Tnpsc

3rd September 2020 Current Affairs in Tamil & English

3rd September 2020 Current Affairs in Tamil & English

3rd September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

3rd September Tamil Current Affairs 2020

3rd September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.அண்மையில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஆறுமாதகாலத்திற்கு நீட்டித்த மாநில அரசு எது?

அ. நாகாலாந்து

ஆ. சிக்கிம்

இ. அஸ்ஸாம்

ஈ. மிசோரம்

  • அஸ்ஸாம் மாநில அரசானது ஆக.28 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு அம்மாநிலத்தில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958’ஐ நீட்டித்துள்ளது. அண்மைக்காலங்களில், பாதுகாப்புப்படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கிளர்ச்சி தாக்குதல்களை அடுத்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஒரு “பதற்றம் நிறைந்த பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 1990ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அது, ஒவ்வோர் ஆறுமாதங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்
    -கைகளை மேற்கொள்ளவும், முன்னறிவிப்பின்றி எவரையும் கைது செய்யவும் இச்சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிக்கிறது.

2.எத்தனை புதிய ASI வட்டங்களை உருவாக்குவதாக மத்திய கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது?

அ. மூன்று

ஆ. ஐந்து

இ. ஏழு

ஈ. பத்து

  • இந்திய தொல்பொருள் ஆய்வின் ஏழு புதிய வட்டங்களை கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு (திருச்சி), மத்திய பிரதேசம் (ஜபல்பூர்), உத்தர பிரதேசம் (மீரட் & ஜான்சி), கர்நாடகா (ஹம்பி), மேற்கு வங்கம் (இராய்கஞ்ச்) மற்றும் குஜராத் (இராஜ்கோட்) ஆகிய மாநிலங்களில் புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வின் (ASI) இருபத்து ஒன்பது வட்டங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான கோவில்களும், சோழ மன்னர்களின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களுங்கொண்ட தமிழ்நாட்டில் சென்னை வட்டத்துடன், திருச்சி ஒரு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

3.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, சார் வெடிகுண்டை (Tsar’s bomb) உருவாக்கிய நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. ஜெர்மனி

  • இரஷ்ய அணுவாற்றல் நிறுவனமான ROSATOM, அண்மையில், ‘Top Secret: Test of a clean hydrogen bomb with a yield of 50 megatons’ என்ற தலைப்பில் ஓர் ஆவணக்காட்சியை வெளியிட்டது. அது, சார் பாம்பா அல்லது சார் வெடிகுண்டு வெடிப்பதைக் காட்டுகிறது. இது, உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு என்று கூறப்படுகிறது. மேலும் இது, ஹிரோஷிமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டைவிட 3000 மடங்கு அழிவுகரமானதாகும். இந்த சார் குண்டு, முதற்கட்டமாக நோவயா ஜெம்ல்யா தீவுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

4. RCS-உதான் திட்டத்தின்கீழ், எத்தனை புதிய வழித்தடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 18

ஆ. 38

இ. 58

ஈ. 78

  • ‘உதான்’ என்ற பிராந்திய இணைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில், 78 புதிய வழித்தடங்களுக்கு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படுத்தப்படும். இதுவரையில் உதான் சிறிய இரக வானூர்தி சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவையற்ற இடங்களுக்கு 08, குறைந்த அளவில் சேவை நடக்கும் வானூர்தி நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.

5. STIP 2020’ஐ உருவாக்குவதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் தொடங்கப்பட்டுள்ள கலந்துரையாடல் தொடரின் பெயர் என்ன?

அ. இன் கான்வர்ஷேஷன் வித்

ஆ. அறிவியல் அரட்டை

இ. அறிவியல் உரையாடல்

ஈ. DST பேச்சு

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது நாடு முழுவதுமுள்ள நிபுணர்களுடன் ‘In Conversation with’ என்ற பெயரில் பிரத்யேக கலந்துரையாடல் தொடரைத் தொடங்குகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கையை (STIP 2020) வகுப்பதில், DST மற்றும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாட்டின் ஒருபகுதியாக இக்கலந்துரையாடல் உள்ளது. கொள்கையின் ஐந்தாவது பதிப்பான இது, கடந்த 2013’இல் வடிவமைக்கப்பட்ட தற்போதுள்ள கொள்கைக்கு மாற்றாக இருக்கும்.

6. ‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், ‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யின் முன்மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளார். தொழிற்துறைக்கு ஏற்ற நிலம் மற்றும் வளங்களின் கிடைப்புகுறித்த நிகழ்நேர தகவல்களை முதலீட்டாளர்கள் பெறுவதற்கு இது உதவுகிறது. தொடக்கத்தில் 6 மாநிலங்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத்திட்டம், 2020 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

7.இந்திய இரயில்வே ஆனது அதன் ஆற்றல் நுகர்வு தேவைகளை, எந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

அ. 2025

ஆ. 2030

இ. 2035

ஈ. 2040

  • ஆற்றல் தேவையில் 100 சதவீதம் தற்சார்பு நிலையை எட்டுவது மற்றும் நாட்டின் சூரிய மின்னுற்பத்தி இலக்கை எட்டுவதில் பங்களிப்பு செய்வது ஆகியவற்றுக்கான நடவடிக்கையாக, தொடர்புடைய துறையினருடன் இந்திய இரயில்வே நிர்வாகம் சார்பில் இரயில்வே மற்றும் வணிகம், தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இந்தக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்: (அ) இரயில் பாதையை ஒட்டிய பகுதிகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு புதுமையான திட்டங்களை உருவாக்குதல். (ஆ) வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு உற்பத்தியே இல்லாத அளவுக்கு மாறுவது என்ற இந்திய இரயில்வேயின் இலக்கை எட்டுவதற்கு, புதுப்பிக்கத்தக்க வளங்களின் மூலமான மின்னுற்பத்தியை 20 GW அளவுக்கு எட்டும் வகையில் மின் கொள்முதல் வழித்தடங்களை உருவாக்குவது & (இ) இந்திய இரயில்வேயில் பெரிய அளவில் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துதல்.

8. GSDP அடிப்படையில், மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மேம்பட்ட கடன் உச்சவரம்பு என்ன?

அ. 6%

ஆ. 5%

இ. 3%

ஈ. 2%

  • 41ஆவது GST குழுக்கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இது, GST இழப்பீட்டு தேவையைச் சமாளிக்க, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தது. முன்னதாக கடந்த மே மாதத்தில், மாநிலங்கள் பெறக்கூடிய கடன் உச்சவரம்பை மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கான FRBM சட்டத்தை நடுவணரசு திருத்தியது. கூட்டத்திற்குப் பிறகு, இக்கடன் உச்சவரம்பில் மேலும் 0.5% தளர்வு வழங்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். இந்த ஆண்டு, GST இழப்பீட்டு தேவையானது `2.35 இலட்சம் கோடியாக உள்ளது.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ட்ரெய்ட் தீவு, எந்தத் தீவுக்கூட்டத்தின் ஒருபகுதியாகும்?

அ. அந்தமான் & நிக்கோபார் தீவு

ஆ. இலட்சத்தீவுகள்

இ. மாலத்தீவுகள்

ஈ. மொரீஷியஸ்

  • பேரந்தமானிய பழங்குடியினரின் தாயகமாக இருக்கும் காரணத்தால், ஸ்ட்ரெய்ட் தீவு, அண்மையச் செய்திகளில் இடம்பெற்றது. இந்தப் பழங்குடியினத்தைச்சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே இன்றைய தேதியில் உயிருடன் உள்ளனர். அண்மையில், பேரந்தமானிய பழங்குடியினத்தவருள் பதின்மர், COVID-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களுள் அறுவர் அந்நோயிலிருந்து மீண்டதாகக் கூறப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அந்தமானியர்கள் அந்தத் தீவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

10.டிஜிட்டல் கொடுப்பனவுகளில், ‘மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் பேபால் இந்தியா உடன் இணைந்து அறிக்கை வெளியிட்ட அமைப்பு எது?

அ. இந்திய தரவுப்பாதுகாப்பு கழகம்

ஆ. நவீன கணித்திறன் மேம்பாட்டு மையம்

இ. இந்திய தொழிலகங்கள் கூட்டமைப்பு

ஈ. இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம்

  • NASSCOMஆல் நிறுவப்பட்ட, தரவுப்பாதுகாப்பு குறித்த நாட்டின் தலைமை அமைப்பான இந்திய தரவுப் பாதுகாப்பு கழகம், பேபால் இந்தியாவுடன் இணைந்து, ‘டிஜிட்டல் கொடுப்பனவுகளில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தியாவில் மின்னணு வணிகச்சந்தை மற்றும் UPI பரிவர்த்தனை ஆகியவை அண்மைய காலங்களில் பன்மடங்கு வளர்ந்து வருவதால் நுகர்வோர், MSME’கள், வணிகங்களுக்கான கொடுப்பனவுகளைப் பாதுகாக்க அறிக்கை அறிவுறுத்துகிறது. கட்டணஞ்செலுத்தும் சூழலமைப்பில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்தும் இந்த அறிக்கை விவாதிக்கின்றது.

1. Which state has recently extended the AFSPA (Armed Forces Special Powers Act) for a period of 6 months?

[A] Nagaland

[B] Sikkim

[C] Assam

[D] Mizoram

  • The state Government of Assam has extended the AFSPA (Armed Forces Special Powers Act, 1958) in the state for a period of 6 more months, from August 28 Assam has been declared a “disturbed area” due to various insurgent attacks on the security forces in the near past. The AFSPA is in force in Assam since 1990 and is renewed every 6 months. The Act empowers the security forces to make security operations, arrest anyone anywhere without prior notice.

