Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

3rd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. NABARD’இன் முன்னெடுப்பான ‘மை பேட் மை ரைட்’ திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) திரிபுரா 

இ) குஜராத்

ஈ) உத்தர பிரதேசம்

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரிபுராவில் ‘மை பேட் மை ரைட்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் நபார்டு மற்றும் NAB அறக்கட்டளையின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மானியங்கள், ஊதிய ஆதரவு மற்றும் உபகரணங்கள்மூலம் சிறந்த வாழ்வாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரத்தை வழங்குதல் இதன் நோக்கமாகும். இம்முன்முயற்சியின் கீழ், ஒரு சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரம், இரண்டு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்கள், 50 நாட்களுக்கு ஊதியம், பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் 3 கட்டங்களாக ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் நலத்தை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. ‘மேரா வதன் மேரா சமன்’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும்?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் 

ஈ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் ‘அம்ரித் மகோத்சவத்தின்’ ஒருபகுதியாக, புது தில்லியில், ‘மேரா வதன் மேரா சமன்’ முஷைராவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்கள் தங்கள் கவிதை மற்றும் ஈரடிச்செய்யுள்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சிகளில், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கவிஞர்கள் “ஏக் பாரத்- ஷ்ரேஷ்தா பாரத்” குறித்த செய்தியை வழங்குவார்கள்.

3. 2021 ஆகஸ்ட் நிலவரப்படி, பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை என்ன?

அ) 32 கோடி

ஆ) 43 கோடி 

இ) 56 கோடி

ஈ) 67 கோடி

  • பிரதமர் ஜன் தன் யோஜனாவின்கீழ் உள்ள மொத்த வங்கிக்கணக்குக
    -ளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43 கோடியாக அதிகரித்துள்ளன. நிதி அமைச்சக தரவுகளின்படி, இந்தக் கணக்குகளில் உள்ள மொத்த வைப்புத்தொகையானது `1.46 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. 2014 ஆக.15 அன்று சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆக.28 அன்று தொடங்கப்பட்டது.

4. ‘SACRED’ என்பது முன்மொழியப்பட்ட வேலைவாய்ப்பகத்தின் பெயராகும். இது, பின்வரும் எந்தப் பிரிவு மக்களை குறிவைக்கிறது?

அ) திருநங்கைகள்

ஆ) மூத்த குடிமக்கள் 

இ) மாற்றுத்திறனாளி

ஈ) மத சிறுபான்மையினர்

  • ‘SACRED’ என்ற முன்மொழியப்பட்ட வலைத்தளம், ‘Senior Able Citizens for Re-Employment in Dignity’ என்பதன் சுருக்கமாகும். மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம், இதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கிறது. இந்தப்பரிமாற்றகத்தின்மூலம், வேலைதேடும் மூத்த குடிமக்கள், அவர்களுக்குத் தேவையான பணிகளை அணுக ஒரு தளத்தைப்பெறுவார்கள். இதனை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான குழு, இதனைச் செயல்படுத்த ரூபாய் பத்து கோடியை அங்கீகரித்துள்ளது.

5. சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மாநாட்டை நடத்திய நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) ஈரான்

இ) ஈராக் 

ஈ) பஹ்ரைன்

  • ஈராக் சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்திய மாநாட்டை நடத்தியது; இது பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரான்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்திற்கு ஈராக், சௌதி அரேபியாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, பிராந்திய தண்ணீர் நெருக்கடி, யேமனில் போர் மற்றும் லெபனானின் பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிராந்தியத்தில் ஈராக் மத்தியஸ்தம் வகிப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற S P சேதுராமன் சார்ந்த விளையாட்டு எது?

அ) மட்டைப்பந்து

ஆ) ஹாக்கி

இ) செஸ் 

ஈ) டென்னிஸ்

  • இந்திய கிராண்ட்மாஸ்டர் S P சேதுராமன் பார்சிலோனா ஓப்பன் செஸ் போட்டி பட்டத்தை வென்றார். அதே நேரத்தில் கார்த்திகேயன் முரளி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைச் சேர்த்த சேதுராமன் சிறந்த டை-பிரேக் மதிப்பெண்ணின் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரஷ்யாவின் டேனியல் யுபாவும் இதே புள்ளிகளுடன் முடித்தார். ஒன்பது சுற்றுகளில் தோல்வியடையாமல், 6 போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் டிரா செய்தார் சேதுராமன்.

7.நார்தன் நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் (NCL) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜார்க்கண்ட்

ஆ) மத்திய பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) ஒடிஸா

  • அரசுக்குச்சொந்தமான மினிரத்னா பொதுத்துறை நிறுவனமான நார்தன் நிலக்கரி வயல்கள் நிறுவனமானது `3.5 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணைநிறுவனமாகும்.
  • இந்த நிறுவனத்தின் தலைமையகம் மத்திய பிரதேச மாநிலத்தின் சிங்ரௌலியில் உள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள 500 இளையோருக்கு பயிற்சி அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன்கீழ் இளையோருக்கு நெகிழிப் பொறியியல் வர்த்தகத் துறையில் பயிற்சியளிக்கப்படும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் `70,000 செலவாகும்.

8. அண்மைய போர்ப்ஸ் இந்தியா அறிக்கையின்படி, உலகிலேயே பொது இடங்களில் அதிக CCTV கேமராக்களைக் கொண்டுள்ள நகரம் எது?

அ) லண்டன்

ஆ) புது தில்லி 

இ) மெல்போர்ன்

ஈ) சென்னை

  • உலகின் மிக அதிகமாக கண்காணிக்கப்பட்ட நகரங்கள் குறித்த போர்ப்ஸ் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, தில்லி, ஒரு சதுர மைலுக்கு 1,826.6 CCTV கேமராக்களுடன் முதலிடத்தில் உள்ளது.
  • தில்லிக்கு அடுத்தபடியாக இலண்டனில் 1,138 CCTV கேமராக்கள் உள்ளன. 609.9 சிசிடிவி கேமராக்களுடன் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, மும்பை, ஒரு சதுர மைலுக்கு 157.4 CCTV கேமராக்களுடன் 18ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையில், முதல் 20 நகரங்களில், மூன்று இந்திய நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

9. இராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா என்பது எந்த இந்திய மாநிலத்தின் முயற்சியாகும்?

அ) தெலுங்கானா

ஆ) சத்தீஸ்கர் 

இ) அஸ்ஸாம்

ஈ) மேற்கு வங்கம்

  • இராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா (RGKNY) என்பது சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு முதன்மையான திட்டமாகும். RGKNY’இன்கீழ், பயிர் உற்பத்திக்கு, மாநில அரசு, அதன் உழவர்களுக்கு உள்ளீட்டு உதவியை வழங்குகிறது. தற்போதைய கரீப் பருவத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள், வறட்சிபோன்ற சூழ்நிலைகளால் அழிவுக்குள்ளானால், ஓர் ஏக்கருக்கு `9,000 நிதியுதவி வழங்கப்படும்.

10. அண்மையில் காலமான புத்ததேவ் குஹா சார்ந்த துறை எது?

அ) விளையாட்டு வீரர்

ஆ) எழுத்தாளர் 

இ) அரசியல்வாதி

ஈ) தொழிலதிபர்

  • மதுக்கரி உட்பட பல பிரபலமான புத்தகங்களை எழுதிய பிரபல வங்காள எழுத்தாளர் புத்ததேவ் குகா அண்மையில் காலமானார். அவர் தனது 85ஆம் வயதில் காலமானார். ஆனந்த புரஸ்கர் மற்றும் ஷரத் புரஸ்கர் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். வங்காள இலக்கியத்தில் ‘ரிவு மற்றும் ரிஜுடா’ என்ற 2 பிரபலமான கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியவராவார் இவர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை அருகே சித்தமருத்துவப்பல்கலைக்கழகம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தின் பழமையான மருத்துவ முறையான சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சித்த மருத்துவத்துக்கு என தனிப்பல்கலைக்கழகம் (இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் உள்பட) சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும்.

டாம்ப்கால் நிறுவனம் உற்பத்தி செய்யும் சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் தமிழக அரசின் கூட்டுறவுச் சங்கங்கள்மூலமாக விற்பனை செய்யப்படும்.

முதியோர் நலனுக்காக நிறைவு வாழ்வு மையம் `3.25 கோடி செலவில் 100 சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்படும். சித்தமருத்துவத்தின் சிறப்பு சிகிச்சை முறையான காயகல்ப மருந்துகள் ஒற்றடம், நீராவிக் குளியல், தொக்கணம் நசியம் (ஆயில் மசாஜ்), திருமூலர் பிரணாயாமம், சித்தர் யோகம் போன்ற சிகிச்சைகள் இந்த முகாமில் அளிக்கப்படும். 120 சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருந்தகங்கள் சுகாதார நலவாழ்வு மையங்களாக `32 கோடி செலவில் தரமுயர்த்தப்படும் என்றார்.

