Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

4th & 5th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th & 5th June Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th & 5th June Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மத்திய கல்வியமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய மாதிரி பள்ளிகளின் பெயர் என்ன?

அ. PM மாதிரி பள்ளிகள்

ஆ. PM ஸ்ரீ பள்ளிகள் 

இ. ஆத்மநிர்பார் பள்ளிகள்

ஈ. பாரத் கௌரவ் பள்ளிகள்

  • மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடந்த தேசிய கல்வியமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றினார். புதிய தேசிய கல்விக்கொள்கை 2020–ஐ செயல்படுத்துவதை மையமாகக்கொண்டு அவர் பேசினார். கல்வி அமைச்சகமானது தேசிய கல்விக்கொள்கை 2020–இன் சோதனைக் கூடமாக, ‘PM ஸ்ரீ பள்ளிகளை’ நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் அறிவித்தார். மாணாக்கரை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் விதமாக இந்தப் பள்ளிகள் அமையவுள்ளன.

2. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கொள்கையில் சேர அண்மையில் வாக்களித்த நாடு எது?

அ. சுவிச்சர்லாந்து

ஆ. டென்மார்க் 

இ. மால்டா

ஈ. வாடிகன் நகரம்

  • டென்மார்க் ஆனது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கொள்கையில் அதற்கான வாக்கெடுப்பை நடத்திய பிறகு, அதில் இணையவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் (CSDP) பகுதியாக இல்லாத ஒரே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் டென்மார்க் மட்டுமே. டென்மார்க் அரசாங்கம் 1993ஆம் ஆண்டு மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் மீதான வாக்கெடுப்பில் பெறப்பட்ட ஒரு விலக்கை இரத்து செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை நேட்டோவில் சேருவதற்கான இசைவைத் தந்துள்ளன.

3. இந்தியா எந்த நாட்டுடனான, ‘பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தொலைநோக்கு அறிக்கையில்’ கையெழுத்திட்டது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இஸ்ரேல் 

இ. இத்தாலி

ஈ. பிரான்ஸ்

  • இந்தியாவும் இஸ்ரேலும் எதிர்காலத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ‘தொலைநோக்கு அறிக்கையை’ ஏற்றுக்கொண்டன. இந்த அறிக்கை இருநாடுகளுக்கும் இடையிலான 30 ஆண்டுகால அரசியல் ரீதியான உறவுகளைக் குறிக்கிறது. புது தில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இருதலைவர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். சர்வதேச சோலார் கூட்டணியை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சமீபத்தில் கையெழுத்திட்டது.

4. உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.1

ஆ. ஜூன்.3 

இ. ஜூன்.5

ஈ. ஜூன்.7

  • உலக மிதிவண்டி நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.3 அன்று கொண்டாடப்படுகிறது. அடிப்படை போக்குவரத்து, உடல் மற்றும் மன நலத்தை வலுப்படுத்துவதற்காக மிதிவண்டி ஓட்டுதல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உலக மிதிவண்டி நாளன்று தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் இருந்து நாடு தழுவிய ‘பிட் இந்தியா பிரீடம் ரைடர் சைக்கிள்’ பேரணியைத் தொடங்கி வைத்தார்.

5. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, அட்டையில்லா பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் எவ்வளவு?

அ. ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.0.50

ஆ. ஒரு திங்களுக்கு ரூ.10

இ. ஒரு திங்களுக்கு ரூ.25

ஈ. கட்டணம் எதுவும் விதிக்கப்படாது 

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) அனைத்து வங்கிகள் மற்றும் ATM ஆபரேட்டர்களை, இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள அனைத்து ATM–களிலும் ICCW (Interoperable Card–less Cash Withdrawal) எனப்படும் அட்டையில்லா பணம் எடுக்கும் வசதியை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்தகைய பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் அங்கீகாரத்திற்காக UPI பயன்படுத்தப்படும். மேலும் நேஷனல் பினான்சியல் சுவிட்ச் (NFS) / ATM நெட்வொர்க்குகள்மூலம் பைசல் செய்யப்படும். அட்டையில்லா பணப் பரிவர்த்தனைகள் யாதொரு கட்டணமும் பெறப்படாமல் செயல்படுத்தப்படும்.

6. ‘Mujib – The Making of a Nation’ என்ற திரைப்படத்தைத் தயாரித்த நாடுகள் எவை?

