TnpscTnpsc Current Affairs

3rd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. முழுமையான COVID-19 தடுப்பூசி செலுத்தலை (2022 ஜூனில்) உறுதிசெய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

அ. ஹர் கர் தஸ்தக் திட்டம் 2.0 

ஆ. ஆத்மநிர்பார் தடுப்பூசி திட்டம் 2.0

இ. பிரதான் மந்திரி தடுப்பூசி திட்டம்

ஈ. கரீப் கல்யாண் தடுப்பூசி திட்டம் 2.0

 • தகுதியுள்ள அனைவருக்கும் COVID-19 தடுப்பூசியை முழுமையாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக, ‘வீடு தேடி சென்று தடுப்பூசி 2.0’ நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12-14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணைமீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஜூன்.1 முதல் ஜூலை 31 வரை 2 மாத காலம் வீடு வீடாகச்சென்று இத்திட்டம் மேற்கொள்ளப்படும். கடந்த 2021 நவம்பரில் முதல் ‘வீடு தேடி சென்று தடுப்பூசி 2.0’ நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 193.6 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

2. எந்த நிறுவனத்தை வாங்குபவர்களாகப் பதிவுசெய்ய அனுமதிக்கும் வகையில், அரசு இ-சந்தை தளத்தின் (GeM) நோக்கத்தை மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தியுள்ளது?

அ. அஞ்சல் நிலையங்கள்

ஆ. கூட்டுறவு சங்கங்கள் 

இ. சிறு நிதி வங்கிகள்

ஈ. பொது சேவை மையங்கள்

 • கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதிக்கும் வகையில் அரசு இ-சந்தை கொள்முதல் விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது கூட்டுறவு அமைப்புகளை வாங்குவோராக அனுமதித்திருப்பதன்மூலம் 27 கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ள 8.54 இலட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகள் பயனடையும்.

3. 2022ஆம் ஆண்டுக்கான ‘வாங்கரி மாத்தாய் வன சாம்பியன்’ விருதை வென்றவர் யார்?

அ. செசிலி ஜெபெட் 

ஆ. டேவிட் அட்டன்பரோ

இ. கிமிகோ ஹிராடா

ஈ. ஷரோன் லெவிக்னே

 • காடுகளைக் காப்பதிலும் காடுகளைச் சார்ந்த மக்களின் வாழ்வை மேம்படுத்துவதிலும் அவராற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, 2022ஆம் ஆண்டுக்கான ‘வாங்கரி மாத்தாய் வன சாம்பியன்’ விருதை கேமரூனின் ஆர்வலர் செசிலி ஜெபெட் வென்றார். ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையிலான காடுகளின் கூட்டுப்பங்காளித்துவம் (CPF) இந்த விருதை வழங்குகிறது. கொரிய குடியரசின் சியோலில் நடைபெற்ற XV உலக வனவியல் மாநாட்டின்போது நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

4. உயிரி எரிபொருள் மீதான தேசிய கொள்கையின் அண்மைய திருத்தத்தின்படி, பெட்ரோலில் 20% எத்தனாலைக் கலப்பதற்கான இலக்கு ஆண்டு எது?

அ. 2024-25

ஆ. 2025-26 

இ. 2029-30

ஈ. 2039-40

 • பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, உயிரி எரிபொருள் மீதான தேசிய கொள்கையில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்கும் இலக்கை 2030-இலிருந்து 2025-26-க்கு அது முன்னேற்றியுள்ளது. தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான கூடுதல் மூலப்பொருட்களை இருப்பு வைக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

5. இரு இருக்கைகள்கொண்ட புதிய தலைமுறை பறக்கும் பயிற்சி வானூர்தியான, ‘HANSA-NG’ஐ உருவாக்கிய நிறுவனம் எது?

அ. CSIR-NAL 

ஆ. BRO

இ. DRDO

ஈ. HAL

 • HANSA-NG, இரு இருக்கைகள்கொண்ட புதிய தலைமுறை பயிற்சி வானூர்தியை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்த வானூர்தி தனது எஞ்சின் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் இச்சோதனை நடத்தப்பட்டது.

6. உரத்துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. ஜோர்டான் 

 • மத்திய வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான உயர்மட்டக்குழு, உலகளாவிய உர நெருக்கடிக்கு மத்தியில் உரத்துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்காக ஜோர்டானுக்குச் சென்றது. நடப்பாண்டிற்கு 30 LMT இராக் பாஸ்பேட், 2.50 LMT DAP, 1 LMT பாஸ்போரிக் அமிலம் வழங்க ஜோர்டானுடன் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

7. உலக தேனீக்கள் நாள் அனுசரிக்கப்படுகிற மாதம் எது?

