3rd November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள்

1. Secure Application for Internet–SAI என்ற செய்தியிடல் செயலியை உருவாக்கியுள்ள ஆயுதப்படை எது?

அ. இந்தியக் கடற்படை

ஆ. இந்திய இராணுவம்

இ. இந்திய வான்படை

ஈ. இந்தியக் கடலோரக் காவல்படை

 • ‘பாதுகாப்பான இணையப்பயன்பாடு’ என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற திறன்பேசி செயலியை ஆத்ம நிர்பார் பாரத் இயக்கத்தின்கீழ் இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக ஒலி-ஒளி அழைப்பு சேவைகள், குரல் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளை பாதுகாப்புடன் வழங்கும்.
 • இது, ‘end-to-end’ குறியாக்க செய்தியிடல் நெறிமுறையை உபயோகித்து உருவாக்கப்பட்ட வணிக ரீதியிலான தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகியவற்றைப் போன்றதாகும். தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடிய குறியீட்டு முறை, உள்ளூர் உள் சேவையகங்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் Secure Application for Internet – SAI செயலி திகழ்கிறது

2. நிலம் மற்றும் சொத்துப் பதிவுக்காக, ‘தரணி’ என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • தெலுங்கானா மாநில முதலமைச்சார் கே சந்திரசேகர் இராவ் அண்மையில் நிலம் மற்றும் சொத்துப் பதிவுக்காக, ‘தரணி’ என்ற வலைதளத்தை தொடங்கிவைத்தார். இதன்மூலம், நிலம் மற்றும் சொத்துப் பதிவுகளுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளைப் பயன்படுத்திய முதல் மாநிலமாக தெலுங்கானா மாநிலம் மாறியுள்ளது. இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படாத சொத்து விவரங்கள் சட்டத்துக்குப் புறம்பானதாக கருதப்படுவதோடு, அவை மீண்டும் பதிவு செய்ய அனுமதிக்கவும்படாது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘DRIP’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. அணை புனரமைப்பு

ஆ. கல்வி

இ. தகவல் தொழில்நுட்பம்

ஈ. நானோ தொழில்நுட்பம்

 • உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு `10,211 கோடி செலவிடப்படவுள்ளது. பத்தாண்டு காலத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

4. நலவாழ்வு & மருந்துத்துறையில் ஒத்துழைப்பு நல்கும் இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. கம்போடியா

ஆ. இலங்கை

இ. நேபாளம்

ஈ. லாவோஸ்

 • நலவாழ்வு & மருந்துத்துறையில் இந்தியா-கம்போடியாவுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தி -ற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இருநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் நலவாழ்வுத்துறையில் இந்தியா, கம்போடியா நாடுகள் இடையேயான கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு ஊக்கமளிக்கப்படும். இந்த ஒப்பந்தம், இருநாடுகளிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாளிலிருந்து ஐந்தாண்டு வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

5. தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை பணியிடைநீக்கம் செய்தவர் யார்?

அ. குடியரசுத்தலைவர்

ஆ. பிரதமர்

இ. தில்லி முதலமைச்சர்

ஈ. துணை நிலை ஆளுநர், தில்லி

 • தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை இந்தியக் குடியரசுத்தலைவர் இராம் நாத் கோவிந்த் பணியிடைநீக்கம் செய்துள்ளார். தில்லி பல்கலைக்கழக சட்டவிதிகளின்கீழ், கடும் முறைகேடு, கடமைகளை மீறுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அர்ப்பணிப்பற்ற தன்மை ஆகியவ -ற்றின் அடிப்படையில் இப்பணியிடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தியாகி, கடந்த 2016 மார்ச்சில் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

6. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைச்சர்கள் பங்கேற்ற 19ஆம் கூட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?

அ. பியூஷ் கோயல்

ஆ. நரேந்திர மோடி

இ. நிர்மலா சீதாராமன்

ஈ. S ஜெய்சங்கர்

 • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், 19ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். SCO’இன் தலைமையகம் சீனத்தின் ஷாங்காயில் உள்ளது. சீனா, இந்தியா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், பாகிஸ்தான், இரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்புநாடுகளை SCO தன்னகத்தே கொண்டுள்ளது.

