Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வளங்கள் Book Back Questions 7th Social Science Lesson 14

7th Social Science Lesson 14

14] வளங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டமானது, உலகின் மிகப்பெரிய சூரியஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்றாகும். 4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது, செப்டம்பர் 2016இல் நிறைவேற்றப்பட்டது. இதன் நிறுவப்பட்ட திறன் 648 மெகாவாட் ஆகும்.

சீனாவில் உள்ள த்ரீகார்ஸ் அணை நீர் மின் சக்தி திட்டம், உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டம் ஆகும். இதன் கட்டுமானப்பணி 1994ல் ஆரம்பிக்கப்பட்டு 2012இல் முடிவுற்றது. இதில் நிறுவப்பட்ட திறனானது 22, 500 மெகாவாட்.

தற்போது நாம் பயன்படுத்தும் நிலக்கரியானது 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய படிவு ஆகும். பூமியின் பெரும்பகுதி நீராவி சதுப்பு நிலங்களால் நிரம்பியுள்ளது. தாவரம் மற்றும் விலங்குகள் இறந்த பின்பான எச்சங்கள் சதுப்பு நிலங்களில் அடியில் புதைக்கப்பட்டன. இறுதியில் அவை புவிக்கடியில் அதிகப்படியான வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக நிலக்கரியாக மாற்றப்பட்டன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ——-

(அ) தங்கம்

(ஆ) இரும்பு

(இ) பெட்ரோல்

(ஈ) சூரிய ஆற்றல்

2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

(அ) கமுதி

(ஆ) ஆரல்வாய்மொழி

(இ) முப்பந்தல்

(ஈ) நெய்வேலி

3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஒன்று ——-

(அ) இரும்பு

(ஆ) தாமிரம்

(இ) தங்கம்

(ஈ) வெள்ளி

4. ——– மின் மற்றும் மின்னணுத் துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று

(அ) சுண்ணாம்புக்கல்

(ஆ) மைக்கா

(இ) மாங்கனீசு

(ஈ) வெள்ளி

5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ———

(அ) வெப்பசக்தி

(ஆ) அணுசக்தி

(இ) சூரிய சக்தி

(ஈ) நீர் ஆற்றல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ————

2. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் ——–

3. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ——-

4. மின்சார பேட்டரிகள் தயாரிக்க ——– பயன்படுகிறது.

5. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை ——– என அழைக்கப்படுகிறது.

III. பொருத்துக:

அ ஆ

1. புதுப்பிக்கக்கூடிய வளம் – அ) இரும்பு

2. உலேக வளம் – ஆ) மைக்கா

3. அலோக வளம் – இ) காற்றாற்றல்

4. புதை படிம எரிபொருள் – ஈ) படிவுப்பாறை

5. சுண்ணாம்புக்கல் -உ) பெட்ரோலியம்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்

காரணம்: காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது

(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

2. கூற்று: இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது.

காரணம்: வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.

(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சூரிய ஆற்றல், 2. கமுதி, 3. தாமிரம், 4. மைக்கா, 5. வெப்பசக்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சீனா, 2, கஞ்சமலை, 3. அலுமினியம், 4. மாங்கனீசு, 5. கருப்பு தங்கம்

III. பொருத்துக:

1. இ, 2. அ, 3. ஆ, 4. உ, 5. ஈ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது, 2. கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!