அ. மே 

ஆ. ஜூன்

இ. ஆகஸ்ட்

ஈ. செப்டம்பர்

 • மக்களையும் சுற்றுச்சூழலையும் வளர்த்தெடுப்பதில் தேனீக்கள் வகிக்கும் முக்கியப்பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே.20 அன்று உலக தேனீக்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான ஸ்லோவேனிய தேனீ வளர்ப்பவர் அன்டன் ஜான்சாவின் பிறந்தநாளில் உணவு மற்றும் உழவு அமைப்பால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Bee Engaged: Celebrating the diversity of bees and beekeeping systems” என்பது இந்த ஆண்டு (2022) வரும் உலக தேனீக்கள் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. மிகவும் அருகிவிட்ட உயிரினத்தைப் பாதுகாப்பதற்காக, ‘இராஜாளி மரபணு வங்கி’ அமையவுள்ள நகரம் எது?

அ. தென்காசி

ஆ. மைசூரு 

இ. முக்கூர்த்தி

ஈ. களக்காடு

 • மைசூரு பல்கலைக்கழகத்தின் மரபியல் & மரபணுத்தொகுதியியல் ஆய்வுத்துறையானது கர்நாடக மாநில வனத் துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 • இராமநகரத்தில் உள்ள இராமதேவரபெட்டா மலைப்பகுதியிலுள்ள கழுகுகளின் பல்லுயிர் பெருக்கம்குறித்து DNA விவரக்குறிப்பு நுட்பங்களைப்பயன்படுத்தி, ‘இராஜாளி மரபணு வங்கி’ மைசூருவில் நிறுவப்படவுள்ளது. இந்த மரபியல் துறை, கழுகு இனத்தை அழிந்து விடாமல் காப்பாற்றுவதற்காக கழுகுசார் மரபணு ஆய்வுகளை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

9. ‘தேசிய அருகிவிட்ட உயிரினங்கள் நாளானது’ மே மாதத்தில் வரும் எந்தத்தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

அ. மே மாதத்தில் வரும் முதல் ஞாயிறு

ஆ. மே மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

இ. மே மாதத்தில் வரும் கடைசி ஞாயிறு

ஈ. மே மாதத்தில் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை 

 • தேசிய அருகிவிட்ட உயிரினங்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே.20 அன்று இந்நாள் அனுசரிக்கப்பட்டது. அருகிவிட்ட உயிரினங்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கு நாம் எடுக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள்குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். 1973ஆம் ஆண்டு அருகிவிட்ட உயிரினங்கள் சட்டம் டிசம்பர்.28 அன்று நடைமுறைக்கு வந்தது. வனவுயிரி பாதுகாப்பு மற்றும் அருகிவிட்ட உயிரினங்களின் மறுவாழ்வு ஆகியவற்றின் தேவையை உயர்த்துவதை இந்தச் சட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. உலக குடும்பங்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மே.15 

ஆ. மே.30

இ. ஜூன்.01

ஈ. ஜூன்.03

 • ஐநா அவையானது மே.15 அன்று உலக குடும்பங்கள் நாளைக் கொண்டாடுகிறது. ஐநா பொதுச்சபை 1993-இல் இந்த நாளைக் கொண்டாடுவதாக அறிவித்தது. 2022ஆம் ஆண்டுக்கான உலக குடும்பங்கள் நாளிற்காக, ஐநா பொதுச்செயலாளர், “Families and Urbanization” என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளார். குடும்ப உறவு மற்றும் நிலையான நகர்ப்புற கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த ஆண்டிற்கான கருப்பொருளின் நோக்கமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ஜூன்.3 – உலக மிதிவண்டி நாள்

2. மாநில கல்விக் கொள்கை: நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைப்பு

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 13 வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை:

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில், அதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக்கொள்கை ஒன்று உருவாக்கப்படும். அதற்காக குழு அமைப்பதாகவும் கடந்த ஏப்ரலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. இந்தியா-செனகல் இடையே 3 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியா-செனகல் இடையே கலாசார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

தூதரகம் மற்றும் பணி தொடர்பான கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நடைமுறையைக்கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தம், 2022-26 ஆண்டுகாலத்தில் இருநாடுகளிடையேயான கலாசார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் இருநாடுகளிடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

1. What is the name of the campaign launched to ensure complete Covid–19 vaccination (in June 2022)?

A. Har Ghar Dastak Campaign 2.0 

B. Atmanirbhar Vaccine Campaign 2.0

C. Pradhan Mantri Vaccine Campaign

D. Garib Kalyan Vaccine Campaign 2.0

 • The Har Ghar Dastak campaign 2.0 was organised across the country to ensure complete Covid–19 vaccination of all eligible beneficiaries. The special focus was on those in the 12–14 age group and precaution dose for those above 60. The two–month long door–to–door campaign will run between June 1 and July 31. The first Har Ghar Dastak campaign was conducted in 2021 November. As many as 193.6 crore doses have been administered across the country, so far.

