Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘பொருளாதார அறிக்கையின் நிலை’யை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) ரிசர்வ் வங்கி

ஈ) NITI ஆயோக்

  • ரிசர்வ் வங்கியானது அண்மையில், ‘பொருளாதார நிலை’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், COVID-19 நோய்த்தொற்றுகள் உடனடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கும் என்றும் அது பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2. சாண்ட்லர் நல்லரசு குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 14

ஆ) 49

இ) 100

ஈ) 150

  • சாண்ட்லர் நல்லரசு குறியீட்டில் இந்தியா 49ஆவது இடத்தில் உள்ளது. இக்குறியீட்டில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. 50‘க்கும் மேற்பட்ட திறந்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீடு 104 நாடுகளைத் தரவரிசைப்பபடுத்தியுள்ளது. இது தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை; வலுவான சட்டங்கள் மற்றும் கொள்கைகள்; வலுவான நிறுவனங்கள்; நிதி; ஈர்க்கக்கூடிய சந்தை; உலகளாவிய செல்வாக்கு மற்றும் நற்பெயர்; மற்றும் நாட்டு மக்களை முன்னுக்குக் கொண்டுவர உதவுவது ஆகிய கொண்ட ஏழு தூண்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

3. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) குத்துச்சண்டை

ஆ) மல்யுத்தம்

இ) டேபிள் டென்னிஸ்

ஈ) வில்வித்தை

  • இந்தியாவின் முன்னணி வில்வித்தை சாம்பியன்களான தீபிகா குமாரி மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் ஆகியோர் வில்வித்தை உலகக் கோப்பை நிலை-1 மகளிர் மற்றும் ஆடவர் நிகழ்வின் ‘ரீகர்வ்’ நிகழ்வில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில், மகளிர் ‘ரீகர்வ்’ அணிக்கு இது முதல் உலகக்கோப்பை தங்கப்பதக்கம் ஆகும்.
  • மேலும், அதானு தாஸ் மற்றும் அங்கிதா ஆகியோரைக்கொண்ட இந்தியாவின் கலப்பு அணி, அதே போட்டியில் வெண்கலம் பெற்றுள்ளது.

4. ஐநா பன்னாட்டு செர்னோபில் பேரிடர் நினைவு நாள் அனுசரிக்க -ப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல் 20

ஆ) ஏப்ரல் 26

இ) ஏப்ரல் 30

ஈ) மே 1

  • செர்னோபில் அணுவுலை பேரிடரானது 1986ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஐநா அவையானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26’ஐ சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவுநாளாக அனுசரித்துவருகிறது.
  • நடப்பாண்டு (2021), இந்த அணுவுலை பேரிடரின் முப்பதாம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. அணுவாற்றலின் அபாயங்கள் மற்றும் செர்னோ -பில் பேரிடரின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

5. வானூர்தி பொறிகளுக்கு, ‘கிரிஸ்டல் தகடு தொழில்நுட்பத்தை’ உருவாக்கிய அமைப்பு எது?

அ) ISRO

ஆ) HAL

இ) BEL

ஈ) DRDO

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), ஒற்றை படிக தகடு (Single Crystal Blade) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உலங்கூர்தி மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்துதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தின்கீழ் 60 தகடுகள் HAL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற DANTAK திட்டம், BRO’ஆல் எந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதன்மை திட்டமாகும்?

அ) வங்காளதேசம்

ஆ) நேபாளம்

இ) பூட்டான்

ஈ) மியான்மர்

  • அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில், கடந்த 1961 ஏப்.24 அன்று DANTAK திட்டம் நிறுவப்பட்டது. இது, எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் (BRO) மிகப்பழைமையான திட்டங்களுள் ஒன்
    -றாகும், இது பூட்டானில் வண்டிகள் செல்லக்கூடிய சாலைகளை அமை -க்கும் பணியில் ஈடுபட்டது. அண்மையில், இத்திட்டத்தின் வைரவிழா, பூட்டானில், டான்டாக் நினைவிடத்தில் நினைவுகூரப்பட்டது.

7. ‘பணியின் போதான பாதுகாப்பு & நலம்’ குறித்த உலகளாவிய உத்தி’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ) WTO

ஆ) ILO

இ) IMF

ஈ) WCO

  • பணியின் போதான பாதுகாப்பு மற்றும் நலத்திற்கான உலக நாள், முதன் முதலில், 2003ஆம் ஆண்டில் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அதன் பணியின்போதான பாதுகாப்பு மற்றும் நலம் குறித்த உலகளாவிய உத்தியின் ஒருபகுதியாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்.28 அன்று பணியிடங்களில் நிகழும் விபத்துக்கள் மற்றும் நோய்களின் தடுப்புகுறித்து கவனஞ்செலுத்துவதற்காக ‘பணியின்போதான பாதுகாப்பு மற்றும் நலத்திற்கான உலக நாள்’ என்று அனுசரிக்கப்படுகிறது.

8. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, இந்தோ-ஜெர்மன் திட்டமான ‘பைரசோல்’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) கரியமிலவாயு உமிழ்வைக் குறைத்தல்

ஆ) நகர்ப்புற கழிவு மேலாண்மை

இ) மலேரியாவை ஒழித்தல்

ஈ) பெண்களில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவது

  • பொலிவுறு நகரங்களின் நகர்ப்புற இயற்கைக் கழிவுகளை உயிரிக் கரிமப் பொருட்கள் மற்றும் ஆற்றலாக மாற்றுவதற்காக இந்தோ-ஜெர்மன் திட்டமான ‘பைரசோல்’ திட்டம் தொடங்கப்பட்டது. இது, CSIR-CLRI’க்கு இந்தோ-ஜெர்மன் அறிவியல்&தொழினுட்ப மையத்தால் வழங்கப்பட்டது.
  • இது, இந்திய சீர்மிகு நகரங்களின் நார்த்தன்மையுள்ள கரிமக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கசடுகள் ஆகியவற்றை உயிரிக்கரிமப் பொருட்களாக செயலாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த சோலார் உலர்த்தி மற்றும் வெப்பச் சிதைவு மையத்துக்கான அடிக்கல், அண்மையில், தமிழ்நாட்டின் சென்னை CSIR-CLRI’இல் நாட்டப்பட்டது.

9. கிரிப்டோ நிறுவனங்கள் கூட்டணியின், ‘கிரிப்டோ காலநிலை ஒப்பந்தத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ) GHG உமிழ்வை ஒழித்தல்

ஆ) காலநிலை மாற்ற திட்டங்களில் முதலீடு

இ) காலநிலைமாற்ற திட்டங்களுக்கு பிளாக் செயினைப் பயன்படுத்துதல்

ஈ) கிரிப்டோகரன்ஸிகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குதல்

  • கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டணியான -து கிரிப்டோ காலநிலை ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இது ஒரு தொழி -ற்துறைசார்ந்த ஒப்பந்தமாகும். இதில், கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் அனைத்தும் 2025’க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதாகவும், 2040’க்குள் பைங்குடில் வாயு வெளியேற்றத்தை முற்றி -லுமாக ஒழிப்பதாகவும் உறுதியளித்துள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது ராக்கி மவுண்டைன் நிறுவனம்; புத்தாக்க ஒழுங்கு -முறைக்கான கூட்டணி; மற்றும் ஆற்றல் வலைய அறக்கட்டளை ஆகிய மூன்று இலாபநோக்கற்ற குழுக்களால் வழிநடத்தப்படுகிறது.

10. மீன்களுக்கான முதல் உள்நாட்டு தடுப்பூசியின் பெயர் என்ன?

அ) Nodavac-R

ஆ) Fishaxin-R

இ) Fishyvac-R

ஈ) Newvac-R

  • சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகமானது வைரல் நரம்புத்திசு அழுகல் நோய்க்கு ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. Nodavac-R என்பது அந்தத்தடுப்பூசியின் பெயராகும். இந்த நோய், பெட்டனோடவைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் எலும்பு மீனினங்களை தாக்குகிறது. இந்த வைரஸால் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை கடல்மீனினங்கள். இந்த வைரஸ் தானூடுபரவுதல் மற்றும் தொடர்பின் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய், பெரும்பாலும் மீன்குஞ்சுகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில், பெரிய மீன்களையும் தாக்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. RBI துணை ஆளுநராக டி ரவிசங்கர் நியமனம்

இந்திய ரிசா்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக நிர்வாக இயக்குநர் டி ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியில் ஆளுநரும் நான்கு துணை ஆளுநர்களும் உள்ளனர். துணை ஆளுநராக இருந்த B P கனுங்கோ கடந்த ஏப்.2 அன்று ஓய்வுபெற்றார். அதையடுத்து, புதிய ஆளுந -ராக டி ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் RBI நிர்வாக இயக்குநராக இருந்துவந்தார். மூன்றாண்டுகள் வரை அல்லது வயது காரணமாக பணி ஓய்வுபெறும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பார்.

1. Which institution has released the “State of the Economy Report”?

A) IMF

B) World Bank

C) Reserve Bank of India

D) NITI Aayog

  • The country’s apex financial regulator the Reserve Bank of India has recently released the ‘State of the Economy’ report. In the report, RBI has stated that of COVID infections are not brought under immediate control, it would severely affect the supply chain and hence lead to inflationary pressures.