அ. வங்காளதேசம் மற்றும் நேபாளம்

ஆ. வங்காளதேசம் மற்றும் சீனா

இ. வங்காளதேசம் மற்றும் இந்தியா 

ஈ. வங்காளதேசம், மியான்மர் மற்றும் இந்தியா

  • ஸ்ரீ ஷியாம் பெனகல் இயக்கிய, ‘முஜிப் – தி மேக்கிங் ஆப் எ நேஷன்’ திரைப்படத்தின் 90 வினாடிகள் கொண்ட முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் வங்கதேச அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை படத்தின் தயாரிப்பாளர்களாகும். கடந்த 2020–இல் வங்கபந்து ஷேக் முஜிபுர் இரகுமான் குறித்த படத்திற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகமும் (NFDC) வங்காளதேசத்தின் திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் (FDC) கையெழுத்திட்டன.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யாகச்சி ஆறு பாய்கிற மாநிலம் எது?

அ. கர்நாடகா 

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

  • கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள யாகச்சி நீர்த்தேக்கம் முதல்முறையாக மே மாதம் நிரம்பியது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், அதிகபட்சமாக 3164.90 அடியாக இருந்த நீர்மட்டம், 3164.06 அடியை எட்டியது. யாகச்சி ஆறு, சிக்மகளூரு அருகே மேற்குத்தொடர்ச்சிமலையில் உருவாகி, ஹாசன் மாவட்டம், பேலூர் வழியாகப் பாய்ந்து, ஹேமாவதி ஆற்றின் கிளையாறாக மாறுகிறது.

8. உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்காக $30 பில்லியன் டாலர் நிதியளிப்பதாக அறிவித்துள்ள அமைப்பு எது?

அ. உணவு மற்றும் விவசாய அமைப்பு

ஆ. உலக வங்கி 

இ. உலகப் பொருளாதார மன்றம்

ஈ. பன்னாட்டு செலவாணி நிதியம்

  • உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தற்போதுள்ள மற்றும் புதிய திட்டங்களில் $30 பில்லியன் டாலர்கள் வரையிலான நிதியுதவியுடன், உலகளாவிய திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. விவசாயம், ஊட்டச்சத்து, சமூகப்பாதுகாப்பு, நீர் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் அடுத்த 15 மாதங்களில் இந்த நிதியுதவி உணவுப்பாதுகாப்பின்மைக்குத் தீர்வுகாண செயல்படுத்தப்படும். உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்த்துப் போராட $12 பில்லியன் டாலர் புதிய திட்டங்களைத்தயாரிக்க உலக வங்கி மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

9. இந்தியாவில், ‘CSIR–மத்திய தோலாராய்ச்சி நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?

அ. புனே

ஆ. சென்னை 

இ. லக்னோ

ஈ. மைசூரு

  • சென்னையில் உள்ள CSIR–மத்திய தோலாராய்ச்சி நிறுவனத்தின் பவள விழா கொண்டாட்டத்தில் நடுவண் அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இந்தியாவில் தோல் தொழிற்துறையானது நிகர–சுழிய கரிம அடித்தடத்தை இலக்காகக் கொண்டிருக்கும் என்று அவர் அறிவித்தார். 2021ஆம் ஆண்டில், தோல் துறையின் ஏற்றுமதித் தீர்வை மதிப்பு `40,000 கோடியாக இருக்கும். முப்பரிமாண தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பாதணிகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் அமைச்சர் அப்போது அறிவித்தார்.

10. உலக தேநீர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மே.21 

ஆ. மே.30

இ. ஜூன்.01

ஈ. ஜூன்.03

  • மே.21 அன்று உலகம் முழுவதும் ‘உலக தேநீர் நாள்’ கொண்டாடப்படுகிறது. 2019ஆம் ஆண்டில், ஐநா பொதுச் சபையானது தேநீரின் உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்காக தேநீருக்கான உலக நாளாக மே.21–ஐ அறிவித்தது. தனிநபர் நுகர்வு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் தேயிலை தேவையை விரிவுபடுத்துவதற்கு அதிக முயற்சிகளை மேற்கொள்ள உணவு மற்றும் உழவமைப்பின் அரசுகளுக்கு இடையேயான குழு வலியுறுத்தியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1%-ஆக குறைப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் வருவங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என EPFO தெரிவித்துள்ளது.

