Tnpsc

4th & 5th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

4th & 5th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th & 5th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஆண்டுதோறும் தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.30 

ஆ) செப்டம்பர்.1

இ) செப்டம்பர்.3

ஈ) செப்டம்பர்.5

  • தேசிய சிறுதொழில் நாள் என்பது நமது சமுதாயத்தில் உள்ள சிறு தொழில்களின் மதிப்பை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமாகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.30 அன்று, தேசிய சிறு தொழில் நாள் கொண்டாடுகிறது. 2000 ஆகஸ்ட்.30 அன்று, இந்தியாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக, இந்தத் துறைக்கான ஒரு விரிவான கொள்கைதொகுப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப்பொருளாதாரத்தில் MSMEகளின் பங்களிப்புபற்றிய விழிப்புணர்
    -வை அதிகரிப்பதற்காக ஐநா பொது அவை ஜூன்.27ஆம் தேதியை MSME நாளாக அறிவித்துள்ளது.

2. எந்த பொதுத்துறை வங்கியின் MD & CEOஆக சாந்திலால் ஜைன் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) பஞ்சாப் நேஷனல் வங்கி

ஆ) இந்தியன் வங்கி 

இ) யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

ஈ) பாரத வங்கி

  • சாந்தி லால் ஜைன், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச்செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன் அவர், பரோடா வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். செப்.1 அன்று அவரது மூன்றாண்டுகால பதவிக்காலம் தொடங்கும்.

3. “ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்த பன்னாட்டு நாள் – International Day of the Victims of Enforced Disappearances” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.30 

ஆ) செப்டம்பர்.1

இ) செப்டம்பர்.3

ஈ) செப்டம்பர்.5

  • ஆண்டுதோறும் ஆக.30 அன்று உலகம் முழுவதும் “ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்த பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிறது.
  • ஆட்கடத்தலுக்கு உள்ளானவர்களை கௌரவிப்பதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 2010 டிச.21 அன்று, ஐநா பொது அவை, அதிகாரப்பூர்வமாக இந்த நாளை அறிவித்தது. ஆட்கடத்தலுக்குள்ளானோரின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதை இந்நாள் வரவேற்கிறது.

4. வருவாய் வழக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கான தொழில்நுட்ப தளத்தை உருவாக்குதற்காக நடுவணரசு அமைத்துள்ள குழுவின் தலைவர் யார்?

அ) ஆஷிஷ் ஷிரதோன்கர் 

ஆ) ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

இ) DY சந்திரசூட்

ஈ) துஷார் மேத்தா

  • ஆஷிஷ் ஷிரதோன்கர் தலைமையிலான மேல்முறையீட்டு தாக்கல் செயல்முறையை நெறிப்படுத்தும் ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • இந்தத்தளம் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பு தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் உள்ளடக்கியது. ஆஷிஷ் ஷிராதோன்கர், தேசிய தகவல் மையத்தின் மின்னணு-நீதிமன்றத் திட்டத்திற்கும் தலைமை வகிக்கிறார். இந்தக்குழு தனது பணியை மூன்று மாதகாலத்திற்குள் முடிக்கவுள்ளது. வருவாய்த்துறை, CBDT & CBIT உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

5. அணுவாயுத சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் – Intl., Day against Nuclear Tests அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட்.29 

ஆ) ஆகஸ்ட்.30

இ) ஆகஸ்ட்.31

ஈ) செப்டம்பர்.01

  • ஆண்டுதோறும் ஆக.29 அன்று உலகம் முழுவதும் அணு சோதனைக்கு எதிரான பன்னாட்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அணுவாயுதங்களை பரிசோதிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இதுபோன்ற சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அணுவாற்றல் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாள் 2009 டிச.2 அன்று ஐநா பொதுச்சபையால் அதன் 64ஆவது அமர்வில் நிறுவப்பட்டது. நியூ மெக்ஸிகோவில் உள்ள பாலைவனத்தளத்தில், ‘டிரினிட்டி’ என்று அழைக்கப்படும் முதல் அணுசோதனை, அமெரிக்காவின் ராணுவத்தால் 1945 ஜூலை.16 அன்று நடத்தப்பட்டது.

