாத் 

ஈ) உஷா தோரத்

  • இந்தியாவில் பிறந்த, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், முதல் துணை நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார். அவர் ஜெஃப்ரி ஒகமோட்டோவின் பாத்திரத்தை ஏற்கவுள்ளார்.

3. விமான நிலையங்களில் பயன்படுத்தப்படவுள்ள இந்தியாவின் முதல் பயோமெட்ரிக்ஸ் அடிப்படையிலான டிஜிட்டல் செயலாக்க அமைப்பின் பெயர் என்ன?

அ) டெக் யாத்ரா

ஆ) டிஜி யாத்ரா 

இ) டெக்னோ போர்டிங்

ஈ) டிஜி போர்டிங்

  • இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) நாட்டின் முதல் முக அங்கீகார தொழில்நுட்பம் சார்ந்த பயோமெட்ரிக் போர்டிங் சிஸ்டத்தில் செயல்பட்டு வருவதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி கே சிங் அறிவித்தார். வாரணாசி, புனே, கொல்கத்தா & விஜயவாடா விமான நிலையங்களில் பயணிகளுக்காக இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இந்த பயோமெட்ரிக் போர்டிங் சிஸ்டம் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒருபகுதியாகும். இந்த அமைப்பு வரும் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படவுள்ளது.

4. பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தால், ‘SRESHTA’ திட்டம் தொடங்கப்பட உள்ளது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 

இ) பழங்குடியினர் விவகார அமைச்சகம்

ஈ) சிறுபான்மை விவகார அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான குடியிருப்புக்கல்வி (SRESHTA) திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • இந்தத் திட்டம், பட்டியல் சாதி மாணவர்களின் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

5. ‘நிஜாமுதீன் பஸ்தி’ என்பது எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்புத் திட்டமாகும்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) புது தில்லி 

இ) பீகார்

ஈ) ஜம்மு காஷ்மீர்

  • இந்திய தலைநகரத்தில் உள்ள ‘நிஜாமுதீன் பஸ்தி’யில் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்காக UNESCO சிறப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான சிறப்பு அங்கீகார விருதை வழங்கியுள்ளது. நிஜாமுதீன் பகுதி ஹஸ்ரத் நிஜாமுதீன் பஸ்தியில் உள்ள பல நூற்றாண்டுகள் பழைமையான ஹுமாயூன் கல்லறை உள்ளிட்ட உலக பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியதாகும்.

6. உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) டிசம்பர் 01 

ஆ) டிசம்பர் 02

இ) டிசம்பர் 03

ஈ) டிசம்பர் 04

  • உலகின் மிகக்கொடிய நோய்களுள் ஒன்றான AIDS (Acquired Immune Deficiency Syndrome) HIV (Human Imm uno–deficiency Virus) என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இது மனித உடலின் வெள்ளை இரத்தவணுக்களை அழிக்கிறது. பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கெதிராக உடல் போராடமுடியாத நிலையை உண்டாக்குகிறது. இறுதியில் மரணத்தை நிகழ்த்துகிறது.
  • இந்த நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிச.1 அன்று உலக எய்ட்ஸ் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “End Inequalities, End AIDS” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

7. சர்வதேச அடிமைமுறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) டிசம்பர் 01

ஆ) டிசம்பர் 02 

இ) டிசம்பர் 10

ஈ) டிசம்பர் 14

  • சர்வதேச அடிமைமுறை ஒழிப்பு நாள் (International Day for the Abolition of Slavery) ஐநா பொது அவையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.2 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், கடந்த 1986ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது.

8. இந்தியாவில் தேசிய பால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 26 

ஆ) நவம்பர் 30

இ) டிசம்பர் 15

ஈ) டிசம்பர் 26

  • இந்திய ‘வெண்மைப்புரட்சியின் தந்தை’யான Dr வர்கீஸ் குரியனின் பிறந்தநாளைக்குறிக்கும் வகையில் ஆண்டு தோறும் நவ.26 அன்று தேசிய பால் நாள் கொண்டாடப்படுகிறது. பால் உற்பத்தியில் உலகளவில் ஐம்பதாவது இடத்திலிருந்த இந்தியாவை, சில பத்தாண்டுகளிலேயே மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றிய உலகின் மிகப்பெரிய பால் வளர்ச்சித்திட்டமான ‘Operation Flood’ஐ உருவாக்கியவர் Dr வர்கீஸ் குரியன் ஆவார்.