ஐந்துகோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள EPFO அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. 6 எழுத்தாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கினார் முதல்வர்

ஆறு எழுத்தாளர்களுக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்கான உத்தரவுகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுமூலமாக வீடு அளிக்கப்படும் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன்.3-ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஆறு எழுத்தாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் யார் யார்? ‘வணக்கம் வள்ளுவ’ எனும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதையும், கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதையும் எழுத்தாளர் ஈரோடு தமிழன்பன் பெற்றுள்ளார். இதே போன்று, தமிழ் இலக்கியப் பணிகளுக்காக கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் இ சுந்தரமூர்த்தியும், ‘அஞ்ஞாடி’ என்னும் நாவலுக்காக பூமணியும், ‘செல்லாத பணம்’ நாவலுக்காக இமையமும் சாகித்திய அகாதெமி விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த நான்கு எழுத்தாளர்களுக்கும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் உயர்வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘கையொப்பம்’ என்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசுக்கு, கோவை வீட்டுவசதி பிரிவு கணபதி திட்டப் பகுதியில் உயர்வருவாய்ப் பிரிவு குடியிருப்புகளில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியப் பணிகளுக்காக கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற கு மோகனராசுவுக்கு, சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி நடுவாங்கரை திட்டப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: மீண்டும் இந்திய வம்சாவளி மாணவி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துகளைப் பிழையின்றி சொல்லும் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிணி லோகன் வெற்றி பெற்றார்.

இந்தப் போட்டியில் இதுவரை இல்லாமல் முதல்முறையாக நடைபெற்ற 90 விநாடி மாரத்தான் பிரிவில், 26 வார்த்தைகளில் 22 வார்த்தைகளுக்கு பிழையில்லாமல் எழுத்துகளைக் கூறி அவர் முதலிடத்தைப்பிடித்தார். 19 வார்த்தைகளில் 15 வார்த்தைகளுக்கு சரியாக எழுத்துகளைக் கூறி, விக்ரம் ராஜு (12) என்ற மற்றொரு இந்திய வம்சாவளி சிறுவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

4. ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: சாக்ஷி, மான்சி, திவ்யாவுக்கு தங்கம்

கஜகஸ்தானில் நடைபெறும் சர்வதேச மல்யுத்த அமைப்பின் ரேங்கிங் சீரிஸ் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக், மான்சி, திவ்யா கக்ரான் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.

முன்னதாக, ஆடவருக்கான 63 கிலோ பிரிவில் இந்தியாவின் நீரஜ் வெண்கலப்பதக்கம் வென்றார். தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு இப்போட்டியில் 3 தங்கம், 1 வெண்கலம் கிடைத்துள்ளன.

5. கோவேக்ஸின், கோவிஷீல்ட் பயனாளிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ்: டிசிஜிஐ ஒப்புதல்

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு பூஸ்டர் (மூன்றாவது தவணை) தடுப்பூசியாக கோர்பிவேக்ஸை செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை உருவாக்கி தயாரித்துவரும் பயாலஜிக்கல்-இ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பிவேக்ஸை செலுத்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனையில், பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பிவேக்ஸ் செலுத்தப்படும்போது உடலில் குறிப்பிடத்தக்க அளவு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பது தெரியவந்தது. அந்தப் பரிசோதனைகள் தொடர்பான விவரம் டிசிஜிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை சம்பந்தப்பட்ட நிபுணர் குழு விரிவாக மதிப்பிட்டு ஆலோசனை மேற்கொண்டது.

அதனைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்டின் 2 தவணைகளையும் செலுத்திக்கொண்ட 6 மாதங்களுக்குப் பின்னர், பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பிவேக்சை அவசரகாலங்களில் செலுத்த டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு தவணைகளாகச் செலுத்திக்கொண்ட தடுப்பூசிக்குப் பதிலாக வேறொரு தடுப்பூசியை பூஸ்டர் தவணையாகச்செலுத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி கோர்பிவேக்ஸ் ஆகும்.

6. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியனானார். இப்போட்டியில் அவர் வென்ற 2-ஆவது கோப்பை இதுவாகும். இதற்குமுன் 2020-இல் அவர் இங்கு சாம்பியன் ஆகியிருந்தார்.

பாரீஸில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர்செட்களில் அமெரிக்காவின் இளம் வீராங்கனையான கோகோ கௌபை மிக எளிதாக வீழ்த்தினார்.

மேலும், இந்த வெற்றியின்மூலம் தொடர்ந்து 35 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஸ்வியாடெக், வீனஸ் வில்லியம்ஸின் சாதனையை சமன் செய்துள்ளார். இப்போட்டியில் 4-ஆவது சுற்று தவிர்த்து இதர அனைத்து சுற்றுகளிலுமே நேர்செட்களில் வென்றிருக்கிறார் ஸ்வியாடெக்.

