Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஐரோப்பியர்களின் வருகை Book Back Questions 8th Social Science Lesson 1

8th Social Science Lesson 1

1] ஐரோப்பியர்களின் வருகை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் என்பவர் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

1690இல் புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்டது.

தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ்பெர்க் என அழைத்தனர். சீகன்பால்கு என்பவரை டென்மார்க்கின் அரசர் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவினார்.

தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் 1731இல் ஜோதன்பர்க் என்பவர் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார். டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றி சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திற்கு ஊக்குவிப்பாக இருந்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிகத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

(அ) வாஸ்கோடகாமா

(ஆ) பார்த்தலோமியோ டயஸ்

(இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

(ஈ) அல்மெய்டா

2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

(அ) நெதர்லாந்து (டச்சு)

(ஆ) போர்ச்சுகல்

(இ) பிரான்ஸ்

(ஈ) பிரிட்டன்

3. 1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

(அ) பிரான்ஸ்

(ஆ) துருக்கி

(இ) நெதர்லாந்து (டச்சு)

(ஈ) பிரிட்டன்

4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர்.

(அ) போர்ச்சுக்கல்

(ஆ) ஸ்பெயின்

(இ) இங்கிலாந்து

(ஈ) பிரான்ஸ்

5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

(அ) வில்லியம் கோட்டை

(ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

(இ) ஆக்ரா கோட்டை

(ஈ) டேவிட் கோட்டை

6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

(அ) ஆங்கிலேயர்கள்

(ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

(இ) டேனியர்கள்

(ஈ) போர்ச்சுக்கீசியர்கள்

7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

(அ) போர்ச்சுக்கீசியர்கள்

(ஆ) ஆங்கிலேயர்கள்

(இ) பிரெஞ்சுக்காரர்கள்

(ஈ) டேனியர்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.

2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.

3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

4. முகலாயப் பேரரசர் ___________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.

5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ___________ என்பவரால் நிறுவப்பட்டது.

6. _________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.

பொருத்துக:

1. டச்சுக்காரர்கள் – 1664

2. ஆங்கிலேயர்கள் – 1602

3. டேனியர்கள் – 1600

4. பிரெஞ்சுக்காரர்கள் – 1616

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.

2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.

3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.

4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

(அ) 1 மற்றும் 2 சரி

(ஆ) 2 மற்றும் 4 சரி

(இ) 3 மட்டும் சரி

(ஈ) 1, 2 மற்றும் 4 சரி

தவறான இணையைக் கண்டறிக:

அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்

ஆ) பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்

இ) கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து

ஈ) கால்பர்ட் – பிரான்ஸ்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. அல்போன்சோ-டி-அல்புகர்க் 2. போர்ச்சுகல் 3. துருக்கி 4. இங்கிலாந்து

5. செயின்ட் ஜார்ஜ் கோட்டை 6. பிரெஞ்சுக்காரர்கள் 7. டேனியர்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. புது தில்லியில் 2. மன்னர் இரண்டாம் ஜான் 3. போர்ச்சுகீசிய 4. ஜஹாங்கீர்

5. கால்பர்ட் 6. நான்காம் கிறிஸ்டியன்

பொருத்துக: (விடைகள்)

1. டச்சுக்காரர்கள் – 1602

2. ஆங்கிலேயர்கள் – 1600

3. டேனியர்கள் – 1616

4. பிரெஞ்சுக்காரர்கள் – 1664

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: ஆனந்தரங்கம், பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தார்.

4. சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடை)

1. (1 2 மற்றும் 4 சரி)

தவறான இணையைக் கண்டறிக:

தவறானது: – கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து

சரியான விடை: – கேப்டன் ஹாக்கின்ஸ் – பிரிட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!