9. நடப்பாண்டில் (2021) வரும் சர்வதேச மாற்றுத்திறனா -ளிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Empowering persons with disabilities

ஆ) Leadership and participation of persons with disabilities toward an inclusive, accessible and sustainable post-COVID-19 world 

இ) Transformation towards sustainable and resilient society for all

ஈ) Ensuring inclusiveness and equality

  • மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துக்குமாக ஐநா அவை ஆண்டுதோறும் டிச.3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளை அனுசரிக்கிறது. 1992ஆம் ஆண்டு டிச.3 அன்று ஐநா இந்நாளை அறிவித்தது.
  • நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருள், “Leadership and participation of persons with disabilities toward an inclusive, accessible and sustainable post-COVID-19 world” என்பதாகும்.

10. தேசிய மாணவர் படையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) முசோரி

ஈ) அகமதாபாத்

  • தேசிய மாணவர் படை (NCC) என்பது இந்தியாவின் புது தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்திய ஆயுதப்படைகளின் இளைஞர் பிரிவு ஆகும். NCC என்பது உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாகும். இது சமீபத்தில் அதன் 73ஆவது ஆண்டு நிறைவை நவ.28 அன்று அனுசரித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வங்கக் கடலில் உருவானது ஜாவத் புயல்!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அந்தமான் அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கான பெயரை சவூதி அரேபியா வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜாவத் புயல் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும், டிசம்பர் 5 ஆம் தேதி வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் எனவும், கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2. 14-வது சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சி

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் 14-வது சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (9.12.2021) அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ACMEE 2021 14-வது சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சி நடைபெற்றது.

இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். மேலும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த பொருட்களைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

3. இந்திய கலாசார திட்டத்துக்கு யுனெஸ்கோவின் இரட்டை விருது

தில்லியின் நிஜாமுதீன் பஸ்தி சமூகத்தினரின் கலாசார மரபுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு யுனெஸ்கோவின் 2 விருதுகள் கிடைத்துள்ளன.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிறப்பான மரபுப் பாதுகாப்புத் திட்டம், நீடித்த வளா்ச்சிக்கான திட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் இந்தத் திட்டத்துக்கு யுனெஸ்கோவின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மக்கள் – அரசு – தனியாா் கூட்டணியின் மூலம் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அபார வெற்றியடைந்துள்ள நிஜாமுதீன் பஸ்தி பாதுகாப்புத் திட்டம் யுனெஸ்கோ நடுவா்களை மிகவும் கவா்ந்துள்ளது.

மிகப் பெரிய சமூக-பொருளாதார சவால்களை எதிா்கொண்டாலும், பெண்கள், இளைஞா்கள் உள்ளிட்ட நிஜாமுதின் பஸ்தி சமூகத்தினரின் சுகாதாரம், கல்வி, நல்வாழ்வு ஆகியவற்றை இந்தத் திட்டம் மேம்படுத்தியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பல நூற்றாண்டுகளாக வசித்து வரும் நிஜாமுதீன் பஸ்தி சமூகத்தினரின் கலாசார மரபைப் பாதுகாப்பதுடன், அவா்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு தன்னாா்வ அமைப்புகளும் நகர நிா்வாகம், தொல்லியல் துறை ஆகியவையும் இணைந்து கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

4. உதவித் தொகைகள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகை நல வாரியம் உருவாக்கம்: செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் குழு அமைப்பு

பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

‘உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுடன், நல வாரிய உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6-ம் தேதி அறிவித்தார்.இதையடுத்து, பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறது. நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன், பின்வரும் நலத்திட்ட உதவிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும். குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் குழந்தைகள், 11-ம்வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், 12-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன், மகள், முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ரூ.4,000, தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200வழங்கப்படும்.