7. துப்பாக்கி சுடுதல்: இந்தியா 2-ஆம் இடம்

அஜர்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. இந்திய போட்டியாளர்கள் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இதில் வென்றுள்ளனர்.

இப்போட்டியின் கடைசி நாளன்று நடைபெற்ற 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்/ஆஷி சௌக்சி கூட்டணி பங்கேற்றிருந்தது. முதல் நிலையில் 900-க்கு 881 புள்ளிகளும், 2-ஆம் நிலையில் 600-க்கு 583 புள்ளிகளும் பெற்றது இந்திய இணை. பின்னர் இறுதிச்சுற்றில் கடும் சவால் அளித்த உக்ரைனின் செர்ஹி குலிஷ்/டரியா டைகோவா கூட்டணியை 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வசமாக்கியது ஸ்வப்னில்/ஆஷி ஜோடி.

இப்போட்டியில் ஸ்வப்னிலுக்கு இது 3-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே தனிநபர் 3 பொசிஷன்ஸ், அணிகள் 3 பொசிஷன்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் அவர் வெள்ளி வென்றிருந்தார்.

8. நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 28-ஆகக் குறைவு

நாட்டில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஓராண்டுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஓராண்டை எட்டுவதற்குள் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதே குழந்தை இறப்பு விகிதம் எனக் கணக்கிடப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான புதிய தரவுகளை இந்தியப் பதிவாளர் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் குழந்தை இறப்பு விகம்த 28-ஆகக் குறைந்துள்ளது. 1971-ஆம் ஆண்டில் இது 129-ஆக இருந்த நிலையில், தற்போது நான்கில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை இறப்பு விகிதம் 44-ஆக இருந்த நிலையில், தற்போது 28-ஆகக் குறைந்துள்ளது.

அதே காலகட்டத்தில் கிராமப்பகுதிகளில் குழந்தை இறப்பு விகிதம் 48-இல் இருந்து 31-ஆகவும், நகரப்பகுதிகளில் 29-இல் இருந்து 19-ஆகவும் சரிவடைந்துள்ளது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளது.

எனினும், 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஓராண்டுக்குள் இறக்கும் சூழல் நிலவுவதாகத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் அதிக குழந்தை இறப்பு விகிதமும் (43), மிஸோரத்தில் குறைந்த இறப்பு விகிதமும் (3) பதிவானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 1971-ஆம் ஆண்டில் 36.9-ஆக இருந்த பிறப்பு விகிதம், 2020-ஆம் ஆண்டில் 19.5-ஆகக் குறைந்துள்ளது. அதேவேளையில், நகரப்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் கிராமப்பகுதிகளில் பிறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது.

கடந்த 2011-இல் பிறப்பு விகிதம் 21.8-ஆக இருந்தது. 2020-ஆம் ஆண்டில் அது 19.5-ஆகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் கிராமப்பகுதிகளில் பிறப்பு விகிதம் 23.3-இல் இருந்து 21.1-ஆகவும், நகரப்பகுதிகளில் 17.6-இல் இருந்து 16.1-ஆகவும் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் / இந்தியாவில் பிறப்பு விகிதம்; இறப்பு விகிதம் (பொது); குழந்தை இறப்பு விகிதம்

தமிழ்நாடு: 13.8; 6.1; 13

இந்தியா முழுவதும்: 19.5; 6; 28

1. What is the name of the new model schools proposed by the Union Education Ministry?

A. PM Model schools

B. PM Shri schools 

C. Atmanirbhar schools

D. Bharat Gaurav schools

  • Union Education Minister Dharmendra Pradhan addressed the National Education Ministers’ Conference in Gujarat’s Gandhinagar with a focus on implementation of the new National Educational Policy 2020. He announced that the Education Ministry is in the process of establishing ‘PM Shri schools’ as the laboratory of NEP 2020. The schools will be fully equipped to prepare students for the future.

2. Which country has recently voted to join the European Union’s Defence policy?

A. Switzerland

B. Denmark 

C. Malta

D. Vatican City

  • Denmark is set to join the European Union’s defence policy after it held a referendum for the decision. Denmark is the only EU member that is not part of the EU’s Common Security and Defence Policy (CSDP). The Denmark government has succeeded in abolishing an exemption secured in a 1993 referendum on the Maastricht Treaty. Sweden and Finland also placed historic bids to join NATO, which will be taken up at the upcoming summit.