7. இந்திய வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையின்படி, கீழ்க்காணும் எந்தப் பருவமழை, இந்தியாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டது?

அ. தென்மேற்குப் பருவமழை

ஆ. வடகிழக்குப் பருவமழை

இ. பின்னடையும் பருவமழை

ஈ. குளிர்கால பருவமழை

 • 2020 அக்டோபர்.28 அன்று தென்மேற்குப் பருவமழை இந்தியாவிலிருந்து முற்றிலுமாக விலகியதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின்கீழ் (பின்னடையும் பருவமழை என்றும் அழைக்கப்ப -டுகிறது) தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மிகக்கனமழை பொழியும்.

8. கீழ்க்காணும் எந்த அமைப்பு, எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து, ‘Electricity Access in India and Benchmarking Distribution Utilities’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது?

அ. பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

ஆ. NITI ஆயோக்

இ. நிதி ஆணையம்

ஈ. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

 • NITI ஆயோக், ராக்பெல்லர் அறக்கட்டளை மற்றும் ஸ்மார்ட் பவர் இந்தியா ஆகியவை இணைந்து ‘இந்தியாவில் மின்சார பயன்பாடு மற்றும் விநியோக அமைப்புகளை ஒப்பிடுதல்’ என்னும் அறிக்கையை வெளியிட்டன. பத்து மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவின் கிராமப்புற மக்கள்தொகையில் 65 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 25,000’க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 • ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 87% பேர் தொகுப்பு சார்ந்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 13% பேர் தொகுப்புசாராத மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் (அ) மின்சாரத்தை பயன்படுத்தவில்லை.

9. பத்தாவது இந்தியா-ஐக்கியப்பேரரசு பொருளாதார மற்றும் நிதியியல் பேச்சுவார்த்தையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

அ. உள்துறை அமைச்சர்

ஆ. நிதியமைச்சர்

இ. பிரதமர்

ஈ. வெளியுறவு அமைச்சர்

 • COVID-19 மீட்புப்பணிகள் குறித்த பத்தாவது இந்தியா-ஐக்கியப்பேரரசு பொருளாதார மற்றும் நிதியியல் பேச்சுவார்த்தையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். காணொலிக்காட்சிமூலம் இந்தச் சந்திப்பு நடந்தது. COVID-19 மீட்புப்பணிகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதையும், தொற்றுநோய்களின்போது பொருளாதார மீட்சிக்கான கொள்கைகளை செயல் -படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக்கொண்டது.

10. அரசுப்பள்ளி மாணாக்கருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மசோதா நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • NEET தேர்வில் தெரிய அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த மாணாக்கருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் பன்வரிலால் புரோகித், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த மசோதாவின்படி, மாநில அரசால் நிர்வகிக்கப்பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயின்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

1. Which Armed Force has developed a messaging application named ‘Secure Application for Internet’ (SAI)?

[A] Indian Navy

[B] Indian Army

[C] Indian Air Force

[D] Indian Coast Guard

 • Indian Army has recently developed a simple messaging application named the Secure Application for Internet (SAI). The application supports end to end secure voice, text and video calling services for Android platform over the internet. It is similar to messaging applications including WhatsApp and Telegram. It is expected to facilitate secure messaging within the service.

2. Which state government has launched ‘Dharani’ Portal for land & property registrations?

[A] Tamil Nadu

[B] Telangana

[C] Andhra Pradesh

[D] Karnataka

 • Telangana Chief Minister K Chandrasekhar Rao has recently launched ‘Dharani’ Portal for land and property registrations. Telangana is the first state to use Information Technology services for land registrations. The property details which are not uploaded on the portal will be treated as illegal and will not be allowed for further registrations.

3. DRIP project, that was seen in news recently, is associated with which field?

[A] Dam Rehabilitation

[B] Education

[C] Information Technology

[D] Nano Technology

 • The Cabinet Committee on Economic Affairs chaired by the Prime Minister Narendra Modi has approved the Dam Rehabilitation and Improvement Project (DRIP) Phase II & Phase III. The project is being developed with the financial assistance of the World Bank (WB), and Asian Infrastructure Investment Bank (AIIB). The project aims to improve the safety and operational performance of selected dams across the whole country.