திருமண உதவித் தொகை

இதுதவிர, திருமணத்துக்கு ரூ.2,000, மகப்பேறுக்கு ரூ.6,000,கருக்கலைப்பு, கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணாடிக்குரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும், பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலைவராகவும், 7 பேரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும்,6 பேரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் கொண்ட குழுஅமைக்கப்படும்.

விளம்பரக் கட்டணத்தில்..

நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்ட, அரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகை, நல வாரியத்துக்கு வழங்கப்படும். நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டு, நல வாரிய உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படி, அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5. சிபிஐ, அமலாக்க துறைகளின் – இயக்குநர் பதவிக் காலத்தை 5 ஆண்டாக நீட்டிக்கும் மசோதா :

மத்திய புலனாய்வு அமைப்பு களான சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்தது. அந்த பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க கடந்த நவம்பர் 14-ம் தேதி அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்கள் மக்கள வையில் நேற்று அறிமுகம் செய்யப் பட்டது. மத்திய பணியாளர் நலத் துறை இணை யமைச்சர் ஜிதேந்திர சிங் இரு மசோதாக்களையும் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, சிபிஐ, அமலாக்கத் துறையை மத்திய அரசு கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இரு அமைப்புகளையும் ஏவி எதிர்க்கட்சி களை மத்திய அரசு பழிவாங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இயக்குநர்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் மசோதாக் களுக்கு எதிராக பேசினர். -பிடிஐ

6. முன்மாதிரி முயற்சியாக ஆளில்லா விமான கழகம்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஆளில்லா விமான (ட்ரோன்) கழகம் தொடங்குவதற்கான அரசாணையை உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் டி.காா்த்திகேயன் பிறப்பித்துள்ளாா்.

தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் 2021-2022-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், புதிய முன்மாதிரி முயற்சியாக ‘ஆளில்லா விமானங்களுக்கென (ட்ரோன்), தமிழ்நாடு ‘ஆளில்லா விமான கழகம்’ ஒன்று அண்ணாபல்கலைகழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) உடன் இணைந்து தொடங்கப்படும். இந்த நிறுவனம், தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு சாா்ந்த முகமைகள் ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்தநிலையில், ஆளில்லா விமான கழகம் தொடங்குவதற்கான அரசாணையை உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் டி.காா்த்திகேயன் பிறப்பித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது: அண்ணாபல்கலைகழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் (எம்ஐடி) இணைந்து தமிழகத்தை ட்ரோன் தலைநகராக மாற்ற ஆளில்லா விமான கழகம் உருவாக்கப்படுகிறது.

இந்த கழகத்தின் தலைவராக உயா்கல்வித்துறை செயலா் செயல்படுவாா். மேலாண்மை இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை, குடிநீா் வழங்கல் துறை, நகராட்சி நிா்வாகம், தொழில்நுட்ப கல்வி இயக்குநா், உட்பட 8 போ் உறுப்பினா்களா இருப்பா். முதல்கட்டமாக, ஆளில்லா விமான கழகத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த சேவை- தமிழகத்திற்கு விருது வழங்கினார் ஜனாதிபதி

மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் பெற சிறப்பாகப் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் மாநில/மாவட்ட நிர்வாகங்கள் போன்றவற்றிற்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் 2020ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறை சார்பில் டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற‘சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின’ சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். விருதினை தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.கீதா ஜீவன் பெற்றுக்கொண்டார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 6 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் மற்றும் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

1. Which city plays host to the International Ambedkar Conclave in 2021?

A) Pune

B) New Delhi 

C) Varanasi

D) Chennai

  • The International Ambedkar Conclave has been inaugurated recently in New Delhi, by the Indian President Ram Nath Kovind. The conclave is being organised by the Forum of SC and ST Legislators and Parliamentarians and Dr Ambedkar Chamber of Commerce.

2. Which Indian–born economist is to be appointed as the first Deputy Managing Director of IMF?

A) Urjit Patel

B) Raghuram Rajan

C) Gita Gopinath 

D) Usha Thorat

  • Gita Gopinath, the India–born, first female chief economist of the International Monetary Fund (IMF), is set to take over as the first deputy managing director (FDMD). She is set to take over the role from Geoffrey Okamoto.

3. What is the name of India’s first biometrics–based digital processing system in Airports?

A) Tech Yatra

B) Digi Yatra 

C) Techno Boarding

D) Digi Boarding

  • Minister of State for Civil Aviation VK Singh announced that the Airports Authority of India (AAI) is working on the country’s first facial recognition technology–based biometric boarding system. It is to be piloted for passengers at Varanasi, Pune, Kolkata and Vijayawada airports. This biometric boarding system is part of the first phase of Digi Yatra scheme. The system is set to be launched in early 2022.

4. ‘SRESHTA’ scheme is set to be launched by which Union Ministry?

A) Ministry of Education

B) Ministry of Social Justice and Empowerment 

C) Ministry of Tribal Affairs

D) Ministry of Minority Affairs

  • The Social Justice and Empowerment Ministry is set to launch the Residential Education for Students in High Schools in Targeted Areas (SRESHTA) scheme. The scheme will focus on the socio–economic upliftment and overall development of the Scheduled Caste students by providing quality residential education.

5. ‘Nizamuddin Basti’ is a conservation project based at which Indian state/UT?

A) Uttar Pradesh

B) New Delhi 

C) Bihar

D) Jammu and Kashmir

  • The UNESCO has conferred Award of Excellence and Special Recognition for Sustainable Development Award, for conservation efforts at Nizamuddin Basti in the Indian capital. The Nizamuddin Area comprises the World Heritage Site of Humayun’s Tomb, the centuries–old settlement of Hazrat Nizamuddin Basti among others.

6. World AIDS Day is observed all over the world on which date?

A) December 01 

B) December 02

C) December 03

D) December 04

  • World AIDS Day is observed on 1 December every year. The day aims to raise public awareness about AIDSThe theme of the 2019 World AIDS Day is “End Inequalities, End AIDS”. Acquired Immuno Deficiency Syndrome (AIDS) is a pandemic disease that is caused due to the infection of the Human Immunodeficiency Virus (HIV). HIV causes damage to the immune system.

7. International Day for the Abolition of Slavery is observed on which date?

A) December 01

B) December 02 

C) December 10

D) December 14

  • The International Day for the Abolition of Slavery is a yearly event on December.2, organized by the United Nations General Assembly (UNGA). The day was first celebrated in the year 1986.

8. On which date, National Milk Day is celebrated in India?

A) November 26 

B) November 30

C) December 15

D) December 26

  • The National Milk Day is celebrated every year on 26th of November to commemorate the birth anniversary of Dr. Verghese Kurien, the father of India’s White Revolution. The White Revolution (also known as Operation Flood) was launched in 1970.
  • It is considered to be world’s biggest dairy development programme which transformed India from a milk deficient nation to the one of the largest producers of milk in the world.

9. International Day of Persons with Disabilities was celebrated on December 3 under which theme?

A) Empowering persons with disabilities

B) Leadership and participation of persons with disabilities toward an inclusive, accessible and sustainable post–COVID–19 world 

C) Transformation towards sustainable and resilient society for all

D) Ensuring inclusiveness and equality

  • The International Day of Persons with Disabilities is observed every year on December 3 to promote the rights and well–being of persons with disabilities in all spheres of society and development and to increase awareness of the situation of persons with disabilities in every aspect of political, social, economic and cultural life.
  • The annual observance of the Day was proclaimed in 1992, by a United Nations General Assembly resolution. The 2021 theme is “Leadership and participation of persons with disabilities toward an inclusive, accessible and sustainable post–COVID–19 world”.

10. Where is the headquarters of the National Cadet Corps (NCC) located?

A) Mumbai

B) New Delhi 

C) Mussoorie

D) Ahmedabad

  • National Cadet Corps (NCC) is the youth wing of the Indian Armed Forces with its headquarters in New Delhi, India. NCC is the largest uniformed youth organisation in the world. It recently observed its 73rd anniversary of its raising on November 28.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!