Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 03

ஆ) மார்ச் 04

இ) மார்ச் 05

ஈ) மார்ச் 06

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 ஆம் தேதியன்று உலக வனவுயிரிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, புவியில் வாழும் விலங்கு மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Forests and Livelihoods: Sustaining People and Planet” என்பது நடப்பா -ண்டு (2021) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2. உலக செவிப்புலன் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச் 01

ஆ) மார்ச் 02

இ) மார்ச் 03

ஈ) மார்ச் 04

  • காது கேளாமை மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றை எப்படி தடுப்பது என்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக செவிப்புலன் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டுதோறும் உலக செவிப்புலன் நாள் கருத்தரங் -கை ஏற்பாடு செய்கிறது. “Hearing Care for All” என்பது இந்த ஆண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

3. வயநாடு வனவுயிரிகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) தெலங்கானா

  • வனத்துறை மற்றும் ஃபெர்ன்ஸ் நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி இணைந்து நடத்திய தட்டாம்பூச்சி குறித்த ஓர் ஆய்வு சமீபத்தில் வயநாடு வனவுயிரிகள் சரணாலயத்தில் நிறைவடைந்தது. இந்தச் சரணாலயம் மேற்குத்தொடர்ச்சிமலையில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
  • கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு நீடித்த இந்தக் கணக்கெடுப்பின்போது, 84 வகையான ஓடோனேட்டுகள் காணப்பட்டன. ‘ஓடோனேட்ஸ்’ என்பது டிராகன்ஃபிளைஸ் மற்றும் டாம்செஃப்ளைஸ் ஆகியவற்றைக்கொண்ட பூச்சிகளின் வரிசையாகும்.

4. அண்மையில் எந்த மாநிலத்தில், கால்நடை மற்றும் விலங்கு அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனம் (AIIRLAS) திறக்கப்பட்டது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) உத்தர பிரதேசம்

  • தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி அவர்கள் சமீபத்தில் கால்நடை மற்றும் விலங்கறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தை (AIIRLAS) திறந்துவைத்தார். இது, சேலம் மாவட்டத்தின் தலைவாசலில் அமைந்துள்ளது. இதன்வகையில் இது ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாகும். `1,023 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹண்டர் கில்லர்ஸ்’, எந்த இந்திய ஆயுதப்படையால் கொள்முதல் செய்யப்படவுள்ளது?

அ) இந்திய வான்படை

ஆ) இந்திய இராணுவம்

இ) இந்திய கடலோரக் காவல்படை

ஈ) இந்தியக் கடற்படை

  • பாதுகாப்பு அமைச்சரான இராஜ்நாத் சிங் தலைமையிலான இராணுவ கொள்முதல் குழுமம், 118 அர்ஜுன் Mk1-A ‘ஹண்டர் கில்லர்ஸை’ கொள் முதல் செய்வதற்கான இந்திய இராணுவத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின்மூலம், இந்திய இராணுவம், விரைவில், 118 அர்ஜுன் Mk-1A பிரதான போர் பீரங்கிகளைக் கொண்டிருக்கும். இது, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பாகும்.

6. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற அமேஸானியா-1 செயற்கைக் கோள் சார்ந்த நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) பிரேஸில்

இ) பின்லாந்து

ஈ) பிலிப்பைன்ஸ்

  • PSLV C-51 ஏவுகலத்தைப் பயன்படுத்தும் ISRO’இன் 53ஆவது திட்டமா -னது அமேஸானியா-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும். இந்தச் செயற்கைக்கோள் பிரேசிலுக்கு சொந்தமானதாகும்.
  • கூடுதலாக, பதினெண் இணை செயற்கைக்கோள்களையும் இது சுமந்து செல்லும். இந்த ஏவுகலம், ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும்.

7. “நம்ம கார்கோ” என்ற சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) தெலங்கானா

  • கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, சமீபத்தில், ‘நம்ம கார்கோ’ என்ற சேவையை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சியின்கீழ், மாநில சாலைப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் சரக்கு பொதிகளை கொண்டு சென்று மாநிலத்திற்கு கூடுதல் வருவாயை ஈட்டும். இது, கர்நாடகாவின் 109 பேருந்துநிலையங்களிலும், அண்டை மாநிலங்களின் தேர்ந்தெடுக் -கப்பட்ட இடங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

8. COVAX திட்டத்தின்மூலம் இலவச COVID தடுப்பூசிகளைப்பெற்ற முதல் நாடு எது?

அ) காங்கோ

ஆ) கானா

இ) சூடான்

ஈ) எத்தியோப்பியா

  • COVAX திட்டத்தின்மூலம் இலவச COVID தடுப்பூசிகளைப் பெற்ற முதல் நாடு கானா ஆகும். உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) COVAX திட்டத்தை கவி (Gavi) தடுப்பூசி கூட்டணி மற்றும் தொற்றுநோய் தயார் நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. COVID தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. மிகவும் அருகிவிட்ட இனமான, ‘ஆல்பைன் தாவர இனங்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில், ‘ஆல்பைன் தாவரம்’ என்ற ஒரு புதிய இனத்தை அறிவியலாளர்கள் குழு கண்டறிந் -துள்ளது. ‘Cremanthodium indicum’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்புதிய இனங்கள், இமயமலை சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த இனம், தவாங் மாவட்டத்தின் பெங்கா-டெங் சோ ஏரியைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.