4. The Union Cabinet has approved the signing of MoU between India and which country on cooperation in the field of Health and Medicine?

[A] Cambodia

[B] Sri Lanka

[C] Nepal

[D] Laos

 • The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved the signing of the Memorandum of Understanding (MoU) between India and Cambodia on cooperation in the field of Health and Medicine. The MoU seeks to encourage cooperation through joint initiatives and technology development in the health sector. The MoU which will strengthen bilateral ties between the countries, shall remain in force for a period of five years.

5. Who has suspended the Vice–Chancellor of Delhi University Yogesh Tyagi?

[A] President of India

[B] Prime Minisiter of India

[C] Chief Minister, Delhi

[D] Lt. Governor, Delhi

 • The President of India Ram Nath Kovind has suspended Vice Chancellor of Delhi University Yogesh Tyagi. The suspension has been made under the provisions of Delhi University Act, on grounds of rave misconduct, dereliction of duties, abuse of power and lack of commitment. Mr. Tyagi had been appointed Vice–Chancellor in March 2016

6. Who chaired the 19th meeting of Foreign Trade & Economic Ministers of Shanghai Cooperation Organisation?

[A] Piyush Goyal

[B] Narendra Modi

[C] Nirmala Sitharaman

[D] S Jai Shankar

 • The Union Commerce and Industries Minister Piyush Goyal chaired 19th Shanghai Cooperation Organisation (SCO) meeting of Foreign Trade & Economic Ministers. The SCO is head quartered at Shangai, China. SCO comprises eight member states, namely China, India, Kyrgyz Republic, Kazakhstan, Pakistan, Russia, Tajikistan and Uzbekistan.

7. As per the statement of the Indian Meteorological Department (IMD), which monsoon has completely withdrawn from India?

[A] Southwest Monsoon

[B] Northeast Monsoon

[C] Retreating Monsoon

[D] Winter Monsoon

 • Indian Meteorological Department (IMD) has stated that southwest monsoon has completely withdrawn from India on 28th October, 2020. The IMD has also stated that the northeast monsoon has commenced.
 • Under the influence of North East Monsoon (also known as retreating monsoon), there would be ample rainfall over Tamil Nadu, Puducherry, parts of Andhra Pradesh, Karnataka and Kerala.

8. Which body, along with Ministry of Power has launched the ‘Electricity Access in India and Benchmarking Distribution Utilities’ report?

[A] Bill and Melinda Gates Foundation

[B] NITI Aayog

[C] Finance Commission

[D] Central Electricity Regulatory Authority

 • The ‘Electricity Access in India and Benchmarking Distribution Utilities’ report has been launched by NITI Aayog, Ministry of Power, Rockefeller Foundation and Smart Power India. The report has been complied based on a survey conducted across 10 states, representing about 65 % of the total rural population of India. Overall, 87% of the surveyed customers have access to grid–based electricity. The remaining 13% either use non–grid sources or don’t use any electricity at all.

9. Who represented India in the 10th India–UK Economic and Financial Dialogue?

[A] Union Home Minister

[B] Union Finance Minister

[C] Prime Minister

[D] Union External Affairs Minister

 • The Union Finance Minister Nirmala Sitharaman represented India in the 10th India–UK Economic and Financial Dialogue on Global Responses to COVID–19. The meeting was held in a virtual mode through video conferencing. The conference aimed at sharing of experiences on COVID–19 response and to implement policies for economic recovery during the pandemic.

10. Which Indian state has passed order for 7.5% reservation to government school students?

[A] Tamil Nadu

[B] Telangana

[C] Andhra Pradesh

[D] Karnataka

 • The Tamil Nadu government has recently passed an order to provide 7.5% reservation in medical colleges to students from government schools who have cleared NEET. Tamil Nadu Governor Banwarilal Purohit has recently given his assent to the bill.
 • As per the bill, those who studied from the 6th standard to higher secondary schools in schools managed by the state government will be benefitted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *