Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

4th & 5th October 2020 Current Affairs in Tamil & English

4th & 5th October 2020 Current Affairs in Tamil & English

4th & 5th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

4th & 5th October 2020 Tnpsc Current Affairs in Tamil

4th & 5th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.ஹேகில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில், இந்தியாவுக்கு எதிரான வழக்கை வென்ற நிறுவனம் எது?

அ. மோர்கன் ஸ்டான்லி

ஆ. பெப்ஸி கோ

இ. கோகோ கோலா

ஈ. வோடபோன்

  • ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நடுவர் தீர்ப்பாயத்தில் இந்திய அரசுக்கு எதிராக வோடபோன் நிறுவனம் தொடுத்த வழக்கில் அந்நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது. வோடபோன் நிறுவனத்தின் மீதான இந்திய அரசின் வரி விதிப்பு, வட்டி மற்றும் அபராதம் உள்ளிட்டவை இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையேயான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தீர்ப்பாயம் கூறியது. வரி, வட்டி மற்றும் அபராதம் என சுமார் $2 பில்லியன் டாலர் உட்பட மொத்தம் `279 பில்லியனை இந்தியா கோரியது.

2.நடப்பாண்டு (2020) வரும் பன்னாட்டு சைகை மொழிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. Sign Languages are for Everyone

ஆ. Sign Languages for Communication

இ. Making Sign Languages Mainstream

ஈ. IT for Sign Languages

  • ‘பன்னாட்டு சைகை மொழிகள் நாள்’ ஆனது செப்டம்பர்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இயங்கிவரும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி & பயிற்சி மையத்தால் கொண்டாடப்பட்டது. ஐநா அவை, செப்.23’ஐ பன்னாட்டு சைகை மொழிகள் நாளாக அறிவித்தது. சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரி -ப்பதற்கும், அனைவருக்கும் அதன் அணுகலை விரிவாக்குவதற்குமாக, “Sign Languages are for Every one” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3.உலக கடல்சார் போக்குவரத்து நாள் (World Maritime Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 20 ஜூலை

ஆ. 24 செப்டம்பர்

இ. 19 அக்டோபர்

ஈ. 4 நவம்பர்

  • உலக கடல்சார் போக்குவரத்து நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர்.24 அன்று பன்னாட்டு கடல்சார் அமைப்பால் கொண்டாடப்படுகிறது. இது, உலக பொருளாதாரத்திற்கு சர்வதேச கடல்சார் தொழில்களின் குறிப்பாக கப்பல் போக்குவரத்து அளிக்கும் பங்களிப்பை குறிக்கின்றது. “Sustainable Shipping for a Sustainable Planet” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

4.குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநிலச் சட்டமன்றம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

  • குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை 2020 செப்.24 அன்று குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியது. இம்மசோதா சமூக விரோத தீயசக்திகள் மற்றும் வன்குற்றம் புரிவோரை மிகக்கண்டிப்புடன் கையாளுவதோடு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் முற்படுகிறது. 15 நாட்களுக்கு பதிலாக 30 நாள் காவலில் வைக்கவும், தற்போதைய 60 நாட்களுக்கு பதிலாக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வும் இது காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

5.எந்த அமைச்சகத்தின்கீழ், நாடு முழுவதும் தொகுதி அளவிலான கொத்துக்களை உருவாக்குவதற்கான தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது?

அ. ஜவுளித்துறை அமைச்சகம்

ஆ. வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகம்

இ. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்

ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

  • ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் தொகுதி அளவில் கொத்து நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசின் மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டத்தை (NHDP) செயல்படுத்துகிறது. மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட சாத்தியக்கூறு நிறைந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் அவை அனுமதிக்கப்படுகின்றன.

6.தேசிய ஊட்டச்சத்து ஆய்வை மேற்கொள்ளும் அமைச்சகம் எது?

அ. நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகம்

ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

  • அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு (CNSS) (2016-2018), பள்ளிசெல்லும் சிறார்களின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தரவுகளைச் சேகரித்தது.

7.சமீபத்தில், பின்வரும் எந்(தெந்)த தொழிலாளர் குறியீடை(டுகளை) மாநிலங்களவை நிறைவேற்றியது?

அ. தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020

ஆ. பணிசார் பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் பணிபுரி சூழல்கள் குறியீடு, 2020

இ. சமூகப் பாதுகாப்பு குறித்த குறியீடு, 2020

ஈ. மேற்கண்ட அனைத்தும்

  • (i) தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020) (ii) பணிசார் பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் பணிபுரி சூழல்கள் குறியீடு, 2020 (Code on Occupational Safety, Health & Working Conditions Code, 2020) மற்றும் (iii) சமூகப் பாதுகாப்பு குறித்த குறியீடு, 2020 (Social Security Code, 2020) ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.

8. ‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஆ. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை

  • பழங்குடியின (ST) மாணாக்கருக்கு தரமான தொடக்க நிலை, இடைநிலை & மேல்நிலைக் கல்வியை வழங்குவது; கல்வியினூடாக சிறந்த வாய்ப்புகளை அவர்களை அணுகவைப்பது; வழக்கமான நாட்டு மக்களுக்கு இணையாக அவர்களை வளர்த்தெடுப்பது ஆகிய முதன்மை நோக்கங்களுடன், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தால், 2019-20 முதல், ‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டம் ஒரு மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

9. ‘U-Rise’ என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. கேரளம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • மாணாக்கருக்கு தொழில் வாழ்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘U-Rise’ என்ற பெயரிலான ஓர் ஒருங்கிணைந்த தளத்தைத் தொடங்கியுள்ளார். தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற்கு, மாணாக்கருக்கு உதவிகளை வழங்குவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மின்னணு உள்ளடக்கம், மின்-நூலகம் மற்றும் இணையவழி பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாகும். மாநிலத்தின் உள்ளகப் பகுதிகளில் வசிக்கும் மாணாக்கருக்கு இவை உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10.பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிப்பதற்காக, ‘ஆபரேஷன் துராச்சாரி’யைத் தொடங்க உள்ள மாநில அரசு எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

  • உத்தர பிரதேச மாநிலமானது பெண்கள் / சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடிவாளம் போடும் விதமாக, விரைவில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாலைகளின் ஓரத்தில் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள கொடுங்குற்றவாளிகளின் நிழற்படங்களைத் தாங்கிய பதாகைகளை வைப்பதற்காக, ‘ஆபரேஷன் துராச்சாரி’ என்றவொன்றைத் தொடங்க முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், முன்னோட்ட அடிப்படையில், நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அக்.1 அன்று தொடங்கப்பட்டது. தயாமின், நயாசின் அடங்கிய திரவத்தில் அரிசியை நனைத்து உலரவைத்து, அதன்மேல் இரும்புச்சத்துமிக்க பைரோ பாஸ்பேட்டுகளை தூவி செறிவூட்டப்பட்ட அரிசி அதற்குரிய ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. 100 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து 4.25 மில்லி கிராம், போலிக் அமிலம் 12.5 மைக்ரோ கிராம், வைட்டமின் பி12 0.125 மைக்ரோ கிராம் ஆகியவை அடங்கியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 100 கிகி வழக்கமான அரிசியுடன் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், இருபது அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ஆறாம்கட்ட அகழாய்வில் கிடைத்த உறை கிணறுகளின் உயரத்தைவிட தற்போது கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரங்கொண்டதாகும்.
  • சிவகங்கை அருகே ‘ஆசிரியம்’ பற்றிய 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஆசிரியம்’ என்றால் அடைக்கலம் தருதல், பாதுகாப்பு தருதல் என்று பொருள்.
  • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் உதவி தலைமை அரசு வழக்குரைஞராக கதிர்வேல் பணிபுரிந்து வந்தார். அவர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் விக்டோரியா கெளரி, அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெண் வழக்குரைஞர் ஒருவர் நடுவணரசின் உதவி தலைமை அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

1. Which company has won a case against India at the international arbitration tribunal, Hague?

[A] Morgan Stanley

[B] Pepsico

[C] Coco Cola

[D] Vodafone

  • Vodafone has won an arbitration case against the Government of India at the International Arbitration Tribunal, Hague. The tribunal held that Indian Government’s tax imposition on Vodafone, including interest and penalties were in a breach of an investment treaty agreement between India and the Netherlands. India had claimed a total of Rs 279 billion (USD 3.79 billion) including about $2 billion as tax, interest and penalties.

2. What is the theme of International Sign Languages Day – 2020?

[A] Sign Languages are for Everyone

[B] Sign Languages for Communication

[C] Making Sign Languages Mainstream

[D] IT for Sign Languages

  • ‘International Sign Languages Day’ is celebrated on September 23. In India, it was celebrated by Indian Sign Language Research and Training Centre (ISLRTC), an autonomous body under Social Justice and Empowerment virtually. United Nations has declared 23rd September as International Sign Language Day. The theme of this year is ‘Sign Languages are for everyone’ with a view to enhancing awareness about Sign language and expanding its reach to everyone.

3. On which date, World Maritime Day is observed?

[A] 20th July

[B] 24th September

[C] 19th October

[D] 4th November

  • Each year on 24th September, World Maritime Day is celebrated by International Maritime Organization in order to mark the contribution of international maritime industries towards the economy of the world especially shipping. The theme for this year is “Sustainable shipping for a sustainable planet”.

4. Which State Legislative Assembly passes, The Gunda and Anti–Social Activities (Prevention) Bill?

[A] Gujarat

[B] Rajasthan

[C] Uttar Pradesh

[D] Madhya Pradesh

  • The Gunda and Anti–Social Activities (Prevention) Bill was passed by Gujarat Legislative Assembly on September 24, 2020. The Bill seeks to strictly deal with anti–social elements and hardened criminals, prescribing jail terms ranging from seven to 10 years and it also empowers the police to seek 30–day remand instead of 15 days while a charge sheet can be filed within 90 days instead of the present provision of 60 days.

5. Under which Ministry, the National Handloom Development Programme (NHDP) for development of block level clusters across country is implemented?

[A] Ministry of Textile

[B] Ministry for Development of North Eastern Region

[C] Ministry of Micro, Small and Medium Enterprises

[D] None of the above

  • The Government of India, Ministry of Textiles is implementing National Handloom Development Programme (NHDP) for development of Block Level clusters across the country including Andhra Pradesh & Telangana States. The Block Level clusters are sanctioned on the basis of the viable proposals received from States Government.

6. Which Ministry is responsible for conducting National Nutrition Survey?

[A] Ministry of Health and Family Welfare

[B] Ministry of Women and Child Development

[C] Ministry of Consumer Affairs, Food and Public Distribution

[D] None of the above

  • The Ministry of Health and Family Welfare conducts National Nutrition Surveys in order to keep the check on the nutritional status of children through periodically conducting surveys. Recently, a Comprehensive National Nutrition Survey (CNNS) (2016–2018) has captured the data on nutritional status of school going children.

7. Recently, which among the following labour codes are passed by the Rajya Sabha?

[A] Industrial Relations Code, 2020

[B] Code on Occupational Safety, Health & Working Conditions Code, 2020

[C] Social Security Code, 2020

[D] All of the above

  • The Rajya Sabha in its sitting today passed three labour codes namely, Industrial Relations Code, 2020 (ii) Code on Occupational Safety, Health & Working Conditions Code, 2020 and (iii) Social Security Code, 2020.

8. The scheme, ‘Eklavya Model Residential Schools’ is been implemented by which ministry?

[A] Ministry of Tribal Affairs

[B] Ministry of Human Resource and Development

[C] Ministry of Education

[D] None of the above

  • The Ministry of Tribal Affairs has been implementing a separate Central Sector Scheme ‘Eklavya Model Residential Schools’ (EMRSs) from 2019–20 with the prime objective to provide quality upper primary, secondary and senior secondary level education to Scheduled Tribe (ST) students to enable them to access the best opportunities in education and to bring them at par with the general population.

9. Which state government has launched the ‘U–Rise’ portal?

[A] Andhra Pradesh

[B] Kerala

[C] Uttar Pradesh

[D] Punjab

  • The Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath has launched a unified portal called ‘U–Rise’, to provide career counselling to students. The portal aims to provide assistance to students in getting vocational and technical education. It also comprises e–content, e–library, and online courses, which can be accessed by students in the interior areas of the state.

10. Which Indian state is going to launch ‘Operation Durachari’ in order to keep a check on crime against women?

[A] Uttar Pradesh

[B] Madhya Pradesh

[C] Arunachal Pradesh

[D] Himachal Pradesh

  • Uttar Pradesh is soon going to launch ‘Operation Durachari’ to check crime against women and to put posters of habitual offenders in cases of sex–related crimes on road crossing in Uttar Pradesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!