6. ஒலிம்பிக்/பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீராங்கனை யார்?

அ) அவனி லேகாரா 

ஆ) இளவேனில் வாலறிவன்

இ) அபூர்வி சந்தேலா

ஈ) அஞ்சும் முத்கில்

  • இந்திய பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அவனி லேகாரா, டோக்கியோ பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் நாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • நாட்டின் வரலாற்றில் பாராலிம்பிக் அல்லது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் இவர். இந்திய வட்டெறிதல் வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

7. மேற்கு நைல் வைரஸ்தொற்று அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) சீனா

ஈ) இங்கிலாந்து

  • மிதவெப்பநிலையும் அதிக மழைப்பொழிவும் கொசுக்களுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குவதால், மேற்கு நைல் வைரஸ் (WNV) நோய்த் தொற்றுகள் அதிகரிக்கலாம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • இது கொசுக்களால் பரவும் ஒரு தொற்றுநோயாகும். இது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்றுள்ள கியூலெக்ஸ் கொசுவால் பரவுகிறது. இது, மனிதர்களில் அபாயகரமான நரம்பியல் நோயினை உண்டாக்குகிறது. இது ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகிய வைரஸ்களுடன் தொடர்புடையது.

8. தீபோர் பீல் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம் 

ஆ) சிக்கிம்

இ) மத்திய பிரதேசம்

ஈ) இமாச்சல பிரதேசம்

  • தீபோர் பீல் என்பது அஸ்ஸாமின் கௌவுகாத்தியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நன்னீராகும். இது அம்மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமும் முக்கியமான பறவைகள் வாழிடமும் ஆகும். சுற்றுச்சூழல், வனம் & கால நிலை மாற்ற அமைச்சகமானது கௌகாத்தியின் தென்மேற்கு விளிம்பில் உள்ள தீபோர் பீல் வனவுயிரி சரணாலயத்தின் சூழல்-உணர்திறன் மண்டலத்தை அறிவித்துள்ளது. இந்த ஈரநிலம், கோடையில் 30 சகிமீ வரை விரிவடைகிறது; மேலும் குளிர்காலத்தில் சுமார் 10 சகிமீ வரை சுருங்குகிறது.

9. காலாண்டு வீட்டு விலைக்குறியீட்டை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) தேசிய வீட்டு வசதி வங்கி

ஆ) இந்திய ரிசர்வ் வங்கி 

இ) NITI ஆயோக்

ஈ) தேசிய புள்ளியியல் அலுவலகம்

  • பத்து முக்கிய நகரங்களின் வீட்டு பதிவு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பரிவர்த்தனை-நிலை தரவுகளின் அடிப்படையில் காலாண்டு வீட்டு விலைக் குறியீட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகியவை அந்தப் பத்து நகரங்களாகும். RBI தரவுகளின்படி, அகில இந்திய வீட்டுவிலை குறியீட்டின் வளர்ச்சியானது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் வளர்ச்சி 8.8% (அகமதாபாத்) முதல் (-) 5.1 சதவிகிதம் (சென்னை) வரை இருந்தது.

10.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சூப்பர்டெக் இரட்டைகோபுர வழக்குடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) உத்தர பிரதேசம் 

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா

  • நொய்டாவில் சூப்பர்டெக்கின் எமரால்ட் கோர்ட் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களை இடித்துத்தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மாவட்ட அதிகாரிகளுடனான ஒப்பந்தத்துடன் கட்டட விதிமுறைகளை மீறியதற்காக மூன்றுமாதங்களுக்குள் கோபுரங்களை இடிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வ.உ.சி. 150-ஆவது பிறந்த தினம்: சென்னை, கோவையில் சிலை

சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் ஈடுபட்டு ‘செக்கிழுத்த செம்மல்’ என மக்களால் புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி 14 புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த அறிவிப்பின்படி, வ.உ.சி.க்கு சென்னை, கோவை என இரண்டு இடங்களில் புதிதாக சிலை வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்:

வ.உ.சி.,யின் 150-ஆவது பிறந்த தினம் வரும் 5-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அரசு விழாவாக, அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டுமென சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தாா். வ.உ.சி.,யின் 150-ஆவது பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என எனது சுதந்திர தின உரையிலேயே கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அவரது 150-ஆவது ஆண்டு பிறந்த தினம் வருவதால், 14 புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சிதம்பரனாா், சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டுள்ள மண்டபம் பொலிவூட்டப்பட்டு அவரது மாா்பளவு சிலை திறந்து வைக்கப்படும். தூத்துக்குடி மாநகரில் முதன்மைச் சாலையான மேலபெரிய காட்டன் சாலை இனி வ.உ.சிதம்பரனாா் சாலை என அழைக்கப்படும்.

கோவை வ.உ.சி. பூங்கா: தனது வாழ்நாளின் முக்கிய நாள்களைக் கோவைச் சிறையிலேயே கழித்த வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலையானது, கோவை வ.உ.சி. பூங்காவில் அமைக்கப்படும். செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனாா் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு அவ்விடங்களில் அவரது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயன் பெறும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனாா் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தை இளைய தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனாா் பெயரில் புதிய ஆய்விருக்கை அமைக்கப்படும். வ.உ.சி. எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனாா், மகாகவி பாரதியாா் படித்த பள்ளிகளுக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் ரூ.1.05 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது

கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடா்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழா் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் அளிக்கப்படும். இந்த விருது ரூ.5 லட்சமும், பாராட்டுச் சான்றும் உள்ளடக்கியது. வ.உ.சிதம்பரனாா் நவம்பா் 18-இல் மறைந்தாா். இந்தத் தினம் தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்படும்.

அரசு கட்டடங்களுக்கு பெயா்:

இந்த ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி வரை ஓராண்டில் தூத்துக்குடி, திருநெல்வேலியில் உருவாகும் அரசுக் கட்டடங்களுக்கு கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரனாா் பெயா் சூட்டப்படும். அவரது தியாகத்தை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயனைடையும் வகையில், போக்குவரத்துத் துறை சாா்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும்.

நடமாடும் வ.உ.சி. வாழ்க்கை வரலாற்று கண்காட்சி கூடமானது, மாணவ-மாணவிகளின் பாா்வைக்காக பயணிக்கும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனாா் குறித்த இணைய வழிக் கருத்தரங்கு நடைபெறும். தமிழ் நிகா்நிலைக் கல்வி கழகத்தின் வாயிலாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாா் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியன இணையத்தில் மின்மயப்படுத்தி வெளியிடப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

2. யெஸ்.பாலபாரதியின் நூலுக்கு பால சாகித்திய புரஸ்காா் விருது

யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற குழந்தைகள்” நூலுக்கு 2020-ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்திய புரஸ்காா்‘ விருது வழங்கப்பட்டுள்ளது. சாகித்திய அகாதெமியின் தலைவா் டாக்டா் சந்திரசேகர கம்பாா் ஒப்புதலுடன் அகாதெமியின் செயலாளா் கே.ஸ்ரீனிவாசராவ் வெள்ளிக்கிழமை இதை அறிவித்துள்ளாா். இந்த விருதுக்காக அமைக்கப்பட்ட மூன்று போ் கொண்ட நடுவா் குழு ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நூலை ஒருமனதாகத் தோ்வு செய்துள்ளதாக அகாதெமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எம்.கமலவேலன், டாக்டா் ருத்ர துளசிதாஸ், யூமா வாசுகி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

‘இதை குழந்தைகளுக்கான நூல் என்று மட்டும் கருத முடியாது. பெற்றோரும் ஆசிரியா்களும் படிக்க வேண்டிய நூலாகக்கூட கருதலாம். குழந்தைகளின் வெகுளித்தனம், ஆா்வம், சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்’ என இந்நூல் குறித்த விமா்சனங்களும் வெளியாகியிருந்தன. ‘பால சாகித்திய புரஸ்காா்‘ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இந்த நூல் ஆசிரியருக்கு கேடயமும், ரூ 50,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும்.

3. பாராலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டை : ஒரே நாளில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 1 வெண்கலம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் சனிக்கிழமை ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இந்த பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் ஆகியவை அடங்கும். இந்திய போட்டியாளா்களுக்கு சனிக்கிழமை, துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளியும், பாட்மிண்டனில் ஒரு தங்கம், ஒரு வெண்கலமும் கிடைத்துள்ளது.