3. India signed a ‘Vision statement for defence cooperation’ with which country?

A. Australia

B. Israel 

C. Italy

D. France

  • India and Israel adopted a ‘Vision statement’ for strengthening defence cooperation in future. The statement marked 30 years of diplomatic ties between the two countries. Union Defence Minister Rajnath Singh and his Israeli counterpart held bilateral talks in New Delhi. The two leaders discussed defence cooperation and the global and regional defence scenario. Israel recently signed the instrument of ratification of the International Solar Alliance.

4. When is the ‘World Bicycle Day’ celebrated every year?

A. June.1

B. June.3 

C. June.5

D. June.7

  • World Bicycle Day is celebrated every year on June 3, to develop a culture of cycling for basic transportation, commutation, and strengthening physical and mental health. Union Minister for Youth Affairs and Sports Anurag Thakur launched a nationwide ‘Fit India Freedom Rider Cycle Rally’ from Major Dhyan Chand Stadium, Delhi on the occasion of World Bicycle Day 2022.

5. As per the RBI’s recent directions, what is the charge levied for card–less cash transactions?

A. Rs 0.50 per transaction

B. Rs 10 per month

C. Rs 25 per month

D. No charges to be levied 

  • The Reserve Bank of India (RBI) asked all banks and ATM operators to make cardless cash withdrawal facility, known as ICCW (Interoperable Card–less Cash Withdrawal), available at all ATMs across all banks in India. UPI would be used for customer authorisation in such transactions, settlement would be through the National Financial Switch (NFS)/ATM networks. The card–less cash transactions shall be processed without levy of any charges.

6. ‘Mujib – The Making of a Nation’ movie is jointly produced by which countries?

A. Bangladesh and Nepal

B. Bangladesh and China

C. Bangladesh and India 

D. Bangladesh, Myanmar and India

  • The 90–second trailer of the feature film on ‘Mujib – The Making of a Nation’ directed by Shri Shyam Benegal was released recently.
  • The Ministry of Information Broadcasting, Government of India and the Ministry of Information Broadcasting, Government of Bangladesh are producers of the film. National Film Development Corporation (NFDC) of India and Bangladesh’s Film Development Corporation (FDC) signed the Agreement for the film on Bangabandhu Sheikh Mujibur Rahman in 2020.

7. Yagachi River, which was seen in the news, flows in which state?

A. Karnataka 

B. Andhra Pradesh

C. Kerala

D. Maharashtra

  • The Yagachi reservoir located in the Hassan district of Karnataka was full for the first time in May. Due to the heavy rains in the catchment area, the water level reached 3164.06 ft against the maximum of 3164.90 ft. Yagachi River arises in the Western Ghats near Chickmagaluru, flows through Belur, Hassan District, where it becomes a tributary of the Hemavati River.

8. Which organisation announced to fund USD 30 billion to tackle global food crisis?

A. Food and Agricultural Organisation

B. World Bank 

C. World Economic Forum

D. International Monetary Fund

  • The World Bank has announced that it has planned to implement a global response to the food security crisis, with up to USD 30 billion funding in existing and new projects. Financing in areas such as agriculture, nutrition, social protection, water and irrigation will be available for implementation to address food insecurity over the next 15 months. The World Bank is also working with countries to prepare USD 12 billion of new projects to fight food security crisis.

9. Where is the ‘CSIR–Central Leather Research Institute’ located in India?

A. Pune

B. Chennai 

C. Lucknow

D. Mysuru

  • Union Minister of State Ministry of Science and Technology Dr Jitendra Singh addressed the Platinum Jubilee celebrations of CSIR–Central Leather Research Institute in Chennai. He announced that the leather industry in India will aim at net–zero carbon footprint. In 2021, export realization from the leather sector is valued at Rs 40,000 crores. The Minister also announced about the efforts to prepare customised footwear for Indians by using 3D technology.

10. The ‘International Tea Day’ was celebrated on which day every year?

A. May.21

B. May.30

C. June.01

D. June.03

  • The ‘International Tea Day’ is celebrated across the world on May 21. In 2019, the UN General Assembly had marked May 21 as the International Day for Tea to promote production and consumption of the beverage. Food and Agricultural Organization’s Intergovernmental Group insisted on making more efforts to expand tea demand in tea–producing countries, where per capita consumption is relatively low.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!