2. What is India’s rank in Chandler Good Government Index?

A) 14

B) 49

C) 100

D) 150

  • India has been ranked at 49th position in Chandler Good Government Index. Finland has topped the index. The index ranks 104 countries, under which each country is measured across over 50 open data points. It is based in seven pillars which are leadership and foresight; robust laws and policies; strong institutions; financial stewardship; attractive marketplace; global influence and reputation; and helping people rise.

3. Deepika Kumari and Atanu Das, who were in the news recently, are associated which sports?

A) Boxing

B) Wrestling

C) Table Tennis

D) Archery

  • India’s lead Archery champions – Deepika Kumari and her husband Atanu Das have won Gold medals in at the recurve event of Archery World Cup Stage 1 women’s and men’s event. This is the first World Cup gold medal for the women’s recurve team in the last seven years.
  • Also, India’s mixed team consisting of Atanu Das and Ankita have secure Bronze medal in the same tournament.

4. On which date, UN observes International Chernobyl Disaster Remembrance Day?

A) April 20

B) April 26

C) April 30

D) May 1

  • The Chernobyl nuclear disaster took place in the year 1986. Every year the United Nations observes April 26 as the International Chernobyl Disaster Remembrance Day. This year marks the 30th anniversary of the nuclear disaster.
  • This day is dedicated to raise awareness of regarding the risks of nuclear energy and the consequences of Chernobyl disaster.

5. Which organisation developed ‘Crystal blade technology’ for aero engines?

A) ISRO

B) HAL

C) BEL

D) DRDO

  • Defence Research and Development Organisation (DRDO), has developed single crystal blade technology. This has been developed for Hindustan Aeronautics Limited (HAL) to be used for their helicopter development programme. 60 blades under the newly developed technology have been supplied to HAL.

6. Project DANTAK, which was seen in the news recently, is the flagship project of BRO, carried out in which country?

A) Bangladesh

B) Nepal

C) Bhutan

D) Myanmar

  • Project DANTAK was established on April 24, 1961 under the leadership of the then Prime Minister Jawahar Lal Nehru. It is one of the oldest projects of the Border Roads Organisation (BRO), which was tasked to construct motorable roads in Bhutan.
  • Recently, the Diamond Jubilee of the Project was commemorated in Bhutan, at the DANTAK Memorial.

7. ‘Global Strategy on Occupational Safety and Health’ is associated with which organisation?

A) WTO

B) ILO

C) IMF

D) WCO

  • The World Day for Safety and Health at Work was first practised in the year 2003 by the International Labour Organisation (ILO), as a part of its ‘Global Strategy on Occupational Safety and Health’. Every year, April 28 is observed as the ‘World Day for Safety and Health at Work’, to focus on the importance and prevention of accidents and diseases at workplaces.

8. Indo–German project ‘Pyrasol’, which was seen in the news recently, is associated with which field?

A) Reduce Carbon Emmission

B) Urban Waste Management

C) Eradication of Malaria

D) Improve Nutrition in Women

  • Indo–German project ‘Pyrasol’ was launched to transform urban organic waste into biochar and energy in smart cities. It was awarded to CSIR–CLRI by the Indo–German Science & Technology Centre.
  • It aims for joint processing of Fibrous Organic Waste and Sewage Sludge of Indian smart cities into Biochar. The foundation stone of the Integrated Solar Dryer and Pyrolysis pilot was recently laid at CSIR–CLRI, Chennai, Tamil Nadu.

9. What is the main objective of the Crypto Climate Accord, an alliance of crypto firms?

A) Eliminate GHG Emmissions

B) Investment in Climate Change Projects

C) Using Block–Chain for Climate change Projects

D) Awareness Generation on Cryptocurrencies

  • An alliance of cryptocurrency firms and organisations have announced the Crypto Climate Accord (CCA). It is an industry–driven agreement in which the firms vow to switch to renewable energy sources by 2025 and go completely eliminate greenhouse gas emissions by 2040.
  • CCA is led by three non–profit groups: The Rocky Mountain Institute; the Alliance for Innovative Regulation; and Energy Web Foundation.

10. What is the first indigenous vaccine name for fish is?

A) Nodavac–R

B) Fishaxin–R

C) Fishyvac–R

D) Newvac–R

  • The Central Institute of Brackish Aquaculture located in Chennai has developed an indigenous vaccine for Viral Nervous Necrosis. The name of the vaccine is Nodavac–R.
  • The disease is caused by the Betanodavirus. It mostly affects teleost fish. More than forty species are affected by this virus and most of them are marine species. This virus transmits through passive diffusion and contact. The disease mostly occurs in juveniles. However, it also affects the adults.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!