Tnpsc

3rd March 2020 Current Affairs in Tamil & English

3rd March 2020 Current Affairs in Tamil & English

3rd March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

3rd March 2020 Current Affairs Tamil

3rd March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘வரையறுத்தல் – Delimitation’ என்ற சொல், எந்தச் செயல்முறையுடன் தொடர்புடையது?

அ. வருமான வரிக்கான வரம்புகளை நிர்ணயித்தல்

ஆ. கட்டுப்படியாகக்கூடிய வீட்டுவசதிக்கான வரம்புகளை நிர்ணயித்தல்

இ. பிராந்திய தொகுதிக்கான வரம்புகளை நிர்ணயித்தல்

ஈ. தலைவர் சம்பளத்துக்கான வரம்புகளை நிர்ணயித்தல்

  • ‘வரையறுத்தல்’ என்பது சட்டமன்ற அமைப்பைக்கொண்ட ஒரு நாட்டில், பிராந்தியத் தொகுதிகளின் வரம்புகளை நிர்ணயிக்கும் செயல்முறையாகும். பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொகுதி வரையறுத்தல் பணியை ஒத்திவைத்த முந்தைய அறிவிப்புகளை அரசாங்கம் அண்மையில் இரத்து செய்தது.
  • மக்களவை & மாநில சட்டமன்றத் தேர்தல்களின் நோக்கத்திற்காக, 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்தையும் பிராந்தியத் தொகுதிகளாக பிரித்து சரிசெய்யும் பணி, இந்நான்கு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

2.சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) தொகுதி வளர்ச்சி நிதியை, ஆண்டுக்கு `3 கோடியாக உயர்த்திய மாநிலம் எது?

அ. கேரளம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிசா

  • ஆண்டுக்கு `2 கோடி என்றிருந்த உத்தரபிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியானது, இனி, ஆண்டுக்கு `3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில சட்டசபைத் தலைவர் அறிவித்துள்ளார். இதன்மூலம், தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் மேலும் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டில், இந்த நிதியை ஆண்டுக்கு `1.5 கோடியிலிருந்து `2 கோடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

3.நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த முதல் சோதனை அடிப்படையிலான திட்டத்திற்கு, எந்த யூனியன் பிரதேசத்தை NITI ஆயோக் தேர்ந்தெடுத்துள்ளது?

அ. ஜம்மு காஷ்மீர்

ஆ. கோவா

இ. இலட்சத்தீவுகள்

ஈ. சண்டிகர்

  • நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த முதல் சோதனை அடிப்படையிலான திட்டத்திற்காக, யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரை NITI ஆயோக் தெரிவுசெய்துள்ளது. இதன்மூலம், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் (UNDP) பணியாற்றுவதற்கான ஒரு நல்வாய்ப்பை ஜம்மு காஷ்மீர் பெறும். இத் திட்டத்தின்கீழ், சில அளவுருக்களின் (parameters) அடிப்படையில் தரநிலைகளை வழங்குவதற்காக மாவட்ட ஆணையர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்படும்.

4.மத்திய புள்ளிவிவர அலுவலகம் (CSO) வெளியிட்ட இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்ன?

அ. 4.8%

ஆ. 5%

இ. 5.2%

ஈ. 5.4%

  • மத்திய புள்ளிவிவர அலுவலகம் (CSO), சமீபத்தில், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான (2019-20 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சித் தரவை வெளியிட்டது. மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தாக இத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது, முந்தைய காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 4.5 சதவீதத்தைவிட சற்று கூடுதலாகும். இத்தரவுகளின்படி, 2019-20 நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்புகள் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளில், 5 சதவீதமாக தக்கவைக்கப்பட்டுள்ளன.

5. ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மை மையம்’ என்னும் திட்டத்தை செயல்படுத்தும் பொதுத்துறை நிறுவனம் எது?

அ. பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ஆ. NHPC நிறுவனம்

இ. NTPC நிறுவனம்

ஈ. இந்திய சூரிய மின்னாற்றல் கழகம்

  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்புக்காக, பதினொரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மை மையங்களை (Renewable Energy Management Centres – REMC) மத்திய மின்துறை அமைச்சர் R K சிங் திறந்துவைத்தார். வடக்கு பிராந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மை மையத்தையும் (NR-REMC) அவர் அப்போது திறந்துவைத்தார்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மை மையங்களை மத்திய அரசின் திட்டமாக செயல்படுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மின்சார அமைச்சகத்தின்கீழ், ‘மகாரத்னா’ தகுதியுடைய பவர் கிரிட் நிறுவனம் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6. 2020 – உலக உற்பத்தித்திறன் மாநாட்டை நடத்தும் இந்திய நகரம் எது?