2. The Union Culture Ministry has announced the formation of how many new ASI circles?

[A] Three

[B] Five

[C] Seven

[D] Ten

  • The Union Culture Ministry has announced the formation of seven new circles of Archaeological Survey of India (ASI). This has been announced following the Prime Minister’s call to preserve and register archaeological monuments. The new circles are – Trichy (Tamil Nadu), Raiganj (West Bengal), Rajkot (Gujarat), Jabalpur (Madhya Pradesh), Jhansi (Uttar Pradesh), Meerut (Uttar Pradesh) and Hampi (Karnataka). Earlier there were 29 circles of ASI in India.

3. Tsar’s bomb, that was seen in news recently, was developed by which country?

[A] United States

[B] China

[C] Russia

[D] Germany

  • Rosatom, the Russian nuclear energy agency, has recently released a documentary footage, titled ‘Top Secret: Test of a clean hydrogen bomb with a yield of 50 megatons’, that shows the detonation of the Tsar Bomba or Tsar’s bomb. It is claimed to be the world’s most powerful hydrogen bomb and it is over 3000 times as destructive as the bomb used in the Hiroshima attack. Tsar’s bomb was initially tested over Novaya Zemlya islands.

4. How many new routes have been approved under the RCS– UDAN scheme?

[A] 18

[B] 38

[C] 58

[D] 78

  • The Union Civil Aviation Minister has recently announced that a total of 78 additional routes has been approved under the fourth batch of Regional Connectivity Scheme—Ude Desh Ka Aam Nagarik (UDAN). So far, 766 routes have been sanctioned under the UDAN scheme. 29 served, 08 unserved (including 02 heliports and 01 water aerodrome), and 02 underserved airports have been included in the list for approved routes.

5. What is the name of the interaction series launched by the Department of Science and Technology, to formulate STIP 2020?

[A] In Conversation with

[B] Science Chat

[C] Vigyaan Conversation

[D] DST Talks

  • The Department of Science and Technology (DST) is launching a series of exclusive interactions with experts across the country named ‘In Conversation with’. This is a part of the process of the DST and the Office of the Principal Scientific Adviser (PSA) to the Government of India, in formulating the Science, Technology and Innovation Policy (STIP 2020). This is the fifth edition of the policy and will replace the existing policy, which was formulated in 2013.

6. Which Union Ministry launched ‘National GIS–enabled land bank system’?

[A] Ministry of Agriculture

[B] Ministry of Commerce and Industry

[C] Ministry of Road Transport and Highways

[D] Ministry of Housing and Urban Affairs

  • Union Commerce and Industry Minister Piyush Goyal has launched the prototype of the ‘National GIS–enabled land bank system’. It enables the investors to get real–time information about the availability of industrial land and resources. The project is initially launched for six states and will expanded to all states/UTs by December 2020.

7. Indian Railways is expected to meet all its energy consumption needs by which year?

[A] 2025

[B] 2030

[C] 2035

[D] 2040

  • In order to achieve its objective of becoming 100% self sustainable for all it’s power needs and also to contribute to national solar power goals, Indian Railways organized wide ranging discussions with key stake holders under the chairmanship of Minister of Railways and Commerce & Industry Piyush Goyal.
  • The primary areas of discussion in this meeting were as follows: (1) Innovative solutions for setting up solar projects along the railway track. (2) Possible power procurement routes for achieving 20 GW renewable energy target, set by the Indian Railways, to become the net zero carbon emitter by 2030. and (3) Challenges in large scale deployment of solar energy projects by the Indian Railways.

8. What is the enhanced borrowing limit permitted to states, in terms of their GSDP?

[A] 6%

[B] 5%

[C] 3%

[D] 2%

  • The Union Finance Minister Nirmala Sitaraman chaired the 41st GST Council meet, which discussed about the options that can be given to states to meet shortfall of GST compensation. Earlier in the month of May, the Centre amended the FRBM act to raise the borrowing limit of States from 3 per cent to 5 per cent of GSDP for FY21. After the meeting, the Finance Minister said, a further relaxation of 0.5 per cent in the limit will be given. This year, there is a GST compensation gap of 2.35 lakh crore rupees.

9. Strait Island, that was seen in news recently, is a part of which island group?

[A] Andaman & Nicobar Island

[B] Lakshadweep

[C] Maldives

[D] Mauritius

  • Strait Island was seen in news, as it is home to the Great Andamanese tribe. Only a little over 50 people belonging to the tribe are alive as on date. Recently, ten members of the Great Andamanese tribe were tested positive for the COVID–19 and six of them were said to have recovered. More than 5000 Great Andamanese were said to have lived in the island in the 19th century.

10. Which organisation along with PayPal India released a report titled ‘Fraud & Risk Management in Digital Payments’?

[A] Data Security Council of India

[B] Centre for Development of Advanced Computing

[C] Confederation of Indian Industries

[D] Centre for Internet and Society

  • Apex body on data protection in India, set up by NASSCOM, the Data Security Council of India (DSCI), along with PayPal India released a report titled ‘Fraud & Risk Management in Digital Payments’. The report suggests to safeguard payments for consumers, MSMEs, businesses, as the e–commerce market in India and UPI transactions are growing manifold during the recent times. It also discussed about the threats in the payment ecosystem and its prevention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!