துப்பாக்கி சுடுதல்: துப்பாக்கி சுடுதலில் பி4 கலப்பு 50 மீட்டா் பிஸ்டல் எஸ்ஹெச்1 பிரிவில் இந்தியாவின் மணீஷ் நா்வால் (19) முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான சிங்ராஜ் அதானா (39) இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றாா். இதில் நா்வால் தனது முதல் பாராலிம்பிக்கிலேயே தங்கம் வென்றுள்ளாா். அதானா, இதே பாராலிம்பிக்கில் ஏற்கெனவே 10 மீட்டா் ஏா் பிஸ்டா் எஸ்ஹெச்1-இல் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாட்மிண்டன்: பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் (33) தங்கமும், மனோஜ் சா்காா் (31) வெண்கலமும் வென்றனா். இருவருக்குமே இது முதல் பாராலிம்பிக் பதக்கமாகும். அதிலும், டோக்கியோ பாராலிம்பிக்கில் தான் பாட்மிண்டன் போட்டி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் சாம்பியனாகி வரலாறு படைத்திருக்கிறாா் பிரமோத். பாட்மிண்டனில் மேலும் இரு இந்தியா்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளதால், அதில் இந்தியாவுக்கு இன்னும் இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

4. ஃபேம் திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகள்: கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு

மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மின்சார பேருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை பல நாடுகள் உணா்ந்துள்ளன. இந்தியாவிலும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என நீதி ஆயோக் அழுத்தமாக சொல்லி வருகிறது.

சொல்வது மட்டுமின்றி அதைச் செயல்படுத்துவதிலும் முனைப்பு காட்டும் விதமாக கடந்த ஆண்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, சேலம், திருப்பூா், ஈரோடு, வேலூா், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூா் ஆகிய நகரங்களில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மின்சார பேருந்துகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி, பேருந்துகளின் நீளம் மற்றும் மின்னேற்ற கட்டமைப்பைப் பொருத்து ரூ.35 முதல் 55 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வந்த நிலையில், திட்டத்தைக் கைவிட முடிவு செய்திருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காரணம் என்ன? இதற்கான காரணம் குறித்து அவா்கள் விளக்கிக் கூறுகையில், ‘மத்திய அரசு வழங்கும் மானியத் தொகைக்கும் பேருந்தின் விலைக்கும் பெரியளவில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக மின்கலன்களை மாற்றித் தருவதற்கான தெளிவான விளக்கங்களும் திட்டத்தில் தரப்படவில்லை. எனவே, ஒப்பந்தப்புள்ளி கோரி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், தனியாா் மின்சார பேருந்து இயக்கும் நிறுவனத்தின் ஊழியா்களை வைத்து பேருந்துகளை இயக்கும் நிலை இருப்பதால் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

விரைவில் மின்சார பேருந்துகள்: ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு முடிவை தமிழகம் கைவிட்டிருக்கும் நிலையில் கேரளம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, கேஎஃப்டபிள்யூ வங்கியுடன் இணைந்து தமிழகம் கொள்முதல் செய்ய உள்ள 500 பேருந்துகளும் எப்போது வாங்கப்படும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது. இதன்படி, 80:20 என்னும் அடிப்படையில் கேஎஃப்டபிள்யூ மற்றும் தமிழகம் பேருந்தின் விலையை பகிா்ந்து கொள்ளும்.

கடந்த மாதம் தமிழக நிதியமைச்சா் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறையில் கடன் மற்றும் நஷ்டம் அதிகளவு இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சுற்றுச்சூழல் நலன் கருதி விரைவில் மின்சார பேருந்துகள் வாங்கப்படும் எனவும், நிதிநெருக்கடி கருதி சரியான திட்டத்தில் தரமான மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அட்டவணைக்காக…. (குறிப்பு டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது.) ஃபேம் 2 திட்டத்தின் கீழ் தமிழக நகரங்களுக்கு வழங்கப்பட இருந்த பேருந்துகளின் எண்ணிக்கை

நகரம் பேருந்துகளின் எண்ணிக்கை கோவை 100 மதுரை 100 திருச்சி 100 சேலம் 50 திருப்பூா் 50 ஈரோடு 50 வேலூா் 50 தஞ்சாவூா் 25 பெட்டிச் செய்தி: மாறிவரும் காலநிலையில் மின்சார பேருந்தின் முக்கியத்துவம்: மின்சார பேருந்துகளின் முக்கியத்துவம் குறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறியதாவது: காற்றில் நுண்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகன புகை. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தால் இந்திய மக்களின் ஆயுள்காலமும் 5 ஆண்டுகள் அதிகரிக்கக் கூடும். எனவே, பேருந்துகளில் வெளியேறும் புகையை முற்றிலுமாக ஒழிக்க மின்சார பேருந்து அவசியம் என்றனா்.

காற்றில் இருக்க வேண்டிய நுண்துகளின் அளவு: இந்திய தர நிா்ணய அளவீட்டின்படி 60 மைக்ரோகிராம் உலக சுகாதார நிறுவனத்தின் காற்று தர நிா்ணய அளவீட்டின்படி 25 மைக்ரோ கிராம் சென்னையின் பல பகுதிகளில்…: 60 முதல் 128 மைக்ரோ கிராம் வரையும், 176 முதல் 228 மைக்ரோ கிராம் வரையும் காற்றில் நுண்துகள்கள் உள்ளன.

5. பாட்மிண்டன்: வரலாற்று தங்கம் வென்றாா் பிரமோத் பகத் :மனோஜுக்கு வெண்கம்; மேலும் இரு பதக்கங்கள் உறுதி

பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் (33) தங்கமும், மனோஜ் சா்காா் (31) வெண்கலமும் வென்றனா். பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக டோக்கியோ பாராலிம்பிக்கில் சோ்க்கப்பட்டுள்ள பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை பிரமோத் பெற்றுள்ளாா். அவரோடு மனோஜும் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவா்கள் தவிர சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணா நாகா் ஆகிய மேலும் இரு இந்தியா்களும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.

எஸ்எல்3 பிரிவு: ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவின் அரையிறுதிகளில் நடப்பு உலக சாம்பியனான பிரமோத் பகத்தும், மனோஜ் சா்காரும் களம் கண்டனா். இதில் பிரமோத் தனது ஆட்டத்தில் ஜப்பானின் டாய்சுகே ஃபுஜிஹாராவை 21-11, 21-16 என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். ஆனால் மனோஜ் சா்காா், இங்கிலாந்தின் டேனியல் பெத்தலிடம் 8-21, 10-21 என்ற செட்களில் வீழ்ந்தாா். இறுதிச்சுற்றில் அந்த டேனியலை எதிா்கொண்ட பிரமோத் 21-14, 21-17 என்ற நோ் செட்களில் 45 நிமிஷத்தில் வென்று சாம்பியன் ஆனாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பிரமோத், ‘இந்தப் பதக்கம் எனக்கு மிகச் சிறப்பானதாகும். பாராலிம்பிக் பத்தக்கக் கனவு நனவாகியுள்ளது. பெத்தல் எனக்கு மிகவும் நெருக்கடி அளித்தாா். ஆனால் நான் தன்நிலையிழக்காமல் நிதானமாக எனது பலம் கொண்டு விளையாடினேன். இரு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் விளையாடியபோது தோல்வி கண்டேன். அதிலிருந்து நுட்பங்களைக் கற்று தற்போது வென்றுள்ளேன். இந்தப் பதக்கத்தை எனது பெற்றோருக்கும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் சமா்ப்பிக்கிறேன். இந்தியாவை பெருமையடையச் செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றாா். மறுபுறம், அரையிறுதியில் வீழ்ந்த மனோஜ் சா்காா், வெண்கலப் பதக்கத்துக்கான ‘பிளே-ஆஃப்’ சுற்றில், டாய்சுகே ஃபுஜிஹாராவை 22-20, 21-13 என்ற செட்களில் வென்று பதக்கத்தை கைப்பற்றினாா்.

பிரமோத் பகத்: 4 வயதாக இருக்கும்போது போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளி ஆனாா். அண்டை வீட்டாா் பாட்மிண்டன் விளையாடுவதைப் பாா்த்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய பகத், 2006 முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினாா். சா்வதேச அளவில் இதுவரை 45 பதக்கங்கள் வென்றுள்ளாா். இதில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வென்ற ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 4 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் ஆகியவையும் அடங்கும். மனோஜ் சா்காா்: 1 வயதாக இருக்கும்போது போலியாவால் பாதிக்கப்பட்டாா். 5 வயதிலிருந்து பாட்மிண்டன் விளையாட்டை தொடங்கிய மனோஜ், பின்னா் அதையே தீவிரமாக விளையாடத் தொடங்கினாா். 2011 முதல் பாரா பாட்மிண்டன் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தாா். 2016 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளாா் மனோஜ்.

எஸ்எல்4 பிரிவு: ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 அரையிறுதியில் இந்தியாவின் தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் சுஹாஸ் தனது ஆட்டத்தில் 21-9, 21-15 என்ற செட்களில் இந்தோனேசியாவின் ஃபிரெடி சேதியாவனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தாா். அதில் அவா் பிரான்ஸின் லுகாஸ் மாஸுரை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறாா். தருண் தில்லான் தனது அரையிறுதியில் 16-21, 21-16, 18-21 என்ற செட்களில் அந்த லூகாஸ் மாஸுரிடம் தான் தோல்வி கண்டாா். அடுத்ததாக, வெண்கலப் பதக்கத்துக்கான ‘பிளே-ஆஃப்’ சுற்றில் அவா் இந்தோனேசியாவின் சேதியாவனை சந்திக்கிறாா். எஸ்ஹெச்6 பிரிவு: ஆடவா் ஒற்றையா் எஸ்ஹெச்6 பிரிவில் களம் கண்டுள்ள இந்தியரான கிருஷ்ணா நாகா் தனது அரையிறுதியில் 21-10, 21-11 என்ற செட்களில் இங்கிலாந்தின் கிறிஸ்டன் கூம்ப்ஸை தோற்கடித்தாா். இறுதிச்சுற்றில் அவா் ஹாங்காங்கின் சு மான் காயை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறாா்.

கலப்பு இரட்டையா்: கலப்பு இரட்டையரில் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத்/பாலக் கோலி இணை 3-21, 15-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் ஹேரி சுசான்டோ/லினி ராட்ரி ஆக்டிலா இணையிடம் வீழ்ந்தது. இதையடுத்து, பகத்/ கோலி கூட்டணி, வெண்கலப் பதக்கத்துக்கான ‘பிளே-ஆஃப்’ சுற்றில் ஜப்பானின் டாய்சுகே ஃபுஜிஹாரா/அகிகோ சுகினோ இணையை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது

1. When is the “National Small Industry Day” celebrated every year?

A) August 30 

B) September 1

C) September 3

D) September 5

  • National Small Industry Day is an annual celebration to recognises the value of small industries in our society. Every year on August 30, the country celebrates National Small Industry Day. On August 30, 2000, a comprehensive policy package for the SSI sector was launched in India, to provide support to small firms in India. The UN General Assembly has declared June 27 as the MSME Day to enhance public awareness of the contribution of MSMEs in the global economy

2. Shanti Lal Jain has been appointed as the MD & CEO of which public sector bank?

A) Punjab National Bank

B) Indian Bank 

C) Union Bank of India

D) State Bank of India

  • Shanti Lal Jain has been appointed as the Managing Director and Chief Executive Officer of Indian Bank. He was earlier serving as the Executive Director of the Bank of Baroda. His tenure of three years would start from September 1.

3. When is the ‘International Day of the Victims of Enforced Disappearances’ observed?

A) August 30 

B) September 1

C) September 3

D) September 5

  • ‘International Day of the Victims of Enforced Disappearances’ is marked every year on August 30, across the world.
  • The day is observed to honour and pay tribute to people who have faced enforced disappearances. On December 21, 2010, the United Nations General Assembly officially proclaimed August 30 as the International Day of the Victims of Enforced Disappearances. The Assembly also welcomed the adoption of the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.

4. Who is the head of the committee constituted by the Centre, to develop technological platform for streamlining revenue litigation?

A) Ashish Shiradhonkar 

B) Adhir Ranjan Choudhary

C) DY Chandrachud

D) Tushar Mehta

  • The Centre has constituted a committee to develop a technological platform streamlining the appeal filing process, which will be headed by Ashish Shiradhonkar. The platform aims to cover all processes related to direct and indirect taxation matters. Ashish Shiradhonkar, is also heading the e–courts project in National Informatics Centre. The committee is set to complete its work in three months and will have members from revenue department, CBDT and CBIT.

5. When is the International Day against Nuclear Tests observed every year?

A) August 29 

B) August 30

C) August 31

D) September 01

  • The ‘International Day against Nuclear Tests’ is observed on August 29 every year, across the world. The day aims to bring awareness regarding the harmful effects of testing nuclear weapons and calls for an end to such tests.
  • The International Day against Nuclear Tests was established on December 2, 2009, by the United Nations General Assembly in its 64th session. The first nuclear test called Trinity was conducted by the United States Army in a desert site in New Mexico, on July 16 1945.

6. Which woman sports–person won India’s first gold medal in Shooting in Olympics/Paralympics?

A) Avani Lekhara 

B) Elavenil Valarivan

C) Apurvi Chandela

D) Anjum Moudgil

  • Indian paralympic shooter Avani Lekhara won country’s first gold medal in shooting at the Tokyo Paralympics in the women’s 10m air rifle. The 19–year–old became the first Indian woman to win a Paralympic or an Olympic gold medal in the country’s history.
  • India’s discus thrower Yogesh Kathuniya clinched silver medal. Devendra Jhajharia and Sundar Singh won the silver and bronze medals in javelin throw event

7. Which country has warned of increase in West Nile Virus infections?

A) USA

B) Russia 

C) China

D) UK

  • Russia warned of a possible increase in West Nile Virus (WNV) infections, as mild temperatures and heavy precipitation create favourable conditions for the mosquitos that carry it. WNV is an infectious disease spread by infected mosquitoes.
  • It spreads from birds to humans with the bite of an infected Culex mosquito. It can lead to a fatal neurological disease in humans. It is related to the Zika, dengue and yellow fever viruses.

8. Deepor Beel Wildlife Sanctuary is located in which state?

A) Assam 

B) Sikkim

C) Madhya Pradesh

D) Himachal Pradesh

  • Deepar Beel is one of the permanent and largest freshwater lakes in Assam, located in Guwahati. It is the State’s only Ramsar site and an Important Bird Area.
  • The Ministry of Environment, Forest and Climate Change notified the eco–sensitive zone of the Deepar Beel Wildlife Sanctuary on the south–western edge of Guwahati. The wetland expands up to 30 sq. km in summer and reduces to about 10 sq. km in the winter.

9. Which institution releases the Quarterly House Price Index?

A) National Housing Bank

B) Reserve Bank of India 

C) NITI Aayog

D) National Statistics Office

  • The Reserve Bank releases a quarterly house price index (HPI) based on transaction–level data received from housing registration authorities in ten major cities. The cities are Ahmedabad, Bengaluru, Chennai, Delhi, Jaipur, Kanpur, Kochi, Kolkata, Lucknow, and Mumbai.
  • According to RBI data, the growth in all–India House Price Index (HPI) slowed to 2 per cent in the first quarter this fiscal against 2.8 per cent in the last year. The HPI growth ranged from an expansion of 8.8 per cent (Ahmedabad) to a contraction of (–) 5.1 percent (Chennai).

10. Supertech twin tower case, which was seen in the news recently, is associated with which state?

A) Kerala

B) Uttar Pradesh 

C) Karnataka

D) Maharashtra

  • The Supreme Court ordered the demolition of the twin towers that had come up in violation of building bye–laws in Supertech’s Emerald Court housing project in Noida. The Court also ordered that the towers be razed within three months for violation of building norms in agreement with district officials.
  • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has called for an inquiry and strict action against guilty officers in Noida in the illegal twin tower case. The Chief Minister also directed officers to register a criminal case against guilty persons.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!