அ. மும்பை

ஆ. பெங்களூரு

இ. லக்னோ

ஈ. ஜெய்ப்பூர்

  • உலக உற்பத்தித்திறன் மாநாட்டின் 19ஆவது பதிப்பானது, வரும் 2020 மே 6-8 வரை பெங்களூரில், சுமார் 45 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு நடைபெறவுள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டு முதல், உலக உற்பத்தித்திறன் அறிவியல் கூட்டமைப்பால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக 1974ஆம் ஆண்டில், இந்தியாவில், இம்மாநாடு நடைபெற்றது. விளக்கக்காட்சிகள், உரைகள் மற்றும் குழு விவாதங்கள்மூலம் உற்பத்தி அறிவியலின் வளர்ச்சியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

7. சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பால் பியா, எந்த ஆப்பிரிக்க நாட்டின் தற்போதைய அதிபராக உள்ளார்?

அ. நைஜீரியா

ஆ. கேமரூன்

இ. பெனின்

ஈ. எகிப்து

  • கடந்த 37 ஆண்டுகளாக மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் அதிபராக இருந்துவரும் பால் பியா, அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முழுமையான பெரும்பான்மையைப்பெற்று வெற்றிபெற்றார். அவரது கட்சியான கேமரூன் மக்கள் ஜனநாயக இயக்கம், முடிவுகள் அறிவிக்கப்பட்ட 167 இடங்களில் 139 இடங்களை வென்றது. உலகின் மிகநீண்டகாலம் அரசவழி சார்பு அல்லாத ஓர் ஆட்சியாளராக பால் பியா திகழ்ந்து வருகிறார்.

8. அண்மையில் காலமான Dr. S. ஷெட்டர், எந்தத் தொழிலுடன் தொடர்புடையவர்?

அ. அறிவியலாளர்

ஆ. வரலாற்றாசிரியர்

இ. தொல்பொருள் ஆய்வாளர்

ஈ. பறவையியலாளர்

  • மூத்த வரலாற்றாசிரியர் Dr. S. ஷெட்டர் (85), அண்மையில், கர்நாடகத்தின் பெங்களூரில் காலமானார். இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் வரலாற்றாசிரியராக இவர் பணிபுரிந்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றவர் Dr. S. ஷெட்டர். தார்வாட் கர்நாடக பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய கலை வரலாற்று நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் புது தில்லியில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் உட்பட பல்வேறு முக்கியப்பதவிகளை அவர் வகித்துள்ளார்.

9. ‘புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை’ அமையவுள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. உத்தரகண்ட்

ஈ. பீகார்

  • கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட, உத்தரப்பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தட பகுதியில் வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், 296 கி.மீ., நீளங்கொண்ட, ‘புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை’ திட்டத்துக்கு சித்ரகூட்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த முன்மொழியப்பட்ட விரைவு நெடுஞ்சாலை பின்தங்கிய பிராந்தியத்தை தேசிய தலைநகர் பிராந்தியத்துடன் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. `10,000 கோடி மதிப்பிலான இப்‘புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை’த் திட்டத்துக்கு கடந்த ஆண்டு உத்தரபிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

10. அண்மையில் நாடு முழுவதும் 10000 FPO’களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதில் FPO என்பது எதைக்குறிக்கிறது?

அ. Farmer Priority Organisations

ஆ. Farmer Produce Organisations

இ. Farmer Productivity Organisations

ஈ. Farmer Primary Organisations

  • வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகத்தின்கீழுள்ள சிறு, குறு விவசாயிகளின் வேளாண் வணிக கூட்டமைப்பால் உழவர் உற்பத்தி அமைப்புகள் (FPO) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நிலமற்ற உழவர்களை தொகுப்பதற்கு இந்த உழவர் உற்பத்தி அமைப்புகள் உதவுகின்றன. மேலும், தொழில்நுட்பம், தரமான விதை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பெறுவதற்கும் உதவுகின்றன. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலத்தின் சித்ரகூட்டிலிருந்து நாடுமுழுவதும் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத்தமிழ் விருதுக்கு வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு’ என்னும் தலைப்பில் 2019ஆம் ஆண்டுக்கான ஆய்வுரைப்போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாட்டில், முன்கூட்டியே மின்கட்டணம் செலுத்துவோருக்கு, மின்வாரியம் வழங்கும் வட்டியை, 3.25 சதவீதமாக குறைத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!