2. The Union Cabinet expanded the scope of Government e–Marketplace (GeM) to allow which entity to register as buyers?

A. Post Offices

B. Cooperative Societies 

C. Small Finance Banks

D. Common Service Centres

 • The Union Cabinet expanded the scope of the public procurement portal Government e–Marketplace (GeM) to allow cooperative societies to register as buyers. Over 8,54,000 registered cooperatives and their 270 million members will be benefitted.

3. Who has won the ‘2022 Wangari Maathai Forest Champion Award’?

A. Cécile Ndjebet 

B. David Attenborough

C. Kimiko Hirata

D. Sharon Lavigne

 • Activist Cécile Ndjebet of Cameroon won the 2022 Wangari Maathai Forest Champions Award in recognition of her contribution to preserving forests and improving the lives of people depending on forests. The award is presented by the Collaborative Partnership on Forests (CPF), which is chaired by the Food and Agriculture Organization of the United Nations (FAO). The award was conferred at a ceremony during the XV World Forestry Congress in Seoul, Republic of Korea.

4. As per the recent amendment in the National Policy on Biofuels, what is the target year of blending 20 percent ethanol in petrol?

A. 2024–25

B. 2025–26 

C. 2029–30

D. 2039–40

 • The Cabinet headed by Prime Minister Narendra Modi approved the amendments to the National Policy on Biofuels. It advanced the target of blending 20 percent ethanol in petrol to 2025–26 from 2030. At present, about 10 percent of ethanol is blended in petrol. More feed stocks have been allowed for the production of bio–fuels which can be doped with auto fuels.

5. Which institution developed ‘HANSA–NG’, the new generation two–seater flying trainer aircraft?

A. CSIR–NAL 

B. BRO

C. DRDO

D. HAL

 • HANSA–NG, the new generation two–seater flying trainer aircraft designed and developed by Council for Scientific and Industrial Research (CSIR)–National Aerospace Laboratories (NAL), successfully completed in–flight engine relight test. The test was carried out at the aeronautical test range (ATR) facility of Defence Research Development Organisation (DRDO), Karnataka.

6. India signed a MoU with which country for cooperation in Fertilizer Sector?

A. Australia

B. France

C. Japan

D. Jordan 

 • A high–level delegation led by Dr Mansukh Mandaviya, Union Minister of Chemicals & Fertilizers visited Jordan for enhanced cooperation in Fertilizer Sector amid Global Fertilizers crisis. An MoU was signed with Jordan for supply of 30 LMT Rock Phosphate, 2.50 LMT DAP, 1 LMT phosphoric acid for the current year.

7. World Bee Day is observed during which month annually?

A. May

B. June

C. August

D. September

 • World Bee Day is observed annually on 20 May, to raise awareness about the essential roles’ bees play in supporting people and the environment. It is organised by the Food and Agriculture Organization (FAO) on the birth anniversary Slovenian beekeeper Anton Janša– the pioneer of modern beekeeping. This year, World Bee Day will be celebrated under the theme – “Bee Engaged: celebrating the diversity of bees and beekeeping systems”.

8. Which city is to house the ‘Vulture Gene Bank’, for conservation of the critically–endangered species?

A. Tenkasi

B. Mysuru 

C. Mukurthi

D. Kalakkad

 • The University of Mysore’s Department of Studies in Genetics and Genomics signed a MoU with the Karnataka Forest Department for a study on biodiversity of vultures in Ramadevarabetta hills in Ramanagaram using DNA profiling techniques ‘Vulture Gene Bank’ is set to be established in Mysuru for conservation of the critically–endangered species. The genetics department has proposed to start vulture genome studies soon to save the species from getting extinct.

9. The ‘National Endangered Species Day’ is celebrated on which day of May?

A. First Sunday of May

B. Last Saturday of May

C. Last Sunday of May

D. Third Friday of May 

 • National Endangered Species Day is celebrated every year on the third Friday of May and this year it is celebrated on 20 May. The day aims to create awareness among people about endangered species and the different steps we can take to protect them. The Endangered Species Act of 1973 came into existence on 28 December. The act aims to raise the need for wildlife conservation and rehabilitation of endangered species.

10. Which date is observed as ‘International Families Day’?

A. May.15

 B. May.30

C. June.01

D. June.03

 • On May 15, the United Nations celebrates International Families Day worldwide. The United Nations General Assembly declared the day in 1993. For the International Day of Families 2022, the UN Secretary–General has chosen the theme of “Families and Urbanization”. The focus for this year is to increase awareness of the importance of family–friendly and sustainable urban policies.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button