10. இந்திய கடல்சார் உச்சிமாநாடு-2021 நடைபெறும் இடம் எது?

அ) சென்னை

ஆ) கொச்சின்

இ) மும்பை

ஈ) மெய்நிகர் முறையில்

  • ‘இந்திய கடல்சார் உச்சிமாநாடு 2021’ஐ பிரதமர் மோடி, மார்ச்.2 அன்று காணொலிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் அலுவல் -பூர்வ அறிக்கையின்படி, இதன் தொடக்க அமர்வில் பல்வேறு நாடுகளை சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்பர்.
  • இந்த உச்சிமாநாட்டின்போது `20,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1. When is the World Wildlife Day observed annually across the world?

A) March 03

B) March 04

C) March 05

D) March 06

  • The World Wildlife Day is observed on March 3 every year to raise awareness about the dangers faced by the planet’s fauna and flora. The 2021 theme is “Forests and Livelihoods: Sustaining People and Planet”.

2. When is the World Hearing Day observed?

A) March 01

B) March 02

C) March 03

D) March 04

  • ‘World Hearing Day’ is observed on 3 March each year, to raise awareness on how to prevent deafness and hearing loss. ‘WHO’ organizes an annual World Hearing Day seminar at its headquarters in Geneva. The theme of this year’s day is “Hearing Care for All”.

3. In which state ‘Wayanad Wildlife Sanctuary’ is situated?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Telangana

  • A dragonfly survey jointly conducted by the Forest Department and Ferns Nature Conservation Society (FNCS), concluded recently in Wayanad Wildlife Sanctuary. The Sanctuary is located in Kerala in the Western Ghats. The survey lasted for nearly 4 months and 84 species of odonates were spotted during the survey. Odonates are the order of insects comprising dragonflies and damselflies.

4. In which state, the Advanced Institute of Integrated Research in Livestock and Animal Science (AIIRLAS) has been inaugurated recently?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Uttar Pradesh

  • The Chief Minister of Tamil Nadu Edappadi K Palaniswami has recently inaugurated the Advanced Institute of Integrated Research in Livestock and Animal Science (AIIRLAS) in the state. It is located in Thalaivasal of Salem district. It is considered to be the largest such institution in Asia and has been constructed at a cost of Rs.1,023 crore.

5. ‘Hunter Killers’, which was making news recently, are to be procured by which Indian Armed Force?

A) Indian Air Force

B) Indian Army

C) Indian Coastal Guard

D) Indian Navy

  • The Defence Acquisition Council (DAC) headed by defence minister Rajnath Singh approved the Indian Army’s proposal to buy 118 Arjun Mark 1–A ‘Hunter Killers’. With this approval, Indian Army will soon have 118 indigenous Arjun Mk–1A Main Battle Tanks, manufactured by the Defence Research and Development Organisation (DRDO).

6. Amazonia – 1 satellite, which was making news recently, belongs to which country?

A) France

B) Brazil

C) Finland

D) Phillipines

  • The ISRO’s 53rd space mission using the PSLV C51 rocket will launch Amazonia–1 as the primary satellite. This satellite belongs to Brazil. In addition, the launch vehicle will also carry 18 co–passenger payloads. The rocket would be launched from Sriharikota spaceport in Andhra Pradesh.

7. “Namma Cargo” service has been launched in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Telangana

  • The Chief Minister of Karnataka B.S. Yediyurappa has recently launched the ‘Namma Cargo’ service in the state. Under this initiative, the state road transport corporation buses would carry cargo parcels to generate additional revenue to the state.
  • This is being implemented in 109 bus stations in Karnataka and select locations of neighbouring states.

8. Which is the first country to receive the batch of free Covid vaccines through COVAX scheme?

A) DRC

B) Ghana

C) Sudan

D) Ethiopia

  • Ghana became the first country to receive a batch of free Covid vaccine doses through the COVAX initiative. The World Health Organization (WHO) leads the COVAX initiative together with Gavi the Vaccine Alliance and the Coalition for Epidemic Preparedness Innovations. It aims to share the vaccines to poorer countries.

9. ‘Alpine Plant species’, which are critically endangered have been discovered in which state?

A) Assam

B) Sikkim

C) Arunachal Pradesh

D) Himachal Pradesh

  • A new species of the ‘alpine plant’ in Arunachal Pradesh’s Tawang district has been discovered by a team of scientists of three institutes. The new species, which was named as ‘Cremanthodium indicum’, belongs to the family of Himalayan sunflower. The species is endemic to Penga–Teng Tso Lake of Tawang district of the state.

10. Which city is the venue of the Maritime India Summit 2021?

A) Chennai

B) Cochin

C) Mumbai

D) Virtual Mode

  • Prime Minister Narendra Modi is to virtually inaugurate the second edition of the Maritime India Summit (MIS) on March 2, 2021. As per the official statement by the Ministry of Ports, Shipping and Waterways, the opening session will have ministerial–level participation from several countries. it is also expected that Rs 20,000 crore worth MoUs will be signed during this Summit.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!