2. `218 கோடியில் நான்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்: அமைச்சர் தா மோ அன்பரசன்

தமிழகத்தில் 4 இடங்களில் `218 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அறிவித்தார். சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தா மோ அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்: சிட்கோ மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்திட திருச்சி மணப்பாறை, திருவள்ளூர் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு கொடூர், மதுரை சக்கிமங்கலம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பளவில் `218 கோடி மொத்த திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன்மூலம் மொத்தம் சுமார் 7 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு தேயிலைத்தொழிற்சாலைகள் நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கடன் உதவியுடன் `50 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

சிற்பப்பூங்கா: சிட்கோமூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் 19 ஏக்கரில் `23 கோடி திட்ட மதிப்பில் சிற்பக்கலைஞர்களின் மேம்பாட்டுக் -காக சிற்பக்கலைஞர் தொழிற்பூங்கா சுமார் 100 சிற்பக்கலைஞர்கள் மற்றும் இதர 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.

கோயம்புத்தூர் சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கரில் `18 கோடி திட்ட மதிப்பில் `9 கோடி தமிழக அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதன்மூலம் சுமார் 1000 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவர். மாநிலத்தில் நலிவுற்று வரும் பாரம்பரிய குறு மற்றும் சிறு தொழில்களான உப்பு உற்பத்தி, வெள்ளிக் கொலுசு, வெள்ளி விளக்கு தயாரித்தல், பித்தளைப் பொருள்கள் மற்றும் பாத்திரப் பொருள்கள் உற்பத்தி, பூட்டு உற்பத்தி மற்றும் பட்டுசார்ந்த தொழில்கள் சிறப்புத்தொழில் வகையின் கீழ் கொண்டு வரப்பட்டு சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

சேலம் கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவு சங்கத்தில் தற்போது உள்ள 4 கிடங்குகளில் ஏற்றி இறக்கும் பணிகளை எளிதாகக் கையாளுவதற்கு 1.30 லட்சம் சதுர அடி பரப்பளவில் கன்வேயா், சரக்கு மின்தூக்கி போன்றவற்றைப் பொருத்தி இயந்திரமயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் பணிகள் `45 கோடியில் மேற்கொள்ளப்படும். மேலும், கிடங்குகளின் கொள்ளளவை அதிகமாக்கிட சுமார் 1.07 லட்சம் சதுர அடியில் புதிய சேமிப்புக் கிடங்கு `40 கோடி செலவில் கட்டுவற்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

3. பசுமைத் திட்டங்களில் முதலீடு: இந்தியா-பிரிட்டன் ஒப்பந்தம்

இந்தியாவின் பசுமைத் திட்டங்களில் 120 கோடி டாலர் (சுமார் `8,760 கோடி) முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான 11ஆவது பொருளாதார மற்றும் நிதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காணொலி முறையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும் பங்கேற்றனர். அப்போது, இந்தியாவில் அரசு&தனியார் நிறுவனங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களுக்காக 120 கோடி டாலர் முதலீடு செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதில், பிரிட்டனின் மேம்பாட்டு நிதி அமைப்பான சிடிசி, இந்திய பசுமைத் திட்டங்களில் மேற்கொள்ளவிருக்கும் 100 கோடி டாலர், பசுமைத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களில் இந்தியாவும் பிரிட்டனும் கூட்டாக மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான 20 கோடி டாலர் கூட்டு முதலீடு ஆகியவையும் அடங்கும். இப்பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு நிதிச்சந்தைகளைப் பலப்படுத்துவதற்காக இணைந்து செயல்படு -வது குறித்து எதிர்கால வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின்போது ஆலோ -சிக்க இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

4. 75,000 ஹெக்டேரில் மூலிகை சாகுபடி: ஆயுஷ் அமைச்சகம் திட்டம்

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் அம்ருத் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மருத்துவ தாவரங்கள் (மூலிகைகள்) பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக தேசிய திட்டத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் தொடங்கியுள்ளது. இதன்படி நாடு முழுவதும் அடுத்த ஓராண்டில் 75,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மூலிகைகள் பயிரிடப்படும்.

உத்தர பிரதேசத்தின் சஹரன்பூர் மற்றும் மகாராஷ்டிரத்தின் புனேயில் இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

5. மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2021-2022) மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுபெற்றுள்ள 385 ஆசிரியர்களின் பட்டியல் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு அந்த விழாவில் தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்க
-ளைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் `10 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

1. ‘My Pad My Right’ project, an initiative of NABARD, was launched recently in which state?

A) Tamil Nadu

B) Tripura 

C) Gujarat

D) Uttar Pradesh

  • Union Finance Minister Nirmala Sitharaman launched the ‘My Pad My Right’ (MPMR) project in Tripura. The project is an initiative of NABARD and NAB Foundation, to provide better livelihood and menstrual hygiene to women in rural areas through grants–in–aid, wage support and equipment. Under the initiative, one sanitary pad making machine, raw materials for two months, wages for 50 days, packaging material with accessories and a five–day training in three phases are provided. The project aims to help rural women improve menstrual hygiene.

2. ‘Mera Watan Mera Chaman’, is a programme hosted by which Union Ministry?

A) Ministry of Rural Development

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Minority Affairs 

D) Ministry of Women and Child Development

  • Ministry of Minority Affairs has organised ‘Mera Watan Mera Chaman’ Mushaira in New Delhi as part of Amrit Mahotsav of 75th Year of India’s Independence. During the programme renowned poets from the country recited their poetry and couplets.
  • In all those programmes, renowned as well as emerging poets will give patriotic message of “Ek Bharat– Shrestha Bharat”.

3. As of August 2021, what is the total number of bank accounts under Pradhan Mantri Jan Dhan Yojna?

A) 32 Crore

B) 43 Crore 

C) 56 Crore

D) 67 Crore

  • Bank accounts under Pradhan Mantri Jan Dhan Yojna (PMJDY) have increased to 43 crores, as of August 2021. As per the Finance Ministry Data, the total deposits under the accounts amount to over ₹1.46 lakh crore. The government’s flagship ‘Financial inclusion’ scheme has also completed seven years of implementation. PMJDY was announced by Prime Minister Narendra Modi in his Independence Day address on August 15, 2014 and was launched on August 28.

4. ‘SACRED’ is the name of the proposed employment exchange, targeting which segment of people?

A) Transgender People

B) Senior Citizens 

C) Differently Abled

D) Religious Minorities

  • The proposed portal named ‘SACRED’ is an acronym for ‘Senior Able Citizens for Re–Employment in Dignity’. The Union Ministry of Social justice and empowerment is drawing plans to implement the portal.
  • Through this exchange, the Senior citizens looking for jobs will soon have a platform to reach out to potential employers. The inter–ministerial committee formed to set up the exchange has approved Rs 10 crores, for implementing the exchange.

5. Which country has hosted the Middle East Regional Conference, recently?

A) UAE

B) Iran

C) Iraq 

D) Bahrain

  • Iraq has recently hosted a middle east regional conference, which is aimed to ease the tension in the region. Iraq, Saudi Arabia have been invited in the meeting, which is co–organized by France. During the meeting, regional water crisis, war in Yemen and economic conditions of Lebanon are discussed. This meeting has assumed significance since Iraq has been playing a neutral mediating role in the region.

6. S P Sethuraman, who was seen in the news, is associated with which sports?

A) Cricket

B) Hockey

C) Chess 

D) Tennis

  • Indian Grandmaster S.P. Sethuraman won the Barcelona Open chess tournament title here while compatriot Karthikeyan Murali finished third. Sethuraman collected 7.5 points from nine rounds and was declared as the winner, on the basis of a better tie–break score. Daniil Yuffa of Russia also finished with the same points as the Indian player. Sethuraman, the top seed, remained unbeaten through the nine rounds, winning six matches and drawing three.

7. Where is the Northern Coalfields Ltd (NCL) headquartered?

A) Jharkhand

B) Madhya Pradesh 

C) Gujarat

D) Odisha

  • The government–owned Miniratna PSU Northern Coalfields Limited (NCL) has announced to launch a skill development project amounting Rs. 3.5 crore. It is a subsidiary of the Coal India Limited (CIL) and the company is headquartered at Singrauli, Madhya Pradesh.
  • The aim of the programme is to impart training to 500 youth living in and around the company’s areas of operation. Under this programme, youth would be trained in the field of Plastic engineering trade, at a cost of Rs 70,000 per trainee.

8. As per the recent Forbes India report, which city has world’s most CCTV cameras in public places?

A) London

B) New Delhi 

C) Melbourne

D) Chennai

  • As per a recent Forbes India report on the most surveilled cities of the world, Delhi is on the top with 1,826.6 CCTV cameras per square mile. Delhi is followed by London with 1,138 CCTV cameras. Chennai secured third place with 609.9 CCTV cameras. As per the report, Mumbai came in 18th with 157.4 CCTV cameras per square mile. Only three Indian cities feature in the top 20 cities in the report.

9. Rajiv Gandhi Kisan Nyay Yojana (RGKNY) is the initiative of which Indian state?

A) Telangana

B) Chhattisgarh 

C) Assam

D) West Bengal

  • Rajiv Gandhi Kisan Nyay Yojana (RGKNY) is a flagship scheme of the state of Chhattisgarh.
  • Under the RGKNY, the state government provides input assistance to farmers for crop production. If the crops sown during the ongoing kharif season get destroyed due to drought–like conditions, a financial assistance of Rs 9,000 per acre would be provided.

10. Buddhadeb Guha, who recently passed away, was associated with which profession?

A) Sportsperson

B) Writer 

C) Politician

D) Business–person

  • Noted Bengali writer Buddhadeb Guha, who authored several popular books including Madhukari, recently passed away. The writer passed away at the age of 85. He had won several awards including the Ananda Purashkar and Sharat Puraskar.
  • He is also the creator of two popular fictional characters in Bengali literature named ‘Rivu and Rijuda’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!